தமிழ் மாதத்திற்கான மந்திர பலன்கள்;;;
பெருமாள் என்பவர் அனைவரையும் காக்கும் தொழில் செய்பவர். அவரை புகழ்ந்து பாட ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு மந்திரம் உள்ளது. அதனை தினமும் சொல்லி வழிபட்டால் அனைத்து வகையான செல்வங்களும் வந்து குவியும். தினமும் 108 முறை சொல்லும் மந்திரத்தை தெரிந்துக் கொள்வோம்.
🌀 சித்திரை மாதம் ஓம் விஷ்ணுவே நம, ஓம் புருஷோத்தமாய நம என்று சொல்ல பவுண்டரீக யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
🌀 வைகாசி மாதம் ஓம் மதுசு+தனாய நம, ஓம் அதோக்ஷகாய நம என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அக்னிஷடோம யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
🌀 ஆனி மாதம் ஓம் திரிவிக்ரமாய நம, ஓம் லட்சுமி நரசிம்ஹhய நம என்று சொன்னால் கோவரத யாகம் செய்த பலன் கிட்டும்.
🌀 ஆடி மாதம் ஓம் வாமனாய நம, ஓம் அச்சுதாய நம என்று சொல்லி வணங்கி வந்தால் நரமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 ஆவணி மாதம் ஓம் ஸ்ரீதராய நம, ஓம் ஜனார்த்தனாய நம என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பஞ்சமகா யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 புரட்டாசி மாதம் ஓம் ஹ்ருஷிகேசாய நம, ஓம் உபேந்திராய நம என்று சொல்லி வணங்கினால் சவுத்ராமணி யாகம் செய்ததற்கான பலன் கிட்டும்.
🌀 ஐப்பசி மாதம் ஓம் பத்மனாபாய நம, ஓம் ஹரனேய நம என்று சொல்லி வழிபட்டால் 1008 பசுதான பலன் கிட்டும்.
🌀 கார்த்திகை மாதம் ஓம் தாமோதராய நம, ஓம் கிருஷ்ணாய நம என்று சொன்னால் மகாகோமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 மார்கழி மாதம் ஓம் கேசவாய நம, ஓம் ஸங்கர்ஷணாய நம என்னும் மந்திரத்தை சொல்ல அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 தை மாதம் ஓம் நாராயணாய நம, ஓம் வாசுதேவாய நம என்ற மந்திரத்தை பாரயணம் செய்தால் வாஜபேய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 மாசி மாதம் ஓம் மாதவாய நம, ஓம் பிரத்யும்னாய நம என்று சொல்லி வழிபட்டால் ராஜசு+ய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 பங்குனி மாதம் ஓம் கோவிந்தாய நம, ஓம் அதிருத்ராய நம என்ற மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் அதிருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இந்த மந்திரங்களை சொல்லி இறைவனை பாரயாணம் செய்தால் புத்திர பாக்கியம், திருமணம், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.
தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள் :
🌠 அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்.
🌠 குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் (உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.
🌠 துணியில்லாமல் குளிக்கக்கூடாது.
No comments:
Post a Comment