ஆதாரச்சக்கரங்கள் விழிக்கும் நேரங்கள்
*****
ஆதார சக்கரங்களின் பெயர்களும் அதன்
தன்மைகளும்
உங்களுக்கு ஓரளவு தெரியும் . அவைகள்
விழித்திருக்கும் நேரங்களில் தவம் செய்தால்
ஆதார சக்கர ஸ்தானங்கள் விரைவில் சுழற்சி
உற்று துரியம் நோக்கி ஆரோகணம் செய்யும் !
மூல ஆதாரம் ------------- காலை 6 முதல்
6.40 வரை
சுவாதி ஸ்தானம் -------- காலை 6.40 முதல்
பகல் 1.20 வரை
மணிப்பூரகம் -------------- மதியம் 1.20
முதல் இரவு 8.00 வரை
விசுக்தி ----------------------- நள்ளிரவு
2.40 முதல் 3.46 வரை
ஆக்ஞை --------------------- காலை 3.40
முதல் 4.54 வரை
சகஸ்ர ஸ்தலம் ( துரியம் )-- காலை 4.54
முதல் 6.00 வரை .....
இந்த யோக நேரங்கள் சித்தர்கள் பின் பற்றிய
கால நேரங்கள் , இது இக்காலத்திற்கு உகந்த
தாக இருப்பதில் சில இடர்பாடுகள் உண்டு .
இருப்பினும் எக்காலமும் உகந்த நேரமான
பிரம்ம நேரம் சரியா இருக்கும் . சில யோக
முறைக்கு சில ஆதார சக்கரங்கள் மூலமாக
இருக்கும் . அதற்க்கு இது உபயோகமாக
இருக்கும்.
வாழ்க்கையின் தத்துவம்..
==================
ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்.
அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான - யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது.
அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... கரக்... கரக்... என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது.
ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது.
கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு - வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பிவிட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம்.
கர்மா
=====
ஒருவன் பிறக்கும்போதே பணக்காரனாகவும் ஏழையாகவும் ஆரோக்கியமாகவும் நோய்வாய்பட்டும் பிறக்க காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த பதில் ஒன்றே ஒன்றுதான்.
அதுதான் கர்மா. கர்மா என்பது நாம் எடுத்த முதல் பிறவியில் இருந்து நம் சித்தத்தில் பதிந்த விடயங்கள் ஆகும்.
இயற்கைத் தான் சேர்த்து வைத்துள்ள மொத்த அறிவையும் பயன்படுத்தி மிக மிக எளிய வழியில் சம்பவங்களை நிகழ்த்துகிறது.
உதாரணமாக இன்று ஒருவனுக்கு விபத்து நேர வேண்டும் எனில் அந்த சூழலை முன்னமே அறிந்த இயற்கை திடீரென அவன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கும்.
எப்படி எனில் வேறு வேலைகளில் அவன் ஈடுபட்டிருந்தாலும் திடீரென வண்டியில் அங்கே சென்று அந்த வேலையை முடித்து வருவோம் என தோன்றும்.
உடனே இவனும் கிளம்பி போய் வாகனத்தில் அரைபட்டு மால்வான். இவனுக்காக அந்த சூழல் உருவாக்கப்படா விட்டாலும் இவனை அதனுடன் எளிமையான சிந்தனையில் மூலம் தொடர்புபடுத்தி விடுகிறது.
நம் மனம் இரண்டு விதமாக இயங்குகிறது. ஒன்று நாமாக மனதினை இயக்கி செயல்படுத்துவது. இது சங்கற்பம் எனப்படும். மற்றொன்று தாமாக இயங்கும் மனதை கண்கானிப்பது. இது விகற்பம் எனப்படும்.
இதில் இரண்டாவது வகையான விகற்பத்தின் ஊடேதான் நம் கர்மா செயற்படுகிறது. இதனை நிறைவேற்றுவது கிரகங்கள், தெய்வங்கள், ஆவிகள் மற்றும் பிறரின் வலுவான எண்ணங்கள் ஆகும்.
திடீரென உதிக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கர்மாவால் அலைக்கழிக்கப் படுகிறான்.
மனம் செயல்படாத ஒருவனை கர்மாவால் எதுவும் செய்ய இயலாது. உதாரணம் கோமா நிலையில் இருப்பவன். அதேபோல் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனையும. கர்மா தீண்டாது.
உனக்கு நடக்கும் ஒவ்வொரு செயலும் உன் மன எண்ணங்கள் மூலமே நடக்கிறது. எந்த ஒரு செயலும் முதலில் மனதில்தான் நடக்கிறது. பிறகுதான் ஸ்தூல உலகில் அது செயல்படும்.
இறைஒளி
========
\\\\\\\\\\\
இறைவன் யார்? பரம்பொருள் - பரஞ்ஜோதி - அருட்பெருஞ்சோதி - எங்கும் நிறைந்தவன் -
எல்லாம் வல்லவன் - ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-
தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் ! எங்கும் துலங்கும் ஒளியான அந்த அருட்பெரும் ஜோதி
ஆண்டவன் நம் உடலில் மட்டும் இல்லாமல் போவாரா என்ன?! எங்கும் இருப்பது போல் மனித
உடலிலும் அந்த பேரொளியான இறைவன் சிற்றொளியாகவே நம் உயிராகவே நின்றிலங்குகிறார்!
கடவுள் யார்? குருதான்! "குரு பிரம்மா குரு விஷ்னு குரு மகேஸ்வரா குரு சாத் சாத் பரப்பிரம்மா !
இதற்க்கு மேல் விளக்கம் வேணுமா? குருவே சாட்சத் பரப்பிரம்மாம்?! குருவே தெய்வமாம்!
தெய்வத்தை அடைந்தவர் தானே நமக்கு தெய்வத்தை காட்ட முடியும்?! பின் என்ன செத்து
போனவனா இறைவனை காப்பற்ற முடியும்? சற்றாவது சிந்திக்க மாட்டிர்களா?
நீ யார்? அந்த பேரொளியின் அம்சமான சின்ன ஒளி! அது தான் உன் உயிர்! நீ ஒரு ஜீவான்மா?
எங்கே இருக்கிறது உன் உயிர்? அறியவேண்டாமா? நமக்கு உடல் தந்தது கண் கண்ட தெய்வமான
தாயும் தந்தையும்! நமக்கு உயிரை தந்தது கண்ணிலே கண்ட ஒளியான தெய்வமே என்று அறிவது
தான் ஞானம்! ஒவ்வொரு தாயின் கருவிலும் முதலில் பிண்ட உற்பத்தியே! மூன்று
மாதங்களுக்கு பின்னரே இறைவனால் உயிரால் வளர்கிறது சிசு! கல்லினுள் தேரைக்கும்
கருப்பை உயிர்க்கும் படியளக்கிறான் இறைவன்! சரியாக 270 நாட்கள் 1 மாதம் 27 நட்சத்திரங்களான
27 நாளே ஆக 10 மாதம் 270 நாட்களே! இதுவே வைத்தியர்கள் சித்தர்கள் கணக்கு! முடிந்ததும்
கன்னிக்குடம் உடையும் குழந்தை பிறக்கும்! உயிர் எதன் வழி போய் எங்கு இருக்கும்
உடலில்? உச்சி வழியே போய், உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேல நம் தலை மத்தியில்
இருக்கிறது! பிறந்த குழந்தையின் உச்சி மிக மிக மென்மையாக இருப்பதை காணலாம்!
நம் உடல் நம் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே!
இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல
கணக்குதான்! சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற
என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய
நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!
எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று
எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்!
மறுக்க முடியாத உண்மை! அவரவர் கையால் அவரவர் எட்டு ஜாண் தான்!
"எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழி எவ்வளவு உண்மை ! நம் உடலில்
சிரசு - தலை தான் முக்கியம் அங்கே தான் , மத்தியில் தான் இறைவன் நம் உயிரை பத்திரமாக
வைத்துள்ளான் . சிரசை ஏன் முக்கியம் என்கிறார்கள் ? நாம் வாழ்வதே பஞ்சேந்திரியங்களால்
தானே ! மே வாய் கண் மூக்கு செவி , இவைகள் செயல்பட்டுத்தானே நாம் வாழ்கிறோம் !
கழுத்துக்கு கீழே கர்மேந்திரியமே ! கழுத்துக்குமேலே , தலையே ஞானேந்திரியமான
மெய் வாய் கண் மூக்கு செவி உள்ள கேந்திரமாம் !
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது , கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ,
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது , தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்றார் ஒளவைப்
பிராட்டி ! எக்குறையும்மின்றி நாம் பிறந்தால் மற்றும் போதாது ! ஞானக் கல்வி சாகாக்கல்வி கற்க
வேண்டும் ! தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கணை திறக்கப்பெற்றுக்கொள்வது நலம்
என வள்ளலார் கூறுகிறார் . மாத பிதாவை பெற்ற மனிதன் குருவை பெட்டராகவேண்டும்
இல்லையேல் மரணம்தான் ! குருவை பெற்றவனே தீட்சை பெறுவான் தவம் செய்வான்
ஞானம் பெறுவான் தெய்வத்தைக் காண்பான் ! ஆக தலையே , பஞ்சேந்திரியமும் தலையிலேயே
இருப்பதால் இதுதான் பிரதானம் ! ஆக , நம் உடலில் முக்கியமான தலையின் உள் மத்தியிலே தான்
நம் உயிர் இருக்கின்றது ! ஏ மனிதா நீ உயிர் உள்ளவன் !
உன் உயிர் எங்கிருக்கிறது ? மனிதனில் சிரசின் உள் மத்தியில் ! " உச்சிக்கு கீழ் ஆடியோ
அண்ணாக்குக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே " என்பதுவே
சித்தர் வேத வாக்கியம் உண்மை ஞான இரகசியம் ! உச்சிக்கு கீழே நம் சிரசின் உள் நடுவிலே
வைத்தான் விளக்கு இறைவன் ! விளக்கு என்றால் தீ உண்டு தானே ! அது நித்தம் எரியுதாம்!
அணையாவிலக்கு ! ஜீவன் அழிவதில்லை யல்லவா ?ஆக நம் உயிர் ,தீயாக அக்னி
சொரூபமாக உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது . சித்தர் வாக்கே ஆதாரம் .
நம் உயிர் ஒளிதான் என்பதை இன்னும் ஒரு விதத்தில் நிரூபிக்கலாம் . ஒரு உயிர்
போன , இறந்து போன , பிணத்துக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தான் உயிரின்
தன்மை என அறிந்து கொள்ளலாமல்லவா ? பிணம் போட்டது போட்டபடி மரக்கட்டைபோல்
கிடக்கும் எவ்வித உணர்ச்சியும் இருக்காது . உயிர் உள்ள நாம் செயல்படுகிறோம் அசைகிறோம்
உணர்வோடு உள்ளோம் . அப்படியாயின் உயிர் இருந்தாலே உணர்ச்சி இருக்கும் ! அடுத்து
பிணத்தை தொட்டால் உடல் ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் . நம் உடலை தொட்டால்
லேசாக கதகதப்பாக சூடாக இருக்கிறதல்லவா ? இதுவே உயிரின் தன்மை! உயிர் போன உடலில்
சூடு இருக்காது. உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கும்! சூடு இருக்கிறது என்றால் தீ- நெருப்பு
அக்னி ஒளி இருக்கிறது என்று தானேஅர்த்தம்?! ஆக உயிரின்தன்மை ஒளி! புரிகிறதா?
"கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா" என எவரிடமாவது திட்டு வாங்கியிருக்கிறீர்களா?
இல்லாவிட்டால், நீங்கள் பிரேதம், உயிர் இல்லாத மரக்கட்டை என்று அர்த்தம்! சூடு இருந்தால்,
உயிராகிய ஒளி இருந்தால் சொரணை - உணர்ச்சி இருக்கும் செயல்படுவீர்கள்! இதுவே
நிரூபணம்!உயிர் -ஒளிதான்! இருப்பதால் தான் உணர்வு!
நமக்கு உயிர் இருக்கிறது! நம் தலை உள்மத்தியில் ஒளியாக இருக்கிறது! ஞான ரகசியம்!
உள்ளே இருப்பதை காண்பது எப்படி? அடைய வழி என்ன? அறிய வேண்டாமா?அறிந்தால்
தானே சாதிக்க முடியும்?
நம் தலையில் பஞ்சேந்திரியங்கள் இருக்கிறது! அவை செயம்படுவதால் தான் நம் வாழ்வு!
பஞ்சேந்திரியங்கள் செயல்பட அதற்க்கு ஆற்றல், சக்தி வேண்டுமே! உயிர் ஆற்றலால்
ஐந்து புலன்களும் செயல்படுகின்றன. ஐம்புலன்களுக்கும் உயிர் சக்தி ஒரே சீராக
இருக்க வேண்டுமானால் உயிரிலிருந்து வரவேண்டுமானால் அவற்றின் மத்தியில்
இருந்தால் தானே முடியும்?! அதனால் தான் படைத்த இறைவன் தலையின் உள்
மத்தியில் உயிரை வைத்தான்! இதிலிருந்தும் நம் தலையின் மத்தியின் உள்ளே
தான் ஒளியாக நம் உயிர் விளங்குகிறது என புரிகிறதல்லவா?
நாம் எப்படி அறிவது? உள்ளே இருப்பது தெரிய வேண்டுமே? தெரிந்தால் தானே
வழி அறிந்து போக முடியும்? தலையில் உள்ளே ஒளி-உயிர் இருப்பது தலையின்
வெளியே எங்காவது தெரிகிறதா? தலையிலுள்ள ஐம்புலன்களில் கண்ணில்
ஒளி தெரிகிறதல்லவா? கண்ணில் ஒளி இருப்பதால் தானே, பார்வை சக்தி,
பார்க்கும் ஆற்றல் உள்ளதால் தானே நம்மால் பார்க்க முடிகிறது?! கண்ணில் ஒளி
இல்லாதவன் குருடன்! கண்ணில் தெரியும் ஒளி எது என பார்த்தால் நம் தலையின்
உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே ஜீவ ஒளியே என அறியலாம்! ஆக
உயிர் உள்ளே இருக்குது - கண்ணில் தெரியுது! உள்ளே உள்ள ஒளி வெளியே
கண்ணில் தெரிகிறது என்றால் உயிர்ஸ்தானத்தில் இருந்து கண் வரை ஒரு
வழி இருந்தால் தானே தெரியும்?! இதுவே உண்மை! உயிருக்கும் கண்ணுக்கும்
தொடர்பு இருக்கிறது என்பதே மாபெரும் உண்மை ஆகும்.
பஞ்சபூதங்களே அனைத்து ஜீவர்கள், ஜடப்பொருட்கள்
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களே அனைத்து ஜீவர்கள், ஜடப்பொருட்கள் என இப்பிரபஞ்சத்தில் எல்லா வகையும் தோன்றுதற்கு காரணம் என்றும், அதுவே அவை வளர்வதற்கும், அழிவதற்கும் காரணமாக ஆகி இயற்கையாய் பரிமளித்தது என்று அறிந்து பஞ்ச பூதமானது தோற்ற உருவாகிய பருப்பொருளாய் உள்ளவரை அது இயற்கையின் நியதிக்கு உட்படும் என்றும், அதுவே நுண்பொருளாய் கண்ணுக்கு புலனாகா அரூப நிலையாய் உள்ளபோது அரூபமாய் உள்ள இயற்கை போல ஆகி பரிணாம வளர்ச்சிக்கு ஆட்படாமல் இருக்கும்.
தோற்றமாக உள்ள இந்த மனித தேகத்திலேதான் அதற்கான உபாயம் இருப்பதையும் வேறெந்த உடலிலும் அந்த உபாயம் இல்லாததையும் அறிந்து இந்த தேகம் பஞ்ச பூத தேகம், பஞ்சபூதமே ஆன்மாவை சுற்றி மும்மலச் சேறாக நாம் இதன்முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப மலக்குற்றமாக மாறி ஆன்மாவை மாசுபடுத்தி நம்மை வஞ்சித்து கொல்கிறது.
மாசு நீங்க வேண்டுமாயின் எந்த உயிர்களுக்கு துன்பம் செய்ததால் மாசு ஏற்பட்டதோ அந்த ஜீவர்களுக்கு அதாவது இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிந்தால் எல்லா உயிர்களும் இதம் செய்கின்ற உயிரை வாழ்த்துவதினால் எல்லா உயிர்களின் வாழ்த்தே ஆன்மாவை ஒளிபெறச் செய்து ஆன்மாவைப் பற்றியுள்ள மாசை நீக்குகிறதையும் தெரிந்து கொள்ளலாம்.
அப்படி எல்லா ஜீவர்களுக்கும் இரங்கி இதம் புரிவதற்கு வன்மனம் நீங்க வேண்டும். வன்மனம் நீங்க இறைவனது ஆசியினால் அன்றி வன்மனம் நீங்காது. இறைவனின் திருவடி பற்றி பூசிக்க பூசிக்க நம்முள் அறிவு பெருகிடும். அறிவு பெருகினால் மட்டும் போதுமா, போதாது. வெறும் அறிவு நமது சிந்தனையை வளர்க்குமே தவிர ஆன்ம தெளிவை உண்டாக்காது, ஜென்மத்தைக் கடைத்தேற்றாது, பிற ஜீவர்களுக்கு உபகாரம் செய்து செய்து புண்ணிய பலத்தை பெருக்க வேண்டும்.
புண்ணியம் பெருக பெருக தெளிந்த அறிவு ஞானஅறிவாக மாறி ஆன்மா மாசுபட்டுள்ளதை உணர்த்தும். ஆன்மா மாசு நீங்கவும், ஜீவதயவைப் பெருக்கிடவும் இறையருள் தேவை.
புண்ணியம் செய்து செய்து ஜீவதயவை பெருக்கி பெருக்கி தூய ஞானஅறிவை பெறபெற பஞ்சபூதக்கட்டு படிப்படியாக உடையது விடும்.
பஞ்சபூதக் கட்டு உடைய வேண்டுமாயின் எந்த இயற்கை பருப்பொருளாக உண்டானதோ அந்த பருப்பொருளை உடைப்பதற்கும் இந்த பஞ்ச பூத சக்திகளே உதவியாய் உள்ளது.
காற்றாகிய பஞ்சபூதத்தின் உதவியால் அனலாகிய பஞ்சபூத சக்தியும் சேர்ந்து பெரும் மாற்றங்களை நமது தேகத்தினுள் ஏற்படுத்தும். அதை தெளிந்த குருநாதன் முன்னிலையில் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான வேதியியல் பொருளாய் செய்ய பஞ்சபூதக்கட்டு உடைந்து படிப்படியாக பருப்பொருளாய் உள்ள தூலதேகம் ஒளி பொருந்திய நுண்பொருள் ஒளிதேகமாக மாறிவிடும்.
இது மிகப்பெரும் ஞான இரகசியமாகும். இதை வழி நடத்த யாராலும் முடியாது. அந்த இறைவனே நம்மைச் சார்ந்து வழி நடத்தி நம்மை வாசி வசப்பட செய்து தேகத்திலுள்ள மும்மலக்கசடை நீக்கி ஆன்மாவை ஆக்கம் பெற செய்து தூலதேகத்திலே மறையதுள்ள சூட்சும தேகமாகிய ஒளி உடம்பை ஆக்கம் பெற செய்து செய்து இறுதியில் அருட்பெருஞ்ஜோதி வடிவமான ஒளிதேகத்தை பெற வேண்டும்.
செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன.
1. பந்தனம் :
பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.
2. ஸ்தம்பனம் :
ஒருவர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் எதுவாயினும் அதை நடைபெற விடாமல் தடுப்பதாகும். ஸ்தம்பனம் - இயக்கத்தை நடைபெற விடாமல் நிறுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.
3. மோகனம் :
ஒருவர் தன்னை பற்றியே நினைத்து உடலும் உள்ளமும் உருகும்படி செய்துவிடுதல். மோகனம் மூலமாக செய்வினையால் பாதிக்கப்பட்டவர் உறங்கும்போது கெட்ட கனவுகள் கண்டு உறக்கத்திலேயே விந்து கழியும், நாளடைவில் உடல் நலம் கெட்டு அவதிப்படுவார்.
4. ஆகர்ஷனம் :
ஒருவரை வசிகரித்து யாருக்காக வசீகரப்படுத்தப் படுகிறாரோ அவருக்காக எதையும் செய்ய தயாராக மாறுதல். இதை வசியம் என்றும் சொல்லுவார்கள்.
5. உச்சாடனம் :
ஒருவரை மற்றொருவர் மேல் பைத்தியம் பிடித்தது போல் ஆக்கி விடுவது, ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பது, வீட்டில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் சண்டையிடும்படி செய்தல், பண விரயங்களை உண்டாக செய்தல், இன்னும் பல கஷ்டங்களை உண்டாக்க முடியும்.
6. உன்மத்தனம் :
ஒருவரை பைத்தியமாக்கி விடுதல், கணவன் - மனைவி இடையே சந்தேகத்தை உண்டாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிரித்து விடுதல்.
7. மாரணம் :
ஒருவரை வியாதியால் உழல வைத்து நடமாட முடியாதபடி செய்து மரணமடைய செய்தல், கற்பத்தில் உள்ள கருவை அழித்தல், வீட்டில் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களை ஏற்படுத்துதல்.
ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.

No comments:
Post a Comment