
18-05-2017 தஞ்சன் எனை அறிவான் ! சகோத்திரம் பார்த்து தரணியில் துன்பப்படுகிறான். எதை உண்பது எனத் தெரியாமல் திகைக்கின்றான் ! சிறந்த உணவு எது ? அகார உப்பு, மகார உப்பு, உகார உப்பு, அமில உப்பு, கார உப்பு, இரடை உப்பு, பாறை உப்பு, அணைவு உப்பு, மூங்கில் உப்பு, கல் உப்பு, இதில் எதை உண்பது என்று தெரியாமல் ஆராய்ச்சி செய்து ஆணந்தம் தொலைக்கின்றான். உப்பிற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது ! லவணம் என்றும், தந்தஸ் என்றும் சொல்லும் புணித உப்பை மறந்துவிட்டான். உப்பை அறிந்தால் உலகை ஒரு நொடியில் புரிவான் ! புரியாது, அறியாது அறிவிலி நாடகம் நடத்துகின்றான். யாரோ எழுதி வைத்ததை வைத்து பேசி கையேந்தி உண்கின்றான் ! உழைப்பில்லா சோம்பேறிகள், உணர்வது எப்போதோ ? தந்தஸ் என்றால் வேதம் என்று சொல்லப்படுகிறது. உப்பு வேதத்தால் வளர்கிறது. கருவில் இருக்கும் சிசு போல ! இந்துப்பு அளவாய் சாப்பிடு ! கரும் உப்பு எனப்படும் செயற்கை உப்பை உண்ணாதே. சுவர்சலை எனும் சோடா உப்பை அறவே ஒதுக்கு. தாவரங்களில் இருந்து கிடைக்க பெறும் உப்பில் மூங்கில் உப்பே சிறந்தது. பார்லி செடியிலும் உப்பு உருவாகும். இது ஒரு மலமிளக்கி அருந்தலாம். கிராம்பு எனும் மூலிகையில் உப்பின் சாரம் உண்டு. நீ அதிகமாக எடுத்து கொள்ளலாம். எல்லாம் தெரிந்தேன், எல்லாவற்றையும் வெற்றி கொண்டேன். எல்லாவற்றையும் அடக்கினேன் என்று சொல்கின்றான் மனிதன். மூச்சு, மல, ஜலம் எல்லாம் கடந்து போகிறது. உணவில் பச்சை, மஞ்சள் நிறம் உன் உடலுக்கு பாசம் கூட்டும். அரிசியில் எண்ணற்ற வகை இருந்தாலும் (தங்க சம்பா) சிவப்பரிசி மிகச் சிறந்தது. அதன் வடித்த நீரில், பனை வெல்லமும் கலந்து உண்டால் சத்தோ சத்தடா ! சத்தும், சத்தற்றும், பித்தும், பித்தற்றும் தான் நடவா பெரு மடமை உடலடா !
அறிந்து உண்டால் ஆயுள் துன்பம் இல்லையடா ! தேனும், தினை திகட்டாத உணவு, தானியங்கள் உயிருள்ளது ! எப்போதும் பசித்திரு ! ஞானப்பசி, வயிற்றுப் பசியோடு ! அது உன்னை நோயில்லா நிலை நிறுத்தும். உன் உயிர் நிலை அறிய வைக்க உதவும் ! காராமணியில் காயகல்ப சூட்சுமம் உண்டு ! எள்ளும், கொள்ளும் உன் இடரை விரட்டும். அள்ளியை ஆணந்தமாய் உண்ணலாம். உள்ளி மல்லி உண்மையாய் உண்ணலாம் ! தாமரை கிழங்கும், அருகனியும் உன்னை பிண்ணி பிணைய வைக்கும் ! ஆதியில் அறிந்து உண்டான். நோயில்லா வாழ்ந்தான். இப்பொழுது வெந்ததும், வேகாததுமாய் உண்டு ஊமை உடம்பை உருக்குலைக்க வைக்கின்றான். உண்ணும் உணவினாலே உன் ஊன் சற்றென மடிகிறது. செக்கில் எண்ணெய் ஆட்டி தினமும் திண்டான் பெற்று குண்டானில் வைத்து கும்பா சோறு உண்டான். ஆரோக்கியமாய், ஆணந்தமாய் வாழ்ந்தான் ! முழு உளுந்தை (கருப்பு) அரைத்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கலந்து உண்டான். எழும்பும், தசையும் முருக்கேறி மூடனாய் இல்லாமல் சுகபோகமாய் வாழ்ந்தான். இப்போது எதையோ உண்டு இருமல் சளியோடு காச நோய் உள்ளவன் போல வாழ்கின்றான். கற்பக தரு மரத்தின் இனிப்பை கனியுடன் உண்டான். ஓமத்தை களி செய்து ஒருக்களித்து உண்டான். ஊமை உடம்பு ஊடல் நிறைந்து இருந்தது. எல்லாம் மறந்தான் இப்போது. ஆதியிலே வீதி தோறும் திண்ணையும் மரங்களும் இருந்தன. இப்போது மதுக்கடைகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. இது தானடா உன் வளர்ச்சி ? உணர் !எல்லாம் தின்றான். எல்லாம் செய்தான், கஷ்டத்தில் கடவுளை குற்றம் சொல்கின்றான். ஆதியில் தரையில் உண்டான், உறங்கினான், அமர்ந்தான். ஊடல் செய்தான். காலில் மிதியடி இல்லாமல் வாழ்ந்தான். மூலம் என்ற குண்டலினி முழுவதும் இயங்கியது. இப்போது பஞ்சுமெத்தை, பசப்பு வாழ்க்கை வாழ்ந்து பெரும் வியாதியோடு திரிகின்றான். உணரடா ! சாருசம் உனக்கு சமிக்ஞை தரும். மாகதம் உனக்கு மலர்ச்சி தரும். முருக்கு மூலவியாதி தரும். சொன்ன சீரம் சுகத்தை தரும். அருகனி ஆளுமை தரும். ஆரித்தியம் அகுமை தரும். தானபுல் தண்ட உரத்தை தரும். திருட மூலம் திகை தரும். மாலகம் உனக்கு மண்ணில் துன்பமே தரும். அகத்தியும் அரையும், தண்டும், முலையும், பசலையும், பத்ரியும், பொன்னும், குப்பையும் உன்னை ஆணந்தமாய் தாலாட்டுமடா ! பாலிருவி, சூக்கிலி உனக்கு பக்குவம் தருமடா ! எத்தனையோ இங்கு ! உணர்ந்து உண்ணடா ! உண்மையில் உன் குரம்பை அடங்குமடா ! ஊழை சரியாக்காமல் உருந்து போனாயடா ! உணரடா ! உண்மையில் நன்மை நான் ! நான் இநன்யா !
No comments:
Post a Comment