நான்
====
உண்மையான விடுதலை என்பது என்ன என்று நீங்கள் அறிய விரும்பினால்,
உங்களது இந்த 'நான்' என்பதன் பகுதிகளை விட்டு விட வேண்டும்.
நீங்கள் ஒரு ஆண்
நீங்கள் ஒரு பெண்
என்பதை மறந்து விட்டு
நீங்கள் வெறுமனே மனிதன் என்று நினைக்க வேண்டும்.
உங்களது பெயரையும் கூட மறந்து விட்டு
அதாவது அந்தப் பெயர் உங்களது
உண்மை நிலை அல்ல என்றும் அறிந்து கொண்டு, நீங்கள் கற்றவைகளை எல்லாம்
மறைந்துவிட்டு, அதாவது அவைகள் எல்லாம் உங்களது சொந்த அனுபவம் இல்லை என்றும், நீங்கள் சொந்தமாக அடைந்த விஷயம் இல்லை என்றும் அது மற்றவர்களிடம் இருந்து பெற்றது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகம் முழுவதும் வெளிச்சம் நிரம்பி இருக்கலாம். ஆனால், உங்களுக்குள் ஆழத்தில் நீங்கள் இருளில் தான் வாழ்கிறீர்கள்.
நீங்கள் உங்களுக்குள் ஒரு சிறிய ஒளிச்சுடர்
கூட இல்லாமல் இருக்கும் போது இந்த உலகம் முழுவதும் வெளிச்சம் இருந்து என்ன பயன்?
எனவே கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பிறந்த பிறகு உங்களிடம் எந்தெந்த விஷயங்களை சோ்க்கப்பட்டனவோ
அவையெல்லாம் உங்களது உண்மை நிலை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இப்படி உங்களது 'நான்' என்பதன் பகுதிகள் மறைந்துவிட்ட பின்னர் நீங்கள் இந்த வெளி உலகில் உள்ள வானத்தைப் போன்று உங்களுக்குள்ளும்
ஒரு பிரமாண்டமான வானம் ஒன்று இருப்பதை அறிந்து கொள்வீகள்
இது தான் உங்களது விழிப்பு நிலை;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஜீவாத்மா , பரமாத்மா
================
ஜீவாத்மா பரமாத்மாவின் பிரதி பிம்பம். சூரியன் தண்ணீரின் வெவ்வேறு பாகங்களில் பிரதிபலிப்பதுபோல், பரமாத்மா வெவ்வேறு மனிதர்களின் மனங்களில் பிரதிபலிக்கிறது.
ஆன்மா ஆவி. அது அப்பிராகிருதமானது. அது ஞானம் அல்லது பிரக்ஞை. இது சைதன்யம். ஜீவாத்மா பிரதி பிம்ப சைதன்யம். இந்த ஜீவாத்மாதான் தேகத்தின் மரணத்துக்குப் பிறகு அதனினின்று பிரிந்து, இந்திரியங்கள்,மனது, பிராணன், சுவடுகள், ஆசைகள், மனப்போக்குகள் ஆகியவற்றுடன் சுவர்க்கம் செல்கிறது. அது சுவர்க்கத்துக்குப் போகும்போது அதற்கு சூட்சுமமான சரீரம் உண்டு.
ஏரியிலுள்ள நீர் வற்றிப்போகும்போது நீரில் சூரியனின் பிரதிபிம்பம் சூரியனுடனேயே கலந்துவிடுகிறது. அதேபோல், மனது தியானத்தின் மூலம் அழிக்கப்பட்டபோது, ஜீவாத்மா பரமாத்மாவில் ஐக்கியமாகி விடுகிறது. இதுவே வாழ்வின் லட்சியம். ஆசாபாசங்கள், அகங்காரம், செருக்கு, பேராசை, மோகம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றினால் ஜீவாத்மா அசுத்தமாகிவிட்டது. அதனால் அது வரம்புடையதாயும் (பரிச்சின்னமான), சிற்றறிவுடையதாயும் (அல்ப ஞானம்), சக்தி குறைந்ததாயும் (அல்ப சக்திமான்) ஆகிவிட்டது. பரமாத்மா எல்லையற்றது. எங்கும் வியாபித்தது. சர்வ வல்லமையுடையது. அது அறிவும் ஆனந்தமுமே உருவெடுத்தது.
ஜீவாத்மா அஞ்ஞானத்தின் மூலமும் வரம்புகட்கும் உபாதிகளாகிய மனம், சரீரம், இந்திரியங்கள் மூலமும் பந்தப்பட்டு இருக்கிறது. இது தோற்றம் மாத்திரமே, பிரமையே. அது அழிவற்ற பொருளின் ஞானத்தை அடையும்போது, அது வரம்புகட்கும் உபாதிகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபடுகிறது. குமிழி சமுத்திரத்துடன் ஒன்றாவதுபோல், ஜீவனும் அஞ்ஞானம் அழியும்போது பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுகிறது.
ஒரு பிணம் பேசவோ, நடக்கவோ, பார்க்கவோ முடியாது. ஆன்மா தேகத்தினின்று அகன்றபின் அது மரக்கட்டையைப் போல் இருக்கிறது. ஆன்மாதான் உடல், உள்ளம், புலன்களை உயிருள்ளதாக்கி, மின்சாரம் பாய்ந்தது போல் ஊக்கி, அசைத்து
நடத்துகிறது.
பரமாத்மா சுயப்பிரக்ஞை, சுயஞானம், சுய ஆனந்தம், சுய அறிவு, சுய இருப்பு. அது தன்னை உணர்ந்து பிறரையும் உணர்கிறது. அது சுயஞ் ஜோதியாய் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது.
பிரகிருதி தன்னைத்தான் அறியாது. மற்றவற்றையும் அறியாது. அதனால் அது ஜடம். பரமாத்மா உருவமற்றது, குணங்களற்றது, சர்வ வியாபி, பாகுபாடற்றது, அழிவற்றது, காலமற்றது, ஸ்தானமற்றது. சூரியன் பகல் - இரவைப் படைத்த போதிலும் சூரியனில் பகலோ இரவோ கிடையாது. அதேபோல்தான் பரமாத்மாவும். ஆன்மா எல்லையற்றது, நித்தியமானது, அழிவற்றது.

No comments:
Post a Comment