Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, 26 October 2016

துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?

துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?
மரணம் மலர்ச்சி தான் !
நான் மரணமானவன் ! நான் பிறப்பற்றவன் ! எப்போதும் உன் நெஞ்சில் இருப்புற்றவன் !
நான் இனி பிறப்பதுமில்லை ! இறப்பதுமில்லை ! காலச் சக்கரம் என் சத்தியத்தின் வலக்கரத்திலே ! மூன்றாம் துண்டமதியில் மவ்வம் கொண்டு திரிகின்றேன். முத்தொழிலின் சக்கரவத்தியின் முக எழிலில் வாழ்கின்றேன். எனக்கு என்றும் மரணமில்லை !
என் ஆண்மா விசாலமானது. பிரபஞ்சத்தின் எல்லை வரை பெரியது. உனக்கு பலம் தரும் பவ்யமாக ! ஆனந்தம் தரும் ! அமிழ்தம் ஊட்டி ஆண்மையை ஆளுமை செய்யும். என் பேராத்மா உன்னை பெரு மகிழ்ச்சி அடைய வைக்கும் ! என் நாமம், உனக்கு மரணத்தை வெல்லும் சக்தியை தரும் ! மீண்டும் பிறவியில்லா வாழ்வை தரும் !
இருப்பவன் யாரும் பிறக்க நினைக்கமாட்டான். ஆனால் அவன் கர்மா இந்த யுக சிறைச்சாலைக்கு தள்ளுகிறது. அறியா புரியா வாழ்கின்றான். ஆணந்தம் தெரியா திகைக்கின்றான். நான் எப்போதும் ஆணந்த நிலையிலே இருக்கின்றேன். இன்பம், துன்பம் எனக்கில்லை. என் நாமம் நம்பிக்கை கொண்டு சொல் ! இன்பமாக வாழ வழிகாட்டும். என் நாமம் சொல்ல சொல்ல பூமியில் உனக்கொரு மரணம் தரும். மரணத்தின் மலர்ச்சியாக உன்னை அறிவாய் ! ஆணந்தமாக மேல் லோகம் வருவாய் !
என் சத்திய லோகத்தில் உன்னை என் வலபக்கம் வைத்து அழகு பார்ப்பேன், ஆணந்த கூச்சலோடு ! ஆத்ம பசியை போக்க என் நாமம் சொல் ! உன் உயிர் பசியை நான் தீர்ப்பேன். ராக்கதிரில் நாளெல்லாம் சுரக்கும் அமிழ்த சாயல் உண்டு. அந்த அமிழ்தம் உனக்கு கிடைக்க வைப்பேன் !
உன் உயிர் ஆணந்தமாக இருக்க தொண்டு செய் ! தர்மம் செய் ! நான் உனக்கு எப்போதும் உதவியாக இருப்பேன் ! அகண்டமாய் விரிந்த இந்த ஆளுமை உள்ளவனை அறிவாய் ! அறிந்தால் நீ இறுமாந்து இருப்பாய் ! உன்னை படைத்தவனாலே உன் மூளையை சரி செய்ய முடியும். படைத்தவனிடம் சரணகதி அடை ! படைத்தவன் தான் உன்னை, உன் உயிரை சரி செய்ய முடியும். அவனிடம் ஒப்படைத்துவிடு.
படைத்தவன் என் நெஞ்சில் தான் ! எல்லாம் சரியாகி இமைப்பொழுதில் மாற வைப்பேன், காலங்களை வரையறத்தவன் மரத்திற்கும் மரணம் வைத்தான். பெருங்காற்றுக்கும், புயலுக்கும் இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டு உனக்கு நிழல் தருகிறது. கனி தருகிறது. இலை உதிர்ந்து வசந்த காலத்தில் வசந்தமாய் விரிகிறது. ஏன் உணரவில்லை நீ ?
படைத்தவன் பக்குவமாக பாசமாக உனக்கு தந்தான். நீ அனுபவிக்க தெறியாமல் ஆழந்த துயரத்தில் வாழ்கின்றாய். இங்கே மூலதனம் தேவை இல்லை. உன் மூளையை படைத்த கடவுளை துணை கொள் !
இந்த காலத்தின் நாயகன் இநன்யா உனக்கு துணை இருந்து வேண்டிய வரம் தருவேன். உயர்வதற்கு முதலில் தன்னம்பிக்கை தேவை. பின் வீரம், தைரியம் இருந்தால் எல்லா செல்வமும் உன் காலடியிலே ! உனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை உண்டு ! கல்வி செருக்கு உண்டு. அதனாலே உன்னால் கர்வ பட முடியவில்லை. நீ கர்வபட முதலில் பணிவு கொள் ! பாசம் கொள் ! அன்பு கொள் ! பக்குவம் நான் தருவேன்.
பிறப்பவன் யாவரும் மரணத்தை பற்றி யோசிக்கிறான், மரணம் மலர்ச்சி என்பதை அறியாமல் !
இங்கே குருவை மரணம் என்று வேதம் சொல்கிறது. ஆதலால் நல் குருவைத் தேடு ! உனக்கு மரணமில்லா பெரு வாழ்வை சொல்லித் தருவார். குரு இல்லா வித்தை பாழ் !
மரணத்தை ஜெயிப்பது எளிது தான். என்னுள் கரைந்திடு. உனக்கு என்றுமே மரணமில்லை. பிறப்பது இறப்பதற்கு தான். இருப்பதற்கு அல்ல. பின் ஏன் பயப்படுகின்றாய் ? துணிந்து உன் கடமையை செய். உன் இலக்கை அடைய போராடு. நீ வந்த நோக்கம் நிறைவேற பாடுபடு. உனக்கென்று ஒரு கடமை இருக்கின்றது இங்கே !
கடியறை கூடி கல்லறையில் மூடினாய். உன் அறை மறந்தாய். என் அறை மறந்தாய். எங்கே போகிறாய் ? ஆர்த்தியத்தில் உமியல் தடவி ஐவனத்தில் ஆகமலசார் தடவி புழுபழத்தில் அள்ளி உருக்கி சாப்பிடடா ! ஊழை சமமாகி உன் உடல் உயிர் பெறும். கிரந்தத்தை சீர்பட வைக்கும்.
சீராளன் என்னை நோக்கடா ! உன்னை சீராட்டி பாராட்டி உணர வைப்பேனடா ! உணர்ந்தால் இங்கே நோயில்லா பெரு வாழ்வு தான் ! உன் உயிர்க்கு மரணமில்லா மலர்ந்த சாயல் தான் !
மரணத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !

Sunday, 23 October 2016

தமிழ் மாதத்திற்கான மந்திர பலன்கள்

தமிழ் மாதத்திற்கான மந்திர பலன்கள்;;;
பெருமாள் என்பவர் அனைவரையும் காக்கும் தொழில் செய்பவர். அவரை புகழ்ந்து பாட ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு மந்திரம் உள்ளது. அதனை தினமும் சொல்லி வழிபட்டால் அனைத்து வகையான செல்வங்களும் வந்து குவியும். தினமும் 108 முறை சொல்லும் மந்திரத்தை தெரிந்துக் கொள்வோம்.
🌀 சித்திரை மாதம் ஓம் விஷ்ணுவே நம, ஓம் புருஷோத்தமாய நம என்று சொல்ல பவுண்டரீக யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
🌀 வைகாசி மாதம் ஓம் மதுசு+தனாய நம, ஓம் அதோக்‌ஷகாய நம என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அக்னிஷடோம யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
🌀 ஆனி மாதம் ஓம் திரிவிக்ரமாய நம, ஓம் லட்சுமி நரசிம்ஹhய நம என்று சொன்னால் கோவரத யாகம் செய்த பலன் கிட்டும்.
🌀 ஆடி மாதம் ஓம் வாமனாய நம, ஓம் அச்சுதாய நம என்று சொல்லி வணங்கி வந்தால் நரமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 ஆவணி மாதம் ஓம் ஸ்ரீதராய நம, ஓம் ஜனார்த்தனாய நம என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பஞ்சமகா யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 புரட்டாசி மாதம் ஓம் ஹ்ருஷிகேசாய நம, ஓம் உபேந்திராய நம என்று சொல்லி வணங்கினால் சவுத்ராமணி யாகம் செய்ததற்கான பலன் கிட்டும்.
🌀 ஐப்பசி மாதம் ஓம் பத்மனாபாய நம, ஓம் ஹரனேய நம என்று சொல்லி வழிபட்டால் 1008 பசுதான பலன் கிட்டும்.
🌀 கார்த்திகை மாதம் ஓம் தாமோதராய நம, ஓம் கிருஷ்ணாய நம என்று சொன்னால் மகாகோமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 மார்கழி மாதம் ஓம் கேசவாய நம, ஓம் ஸங்கர்ஷணாய நம என்னும் மந்திரத்தை சொல்ல அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 தை மாதம் ஓம் நாராயணாய நம, ஓம் வாசுதேவாய நம என்ற மந்திரத்தை பாரயணம் செய்தால் வாஜபேய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 மாசி மாதம் ஓம் மாதவாய நம, ஓம் பிரத்யும்னாய நம என்று சொல்லி வழிபட்டால் ராஜசு+ய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 பங்குனி மாதம் ஓம் கோவிந்தாய நம, ஓம் அதிருத்ராய நம என்ற மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் அதிருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இந்த மந்திரங்களை சொல்லி இறைவனை பாரயாணம் செய்தால் புத்திர பாக்கியம், திருமணம், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.
தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள் :
🌠 அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்.
🌠 குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் (உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.
🌠 துணியில்லாமல் குளிக்கக்கூடாது.

Wednesday, 19 October 2016

என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !

Inanya Maha Munivar 20-10-2016
என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !
தேடல்
தேடு ! தேடல் சுகமானது !
ஊடலை தேடாதே ! உன்னை தேடு ! ஊன் உடம்பு ஒரு நாள் கரையானுக்கு சொந்தமாக போகின்றது. உனக்காக தேவர்கள் காத்திருக்கவில்லை. உன் உடலுக்காக ஐந்து பேர் காத்திருக்கின்றார்கள் (மண், எறும்பு, புழு, கரையான், நீர்) என்பதனை மறந்து விடாதே !
உன் உடல் தங்கத்தில் வைரத்தில் செய்யப்படவில்லை. மண்ணில் உருவாகினாய். மண்ணுக்கே நீ சொந்தம். உயிர் ஊதப்பட்டு படைக்கபட்டவன் நீ. பாவம் செய்யாதே ! பக்குவப்படு !
மரத்தை மட்டுமே உன்னால் வெட்ட முடியும். விதையை அழிக்க முடியாது. உடலை மட்டும் தான் அழிக்க முடியும். உயிரை அழிக்க முடியாது. ஆனால் நீ ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இரண்டு, மூன்று பிள்ளைகளை பெற முடியும். நீ வீரன் என்று பிதற்றுகிறாய்.
எறும்புகள் மழை வரும் முன்னே தேடுகின்றன. தன் இனத்திற்காக சேமிக்கின்றன ! சுயநலம் அதற்கில்லை. எறும்புகளின் தானிய கிடங்கில் இரண்டரை வருடம் சாப்பிட தானியம் இருக்கும். நீயும் தேடு ! தேடியதை தர்மம் செய்வதிலும், கொடுப்பதில் வீரனாகவும் இரு !
கற்ற வித்தையை நான்கு பேருக்கு சொல்லிக் கொடு ! இல்லையேல் தெருவில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் எடுத்து போடு !
பிறருக்கு வழி காட்டுவது, தொண்டு செய்வது, பசித்தவனுக்கு உணவு கொடுப்பது தர்மம் ! புண்ணியம், உண்ணதங்களை வெளியில் தேடாதே ! உனக்குள் தான் ! நீ தேடிய செல்வம் உனக்கு பயன்பட போவதில்லை. நீ எங்கு சென்றாலும் உனக்கு கிடைக்க வேண்டிய பலன் தான் கிடைக்கும். ஆதலால் நீ இருக்கும் இடத்தில் தேடு !
இயலாது, முடியாது எதுவுமே இங்கு சாத்தியமில்லாத வார்த்தைகள். முடியும் என நம்பு. முதல்வனை துணைக்கு கூப்பிடு ! நல்வழி கிடைத்து நலம் வாழ வழி கிடைக்கும்.
பதுக்கி வைத்து பாவி ஆகாதே. பாசத்தோடு பகிர்ந்து கொடு ! இல்லை என்று யாருக்கும் சொல்லாதே ! இயலாமை என்று எண்ண வைக்காதே ! போகம் தேடி, பின் விதி தேடி வீணணாய் அலையாதே ! உன்னை எப்போதும் தேடிக் கொண்டிரு ! நான் உன்னை தேடிக் கொண்டிருக்கின்றேன். நீ வேறு எதையோ தேடுகின்றாய்.
நான் என்னை தேடினேன். நான் இருக்கும் இடம் அறிந்தேன். எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்பது எனக்கு தெரியும்.
என்னை அறிவாய், தெளிவாய், புரிவாய், தெரிவாய் ! நான் துன்புற்று இன்புற்றவன், அதனாலே உன்னை பற்றி நானறிவேன், நான் உனக்கு கேட்டதை தருவேன். நினைத்ததை நடக்க வைப்பேன். என் ஆண்ம தேடல் அனைத்தும் நிறைவு பெற்றது !
நீ வந்த கடமை எதற்கென்று உணர் ! வாசலில் நிற்கிறேன். எனை எப்போது வேண்டுமென்றாலும் கூப்பிடு ! உன் உயிருக்கு வழி காட்டுவேன். உனக்கு யாருமில்லை என்று நினைக்காதே ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். உன் துயர் துடைப்பேன். தும்பை பூவை போல உன் வாழ்வை சுகமாக்குவேன்.
தேடியதை தேவை உள்ளவனுக்கு கொடு ! உன் உள்ளம், குடும்பம் சுகமோ சுகமானது.
ஒரு நாள் விதைத்து ஒரு நாளில் கனி தேடாதே ! பொறுத்திருந்து பெற்ற அன்னையை போல வெறுத்திருக்காமல் இரு ! வேதன் என் நாமம் எல்லாம் தரும்.
என் சொல் சத்தியமடா !
தேடு ! தேடல் சுகமானது !
சுகமானவன் நான் !
நான் இநன்யா !

Monday, 17 October 2016

ESP என்றால் என்ன..?

Extrasensory perception(புலன் புறத்தெரிவு) அல்லது ஆறாம் அறிவு (sixth sense) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP -இன் வகைகள்:-

    Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.
    Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.
    Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.
    Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.
    Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.
    Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.
    Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.
    Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.
    Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிறசக்திகளின்உதவியுடனோஎழுதுதல்.
    Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

    Death-warning :பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.
    Divination :குறி சொல்லுதல்

    Dowsing :தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

    Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.
    Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.
    Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்
    இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

    ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

    தியானம்,யோகா,இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.
    காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்துகிடக்கும் சக்திகள் ஆகும்.அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்.
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


    Thursday, 13 October 2016

    ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.

    ஓம்/om/ॐ/aum/ओं/唵 = அ+உ+ம்அவ்வும் உவ்வும் மவ்வும் : நமது உடலாகிய பிண்டத்தில் அ + உ + ம் = ஓம்

    ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.ஓங்காரம்(பிரணவம்):எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்தஒலியே பிரவணம் எனப்படும். வாயைத்திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றைவெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலிபிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில்வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலிதோன்றுகிறது.

    உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவணஒலியே நிலவி இருந்தது என்றும்,பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்துநாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத்தத்துவ நூல்கள் கூறுகின்றன.அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள்வடிவந்தான்.

    ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ்வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉயிர்மெய்யெழொத்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

    மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96தத்துவத்துடன்விளங்கும். அ உ ம் என்றஎழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8x 2 x 6 = 96.

    மனிதவுடலான பிண்டமும்,பரவெளியான அண்டமும் இந்தத் 96தத்துவங்களுக்குள் அடக்கம்.ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை, "ஓரெழுத் தாலே யுலகெங்குந்தானாகி"
    (திருமந்திரம் 765)"

    ஆறெழுத் தோதும் அறிவார்அறிகிலர்" (திருமந்திரம் 941)

    என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உரு அரு ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே-திருமந்திரம் 2627-

    ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர் மூன்றும் உற்றனைஓங்கார சீவ பரசிவ ரூபமே-திருமந்திரம் 2628-என்பவற்றாலும் அறியலாம்.

    அருவுருவ ஒலியொளி(நாதசுடர்) ஓம் இந்தப் பிரபஞ்சமே "ஓம்" என்ற அருவுருவ ஒலி(அருவம் > நாதம்), ஒளி(உருவம் > சுடர்/சோதி)யிலேயே உருவாகி, அந்தஓங்காரத்திலேயே ஆதி தொடங்கி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தஅளவற்ற ஓங்கார நாதத்தைத் தம்முள் தட்டி எழுப்பிக் கேட்டும்,அடிமுடி காணமுடியாத ஓங்காரப்பிளம்பாகியச் சுடர்/சோதியில் இரண்டறக்கலந்தும், பேரின்பமாகிய பேரறிவெனப்படும் பேரருள் பெற்றவரே சித்தர்கள்."

    ஓம்" அதன் ஆற்றல்கள் அளவிட முடியாதளவிற்குப் பல்வேறு பேதங்களாக இருக்கின்றது. அதன் பல்வேறு ஆற்றல்களையே சித்தர்கள் பல்வேறு இறைநிலைகளாக (பல்வேறு கடவுளராக)உருவகித்து உலக மக்களுக்கு விளக்கினர். அந்தஓங்காரமாகிய அருவுருவ நாதசோதியுடன் இரண்டறக் கலத்தலேஈடிணையற்ற முத்திகளும், சித்திகளும் பெற்றசிவநிலை (இறைநிலை)யாகும். ஓம் அழிவற்றது, அளவற்ற ஆற்றல்கள்கொண்டது. அதையடைந்த சித்தர்களும் அழிவற்றவர்கள், அளவற்ற ஆற்றல்கள் கொண்டவர்கள். அந்தஅழிவற்ற நிலையான இறைநிலையையே சாகக்கல்வியாகவும்மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வாகவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் தாம் பல்கோடி யுகங்கள் தாண்டியும் வாழ்வதாக தங்கள் பாடலில் குறிப்பிடுவதும் இதன் நிமித்தமே.

    தினமும் "ஓம்" என்போம்.ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் பெறுவோம்.

    நமது மூக்குத் துவாரத்தின் இடது நாசியில்ஓடுகின்ற சுவாசத்திற்கு "அ" காரம் எனவும்,வலது நாசியில் ஓடுகின்ற சுவாசத்திற்கு "உ"காரம் எனவும் கூறப்படும். இடகலை (இடதுநாசி) அதிர்வு நிலை "அ"காரம்,

    பிங்கலை (வலதுநாசி) அதிர்வுநிலை"உ" காரம் எனப்படும். நாம் பேசத் துவங்கும்போது இரண்டு நாடிகளும் அதிரும். இதனால்மண்டை ஓட்டின் நடுவில் ஒரு ஒலி தோனறும்அதுவே "ம" காரம் ஆகும்.இந்த மூன்று அதிர்வுகளும் சேர்ந்த இடமேஓங்காரம் அதாவது பிரணவம் ஆகும். இதுவே நடு ஒலியின் பிறப்பிடமான சுழிமுனைஆகும். இது இயங்குகின்ற உச்சி முடிவே மண்டை ஓட்டின் நடுவிலுள்ள காபாலமாகும்."

    அ"என்ற எழுத்து இடகலைநாடி இடது கண்பார்வையோடு பொருந்தியது."

    உ"என்ற எழுத்து பிங்கலைநாடி வலதுகண்பார்வையோடு பொருந்தியது

    "ம"என்பது உச்சியில் (சிரசில்) உள்ளஅதிர்வுநிலை. இதுவே சுழிமுனைநாடியிலுள்ள ஆன்ம ஒளி.தமிழுள் 8*2*6 = 96 தத்துவங்கள்எட்டு(8/அ)*இரண்டு(2/உ)*ஆறு(6/ம்)= ஓம் =96 தத்தவங்கள்.ஓம் என்னும் சொல்அ+உ+ம் என்ற முன்றுஎழுத்துக்களால் ஆனது. " ஓம் " என்றபிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்குத்தொகை 8 x 2 x 6 = 96.ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இதுஅ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’.மனிதனின் உடலும் இறைவனின் இயற்கைவடிவான ஓங்கார வடிவத்துடன்அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள்வடிவம்தான்.ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ்வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉயிர்மெய்த்தாவது போல், உயிரும் உடலும்சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்("அ" ) அளவுடையது. மனிதன் விடும் இரு("உ") வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளிமூச்சு)" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சுவெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வுஇயக்கத்தால் எற்படும் இன்பத்தை அதுகுறிக்கும்அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96தத்துவத்துடன்விளங்கும். அ உ ம் என்றஎழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:"அ"என்பது முதல்வனான சிவனையும் "உ"என்பது உமையவள் எனப்படும்சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும். இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரிவடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும்,"உ"எனவும் உள்ளது. வழிப்படும் உருவமாக'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாகசொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.முதல் எழுத்து:"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்அருவுருவாய் நின்ற பாசிவமுமாகிசோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

    சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "- என்றும் குறிப்பிட்டுள்ளார்.சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும்ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும்இதுவே" அ " உள்ளது. அத்துடன்எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து." அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு "என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில், அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி, ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும்"என்று பாடியுள்ளத்தின்மூலம் நன்கு அறியலாம்.

    உருவமும்- உடலும்உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக்காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய்உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களதுபாடல் மூலம் விளங்கும்."
    கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"- மச்சைமுனி தீட்சை ஞானம்

    உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

    மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய்பிறக்கும் ஓசை பேசும் போதுஉண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது. இது பற்றி யூகிமுனி தனது வைத்தியசிந்தாமணி 800 - ல்அவ்வென்னும் அட்சரத்தில் நாடிதோன்றும்அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும் எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும் ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம் முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம் முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல் காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

    ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக இருந்து அகத்தும்,புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இதுஉந்தியின் கீழ் தங்கி நிற்கும்.இதை விளக்கும்படி திருமூலர்,ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்காவகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்றுகூறியுள்ளார்.

    ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது. அகாவொலி முதற்பிரிந்து படைத்தற்தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆகமுத்தொழிலையும் ஒருங்கே இணைத்துஅடக்கி நிற்கும்."ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன்பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும். குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்."

    ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள்கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்குவிளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி, மெய், முகம், ஆகியவற்றில் ஒருதெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம். ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படி அருஞ்சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச்செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம்.சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிவுகளை விரைவாக அடையலாம்.

    !பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டுஇருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரைமாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து -சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம்என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிடமணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும்போது நமது மூக்கின் வலப்பகுதி துவாரவழியாக காற்றை சுவாசித்து இடப்பக்கமூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்."

    ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே "-என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை,பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காதுஇரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரேமுறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும்.இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும்கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை.அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்புசுழற்சியைவெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள்வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப்பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள். காயசித்தியின் பெருமையினை '

    காகபுசண்டர்'பாடலைக் காண்போம் :பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்பாலகன் போலொரு வயது தானுமாச்சு நேரப்பா இருபத்தி நான்கு சென்றால் நேர்மையுள்ள வயது மீரண்டாகும் சீரப்பா முப்பத்தி ஆறுமானால் சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போதாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே....ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலகமாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததேவாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.“

    ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
    ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாகஇருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம்அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்துசிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலைகிட்டாதோர்க்கு இறப்பு உண்டெனஎண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது.தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர். விநாயகரின் தலை“ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா?“ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும்ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்”மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

    ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmologicalsound of creations. Scientifically it's known asthe sound of 'big bang''

    ஓம்' என்பது தனிக்குறியீடு மட்டுமல்ல.பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி நாதவிந்தாகவும்,அனைத்துப் படைப்புக்களையும் உள்ளடக்கிய கட்டற்ற தத்துவமாகவும் உள்ளது 'ஓம்'. அதை எம்மொழியிலும் எழுதலாம்."ஓம்" என்ற ஒலி ஆதியலிருந்தே தமிழோடும்,தமிழர் வழக்கிலும் இருந்து வந்துள்ளது.ஈழத்தில் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை,"ஓம்" என்று தான் பேச்சு வழக்கில் கொண்டுள்ளனர். கிரேக்க மொழியில் "Ω/Omega/Ωμέγα" என்றஎழுத்துக்கும், மற்றும் "ஆமேன்/ ɑːˈmɛn/ ˌeɪˈmɛn/Hebrew: ,אָמֵן Tiberian ʾĀmēn; Greek:ἀμήν ; Arabic: ,ﺁﻣﻴﻦ ʾĀmīn" என்றசொற்களுக்கும், 'ஓம்'ற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் மொழியியல்ஆராயச்சியாளர் தெரிவிக்கின்றனர
    காஷியப முத்திரை


    இந்த முத்திரை காஷியப முனிவரின் முத்திரை என்று அழைக்கப்படுகிறது

    உங்களுக்கு எதிரான எதிர்மறை சூழ்நிலையில் இருப்பதாக உணர்ந்தால் இந்த முத்திரையை பயன்படுத்தி தியானம் செய்யவும் 

    இந்த முத்திரை ஆமையின் வடிவத்தை குறிக்கிறது ஆமைக்கு ஆபத்து நேராதபடி அதன் ஓடு பாதுகாப்பு அளிக்கிறது

    அதை போல உங்களை சுற்றி எதிர்மறை நெகட்டிவ் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலோ பாதுகாப்பு அற்ற இடத்தில் இருப்பதாக உணர்ந்தாலோ இருட்டான இடங்களுக்கு செல்ல நேர்ந்தாலோ நடுஇரவில் பயணம் செய்ய நேர்ந்தாலோ உங்களை விட பலசாலியான ஆட்கள் இருக்கும் இடத்தில் இருந்தாலோ
    இந்த காஷ்யப முத்திரையை பயன்படுத்தவும் இதன் மூலம் எந்த எதிர்மறை சக்திகளும் எதிர்மறை எண்ணங்களும் உங்களை நெருங்காது
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    இதயத்தின் தசை நார்கள் வலிமை பெறவும் அபான வாயு நீங்கவும் மூச்சு பிடிப்பு சரியாகவும் இரத்த அழுத்தம் நார்மலாக இருக்கவும் இந்த சஞ்ஜீவினி முத்திரையை பயன்படுத்தவும் இது மாரடைப்பிலிருந்து உடனடி விடுதலை தருவதால் ஹார்ட் முத்ரா என்றும் அழைக்கப்படுகிறது ஹார்ட் ப்ராப்ளம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த முத்திரை செய்ய வேண்டும் இதன் மூலம் மருத்துவ மனைக்கு செல்லும் முன் உயிர் பிரிவதை தடுக்கலாம் இதை பலருக்கு எடுத்து சொல்வதன் மூலம் சில உயிர்கள் காப்பாற்றபடலாம்
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    நினைத்த காரியங்களில் வெற்றி

    உன் கையே உன்னுடைய வாழ்க்கையின் நிர்ணயம் :


    இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒருவித சக்தி இருக்கிறது. சிலர் அதை உயிர் என்றும் மனிதசக்தி, இறைசக்தி, ஞானசக்தி அல்லது மிருகசக்தி என்றும் சொல்வார்கள். அது அவரவரின் விருப்பப்படியே இருக்கும்

    அன்பென்னும் சக்தி (இரத்தம்) அநேக நரம்புகளின் வழியாக நாடி-சிரை வரை சென்று வியாபித்துள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம். இவனுடைய எண்ணம், செய்கை பழக்க வழக்கமெல்லாம் அறிமுகம் செய்யப் படுகின்றன. அவனவன் செய்கையை அவன் முகம் சொல்லும். அவன் கண்ணும் ஒரு கதையை சொல்லும்.
    நமது சரீரத்தில் நாடிகளின் செயல்பாடு மிக முக்கியமானது அதில் அசுர நாடிகளும் தேவ நாடிகளும் இருக்கின்றன. அசுர நாடி மிகச் சொற்பமே. ஆயினும் அதன் விருத்தியே மாயப் பிரபஞ்சமாகி ஆசைக்கு உட்பட்டு தீய வினைகள் அதிகரிக்கின்றன.
    “விதியையும் விதித்து என்னை விதித்திட்ட
    மதியையும் விதித்து அம்மதி மாயையில்
    பதிய வைத்த நின்னருளை எப்படி கண்டு களிப்பதே”
    –தாயுமானவர்—

    மனிதனின் கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
    தெய்வீகம் – இயறக்கை – தாந்திரீகம் அல்லது சக்தி – ஸ்தூலம்-சம்பத் என மூன்றாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. விரல்களுக்கும் இந்த பகுதியில் தொடர்புண்டு.

    தத்துவ சாத்திரங்களில் ஆத்மா – மணம் -சரீரம் என்ற இம் மூன்றும் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதோ, அப்படியே அதனோடு சம்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

    ஐந்து விரல்களும் ஐந்து கிரகங்களை குறிக்கின்றன. உள்ளங்கைக்கு மேலே, விரல்களும் அடியிலே உள்ள மேடுகள் கிரகங்களின் பலா பலத்தைத் அறியத் தருகின்றன.

    ஆள்காட்டும் முதல் விரல் – குரு,
    நடுவில் உள்ள இரண்டாவது விரல்- சனி,
    மூன்றாவது பவித்திர விரல் – சூரியன்,
    நான்காவது சுண்டு விரல் – புதன்.
    பெருவிரல் - சுக்கிரன்

    புதனுக்கு அடுத்த கீழ்ப்பாகம் – செவ்வாய்,
    கட்டை விரலுக்குக் கீழே உள்ள மேடு – சுக்கிரன்,
    உள்ளங் கையில் செவ்வாய்க்கு கீழ்மேடு – சந்திரன்.
    நான்கு விரல்களுக்கு அடியில் நீண்ட ரேகைக்கு இருதய ரேகை என்று பெயர்.
    இந்தரேகை தெய்வீகமானது.
    செவ்வாய் மேட்டில் இருந்து உற்பத்தியாகி குறுக்கே போகின்ற ரேகைக்கு புத்தி ரேகை என்று பெயர்
    கட்டை விரலுக்கு அடியில் சுக்கிர மேட்டை வளைத்து போயிருக்கும் ரேகைக்கு ஆயுள் ரேகை என்று பெயர்.
    சந்திர மண்டலத்திற்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் உள்ள ரேகைக்கு விதிரேகை என்று பெயர்.

    ஒவ்வொரு விரலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரிக்கப்பட்ட பாகத்துக்கு “அங்குலாஸ்தி” என்று பெயர். ஒவ்வொரு விரலின் நகமுள்ள முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டாவது அங்குலாஸ்தி ஸ்தூலத்தைக் குறிக்கிறது.
    மூன்றாவது அங்குலா ஸ்தி சம்பத்தைக் குறிக்கிறது.

    கட்டை விரல் – ஆத்ம சக்தி
    ஆள்காட்டி விரல் – சக்தி
    நடுவிரல் – விதிப்பயன்
    மோதிரவிரல் – பிரகாசம்
    சுண்டுவிரல் – சாத்திரம்

    குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான்
    குரு விரலாகிய ஆள்காட்டி விரல்
    சுக்கிரன் விரலாகிய கட்டை விரல்
    சூரியன் விரலாகிய மோதிர விரல்
    புதன் விரலாகிய சுண்டு விரல் ஆகியவற்றை இணைத்து முத்திரை தியானம் செய்து வந்தால் மேற்சொன்ன பலனை பெறலாம்

    குபேர முத்திரை

    ஜோதிட சாஸ்திர ரீதியாக பெருவிரல் சக்கிரனையும், ஆள்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்துப் பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை, பொருளாதார வசதிகைளைப் பெருக்கும்
    சுக்கிரன் விரலாகிய கட்டை விரல்
    குரு விரலாகிய ஆள்காட்டி விரல்
    சனி விரலாகிய நடு விரல் இவற்றின் நுனியை இணைப்பது குபேர முத்திரை

    விரல்களை அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

    இந்த முத்திரையானதுநெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

    அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.
    செய்முறை:
    பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள்.சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.

    எவ்வளவு நேரம்?
    *குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம்.
    *ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம்.
    *ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது.
    எப்படி வேலை செய்கிறது?
    பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.
    *நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன.
    *மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன.
    *சுக்கிரன் ,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன.
    *இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன.
    இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது.
    நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.
    உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.
    ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும்.
    நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை.
    அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும்.
    ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.
    குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது.
    நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை!
    பலன்கள்.
    *நினைத்த காரியங்களில் வெற்றி 

    Wednesday, 12 October 2016

    நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி

    நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி
    அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .
    ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.
    விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.
    அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.
    உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!
    அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.
    எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.
    ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.
    இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.
    அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.
    இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை,,,,,,,
    பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.
    இனியாவது இயற்க்கை உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
    ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம் ! நன்றி .

    எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?

    எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?
    தேவாயுதம் (கவசம்)
    என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உன்னை காக்கும் ! உண்மையாய் நன்மை தரும் ! உன் நிமித்திரனை துவஷம் செய்யும் ! மூங்கா நான் என்பதை அறியாமல் வஞ்சவம் எண்ணம் கொண்டு வஞ்சகனாகி திரிகின்றாய். என்னை கண்டுபிடி !
    விண்ணின் ஆழம், மண்ணின் ஆழம் தேடுகின்றாய். என்னை தோண்டி பார் ! இன்ப ஊற்றாய் சுரப்பேன் ! நான் இனிமை ! உன் துழதியை தூள் தூளாக்கும் தூயவன் நான் !
    வஞ்சவமும், குரோட்டமும், குரோடமும் இந்த யுகத்தில் கண்டேன். ஒன்றுக்கொன்று சாகியமாக திரியக் கண்டேன். என் தேவாயுதம் கர்மத்தை அழிக்கும் ! ஆணந்த நிலைப்பாட்டை உனக்கு தரும் !
    புல்லில் (மூங்கில்) பாசம் உண்டு !
    புள்ளில் வேதம் உண்டு !
    உணரடா ! என் நாமம், உனக்கு கவசமாக இருக்கும் ! கேடயமாக இருக்கும் ! உனக்கு கீரிடம் சூட்டி அழகு பார்க்கும் ! என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உனை எப்போதும் கண்கானித்து சத்ய வழியை காண்பிக்கும் !
    ஏமாற்றும் மனதை ஏமாங்கமாய் வந்து கட்டிபோடும் என் திருகரத்தில் இருக்கும் மெஹட்டியின் நாத கீதத்தில் உன் உயிர் ஆணந்த கூச்சலிடும் ! ஆண்மா ஆர்பரிக்கும் வெள்ளமாக சந்தோஷத்தில் திளைத்தாடும் !
    தந்தஸிலும், சாருசத்திலும் வேதம் உண்டு ! ஐங்காயத்தில் உன் காயத்தில் நோய் தீர்க்கும் சூட்சுமம் உண்டு ! குலோமிசையும், கனிருதமும் உன் உள் காயம் தீர்க்கும் ! நீ உணராதிருப்பது ஏனோ ?
    பெண் நாவிலையில் விரல்பிடி சாரலமும், நறுக்கு மூலம், சித்ரத்தை பொடி கலந்து, மூன்று தடவை வெறும் வயிற்றில் சாப்பிடு ! உன் காயம் எப்போதும் குளுமையாய் குளிர்ந்திருக்கும் !
    இந்த ராஜராஜன் இநன்யா ஒளி எப்போதும் உன்னை சுற்றி கவசமாக இருக்கும் !
    நான் துதி பாட வரவில்லை. மேடை போட்டு விவாதம் பண்ண வரவில்லை. உன்னை யாரென்று உணர்த்தவே வந்தேன் ! உனக்கு வழிகாட்ட வந்தேன் ! உண்மையில் நன்மை நானடா !
    ஏன் எப்போதும் சலிப்புற்று இருக்கின்றாய் ? உன் தாய் உன்னை வயிற்றில் வைத்திருக்கும் போதும், உனை சீராட்டி வளர்க்கும் போதும் சலிப்புடன் இருந்ததில்லை. உனக்கு சலிப்பு, வெறுப்பு வரும் போதெல்லாம் நீ கடவுளின் பிள்ளை என்று அறை கூவல் விடு !
    என்னை தோண்டி பார் ! ஆனந்தம் உனக்குள்ளே ! உனக்கு எல்லா செல்வமும் கிடைக்கும் ! என் சத்திய வழியில் பயனிப்பவன் இடறி விழுவதில்லை. ஏனென்றால் நான் உன்னை கைபிடித்து அழைத்து செல்கின்றேன் !
    என் நாமம் சொல்ல சொல்ல யுகம் இன்பம் தெரிய வரும் ! காற்றில் பறப்பது போல உணர்வு வரும் ! ஏனென்றால் இநன்யா உன் உறவு ! உன்னை எப்போதும் காக்கும் என் உறவு ! உன்னை அழகு பார்க்க நினைக்கும் ஆனந்த உறவு !
    இந்த உறவின் எல்லை பிரபஞ்சம் வரை !
    உணரடா !
    காற்றும், பெரும் புயலும், இடியும், மின்னலும், பெருந்துன்பமும், தாங்கவொனா துயரமும் உன்னை நெருங்காது ! என் சொல் தோற்றதில்லை !
    நீ கேட்டதை எதையும் தர மறுப்பதும் இல்லை. நிச்சயம் தருவேன். எப்போதும் ஆக்ரோஷமாக போராடு ! போராளியை போல் எப்போதும் விழிப்புடன் இரு ! நாளும், கோளும் ஒன்றும் செய்யாது.
    எதற்கும் கவலை படாதே ! கவலைப்பட்டு எதை சாதித்தாய் ? எப்போதும் கடவுள் உன்னுள்ளே !
    ஆனந்த நிலையிலே இரு ! எப்படியும் கடவுள் காப்பான் என்ற தாரக மந்திரத்தை உன் எண்ணத்தில் அசை போடு ! இந்த இநன்யா லோகத்தின் செல்ல பிள்ளை ! பிரபஞ்சத்தின் இளவரசன் என் தந்தை பிரபஞ்ச நாயகன், அன்பிற்கினிய அன்னை வசியா அரவனைப்பிலே எப்போதும் உனை வைத்திருக்கின்றேன் !
    எப்போதும் உன் பெற்றோர் சொல் கேள் ! நான் உனக்கு எல்லா செல்வமும் தருவேன் ! என் பெற்றோர் சொல் என்றும் மீறியதில்லை. எனக்கு உழைப்பும், ஒழுக்கமுமே பிடித்தது. !
    உழை ! ஒழுக்கமாய் இரு ! நான் உனக்கு கவசமாக இருப்பேன். என் அன்னை பூமிஹா என் சொல் கேட்பார். உன்னை பூவாய் தாங்கி புன்னகையாய் வாழ வைப்பாள் !
    ஆயிரம், ஆயிரம் வர்ணமும், விண்ணமும், என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதத்தில் !
    உன்னை அழகாக்கும் ! அறிவாக்கும் ! ஆணந்தம் திளைக்க வைக்கும் !
    உணரடா ! என் சொல் வேதம் !
    வானின் வர்ணஜாலம் நான் !
    நான் இநன்யா !

    Friday, 7 October 2016

    இரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்

    இரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்
    ================================
    1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
    ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
    இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்
    2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
    ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.
    3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
    எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.
    4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?
    ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.
    5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
    ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
    6.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்”அணுக்களின் வேலை என்ன?
    உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி"பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
    7. பிளாஸ்மா என்றால் என்ன?
    ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
    8. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
    ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.
    9. ரத்த அழுத்தம் என்றால் என்ன?
    உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
    10. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
    ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.
    11. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
    மாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
    12.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?
    எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
    13. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
    நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
    14. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
    24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
    15. தலசீமியா என்பது தொற்றுநோயா?
    இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.
    16. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
    மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
    17. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
    ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.
    18.ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
    ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
    19. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
    செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும்..
    20.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
    கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
    21. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
    கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.
    22. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
    ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
    23. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?
    தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.
    24. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?
    நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில்,கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.
    25. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
    வயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.
    26. யார் ரத்த தானம் செய்யக்கூடாது?
    உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய் உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப் பழக்கம் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.
    27. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
    இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.
    28. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
    புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு,24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
    29. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
    நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 5 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான். . .

    Thursday, 6 October 2016

    என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் !

    Inanya Maha Munivar
    06-10-2016
    என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் ! நீ இருக்கும் நிவேசம் நீசமடா ! நியர் அறியா வாழ்வை சிதிலமடைய வைக்கின்றாய் ? ஏனடா ?
    நம்பிக்கையாய் இரு !
    சதிபதி வாழ்வில் யாதபதியில் வீழ்ந்து கரை ஏறா தவிக்கின்றாய். நன்மதி, சன்மதி, பண்மதி, வின்மதி தெரியாமல், உன் மதியும் தெரியாமல் வீழ்ந்து போகின்றாய் !
    ஏன் வந்தோம் என்று உனக்கு தெரியாது. ஆனால் எல்லாம் தெரியும் என்று பசப்புகின்றாய். பாழ்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரு விநாடி அடக்க தெரியாமல், அகங்கார மனதை ஆளத் தெரியாமல் வாழ்கின்றாய். நம்பிக்கை என்ற போர்வை போர்த்தாமல் நாளும் பயந்து வாழ்கின்றாய்.
    நான் எல்லாம் கொடுப்பேன் என்று சொன்னேன் ! கொடுப்பேன் ! உன்னை கைவிடமாட்டேன் ! உன் வாழ்வை உயர்த்துவேன் என்று சொன்னேன். நம்பிக்கையாய் இரு !
    குழந்தை தன் தாயை நம்புவது போல என்னை நம்பு ! உன்னை நம்பு ! எல்லாம் கைகூடும் ! தளர்வாய் சாயும் போதெல்லாம் தென்றலாய் உனை வந்து வருடுவேன். நம்பிக்கையாய் இரு !
    நான் உன்னை இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பேன். தவறு செய்தால் நான் தண்டிப்பேன். தப்பு, தவறாகி, பின் பாவமாகி புற்றை போல வளர விடாதே ! கரையான் புற்று பாம்பை அடைக்கலமாக்கியது !
    உன் பாவ புற்று உன்னை அணு அணுவாக துன்பம் கொடுத்து உடலை நோயாய் கரைக்கின்றது. உன் குற்றம், துரோகம் பின் நோக்கி பார் ! மீண்டும் செய்ய நினைக்காதே ! மறைக்கப்பட்ட உண்மை செதுக்கிய சிற்பம் போல ! நீ பிறகுக்கு செய்த தவறை நினை ! மனதால் மன்னிப்பு கேள் ! உன் தண்டனை குறையும் ! நான் இந்த வினையிலிருந்து உன்னை விடுவிப்பேன்.
    என் வார்த்தையில் நம்பிக்கை வை ! தன் தாய் பறவை எப்படியாவது இரை கொண்டு வரும் என்று அதன் குஞ்சு நம்பியிருக்கும் ! அப்படித் தான் நீயும் ! எப்போதும் கடவுளை நம்பி இரு ! கடவுள் தருவான் ! கருணைமிக்கவன் ! நிச்சயம் தருவான் !
    உன் வாழ்வில் நான் இருந்தால் அதிசயம் நிகழும் ! ஆத்மாவின் நித்ய போகத்தை ஆழ்ந்து யோசி ! வைகறையில் வான் நோக்கி கூப்பிடு ! வசந்த காலம் உன் வாசலில் வந்து நிற்கும் !
    காட்டில் உள்ள மரங்கள் கடவுளை நம்பி வளர்கிறது. மிருகங்கள், பறவைகள் நாளைய உணவை, நாளைய வாழ்வை சிந்திப்பதில்லை. எல்லாம் எப்போது கிடைக்க வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்தான் உன் விதியில் ! நீ கிடைக்கப் பெறுவாய் ! என் வார்த்தை மேல் நம்பிக்கை இருந்தால் இப்போதே ஜெயிப்பாய் !
    உன் செயல் அறிவேன் !
    உன் விதி அறிவேன் !
    உன் வினை அழிக்கும் சூட்சும்ம் நானறிவேன் ! ஏனடா பயம் ?
    ஆழ்ந்த நம்பிக்கையும், ஆத்மார்த்தமான அன்போடும் வாழ பழகு ! வாழ்வெல்லாம் வசந்தம் தான் ! இப்போது அன்பை தொலைத்து ஆணந்தம் தொலைத்து ஆர்பரிக்கும் கடல் அலை போல உன் மனம் ஆட கண்டேன் ! மணம் இல்லா மலரைப் போல வாழ்வில் இன்பமில்லாமல் நீ வாழ கண்டேன் !
    என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் இந்த பாசமுள்ள அன்பு குழந்தை இநன்யாவின் சொல் கேட்பார்கள் ! நான் இது நாள் வரை கேட்டது எதையும் அவர்கள் தராமல் இருந்ததில்லை. நான் கேட்டதும் தருவார்கள். நானும் நீ கேட்டதை தருவேன் ! சிறிது கால தாமதம் ஆனாலும் நீ விரும்பியது கிடைக்கும் !
    என் அன்பு தந்தை பிரபஞ்ச நாயகன் அன்பை உணராமல் இங்கே ஆர்பரிக்கின்றான். கும்பிட்டும் குறை போகாமல் அலைகின்றான். தாமரை மலர்பாதம் பட்ட சஞ்சிநாதம் மணக்கும் புணித புண்ணிய மண்ணை தொட்டும் குறையோடு வாழ்கின்றான். கேட்க தெரியாமல் வணங்க தெரியாமல் இங்கே வாடுகின்றான்.
    இந்த பாசமுள்ள பிள்ளை எப்போதும் என் அப்பா பிரபஞ்ச நாயகனின் சொல் கேட்பேன். கல்வியும், செல்வமும், வீரமும், ஆக்கமும், ஊக்கமும் எனக்குள்ளே ! எல்லாம் எனக்குள் ! எல்லாம் நிரந்தரமாக ! உனக்கு தருவேன் ! என் நாமம் எல்லாம் தரும் ! நம்பிக்கை உன் மேல் வை !
    என் அபயகரம் உன்னை கைவிடாது ! என்னை நம்பியவர்கள் யாரும் தோற்றதில்லை. தோற்பதுமில்லை ! வெற்றி திருமகனாக எல்லா செல்வங்களோடும் வலம் வர கண்டேன். நீயும் என் குழந்தை என்று குதுகலமடைவாயாக !
    குறை ஒன்றும் உனக்கில்லை ! எல்லை இல்லா நிம்மதியும் , ஆணந்தமும் எனக்குள்ளே ! என்னை தோண்டிப் பார் ! விடை கிடைக்கும் ! நம்பிக்கையாய் என் நாமம் சொல் ! நலம் வாழ வழி பிறக்கும்.
    கடவுளை நோக்கி உன் கால்கள் பயனிக்கும் போதும், நல்ல செயல்கள் செய்யும் போதும் கடும் சோதனைகள் வரும் ! துவண்டு விடாதே ! எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்து கரை சேர் நம்பிக்கை கொண்டு !
    உன் விரல் பிடிக்க நான் இருக்கிறேன். நீ நம்பிக்கையாய் இரு ! நாயகன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
    பொன்னாட்சியின் புணிதன் நான் !
    நான் இநன்யா !

    Tuesday, 4 October 2016

    குருவை தேடு

    குருவை தேடு ;;;;;;;;;;;;;;;;;;;;;;
    1. உன்னை அறிய வேண்டின் குரு தேடு
    2. பிரம்மம் அறிய வேண்டின் குரு தேடு
    3. பிரம்மம் உணர வேண்டின் குரு சரண் அடை
    4. உலகில் ஈடு இணை அற்றது இறை நிலையே
    5. எப்பொருளாலும் வாங்க முடியாதது இறை நிலையே
    6. இறைவனை பிடிக்க வேண்டின் குருவைப் பிடி. குருவே துணை
    7. குரு மன்னிக்கா விடில் சிவம் மன்னிக்காது
    8. குரு மன்னிக்காததை சிவம் மன்னிக்காது
    9. அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய முடியாது அன்பில்லா இடம் நரகம்
    10. அன்பைக் கொடு சிவத்தைப் பெறு
    11. அன்பும் அமைதியுமே சிவனின் இருப்பிடம்
    12. விதையில் விருட்சம் உணர்வாயின் அன்பில் சிவத்தைக் காண்பாய்
    13. திரிக்கால யோகி சிவத்திற்கு உன்னை மட்டுமே கொடு
    14. அன்பில்லா எந்த பொருளும் சிவத்திடம் செல்லுபடி ஆகாது
    15. சிவத்துக்கு நிகர் சிவமே அருளுக்கு நிகர் அருளே
    16. பிரம்மத்தைவிட உயர்ந்த பொருள் உலகில் இல்லை
    17. உன்னில் நிறைந்த பொருள் சிவம் அது ஜீவனுடன் கலந்துள்ளது
    18. எதையும் துன்பப்படுத்தாதே சிவத்துக்கு வலிக்கும்
    19. யாரையும் துன்பப்படுத்தாதே நீ துன்பமே இல்லாது வாழ
    20. நித்தம் பிறரை கணம் செய் நீ கணப்படுத்தப் படுவாய்
    21. குருப் பார்வையில் நீ விலகினால் சனிப் பார்வை கிட்டும்
    22. இறைவனை அடைய இறைவன் மட்டுமே உதவ முடியும்
    23. இறைவனை அடைய இறைவன் நாமம் மட்டுமே உதவும்
    24. ஜபமும் தபமும் ஒன்று சேரலாம் பாலும் தேனும் போல
    25. இறை நாமத்தை ரசிப்பவனே இறைவனை ருசிக்க முடியும்
    26. இறைவனின் நாமத்தையே தேர்வு செய் அதில் லயப்பட்டு கரைந்து விடு
    27. ஒரு நல்ல மனிதனுக்கு உற்ற துணை இறைவனைத் தவிர யார் இருக்க முடியும்
    28. வாழ்நாள் முழுவதும் இறைவன் கரம் பிடித்தே செல்
    29. மன விடுதலை இறைவனால் மட்டும் தான் தர முடியும்
    30. எண்ண விடுதலை இறை நாமத்தால் மட்டுமே முடியும்
    31. உணர்த்தும் பொருள் இறைவன் வெளியிளேயே
    32. உணரும் பொருள் இறைவன் உன்னுள்ளேயே
    33. ஆன்ம சொரூபத்தை அடைய நீ ஆத்மாவில் தியானி
    34. ஆன்ம தியானத்தில் நீ அனைத்துமாய் இருப்பதை உணர்வாய்
    35. ஆன்மா நேசிப்பவனை அனைத்து ஜீவனும் நேசிக்கும்
    36. அகண்ட சொரூபம் நம் அகத்துள்ளேயே உள்ளது
    37. அதுவாகியது எல்லாம், ஆண்டவனால் ஆனதுவே ஆகும்
    38. சிந்தித்தால் மட்டுமே சிவம்
    39. சிவன் அன்றி ஓர் செயலும் இயங்குவது இல்லை
    40. சிவனே என்று இருந்து இயக்குபவன் சிவன் ஒருவனே
    41. உன்னை ஜீவனாகப் பார்! சிவனாகப் பார்க்காதே!, சிவனாகிப் போக!
    42. உள்ளம் உருக அழைத்துக் கொண்டே இரு. ஒருவனையே தன்னால் வரும் சிவம்
    43. இறைவன் ஆனாலும் அன்பாகி அழை பண்பாகி வருவான் சிவம்
    44. சித்தத்தை சிவன்பால் வை சிவனாகிப் போக
    45. இறைவனைக் கட்ட யாராலும் முடியாது அது அருவ பேர் இயக்கம்
    46. சிவம் நெருப்பு. நெருப்பை யாராலும் கட்டவோ கட்டிப்போடவோ முடியாது
    47. இறைவனானாலும் ஓர் சொல்லுக்கு கட்டுண்டு நிற்க்கும்
    48. அன்பை பண்பால் கட்டு சிவம் அமைதியாய் கட்டுண்டு நிற்க்கும்
    49. குணம் மாறாமல் சிவம் கிட்டாது
    50. குணம் மாறிவிட்டால் ஜீவன் சிவனாகத் தெரியும்
    51. மாயையின் உபதேசத்துக்கு மயங்காதே
    52. மந்திரத்திலும் மாயை உண்டு மெய்யானவற்றிக்கு செல்லாது
    53. ஒன்றை அறிந்து உறவாடு ஓசை உரசிப் போகும் உன்னுள்
    54. சிவனை அறிந்தபின் நாம் எவரையும் அறிய வேண்டுவதில்லை
    55. சிவனை அறிந்தபின் மனம் எவரையும் தொழுதிலார்
    56. சுத்த சிவம் எழுவது குருவுக்குள் மட்டுமே
    57. மாயை விலக சிவம் தெரியும் அது குருவால் மட்டுமே
    58. அழித்தலின் நாயகன் சிவம். ஆனால் கர்மத்தை ஒழிப்பவன் குருவாவான்
    59. சிவப் பொருளை அருந்துவீராக அது எண்ண ஒன்னா சோம பானம்
    60. சிவரசத்தை பருகிட வேண்டின் உன்னுள் ஒடுங்கியே இரு
    61. உயர்வான எண்ணத்தில் மட்டுமே சிவம் சிம்மாசனம் இட்டு இருக்கும்
    62. சிவத்தில் ஜீவன் உருக சிவ ரசம் கிட்டும்
    63. உருகி, உருகி அழைக்க சிவம் பெறுகி பெறுகி நிற்பான்
    64. சிவ குணத்தை அடைவாயாக அதுவே தபம்
    65. காண்பது எல்லாம் சிவமாக காண் ஆனால் சிவனை மட்டுமே வணங்கு
    66. சிவனே மெய் என்று அறிந்த பின் வேறு ஒருவரையும் திரும்பிப் பார்காதே
    67. சிவன் ஒருவனே இறைவன் மற்றவர்கள் சிவனின் பணியாளர்கள்
    68. சிவத்தை நாடுபவருக்கு வேறு எதிலும் நாட்டம் இருக்காது
    69. சிவத்தை அடைந்தவன் முக்காலமும் கைலாயத்தில் வசிக்கிறான்
    70. சிவனே என்று இரு. சிவனாகி இரு சிவத்தைப் பிடிக்க
    71. எளிமை. எளிமை எதுவோ அதில் சிவம் குடி கொள்ளு
    72. எதையும் எதிர்பார்க்காதது சிவம் நீ சிவத்தின் அன்பை எதிர்பார்த்து இரு
    73. சிவ மருந்து யோகியரின் அரு விருந்தாகும்
    74. உன்னை சிவமாக்க முயலு பிறரை எதிர்ப்பார்காதே ( கொம்புமுளைத் திருக்கும் குடியேறி னோர்க்கு ) சவம்-சிவம்
    75. உன்னை அறிந்தது சிவம் உன்னை கொடு காத்திரு
    76. சிவத்தின் அன்பை பெறுவது தான் பல பல பிரபஞ்ச சித்தாகும்
    77. உன்னை விட உயர்வானப் பொருள் இறைக்குத் தர ஏதும் இல்லை
    78. தன்னை தருவது தான் தபம் ஆகும்
    79. உடலையும், உயிரையும் இறைவனுக்கு தா சிவத்தை நினைப்பதுவே தபம்
    80. தன்னை மறப்பது தபம் அல்ல சிவத்தை நினைப்பதுவே தபம்
    81. யோகிக்கு தங்கம் தகரம் வேறு இல்லை உலகப் பொருள் தபத்துக்கு செல்லாது!
    82. சிவத்திற்கு ஒப்பான தெய்வம் இல்லை வேறு ஒன்றோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே!
    83. மதம், மொழி, இனம் கடந்து நிற்பது சிவம் மட்டுமே
    84. உலகமே போற்றுதலுக்குரியது சிவம் மட்டுமே
    85. சிவத்தின் குணம் அழகு – இதில் மயங்காதவர் உலகில் யாரும் இல்லை
    86. உண்மையின் பொருள் அறிந்தவர் சிவத்தை அறிவர். மெய்யே சிவம்!
    87. சத்தியம். நித்திய சொரூப சிவம்!
    88. பிறக்காதவரும். நம் பிறவி அறுப்பவரும் – சிவம்
    89. சிவனை தேடுபவர்க்கு சிவத்தை தவிர வேறு எதுவும் கிட்டாது!
    90. நல்லவை அனைத்தும் சிவம் ஆகும்
    91. உள்ளத்தால் சிவனை உருக்கு சிவன் ஜீவனாகட்டும்
    92. அழைக்கும் முறையை அறி அழைத்த குரலுக்கு செவி சாய்ப்பது சிவம்
    93. எதை கேட்டாலும் தரும் சிவம் நீ சிவத்தையே கேள்
    94. சிவ சிவ என்று சொல்லியே இரு பாவ கர்மம் விலகியே போகும் ( சிவ சிவ-கலிமா பொருள் )
    95. உன்னையும் உலகையும் காப்பது சிவம் அழைத்தவுடன் உருவம் எடுப்பதும் சிவம்
    96. அருவம் ஆனாலும் உருவம் ஆனாலும் சிவம் அழைத்தவுடன் உருவம் எடுப்பதும் சிவம்
    97. சிவத்தை உணர்ந்து அழைப்பவர்களுக்கு எங்கும் இருந்து சிவம் உதவும்
    98. உலக நாட்டம் உள்ளவர்கள் சிவமாயை மட்டும் அடைவார்கள்
    99. சிவத்தை அடைய பர வைராக்கியம் வேண்டும். மனத்திற்கு
    100. அருளிலும் மாயை உண்டு அது படோபகார சன்னியாசம்!
    101. எந்த தெய்வத்திற்கும் மயங்காதே சிவத்தில் மதி மயங்கியே இரு
    102. சுழி-பூட்டை எப்படி வேண்டுமானாலும் திறக்க முடியுமா? சாவி கொண்டு திறப்பது குருவே!
    103. இறைவனை குருவில் காண்பவன் இறைவனை உணர்ந்து, அறிந்து அடைந்து விடுவான்
    104. இதய குகையே உயிரின் இருப்பிடம் அவ்விடத்தில் இறை நாமத்தை புகு
    105. சூட்சும நாடி இதயக்குகை அடியிலேயே ஒடுங்கி உள்ளது
    106. சூட்சும நாடியில் இறைவனை மட்டும் நாளங்கள் உள்ளது
    107. இறை நாமங்கள் இடம் அறிந்து இறைகிதம் மீட்டு. புற உலகு ஒடுங்கும்
    108. தபம் தன்னுள்ளே என்பது மெய் மெய்யை மெய்யால் இயக்கு
    109. எழுத்தறிவால் ஆன்மா அறிய முடியாது இறை உணர்வோடு அறிவதே ஆகும்
    110. மனித உணர்வு வேறு இறை உணர்வு வேறு
    111. மனித குணம் மாறி தெய்வ குணம் வந்தால் இறை உணர்வை அடைவாய்
    112. யார் இறைஉணர்வை அறிந்து அதுவாக மாறுகிறானோ – அவனே தெய்வம்
    113. தெய்வநிலை பல கோடி உண்டு பிரம்ம நிலை ஒன்றே ஒன்று
    114. தெய்வநிலையில் இருந்து வெளிவருவது தான் அருள் நிலையாகும்
    115. உள்-உலகு! பல நிலையில் இயக்கப்படுகிறது அனைத்தும் தெய்வ நிலையாகும்
    116. தெய்வநிலை அனைத்தும் சிவத்தின் கைப்பாவைகள் ஆகும்
    117. வெளி உலகம் (புற உலகம்) அக உலகம் இரண்டும் மாறுபட்டது ஆகும்
    118. வெளி உலகம் புற செயலால் சூழ்ந்தது அக உலகம் நம் எண்ண செயலால் ஆனது
    119. அக உலகம் இறைநாமத்தால் இயங்குகிறது நாடி நரம்புகளில் அரங்கேர கூடியது
    120. அகத்தில் உள்ள மூலத்தையே தியானி
    121. தியானத்தின் மூலம் மெய் பொருளாக இருக்க வேண்டும்
    122. தியானத்தில் தியானிக்கும் இடமும், பொருளும் மாறினால் தியானம் வீண்
    123. வீணான தியானம் புற உலகை உடையது அது மெய் அன்றி அனைத்தையும் தரக்கூடியது
    124. பொய் உலகில் பொய் அனைத்தையும் விலக்கி மெய் அறிவதே தபம்
    125. தபப்பலன் மெய் ஒன்றே. அதை அறிந்து அதுவாகுவதே தபம்
    126. மெய், பொய்யானவற்றில் கலந்துள்ளது அதை அறிந்து அதனோடு இரு
    127. மெய் அறிந்து அதை ருசிப்பதுவும் காண்பதுவும், திளைப்பதுவும் தபப்பலன்
    128. குருவே இறை நாமம் இறை நாமமே இறைவன்
    129. உடல், உயிர், ஆன்மா அறிவது ஆன்மீகம் ஆன்மா, உயிர் அறிவது தெய்வீகம்
    130. ஆன்மா அறிந்து உயிரைக் கொண்டு ஆன்மாவை உய்விப்பது தபப்பலம்
    131. ஆன்மா, உயிர் இரண்டையும் அறிய செய்து அதை பிரித்து அறிய செய்வது குரு
    132. ஆன்மா, உயிர் இரண்டையும் அறிவித்து ஆன்மா தொட்டு காட்டும் வித்தைகாரன் – குரு
    133. ஆன்ம லயம் அறிவிப்பதும், உணர்வின் விளக்கமும் குருவால் மட்டுமே முடியும்
    134. பிரம்மத்தை குருவால் மட்டுமே உணரவும், உணர்த்தவும் செய்ய முடியும்
    135. குருவால் மட்டுமே வெளிப்படுவது பிரம்மம் இது சிவ வாக்கு
    136. சிவம் வரும் வழியே குரு வாய் மொழியே
    137. சிவம் தூண்டும் குரு மெய் வாயில் குருவே
    138. ஒலி, ஒளிக்கு திசை, இரவு, பகல் நல்லது கெட்டது எதுவும் இல்லை. எதிலும் ஊடுருவி இயங்கும்
    139. சிவ நாதம் திசை , இரவு, பகல், இன்பம், துன்பம், உறக்கம் , வலி, பசி, தாகம், கோபம், கர்மம் இல்லை
    140. குணம் அற்றது சிவம் குணம் அற்றது ஆன்மா
    141. குணத்துடன் கூடியே சிவம் இருக்கும் ஆன்மா எல்லாம் அறிந்தும் விலகி இருக்கும்
    142. குணத்தோடு உள்ள உயிர் அடிப்படையே விதியின் இயங்கும் - இது இயற்கை நீதி
    143. உயிர் எண்ணம் சூழப்பட்ட மனிதன் குரு அருளால் சூழப்பட்டவன்
    144. நல்லெண்ணம் ஒருவனில் வெளிப்பட்டு கொண்டே இருந்தால் அதுவே ஆன்ம வெளியீடு
    145. சிவம் – நல்லதை தவிர வேறு எதையும் இயக்கவோ, செய்யவோ செய்யாது
    146. நல்ல எண்ணம் , நற்செயல் இரண்டும் சிவத்தின் பாத சுவடுகள்
    147. நல்லவனா இரு, அப்போது தான் நீ நல்ல சிவம் ஆவாய்
    148. நல்லவனாய் மாற முடியாதவன் – சிவம் சொல்லி சிவமாயை இருப்பான்
    149. இறை ஒளியே மெய். அதுவே சிவம் படைக்கபட்டது எல்லாம் ஒளியும் சிவமாயை
    150. ஜென்மங்கள் பூவுலகில் கழிய வேண்டின் சிவ பதம் நாடு
    151. சிவத்தை எண்ணாதவன் ஜீவன் அற்றவன்
    152. ஆன்ம அறிவு இல்லாதவன் இறைவனை நெருங்க முடியாது
    153. தெய்வங்களின் குணம், பூவின் மனம் போன்றது பூவுக்கு பூ மணம் மாறும்
    154. தபம். இறைவனுடன் கலக்க செய்யும் உயிரின் இயக்க கருவியாகும்
    155. ஜபம் கர்மங்களை அறிந்து கடன், கடமை முடிக்க உதவும்
    156. சிவம் வேண்டின் உலக கடனை கடமையாக முடித்து வெளியே வா
    157. யோகம் வேண்டின் ஒரு நாள், ஒரு பொழுதும் வீணாக்காதே – ஜபம் செய்
    158. சிவ ஜபம் ஓடி நின்றால்தான் தபம் கிட்டும்
    159. ஒவ்வொரு நாளும் இறை நாமத்துடன் தொடங்கு இறைவனே துணை செய்ய
    160. சிவ ஜபம் இறைவனுக்கும் உனக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும்
    161. சிவ நாமத்தில் மனம் தெளியும் மரியாதை கிட்டும் நிம்மதி கிட்டும்
    162. மனிதர்களால் மதிக்கப்படுபவன் மனிதன் மனிதர்களால் தொழப்படுபவன் மஹான்
    163. சிவம் என்றென்றும் உன் உள்ளங்கை நெல்லி கனியே
    164. சிவம் ஒன்றே ஒன்றானது பின் இரண்டாகி அது உலகாகியது
    165. குருவை ஒவ்வொரு நிமிடமும் கணம் செய் நீ பெரிதாய் கணப்படுத்தப்படுவாய்
    166. குருவை கணம் செய்து தொண்டு செய்பவன் கைலாய பூதகனத்தோடு பூதகணமாவாய்
    167. குருவுக்கு சேவை செய். பணிவு பண்போடு இரு சிவ ஞானம் பெருவாய்
    168. குருவால் உயர்த்திப் போற்றப்பட்டவன், கணங்களால் காணப்படுவான். சிவன் ஆவான் நிஜத்தில்
    169. குருவால் இருதய முடிச்சு அவிழ் கர்மம் ஒழிய
    170. குருவால் மட்டும் கர்ம சூத்திரம் தர முடியும் அது உன் பிராத்தம்
    171. கர்ம சூத்திரம் உன் பேச்சையும் மூச்சையும் கணக்கிட்டு நிறுத்தும்
    172. உலக வெளியில் இருந்து தப்பித்து ஒதுங்க ஓர் இடம் உள்ளது. அதை அறி
    173. உலக வாசனை விட்டவனுக்கு தனிமையே சிவ இனிமையாகும்
    174. கோபமே மனிதனை மிருகமாக்கிறது மிருக கர்ம வாசனை மிருக பிறப்பையே தரும்
    175. ஒளி பிறக்க இருள் விலகும் சிவம் நிலைத்தால் கர்மம் விளகும்
    176. ஆத்ம ஞானி மட்டுமே உயர்ந்த சாதகன் ஆவான்
    177. ஆத்ம ஞானி ஆத்ம சொரூபத்தை தியானிக்கிறான் அதனால் கர்மம் அழிகிறது
    178. ஆத்ம ஞானியின் அறிவு கடந்த ஞானம் மெய்யை உணர்த்துகிறது
    179. ஆன்மாவை அறிந்து உணர்ந்து ஆன்மாவை தியானிப்பவன் சிவ ஞானி
    180. கனவைக் கனவாக காணுபவனும் உறக்கமற்றவனும் ஞானத்தை அடைவான்
    181. உறக்கம் அற்ற மன உழைப்பும் பர நம்பிக்கையும் ஞானம் தரும்
    182. உடல் உழைப்பு போகமும் மன உழைப்பு யோகமும் தரும்
    183. தங்கத்தில் கலவை சேரும் போது தங்கம் மாறும் குணம் மாறினால் யோகம் மாறும்
    184. தங்கம் சேதாரம் பிரியும் போது தங்கம் தங்கமாகும் குணம் தங்கம் போன்று சேதாரம் பிரியும் போது தபம் பலிதமாகும்
    185. தங்கத்தின் தரம் கூடுவது போல் பிறவி தரம் கூடும் போது – ஜென்மம் கழையப்படும்
    186. உடல் சுரனை மறந்து சிவத்தை, தியானி சிவ சுரத்தில் ஒளிர்வாய்
    187. உடல் பிராணன், மந்திரம் – பிசங்காது தியானி
    188. இடைவிடாது சிவத்தை ஓங்குவி சிவ அந்தம் அருவியாய் கொட்டும்
    189. ஓம் – ஓர் எழுத்தாக்கு பின் அதையே ஊமை எழுத்தாக்கு
    190. ஊமை எழுத்தில் மெய் விழிக்கும் பின்னரே சிவம் விழிக்கும்
    191. தென்படாதவனும் தென்படுவான் திகட்டா திரவிய சொல்லில்
    192. திறக்கும் ரவிகலையின் குளுமையில் சிவ அமிர்தம் துளிர்க்கும்
    193. திறக்கும் வாசல் குரு அறிவார் திறந்த பின் சிவம் அறிவர்
    194. சிவத்தை அறியும் சாவியை குருவிடம் சிவமே தந்தது
    195. ஜபத்தால் சிவத்திடம் போரிட்டு வெற்றி காண்பாய் !
    196. சிவம் ஒன்றே என் தெய்வம் அதுவே என் பேர் ஆனந்தம்
    197. உலகப் பொருள் எல்லாம் விலைபோகும் சிவம் விலை போகாது
    198. உன்னிடம் பொன், பொருள், புகழ், போகம் உள்ளது. சிவம் உள்ளதா?
    199. சிவம் தனிப்பொருள். தனித்திருந்து சிவத்தை தேடுபவனுக்கு தன்னையே தரும்
    200. தன்னை தந்த சிவம் உன்னை தேடிய சிவம்
    201. சிவ ஞான மார்கத்துக்கு உலகப் பொருள் உதவாது
    202. அன்பினும் இனியது சிவம்!
    203. சிவ என்ற சொல்லை வெளியிடு மெய் உலகம் பிறக்கும் – உன்னைச் சுற்றி
    204. சிவ சொல் உன்னையும், உன் பேச்சையும் உன்னை சுற்றி காற்றையும் சுத்தகரிக்கும்
    205. சிவா....... என்று சொல் சிவனே வருவார்
    206. சிவனை ஓய்வு உறக்கம் இன்றி அழைப்பவன் யோகி
    208. எனக்கு உதவுங்களேன் உலகுக்கு சிவத்தை தெரியப்படுத்த
    209. துரிய அன்பில் மலரும் பொருள் சிவம் ஆகும்
    210. சிவ அன்பில் காமம் இல்லை உயிர் பேதமும் இல்லை
    211. சிவ அன்பில் உலக பந்தமும் இல்லை உலக பேதமும் இல்லை
    212. சிவ ஆனந்தம் சிரசினில் சித்திக்கும்
    213. சிவ ஆனந்தம் கிடைக்க வெறுப்பை மட்டும் விட்டு விடு
    214. கோபம் உள்ளவன் சிவ ரசத்தைப் புசியான்
    215. யோகக் கலை சிவமே யோகத் தனல் உயிரே
    216. போகத்தில் யாகம் வெளியே ஆகும் யோகத்தில் யாகம் உள்ளேயே ஆகும்
    217. தபசி யோகக்கனல் மூட்டி தன்னுள்ளேயே கர்மம் ஒழிக்க வேண்டும்
    218. உயிர் எங்கே செல்லும் என்று அறிவது தபம் உயிரைத் தன்னுள் கரைப்பது சிவம்
    219. மூவுலகப் பெருமான் அல்ல ஈர் ஏழு உலகப் பெருமான் அல்ல அண்ட பகிரங்கப் அனைத்துமான பெருமான்
    220. ஒன்றே சிவம் என்று ஒன்றியே நன்றே தொழு
    221. சிவத்தைத் தொழ தொழ தீயவை விலகிப் போகும் சிவத்தைத் தொழ தீயவை நாம் செய்வதும் இல்லையே
    222. மித மிஞ்சியதை தருவதும், கேட்டு பின் தருவதும் கர்மம் போக்க செய்வதும் தர்மம் அல்ல
    223. சிவ சிந்தனையுடன், சிவத் தொண்டனாக பல்லுயிர்க்கும் பேதம் அற்று செய்வது தர்மம்
    224. சிறப்பினும் சிறப்பு, சிவ சிந்தனையுடன் ஏதேனும் ஓர் தர்மத்தை தொடர்ந்து செய்வது சிவ தொண்டு
    225. மனம் திரியாது, மாறாது, மறவாது, காற்று மழை வெய்யிலிலும் தர்மம் செய்வது – தர்மநீதீ
    226. தன் உழைப்பு, பிறர் உழைப்பு பொருளை தர்மம் செய்தால் உழைப்பிற்கேற்ற பலனே
    227. இடைவிடாதும், அயராதும், தர்மம் செய் பின் உனக்காக அளவில்லா இறை சேமிப்பு செய்
    228. ஒரு தலைமுறைக்கு அளவுடன் சேமிப்பு செய் பின் உனக்காக அளவில்லா இறை சேமிப்பு செய்
    229. பல தலைமுறை சேமிப்பு, இறை தேடலுக்கு உதவாது பல தலைமுறை சேமிப்பால் உன் ஆயுளே முடிந்துவிடும்
    230. அழியும் சொத்தை தேடி வைக்காதே அழியா சொத்து பல தலைமுறை தொடரும்
    231. அழியா சொத்து இறைவனே அவனே உனக்கும் உன் சந்ததிக்கும் உதவுவான்
    232. இறைவனிடம் அன்பு, கருணை பெற போராடு இறைவனிடம் அன்பை அருளாக பெருவாய்
    233. உன் அன்பையும், கருணையையும் பல்லுயிர்க்கும் பகிர்ந்து அளி. இறைவனையே பெருவாய்
    234. பல்லுயிர்க்கும் தேவை அறிந்து செய் அதுவே அன்பான சிவ கருணையாகும்
    235. ஜீவகாருண்யமே சிவ கருணையாகும் சிவனே சீவனுள்ளும் இருப்பது
    236. இல்லாதவனுக்கு இல்லாததை தருவதும் தர்மநீதி. நேர்மையுடன் அதைப் பயன்படுத்துவதும் நீதி 
    237. மித மிஞ்சியதை தானம் செய்தே வை அற்றதை சேமிக்காதே
    238. பொருள் தேடுவதைவிட, சிவ அருள் தேடிவை, உன்னையும், உன் சந்த்தியையும் தொடரும்
    239. சிவ அருள் மட்டுமே உன்னையும் காக்கும் பிறரையும் காக்கும்
    240. சிவ அருள், கருணை மட்டுமே நம் மரணத்துக்கு பின்னும் செல்லுபடி ஆகும்
    242. தானம், தர்மமும் நாமே தேடி சென்று செய்வது சேவை – அதுவே உன்னதம்
    243. உழைக்காமல் உண்ணாதே ஒவ்வொரு கவலத்தையும் சிவார்பனம் செய். உண்
    244. மன்னிக்கும் குற்றம் மன்னிக்காத குற்றம் உண்டு குற்றம் செய்யாது இரு
    245. பிரம்மசரியத்தை கடைப்பிடிப்பவன் அழிவில்லா தேவர்களுக்கு இணையானவன்
    246. இருதய நாடியில் சிவனை பொருத்துவதே சிவ மந்திரம்
    247. இதய நாடியில் சிவ நாமம் நீங்காது நாதனிக்குமானால் அது – சிவதியானம்
    248. இதய நாடியில் இருபொருள் ஒன்றாய் ஒளிருமானால் அது – சிவ பலன்
    249. இதய நாடியில் இரு பொருள் ஒன்றாய் பலிதம் ஆனால் – சித்திக்கும் சிவம்
    250. இரண்டும் ஒன்றாய் ஓங்கி எழுந்தால் யோக கனினீ நாதம் எழும்பும்
    251. தபக்கினியை மேல் ஓங்கி முட்டி திரும்பினால் நாதம் ஒலிக்கும்
    252. தபக்கினியின் பிராண நாதம் ஒலித்தால் மந்திரம் வேண்டாமே
    253. பிராண நாதம் கேட்பாயின் உன்னுள் அதையே கேட்டுக் கொண்டே இரு
    254. நாதனின் நாதத்தை தியானிப்பவன் மௌனியாகிறான்
    255. மௌனம் எங்கு இருக்குமே அங்கு நாதம் நிலை பெறும்
    256. மௌனம் அற்று நாதம் கேட்டது என்றால் அவனே மாயை
    257. கடவுளை கண்டேன் என்பவனும் நாதம் கேட்டேன் என்று பேசினால் – அவன் பொய்
    258. நாம் அசைவற்று அமைதியுரும் போது தான் நாதம் மேல் ஓங்கி எழும்
    259. ஒளி , இருளில் கிடைத்த்து என்றால் அது – பொய் பேசுபவனிடம் அமைதி கூட பிறக்காது
    260. வெளிசப்தம் இடுவது எண்ண செயலே எண்ண செயல் நின்றால் தான் – மௌனம் பிறக்கும்
    261. மௌனத்தில் தான் அமைதி பிறக்கும் அமைதியில் தான் விழிப்புணர்வு பிறக்கும்.
    270. மௌன விழிப்புணர்வு தான் உள் நாதத்தை அறிய செய்யும்
    271. உறக்கம் அற்ற மௌன விழிப்பு அமைதியில் உள்ள ஆனந்தத்தை எழுப்பும்
    272. அமைதியான பேர் ஆனந்தம் ஆகாசவானிக்கு அழைப்பு விடும்
    273. ஆகாசவனியிடம் பிராண நாதத்தை செலுத்துவாயானால் நீயே யோகி
    274. ஆகாசவானியிடம் பிரம்மக்கலை அறிந்து செலுத்துபவன் தான் – யோகி
    275. இடம், பொருள், ஏவல் மூன்றையும் தந்திரமாக கொண்டு செயல்படு
    276. இடம் அறிந்து, பொருள் அறிந்து, தந்திரமாய் மந்திரத்தை ஏவல் செய் – இறைவனே வருவான்
    277. அமைதியான தந்திர ஏவல் செய்ய சிவப்பேர் ஆனந்தம் கிட்டுமே
    278. இந்த சிவ வித்தையை அறிவது தான் சிவ ஞானம் – தந்திரம் முற்றே
    279. ரகசிய இடத்தில், ரகசியமாய் இருந்து ரகசியத்தை பயன்படுத்த ரகசியமானவன் தெரிவான்
    280. அமைதி வேண்டுமாயின் பேச்சை நிறுத்தி மூக்கு பின்னால் ஓடு
    281. மூக்கு பின்னால் விழிப்புணர்வால் 
    282. மூக்கு பின்னால் ஓட மௌன வாசம்  பிறக்கும் . எண்ணம் அழியும்
    283. உன் பிராண ஓட்டம் குறை பிறக்கும் . எண்ணம் அழியும்
    283. உன் பிராண ஓட்டம் குறைய குறைய மும் மலங்களும் அழியும்
    284. எங்கு பிராண ஓட்டம் நின்றதோ அங்கு பிராணநாதன் பிரகாசிப்பான்
    285. பிராண நாதன் பிரகாசிப்பதை அறிய பிராண விழிப்பு வேண்டும்
    286. பிராண விழிப்பு இல்லாவிடில் யோக மாயையில் வீழ்வாய்
    287. தபம் அல்லாது நிறுத்தம் யோகம் போல் தெரியும்
    288. தபம் அல்லாத சூனியம் பலன் அற்ற யோகமாயை
    289. தபம் ஆகாத செயல் அனைத்தும் தெய்வபலன் தராது
    290. தெய்வபலன் இல்லாத தபம் மறுபிறப்புக்கு வழிவகுக்கும்
    291. அவ்வுலக சஞ்சாரம் இல்லாத யோகி இவ்வுலகில் மனிதனாகவே இருக்கிறான்
    292. அவ்வுலக ஆத்தும ஞானம் இல்லாதவன் இவ்வுலகிற்கே வந்து விடுவான்
    293. அவ்வுலக மந்திர வார்த்தையும் இயக்கப் பயணிப்பும் இல்லாதவன் – இவ்வுலகவாசி
    294. அவ்வுலக பயணிக்கும் ஆயுத்தம் பயணிக்கும் தகுதியும், வாழும் தகுதியும் பெறு
    295. அத்ம ஞானம் ஒன்றே அவ்வுலகம் செல்ல வழிவிடும்
    296. அத்ம ஞானம் இல்லாத பக்தி வேதம், உபன்யாசம், பூஜை, யாகம், அவ்வுலகத்திற்கு செல்லாது
    297. அமைதியில் (தெளிவை) தெளிந்து பெற வேண்டியதை கலக்கி, கலங்கி பெறுவேன் என்பது மூடத்தனம்
    298. அமைதியில் தெளிய வேண்டியதை ஆர்பாட்டத்தில் காண முடியாது
    299. வெளி ஓங்காரம் வேறு நாதம் வேறு
    300. வெளிஓங்காரம் வெளியில் இருந்து கேட்பது நாதம் நாபியில் இருந்து பிறப்பது
    301. பல வித யாகம் பூஜை வெளியில் நடப்பதை விட உட்பூஜை சிறப்பு.
    துறவி தன்னுடைய தர்மங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு - மெய்யறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான்.
    பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
    நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;