- ஓம்’ என்று ஜெபியுங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான தொந்தரவுகள் இருப்பதாக எப்போதெல்லாம் நீங்கள் உணர்கிறீர்களோ, அல்லது எப்போது உங்கள் மனம் வெகுவாக திசை திரும்பியிருப்பதாக உணர்கிறீர்களோ, உடனே `ஓம்’ என்று ஜெபியுங்கள். காலையில் ஒரு இருபது நிமிடங்கள், மாலையில் ஒரு இருபது நிமிடங்கள்... அமைதியாக உட்கார்ந்து, ஒரு செளகரியமான முறையில் அமர்ந்து, உங்கள் கண்கள் பாதிதிறந்து கீழ்நோக்கி பார்த்தபடி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சுவாசம் மெதுவாக இருக்க வேண்டும். உடம்பு அசையக் கூடாது. உள்ளே `ஓம்’ என்று ஜெபித்துக் கொண்டேயிருங்கள்; அது வெளியே கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் உதடுகள் மூடியிருந்தால், அது உள்ளே அதிகமாக ஊடுருவும்; நாக்குகூட அசையக்கூடாது. அதையே வேகமாக திருப்பிதிருப்பி சொல்லுங்கள் `` ஓம்ஓம்ஓம்’’ – வேகமாக, சத்தமாக ஆனால் உங்களுக்குள்ளேயே. அது உங்கள் காலிலிருந்து தலைவரை, தலையிலிருந்து கால்வரை அதிர்வுகளை ஏற்படுத்துவதாக உணருங்கள். ஒவ்வொரு `ஓம்’ என்பதும் ஒரு குட்டையில் கல்லைபோடுவது மாதிரி உங்கள் உள்ளுணர்வுக்குள் விழும். அலைகள் எழுந்து அடிவரை பரவும். அந்த அலைகள் விரிந்து உங்கள் முழுஉடலையும் தொடும். . அப்படி செய்யும்போது, ஒரு தருணம்வரும் - அந்த தருணம்தான் மிகஅழகான தருணமாக இருக்கும். - அப்போது நீங்கள் எதையுமே திருப்பிசொல்ல மாட்டீர்கள், எல்லாமே நின்று போயிருக்கும். திடீரென்று நீங்கள் எதையும் ஜெபிக்கவில்லை என்பது தெரியும், எல்லாமே நின்று போயிருக்கும். அதை ரசியுங்கள். ஏதாவது யோசனைவந்தால், மறுபடியும் ஜெபிக்கத் துவங்குங்கள். நீங்கள் இரவில் செய்வதாக இருந்தால், தூங்கப் போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செய்யுங்கள். படுக்கப்போகு முன்செய்தால், உங்களால் தூங்கமுடியாது காரணம் அது உங்களை புத்துணர்வோடு வைத்திருக்கும், உங்களுக்கு தூங்கவேண்டுமென்கிற உணர்வே வராது. ஏதோவிடிந்து விட்டது போலவும், நீங்கள் நன்றாக ஓய்வெடுத்துவிட்டதைப்போல உணர்வீர்கள். பிறகு தூங்குவது எதற்கு? . வேகமாக செய்யுங்கள், ஆனால் நீங்கள் உங்கள் வேகத்திலேயே செய்யலாம். இரண்டு, மூன்று நாட்களுக்குபின் எது உங்களுக்கு ஒத்துவருகிறது என்பது உங்களுக்கு தெரியும். சிலபேருக்கு வேகமாக `ஓம்ஓம்ஓம்’ என்று சொல்வது ஒத்துவரும். ஒன்றின்மீது ஒன்று தொத்திக்கொள்வது மாதிரி. மற்றவர்களுக்கு மெதுவாக சொல்வது ஒத்துவரும். அது உங்களைப் பொறுத்தது. எதில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்களோ அதையே தொடருங்கள்.... ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம் ஓஷோ.
இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம,இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! பழமையான அரிய தகவல்களை உலகரிய செய்வதே எமது நோக்கமாகும்.. நலம் கருதி வெளியிடுகிறோம். LOVER OF MY SOUL ,BODY & MY LIFE --- யெகோவா , யாகவா , இநன்யா
Kadamai Quote
Sunday, 19 May 2019
ஓம்’ என்று ஜெபியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment