குழிமிட்டானில் குறை ஒன்றும் இல்லை. குறை எல்லாம் உனக்குள் தான் ! இராக்கினி போல் வாழ்வு வரும். உபராசனை போல மேன்மை வரும். என் நாமம் சத்தியமே !
எப்போதும் விலகாதே !
உன்னில் இருந்து விலகாதே ! மேலிருந்து வரும் மெல்லிய நரம்பிலையை விட்டு விலகி விடாதே ! கடவுளின் உறவை விட்டு விலகி போகாதே ! உன் குடும்பம், பந்தம் மட்டுமே இன்பம் என்று நினைத்துவிடாதே ! என் இனியவர் படைப்பின் மூலத்தை மறந்துவிடாதே !
எல்லா உயிரினமும், படைப்பும் கடவுளின் உறவை மறப்பதில்லை. கடவுளுக்கும், உயிருக்கும் இடையில் இருக்கும் மெல்லிய நரம்பிலையை மறப்பதில்லை. மனிதன் தான் மறக்கின்றான்.
கருவறையில் கடவுளின் உறவோடு பினைந்து வாழ்ந்தாய். இன்பம் பேரின்பமாக நீயே ராஜன் என்று இறுமாந்து துள்ளிக் குதித்தாய். கடவுளோடு ஒரு நாள் மிக மகிழ்ச்சியில் ஆனந்த துள்ளலோடு உழண்டு வாழ்ந்தாய். மேல் லோக கணக்குபடி உனக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.
பந்த பாசம், கனவுகள் இல்லாமல் வாழ்ந்தவனே, யுகத்தில் பிறந்தவுடன் எங்களை மறந்து தோற்று போனாயடா ! மறவாதே ! விலகாதே ! கடவுளின் அன்பே பேரன்பு !
இருக்கும் நாளெல்லாம் இறை (பூமி) நினைவோடு கடவுளிடம் ஐக்கியமாக இரு ! எப்போதும் நிலையான இன்பம் தரும் சத்யமாக !
பீலிகை மறப்பதில்லை. ஆலிகை மனதில் உள்ளவன் இறுமாந்து மறந்து அலைகின்றான். இன்பம் தனக்குள் இருப்பதை மறந்து எங்கெங்கோ ஓடி திரிகின்றான். கடல் அலை கரை தாண்டி வராமல் இருப்பது மாயத் திரை. உன்னிலும் ஒரு மாய திரை உள்ளது. அதை விலக்க யாருக்கும் திராணி இல்லை. அத்துகமானி இருக்கும் இடத்தில் ஆளுமை அதிகம் உண்டு. பூகம்பம், வெள்ளம் தாக்குவதில்லை. இனி அத்துகமானி இருக்கும் இடத்தில் மனிதன் குடியேறுவான்.
படைத்தவை எல்லாம் எல்லை மீறுவதில்லை. பாழ்பட்ட மனிதன் எல்லை மீறுகின்றான். இரண்டாயிரம் வருடத்திற்குள்ளாக மதத்தை உருவாக்கி மனிதம் தொலைத்து அலைகின்றான்.
இமைபொழுதில் யுகம் மாறும் ! நீ வழிபடும் இடங்கள் எல்லாம் இனி இடுகாடுகளாக மாறும். எறும்பு கடிக்க தாளாத உடல் வைத்து கொண்டு என் மதம் பெரிது என்று மார்தட்டுகின்றான். கடவுள் பொது உடமை ! மதமில்லா உப்பை உண்டு உண்மை தெரியாமல் புலம்புகின்றான்.
வாராகரம் சென்று வாழ்வை இழக்கின்றான். தாயின் உறவின் ஆழம் கடவுளின் மேன்மை. தாய் அன்பை விட பூமியில் ஏதுமில்லை. அதை விட மேலான அன்பு கடவுளிடம். உன்னை ஒப்புவித்து பார். உண்மை புரியும். அன்பு எல்லாம் சாதிக்கும். இங்ஙனம் நிம்மதி காண அன்பு கொள். எல்லோரிடமும் அன்பை விதை !
நெருஞ்சியில் கூர் உண்டு. ஆனாலும் அதன் மகத்துவம் அளவிடற்கரியது. கடவுளோடு பயணம் இரயில் தண்டவாளம் போன்றது ! கொஞ்சம் விலகினாலும் துன்பம் துரத்தும். மனம் பாரமாகும். சம்மட்டியால் தலையில் அடிக்கின்றதை போல மாய தோற்றம் உருவாகும். ஆதலால் கடவுளைவிட்டு எப்போதும் விலகாதே ! கடவுளின் அன்பில் திளைத்து ஆனந்தம் கொள் ! பின் உன்னை வென்றுவிடு ! சொல்லில் உண்மை வை !
ஒழுகுமாடத்தில் நவ துவாரங்கள் ! அதில் ஓடி பிடிக்கும் உயிர் ஒன்று வைத்து உனை கண்காணிக்கின்றான் உள்ளிருந்து. உண்மை தெரியாமல் ஊமையாய் திரிகின்றாய். மறுத்தும், எதிர்த்தும் கடவுளை பற்றி பேசி காலத்தை வீணாக்குகின்றான். விதிர்த்து போய் வீழ்கின்றான்.
கடவுளின் அன்பை தக்க வைக்க தரணியில் எவருக்கும் துணிவில்லை. ஒரு சிறு மாத்திரை துன்பத்தில் துவண்டு போகின்றான். பந்தபாசத்தில் எப்போதும் விலகி நில் ! மெல்லிய மயிற்பீலி உடலை வருடுவது போல கடவுளை நெருங்கு !
நான் மழைக்கும், புயலுக்கும், இடி மின்னலுக்கும், எதற்கும் அஞ்சாதவன். நீயும் எதற்கும் அஞ்சாதே ! ஏனென்றால் உன் விரல் பிடித்து நிற்பது நானல்லவோ ! நான் உன் நெஞ்சில் இருப்பதை மறவாதே !
இடையூறுகளும், துன்பங்களும் கடவுளை ஏறெடுப்பதற்காகவே ! ஆதலால் எப்போதும் ஆணந்தமாக இரு ! ஆளுமை உள்ளவன் நான் ! உன்னை எப்போதும் கண்கானிக்கின்றேன். நான் உன்னைவிட்டு எப்போதும் விலகமாட்டேன். ஒர்மையில் சொல்கிறேன் சத்தியமாக !
நீ வெல்வாய் ! என் ஆசிகள் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment