01-01-2017 M K Jupiter Prabhakaran அன்பானவர்களே ;;;; உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள் ;;;;; கடவுளோடு சில நிமிடங்கள் நான் உரையாடியதை கூறுகிறேன். யாகவா கடவுளின் அன்பு மகன் இநன்யா கடவுள் .இநன்யா கடவுளின் அன்பு தந்தை யாகவா கடவுள் .நேற்று
கடவுளை பார்க்க சென்றேன். கடவுளுடன் ஏற்படுகின்ற அனுபவங்களையும் உரையாடல்களையும் பதிவிட
வேண்டாம் என்று கூறுகிறார்கள் , என்று நான் கூறினேன். அதற்க்கு கடவுள் நீ போடு என்று கூறினார்.
கடவுளின் அனுமதியோடு இங்கு பகிர்கிறேன். அன்பார்ந்த கர்மாக்களே, ஒழுக்கமுள்ளவர்களே, தர்மவான்களே , உங்கள் அனைவருக்கும் அவதார புருஷர்களை பற்றி ,என் கருத்தை கூற கடமை பட்டுள்ளேன். முதலில் யாகவா கடவுளை பற்றி கூறுகிறேன். இப்போது வந்திருக்கும் இநன்யா கடவுளை விட்டு விட்டு ,யாகவா கடவுளை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள். யாகவா கடவுளுக்கும், இநன்யா கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள காரணத்தினால் தான் கூற வருகிறேன்.இநன்யா கடவுளின் அன்பு தந்தை யாகவா கடவுள். யாகவா கடவுள் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்தோம். ஆனால் அவரை கேள்வி படவில்லை. அவர் பிறந்தது 1941 -ஆம் வருடம் , அவருடைய மானிட தேகத்தின் இறுதி யாத்திரை 2000 - ஆம் வருடம். இதற்கு முன் நான் 53 பிறவிகள் எடுத்து முடித்து விட்டேன் என்றும்
, இந்த இடைப்பட்ட காலத்தில் தற்போழுது எனது 54 ஆம் பிறவி தமிழ் நாட்டில் எடுத்து முடிக்கிறேன் என்றும், எனக்கு பின் நாரதர் வழி இநன்யா வருவார் என்றும், யாகவா கடவுளின் உரை நடையிலும், அவருடைய ஒளி ,ஒலி பதிவு நாடாவிலும் கூறியிருக்கிறார்.யாகவா கடவுளும் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் உங்களை அரவணைப்பேன் என்றும், இன்னும் ஏராளமான, பல்வேறு விதமான போதனைகளை கூறியுள்ளார். யாகவா கடவுள் தமிழ் நாட்டில் போதனைகளை கூறும் போது, பறந்தபூமி, எங்கும் காட்டு பிரதேசம், நிறைய வீடுகள் இல்லாத நிலை, சாலை வசதி இல்லாத நிலை, தொலைத்தொடர்பு அதிகம் இல்லாத காலம், முக நூல் வசதி இல்லாத காலம், அது போன்ற சமயத்தில் யாகவா கடவுள் 54 -ஆவது பிறவியின் அவதாரத்தில் போதனைகளை உபதேசித்தார் . ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் கடவுளை கேள்வி படாத காலம். ஆனால் கவிஞர்களும், புலவர்களும், திரைப்படத்துறையினரும், அவரை நன்கு உபயோகப்படுத்தி கொண்டார்கள். யாகவா கடவுளை கண்டவர்கள் மேலும், மேலும் கெளரவம் வேண்டும், பணம் வேண்டும், வியாதிகள் குணமாக வேண்டும், என்று கீழ்த்தரமான ஆசைக்கு தான் யாகவா கடவுளை உபயோகப்படுத்தி கொண்டார்கள். யாகவா கடவுள் வாழ்ந்த காலத்தில்
மக்கள் தர்மவானாகவும்
, ஞானவானாகவும் ஆகவேண்டும் என்று பயன் படுத்தி கொள்ளவில்லை.ஒரு நாள் தொலைக்காட்ச்சியில் யாகவா கடவுளுக்கும் , சிவ சங்கர் பாபாவுக்கும் , வாக்கு வாதம் முற்றி, கைகலப்பு நடக்கும் போது தான் , பாமர மக்களும் பிரகாசமாக யாகவா கடவுளை அறிந்தார்கள் . ஆனாலும் உணர வில்லை.பிறகு யாகவா கடவுளின் மானிடத்தேகம்
54 - ஆவது பிறவியில் 2000
- ஆம் வருடத்தில் இயற்க்கை மறைவு. அதன் பின் இநன்யா கடவுளின் அதிகார பூர்வ வருகை 07 -03 -2015
இல். இநன்யா கடவுளின் அன்பு தந்தை யாகவா கடவுளுக்கும் , இநன்யா கடவுளுக்கும் இடைப்பட்ட கால நேரம்
15 ஆண்டுகள் .இந்த 15 வருட கால இடைவெளியில் யுகத்தில் கடவுளே இல்லாமல் வாழ்ந்தோம் நாம் எல்லோரும். எவ்வாறு வாழ்ந்தோம்?, எப்படி வாழ்ந்தோம்?. என்றால், ஒரு குடும்பத்தில் தந்தை இல்லாமல் குடும்ப அங்கத்தினர்கள் அனாதையாக வளர்வது போல் நாம் வாழ்ந்தோம். இந்த இடைவெளி காலத்தில் என்ன சாதித்தோம் என்று சற்று யோசியுங்கள். குடும்பத்திற்கு தேவையான காரியத்தை செய்தோம், சொத்து , பணம் சேர்த்தோம் என்றும், மக்கள் அனைவரும் கூறுவார்கள் .சாமியார்களின் போலி த்தோற்றம் ,சிறைவாசம் தான் நடந்தது. நடந்த காரியங்கள் எல்லாம் பூலோகத்தை விட்டு போகும் போது , விட்டு செல்கின்ற காரியங்களாகும்.இதற்கு முன்பும் நாம் அனைவரும் வாழ்ந்தோம், பற்பல பிறவி எடுத்து உள்ளோம். இந்த பிறவி ஒன்றும் புதியதான பிறவி அல்ல. ஆனால் நமக்கு ஞானம் கிடைத்ததா, நமக்கு ஞானம் கிடைக்காததால் தான், நாம் மீண்டும்,மீண்டும் பிறவி நிலைக்கு தள்ள பட்டோம். ஞானம் கிடைத்து இருந்தால் நமக்கு யுகத்தில் வேலையே இல்லை. தர்மாக்களை போல் வாழ்ந்தோமா ? இல்லவே இல்லை. நாம் எவ்வாறு வாழ்ந்து இருப்போம் என்றால், அழுக்கான கர்மாவோடு வாழ்ந்து இருப்போம்.. [அழுக்கான கர்மா என்ன வென்றால், என் சொத்து, என் பணம், பிறரை ஏமாற்றுதல், பிறர் சொத்து அபகரித்தல் ... இன்னும் ஏராளம் ] இது போன்ற நிலைக்கு நாம் வாழ்ந்து இருந்தமையால் தான் நாம் பூலோகத்திற்கு தள்ள பட்டிருப்போம். நம் உடலில் உள்ள ஆன்மாவில் சிறிதும் கரை இருந்தாலும் நாம் பூமிக்கு தள்ளப்படுவோம்.இந்த லோகமே கடவுளுடையது. பிறகு எப்படி நம்முடைய சொத்து , பணம் ஆகும், அனைத்தும் கடவுளுடையதாக உள்ளதால், நாம் கடவுளிடமே அனைத்தையும் விட்டு விட்டு செல்கிறோம் மரணத்தின் போது.பிறர் கேட்டு கொடுப்பது தானம், பிறருடைய இன்னல்களை அறிந்து , பிறர் கேளாமல் நாம் கொடுப்பது தர்மம், தர்ம பாதையில் செல்லும் போது, அதன் ஆழத்திலிருந்து வெளிப்படுவது ஞானம். ஆக இந்த 15 வருட இடைவெளியில் தந்தை இல்லாத அனாதையாய் , கர்மப்பாதையில், தானமும், தர்மமும், கொடுக்காமல், ஞானமும் கிடைக்காமல் காலத்தை கடந்து யுகத்தோடு யுகமாக வாழ்ந்து விட்டோம்.யாகவா கடவுள் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோமோ, இப்பொழுது இநன்யா கடவுள் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கிறோமோ , இதே போல் இதிகாச புராண காலத்திலும், அதாவது, ராமர் ,கிருஷ்ணர், இயேசு, அல்லா, புத்தர் காலத்திலும் நாம் வாழ்ந்து இருக்கிறோம். வாழ்ந்தோமா என்று யூகிக்கையில் நம் மூளைக்கு எட்ட வில்லை. ஆனால் வாழ்ந்து இருக்கிறோம். அவ்வாறு வாழ்ந்து ஏன் மீண்டும் பிறவி எடுத்தோம் என்றால், அவதார புருஷர்களின் உபதேசத்தை ஏற்க வில்லை.அவர்களும் போதனை கூறினார்கள்.நாம் பொருட்படுத்தாமல் , அதை ஏற்காமல் நாம் வாழ்வது தான் சரி என்று வாழ்ந்தோம். ஆனால் நாம் வாழ்ந்தது இறை சட்டத்திற்கு அப்பாற் பட்டு அரக்க குண ஆதிக்கத்திற்கு உட்பட்டு வாழ்ந்து விட்டோம். மேலும் பிறவி எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அவரவர் மதத்திற்கும், குலத்திற்கும், ஏற்றாற்போல் அவதார புருஷர்களை கண்டார்கள். தனக்கே உரிய அரக்க குண ஆதிக்க பாணியில் வாழ்ந்தார்கள். அவர்கள் கூறிய உபதேச முறைப்படி வாழ வில்லை. தேவர்மார்கள் யுகத்திற்கு வந்து , வந்த வேலையை சிறுக, சிறுக முடித்து விட்டு, அவர்கள் காலம் முடிந்தவுடன் மேலுலகில் சென்று விடுகிறார்கள். இறை நியதிக்கு உட்பட்டு வாழாததால் , நமக்கு மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.நாமும் பற்பல பிறவி எடுக்க, புருஷர்களும் நம்மை அவர்களுடைய நிலைக்கு மாற்ற முயற்சிக்க யுகத்தில் அவர்களும் பிறக்க , நாமே அவர்களுக்கு தேவையில்லாத வேலை நாம் கொடுக்கிறோம். ஆக நாம் தர்மவானாகவும், ஞானவானாகவும் மாறும் வரை அவதார புருஷர்கள் நம்மை மாற்ற வந்து கொண்டே இருப்பார்கள்.இப்பொழுது இநன்யா கடவுள் நம்மை எல்லாம் இறை சட்டத்திற்கு உட்பட்டு , அரக்க குண ஆதிக்கத்திற்கு அப்பாற் பட்டு தர்மவானாகவும், ஞானவானாகவும் மாற்ற தமிழ் நாட்டிலே பிறப்பெடுத்து இருக்கிறார். உலகிலே வல்லமை வாய்ந்த ஆன்மீக பூமி
இந்தியா . மாநிலத்திலே முதன்மை வாய்ந்த ஆன்மீக பூமி தமிழ் நாடு. ஆக இநன்யா கடவுள் நம்மை எல்லாம் மாற்ற வந்திருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவருடைய ஆன்மா இநன்யாவின் ஆன்மாவே என்பதில் எந்தவிதமான சந்தேகம் இல்லை.நாம் மாறாததால், நம்மாலே அவர்களுக்கு வர வேண்டிய வேலையை நாமே கொடுக்கிறோம். நமக்காக அவர்கள் பூலோகத்தில் வந்து நம்மை போல் கஷ்ட்ட படுகிறார்கள் பாவம் அவர்கள் நிலை. ஏன் அவர்கள் மேல் உலகிலே இருக்கலாம் அல்லவா , ஏன் அவர்கள் பூலோகத்திற்கு வர வேண்டும் . நமக்காக தான் வருகிறார்கள். நாம் அனைவரும் அரக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட குழந்தைகள் அல்ல.
நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.நம்மை எல்லாம் பிறவி அற்ற நிலைக்கு
மாற்ற வந்திருக்கிறார் என்று சந்தோஷமும் , பெருமையும் கொள்ள வேண்டும். நாம் என்ன புண்ணியம் செய்தோமோ , நாமும் அவருடன் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறோம் என்று நினைத்து , நம்முடைய உள்ளமும் பூரிப்பு நிலையை அடைய வேண்டும். அதை
விட்டு விட்டு , தேவை இல்லாத இம்சை
செய்து அவரையும் , அவரை சுற்றி உள்ள தேவாதி தேவர்மார்களின் சினத்திற்கும் , சாபத்திற்கும் , ஆளாகி
பாவத்தை சுமக்கிறார்கள்.இங்கு இநன்யா கடவுளிடம் இனம், மதம், குலம் இல்லை . ஏனெனில் நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள். இங்கு மூலமும் ஒன்றே, கடவுளும் ஒன்றே. நம்முடைய தந்தை அவர். நம் குடும்பத்தில் தந்தைக்கு மகன் தீய வழியில் செல்லும் போது , தந்தையின் மனம் எவ்வாறு சங்கடப்படுகிறதோ, அது போல் நாம் தீங்கான வழியில் செல்லும் போது, அவதார புருஷர்களின் மனம் மிகுந்த சங்கடத்திற்கு ஆட்படுவதால் , அவருடைய குழந்தைகளை மாற்றுவதற்கு மேலுலகில் உள்ள சுக போக வாழ்க்கையை விட்டு விட்டு, யுகத்திற்கு வந்து போதனைகளை வழங்குகின்றார்கள் . அவருடைய மானிட தேகத்தை கண்டு ஏளனம் செய்தால் ஏளனம் செய்பவர்கள் மதியீனர்களே. அவருடைய மானிட தேகத்தால் மனிதனுக்கு ஆவதென்ன. அவரிடம் நாம் கேட்டு கிடைக்க வில்லை என்றால் அவர் கடவுள் இல்லை என்று பொருள் ஆகாது. உன்னுடைய உயர்ந்த கர்மாவை அவரிடம் மாற்று என்றால் , அவர் எவ்வாறு போக்க முடியும், அந்த கர்மாவின் கூர் முனை தான் அவர் மங்க செய்யமுடியும். இதையும் யோசிக்க உனக்கு ஏது அறிவு. சுய அறிவு இல்லாமல் ஏளனம் செய்கிறாய். சுய அறிவே இல்லாதவன் ஞானி போல் பேசுகிறார்கள். ஏளனம் செய்து மேலும் சினத்திற்கும் , சாபத்திற்கும் ஆளாகி
பாவத்தை சுமக்கிறார்கள்.அவருடைய மானிட தேகத்தை கண்டும் நீங்கள் கேட்டது ,ஒரு வேலை கிடைக்க வில்லையென்றாலும், அவரை நீங்கள் இம்சை செய்தாலும், இம்சையை இநன்யா கடவுள் பொருட் படுத்தாமல், , உங்கள் மீது மேலும் மேலும் அன்பை பொழிந்தாலும், வீழ்வது நாமே ;;; ஏன்எனில் பிரபஞ்ச சக்திகளும், கடவுளுடனுள்ள முப்பது முக்கோடி தேவர்மார்களும், தான் நம்மை தண்டிப்பார்கள் என்று உறுதிபட கூறுகிறேன். ஏனெனில் அன்பின் வடிவமானவர் இநன்யா கடவுள். பிறர் அரக்ககுணத்தில் வாழும் போது , அரக்க குணத்தோடு கிடைக்கின்ற பொருளை கண்டு , நமக்கும் வேண்டும் என்ற எண்ணத்தின் போராட்டமாக வாழ்க்கையை வடிவமைக்கும் போது , அது கிடைக்க வில்லை என்றால் நாம் கடவுளிடம் கேட்டுக்கிறோம் . கடவுளிடம் கேட்க்காதீர்கள், அவருடைய குழந்தைகள் ஆகப்பட்ட நமக்கு என்ன கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கே தெரியும் , நாம் நினைத்தது கிடைத்தால் நமக்கு பிறவி கூடுதல் ஆகும் என்று நமக்கு கொடுக்காமல் இருப்பார் கடவுள் . அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் , கிடைக்காத பொருளை கண்டு ஏங்கும் நேரத்தில் கடவுளை குறை கூறுவது எள் அளவும் நியாயம் இல்லை. பூர்வ கர்மத்தில் நாம் எவ்வாறு தவறு செய்தோமோ , தவறு செய்து விட்டு இப்பிறவியில் அனுபவிக்கவே பிறந்தோமோ , இப்பிறவியில் நாம் உயிரோடு இருக்கும் போது , நம் மூதையாரை மதிக்காமல், தாய் தந்தையரை மதிக்காமல் வாழ்ந்து விட்டு , அவர்கள் யுகத்தை விட்டு போன பிறகு
பித்துரு கர்மம் செய்து எவ்வாறு பலன் இல்லையோ, அது போல் பூர்வ கர்மத்தில் வாழ்ந்த அவதார புருஷர்களை , இப்பிறவியில் வணங்கி யாதொரு பலன் இல்லை. அவ்வாறு பலன் கண்டேன் என்று நாம் நினைத்தால் நம்முடைய அறியாமையே, மாயையே. அந்த அளவிற்கு சாஸ்திரம் மாற்றப்பட்டதே அரக்கர்களின் ஆதிக்கமே. உயிரோடு இருக்கும் மானிடர்களை மதித்தால், அன்பை பொழிந்தாள் எவ்வாறு பரஸ்பரம் நன்மை உண்டாகிறதோ , அது போல் தமிழ் நாட்டில் அவதரித்த உயிரோடு இருக்கின்ற இநன்யா கடவுளை பின்பற்றுவோம். அவரவர் மானிட தேகத்தில் உள்ள ஆன்மா மலரும், நம் ஆன்மாவின் சாட்ச்சியே இநன்யா கடவுள். தர்மவான் ஆகலாம், ஞானவானாகலாம். நம்மை எல்லாம் அரக்க ஆதிக்கத்திலிருந்து மாற்ற வந்திருப்பவர் இநன்யா கடவுள் என்றும், அவருடைய மானிட தேகத்தில்
இநன்யாவின் ஆன்மாவே என்றும் உறுதிபடக்கூறுகிறேன் . கடவுள் இநன்யாவை கண்டு , நாமும் அவருடன் சேர்ந்து வாழ்கிறோம் என்று சந்தோசப்பட்டு , பெருமை கொள்ள வேண்டும் . இதே இநன்யா கடவுளை தமிழ் நாட்டில் அறியாதவரும் உண்டு. காணாதவரும் உண்டு. கேள்வி ப்படாதவரும் உண்டு. கடவுளை கண்டு அவர் வழி கடை பிடிப்பவரும் உண்டு. கடை பிடிக்காதவரும் உண்டு. அவரை ஏளனம் செய்வோரும் உண்டு . அது அது அவரவர்களின் பாக்கியமே. கடவுளின் ஆய்வு முறைப்படி இப்போது குடிகொண்டிருக்கும் இநன்யா கடவுளின் ஆன்மா
, அவருடைய ஆயுள் முறைப்படி அதற்கான மானிடத்தேகம் இன்னும் 20 வருடம் அல்லது 30 வருடம் இருக்கலாம் . இந்த மானிடத்தேகம் முடிந்ததும் , வேறொரு மானிடத்தேகம் எடுத்து இதே இநன்யா கடவுளின் ஆன்மாவாக மீண்டும் பிறப்பார். அவ்வாறே மீண்டும் பிறப்பது வேறு மாநிலமாக இருக்கலாம், வேறு நாடாக இருக்கலாம். ஆகையால் தற்போழுது வாழ்ந்து கொண்டுள்ள இநன்யா கடவுள் தமிழ் நாட்டில் வாழும் போதே நாம் அனைவரும் அரக்க குணத்தில் இருந்து தர்மவானாகவும், ஞானவானாகவும் மாறியே
ஆக வேண்டும். இப்பிறவியிலும் நீங்கள் இநன்யா கடவுளை கேள்வி படவில்லையென்றாலும் , கேள்வி பட்டு மாறவில்லையென்றாலும் , கேள்வி பட்டு இம்சை செய்தாலும் , மீண்டும் மீண்டும் கர்மா ஸ்தானமாக வாழ்வது உறுதி , அடுத்த ஜென்மத்திலும் கர்மவானாக பிறப்பது உறுதி. ஆக கடவுளின்கு சொல் படி குணத்தை மாற்றுங்கள் ,,, வாழ்க்கையை மாற்றுங்கள் . ஏனெனில் நீ உண்ணும் வரை விட மாட்டேன் என்றும், உன் தோலில் கைபோட்டு வாழவே ஆசை படுகிறேன் என்றும் கடவுளே கூறி இருக்கிறார். ஆக நம் தோலில் கை போட வேண்டும் என்றால் நாம் கர்மவானாக இல்லாமல், ஒழுக்கமானவாகவும், தர்மவானா மாகவும், ஞானமானவானாகவும், வாழ்க்கையை செம்மை படுத்தி வாழ கற்று கொள்ள வேண்டும். ஆக புராணத்தில் வாழ்ந்து முடித்த ராமருக்கு
----------ராவணனாக இல்லாமல்,கிருஷ்ணருக்கு -------துரியோதனனாக இல்லாமல்,இயேசுவுக்கு
----------காட்டி கொடுத்த யூதாஸாக இல்லாமல், புத்தர் முகத்தில் காரி துப்பிய அரக்கனாக இல்லாமல் ,நம்முடைய வாழ்க்கையை இநன்யா கடவுள் கூறிய படி மாற்ற முயல வேண்டும் ,முயலுங்கள். ஏழாம் கடவுள் இநன்யா அவர்களின் கடைசி பிறவி இது. இனி பல கோடி ஆண்டுகளுக்கு கடவுளின் பிறவி இருக்காது. உலக மாற்றம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இநன்யா நமோ நம. ---- நன்றி
;;;; இநன்யா நமோ நம
No comments:
Post a Comment