Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 4 December 2016

நான்கு யுகங்கள்;;; சும்மா இருத்தல்

 நான்கு யுகங்கள்
============
1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம்.71 மகாயுகம் கொண்டது ஒரு மனு.14 மனு கொண்டது ஒரு கற்பம்.ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.8 யுகங்கள் சேர்ந்த நாட்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்பிரம்மாவின் ஆயுள் 100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்)விஷ்ணு - 5,84,000 யுகங்கள்உலகம் ஒருபோதும் முழுமையாக அழிந்து போவதில்லை. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் அவை மீண்டும் மறு சுழற்சி முறையில் புதுப்பிக்கப் படுகிறது. மீண்டும் கற்காலம், பொற்காலம், கணினிகாலம் என்று காலச்சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.ஒரு யுகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு யுகத்திலும் நடக்கும் என்று சொல்லப் படுகிறது. நாஸ்டர்டாம் போல் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும்? என்று சொல்லும் ஆரூட வல்லுநர்களுக்குதனதுமுந்தைய ஜென்மத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களது உறங்கிக் கிடக்கும் மூளையின் மறுபகுதி விழித்தெழுந்து படம் போட்டுக் காட்டி விடுகிறதாம்.இந்த ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகளை நாமும் நன்கு நினைவு வைத்துக் கொள்வோம். ஒருவேளை அடுத்த யுகத்தில் நமக்கு மறுபிறவி ஏற்பட்டால் ஆருடம் சொல்லப் பயன்படும். (மனிதனாகப் பிறந்தால் மட்டும்.)முப்பது கற்ப காலங்கள்1.வாமதேவ கற்பம்2.சுவதேவராக கற்பம்3.நீல லோகித கற்பம்4.ரந்தர கற்பம்5.ரௌரவ கற்பம்6.தேவ கற்பம்7.விரக கிருஷ்ண கற்பம்8.கந்தற்ப கற்பம்9.சத்திய கற்பம்10.ஈசான கற்பம்11.தமம் கற்பம்12.சாரஸ்வத கற்பம்13.உதான கற்பம்14.காருட கற்பம்15.கௌரம கற்பம்16 நரசிம்ம கற்பம்17 சமான கற்பம்18 ஆக்நேய கற்பம்19 சோம கற்பம்20. மானவ கற்பம்21.தத்புருஷ கற்பம்22. வைகுண்ட கற்பம்23. லெச்சுமி கற்பம்24. சாவித்திரி கற்பம்25. கோரம் கற்பம்26. வராக கற்பம்27. வைராஜ கற்பம்28. கௌரி கற்பம்29. மகோத்வர கற்பம்30 பிதிர் கற்பம்.                        

சும்மா இருத்தல் 
============
நம் உடலுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு. Almighty is gravity என்று அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அடிக்கடி கூறுவார்கள்.
அந்த சர்வ வல்லமை உடைய இறையாற்றல் என்பது, ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு சக்தி தான் உடலாகவும், உயிராகவும் இருக்கும் காரணத்தினால் இந்த உடலுக்கும், உயிருக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு.
ஆகையால், அன்றாடம் ஒரு பத்து நிமிடாவது கண்களை மூடி அமைதியாக அமர்ந்து உடலை ஒரு சிலை போல பாவித்து அந்த உடலை கவனித்துக் கொண்டு சிறுது நேரம் “சும்மா” இருக்க வேண்டும்.
உடலை கவனித்தல் என்று சொல்கிறபோது முழுக்க முழுக்க உடலை கவனித்து உடலினுடைய இருப்புத் தன்மையை உணர்வுக்கு கொண்டு வர வேண்டும்.
எப்படி உணர்வுக்கு கொண்டு வருவது என்றால், முதலில் உடலில் உள்ள பருமனை கவனிக்க வேண்டும்.
தொடர்ந்து இப்படியே நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து கவனிக்கும்போது உடலின் இருப்பை உணர முடியும்.
அந்த உணர்விலேயே இருந்து கொண்டு “சும்மா” இருந்தால் போதும்.
அப்போது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியை (cosmic energy) உடல் நன்றாக ஈர்த்துக் கொள்ளும்.
அது ஈர்க்கப் படுவதும், உடல் முழுவதும் பரவுவதும் ஒரு அழுத்தமான உணர்வு உள்முகமாகவும் வெளிமுகமாகவும் உணர்வுக்கு எட்ட ஆரம்பிக்கும்.
இது சக்தியை ஈர்த்துக் கொள்ளும்.
❤ இதைத்தான் இயேசு மகானும் "நீ வெறுமனே இரு, நான் உன்னை நிரப்புவேன்" என்று குறிப்பிடுகிறார் ❤
இந்தப் பழக்கம் வந்த பிறகு, பிரபஞ்ச காந்த சக்தியில் நிறைய ரகசியமான புள்ளிகள் இருக்கிறது.
அதை காந்தப் புள்ளிகள் (magnetic domain) என்று கூறுகிறோம்.
அதாவது இதற்கு முன்பு வாழ்ந்த மகான்கள், ஞானிகள், நிறைய விஷயங்களை ஆழமாக சிந்தித்திருப்பார்கள்.
நம் அறிவிற்கு எட்டாத சிந்தனைகள் கூட அத்தகைய சிந்தனைகள் எல்லாம், எண்ண அலைகள் அனைத்தும் காந்தப் புள்ளிகளாக பிரபஞ்ச காந்த களத்தில் பதிவாக இருக்கிறது.
எப்போது உடலை உணரக்கூடிய பழக்கமும், உடல் சக்தியை ஈர்க்கிறது என்ற உணர்வு நமக்கு கிடைக்கிறதோ,
அதற்கு பிறகு சும்மா அமர்வதற்கு முன் ஒரு சங்கல்பத்தொடு அமர வேண்டும்.
நம்முடைய சங்கல்பம் என்னவென்றால், நம்முடைய ஆறாவது அறிவில் முழுமை அடைய வேண்டும்.
நமக்கு நிறைய செல்வங்கள் இருக்கிறது, தேவைகள் இருக்கிறது, ஆனாலும், அறிவில் முழுமையும், தெளிவும் அடைந்து விட்டோம் என்று சொன்னால், மற்ற செல்வங்களை எல்லாம் சிந்தித்து செயலாற்றி பெற முடியும்.
ஆகையினால், ஆறாவது அறிவில் முழுமை பெறுவதற்கு நமக்கு என்ன மாதிரியான சிந்தனைகள் வேண்டும்,
சிந்தனைகள் தூண்டப்பட வேண்டும் என்பதை இயற்க்கையிடம் ஒப்புவித்துவிட்டு
“என் அறிவு முழுமை அடைவதற்கு என்ன மாதரியான சிந்தனைகள் வேண்டுமோ அதெல்லாம் தூண்டப்படட்டும்” என்று சங்கல்பத்தை ஏற்படுத்தி விட்டு
பழையபடி “சும்மா” இருந்து உடலை கவனித்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பழக்கத்தில் நிலைக்க வேண்டும்.
அந்த சக்தியோடு இணைந்து எனென்ன வரும் என்றால்,
அறிவில் முழுமை பெற்ற மகான்கள் என்னென்ன காரியங்களை சிந்தித்து இயற்கை ரகசியங்களை புரிந்து கொண்டு ஆறாவது அறிவில் முழுமை பெற்றார்களோ
அந்த சினதனைக்கு உரிய கருவூலங்கள் எல்லாம் நம்முடைய மூளையினுடைய சிற்றறைகளில் பதிய ஆரம்பிக்கும்.
உயர்ந்த கருத்துகளை ஈர்க்கக் கூடிய சக்தி கிடைக்கும்.
நம்மை அறியாமலேயே உள் உணர்வில் ஏதாவது ஒரு கருத்தும், அதனின் ஆழமும் நம் அறிவுக்கு எட்டும்.
ஆக, இயறகையின் இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நமக்கு இயற்கையால் வழங்கப்படும்.
எப்படி என்றால், நம்முடைய ஈர்ப்பு சக்தி இருக்கிறது, நாம் கொடுத்த சங்கல்பத்திற்கு ஏற்றவாறு எனென்ன கருத்துக்கள் வேண்டுமோ அவை அனைத்தையும் ஈர்த்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment