இறைநிலை
=========
எதற்கும் ஒரு மூலம் இவன். எதுவும் இவனுள் அடங்கும் .எங்கும் இவன் இருப்பான் .எவையும் இவனிடமிருந்தே பெறப்பட்டது.மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் இவனே .இவனே கூனி குறுகி ,தம் எல்லா ஆற்றலையும் ஒரு சிறு புள்ளியில் வைத்து,பிறகு அதே அச்சிறு புள்ளி தம்மை ,விரிவாக்கி அண்ட சராசரமாக விஸ்வரூபம் எடுத்து தம்மை எங்குமாக வியாபிக்கும் தன்மையும் இவனே .இவனே மாற்றம். ஒன்றதை மற்றொன்டாக மாற்றிக்கொண்டே எதற்கும் ஒரு நிலையை நிரந்தரமாக தர மாட்டான் .இவன் ஒருவனே நிலையானவன்.இவனே அகம் .இவனே பிரம்மன்.இவனே விஷ்ணு. இவனுள் இருந்துதான் மற்ற அனைத்து தெய்வங்களும்.இவனை இவனுள் உணரும் ஒரு பயணத்தில் ஒரு கட்டம்(phase) தான் நாம் காணும் எந்த ஒரு ஜடமும் எந்த ஒரு உயிரும்.இவனை இவனே உணர்வது தான் முழுமை. இவன் தந்த மனதால் ,இவன் நாமம் புகழ் பாடி, இவன் நாமம் உணர்ந்து,நெகிழ்ந்து, இவனை இவனுள் உணர ,உருவாகும் ஒரு பேரானந்தம்.முழுமை ,தெளிவு,அமைதி,வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பேரின்பநிலை.
இவனை உணர இவன் தந்த ஒரு மிகச்சிறந்த ஒரு கருவி இந்த மனம் .இந்த மனம் இவனை உணராத ஒரு நாளும் வீணே.எங்கும் பெருக்கெடுத்து வியாபிக்கும் தன்மை கொண்ட மனம்.எதுவாகவும் தம்மை அதனுள் வியாபித்துக்கொள்ளமுடியும் இவன் தந்த இந்த மனதால்.சர்வவல்லமையும் பெறஇயலும்,சர்வ துவம்சமும் செய்ய இயலும் இம்மனதால், இவனின் பயணத்தில் இவனை உணரவில்லை எனில் அது ஒரு மாபெரும் இழப்பு அன்றைய நாள். அதே போல இவனை இந்த மனத்தால் நன்கு ஆழ்ந்து உணர உணர ,ஒரு காட்டாற்று வெள்ளம் போல் பீரிட்டு எழும் ஒரு பேரின்பம் ,சொல்வதறியா ஒரு சுகம்.கோடிக்கனக்கான ஆத்மாக்கள் தம் நிலைமறந்து, செய்வதறியாது, இவனுள் மூழ்கி தெவிட்டாத பேரின்ப நிலையில் இன்றும் ஆழ்ந்து கிடக்கும் ஒரு அற்புதம்.மெய்ஞான புலம்பலும் இங்கே தான்,கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலரும் இங்கே தான்.யாரும் இவனை இவ்வாறு தான் என்று வரையறுத்துக் கூறஇயலாது.இவனின் முதலும் தெரியாது ,முடிவும் தெரியாது..சதுராட்ட காய்கலை போல பூமி போன்ற கோள்களையும் ,உயிர்களையும்,நகர்த்துவான்,இடம் மாற்றுவான், தூக்கி எறிவான், அரவணைப்பான். இவை எல்லாம் இவன் செய்யும் புரிய இயலா ஒரு விந்தை.இவனை புரிய முற்படுதல் என்பது ஒரு எறும்பு எவ்வாறு இந்த உலகத்தை அறிவால், கணிக்க முடியுமோ அது போல தான். சதா சர்வமும் இவனே.....

No comments:
Post a Comment