Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 4 December 2016

உயிர்

உயிர்
====
நமது உடல் இந்த பூமியில் நடமாட உயிர் என்பது அவசியம் தேவை. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் உயிர் என்றால் என்ன? அதன் வடிவம் எப்படியிருக்கும்? அது ஒரு உடலில் எங்கேயிருந்து செயல்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். யாராவது அதைப்பற்றி யோசித்துயிருப்போமா அப்படியே எவனாவது ஒருவன் சிந்தித்து இந்த கேள்விகளை கேட்டால் அவனே வேலை வெட்டியில்லாத பைத்தியகாரன் என்று தானே ஏளனம் செய்வோம். அது எல்லாம் கிடக்கட்டும். உண்மையில் உயிர் என்றால் என்ன?
நாம் உலக அதிசயம் என்று எதை எதையோ சொல்கிறோம். பார்த்து வாய்பிளந்து மலைத்தும் போகிறோம். எங்கோ அமெரிக்காவில் நடப்பதை ஒரு சின்ன பெட்டிக்குள் நம் வீட்டு வரவேற்பு அறையில் வைத்து பார்க்கும் படி செய்த மனித மூளையின் திறமையை பார்த்தும் வியக்கிறோம். மனித மூளையே ஒரு வியப்பான பொருள் என்றால் அந்த மூளையை இயக்குகின்ற உயிர் வியப்பிலும் வியப்பான ஒன்றாகும்.
பத்து டன் பாரம் ஏற்றிய லாரி டயரில் இருக்கும் காற்று பலத்தால் தான் ஓடுகிறது. அந்த டயரில் ஒரு சின்ன ஆணி குத்திவிட்டால் ஓடுகின்ற லாரி உட்கார்ந்து விடும். ஆனால் நமது உடம்பிலோ நவதுவாரம் என்ற ஒன்பது ஓட்டையிருக்கிறது. அப்படியிருந்தும் உயிர் என்பது வெளியில் செல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இது தான் மிகபெரிய உலக அதிசயம்.
சரி இப்படி ஓடுகின்ற உயிர் காற்றா? நிச்சயம் காற்று அல்ல. ஆனால் உயிர் உடம்பை பற்றி கொள்வதற்கு காற்று அவசியம் தேவை. எனவே காற்று என்பது உயிர் உபயோகப்படுத்தி கொள்ளும் ஒரு பொருள் தான். மேலைநாட்டு விஞ்ஞானம் உயிரை ஒருவித ரசாயணம் என்கிறது.
அந்த ரசாயணம் உடல் முழுவதும் பரவி இருந்து தான் சரீரத்தை இயக்குகிறது என்றும் சொல்கிறது. ஆனால் நம்நாட்டு சித்தர்கள் உடலில் உள்ள ரசாயணத்தை இயக்குவதே உயிர் தான். எனவே உயிர் ராசாயணமல்ல என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் உயிரையும் சத்தம் என்றே சொல்கிறார்கள். அதனடிப்படையில் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றும் பாடுகிறார்கள்.
நமது இந்துமதம் கடவுளையும் கூட ஒரு சத்தம் என்றே சொல்கின்றது. அதாவது ஓம் என்ற பிரணவ நாதம் தான் கடவுள் என்பது நமது மதத்தின் ஆதார கருத்து, அதனால் தான் இறைவனை நாத விந்தும் என்றும், மந்திர சொரூபம் என்றும் ரிஷிகள் அழைத்தார்கள்.
நாத வடிவான கடவுளின் ஒரு சிறு அம்சமே மற்ற உயிர்களாகும். இதை தெளிவாக உணர்ந்து கொள்ள நமது ரிஷிகள் மிக சுலபமான ஒரு வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள். அதாவது படுக்கையில் தலையனை இல்லாமல் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டு கைவிரல்களால் ஒரே நேரத்தில் காதுகளையும் மூக்கையும் மூடிக்கொண்டு கண்களை மூடினால் நமது மண்டைக்குள் ‘ம்’ என்ற ஒரு சத்தம் கேட்கும். இந்த ‘ம்’ ஒலிதான் பிரணவம். இது தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ளது. அது தான் உயிர் என்று சொல்கிறார்கள். சகல உயிர்களும் இறைவனின் வடிவம் என்று கூறுவதும் இதனால் தான்.
இந்த ‘ம்’ என்ற பிரணவ சத்தம் மண்டைக்குள் கேட்பதினால் உயிர் என்பது தலையில் தான் இருக்கிறது என்று சிலர் சிந்திக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. நமது மூலாதாரம் என்ற நாபி கமலத்தில் அதாவது தொப்புளில் உயிர் சக்தியின் மூலம் இருக்கிறது. இங்கிருந்தே உயிர் உடல் முழுவதும் வெளிச்சம் போல் பரவியுள்ளது.
இந்த உயிர் எந்த அளவு பிரகாசத்தோடு இருக்கிறதோ அந்தளவு ஒரு ஜீவன் ஆளுமை தன்மை அல்லது தேஜஸ் உடையதாக இருக்கிறது. உயிரின் ஒளி என்பது அது பற்றி நிற்கும் மூலத்தின் பலத்தை பொறுத்தே அமைகிறது. அந்த பலம் உடலுக்கு இந்திரிய சக்தி மட்டுமே கொடுக்கிறது.
இந்திரியமானது சக்தியை இழக்கும் போது உயிரின் பலம் குறைந்து அதன் விளைவாக மூளையின் செயல்பாட்டில் நிதானம் தப்புகிறது. இதனால் மனம் அலக்கழித்து மனிதனை படுகுழியில் தள்ளிவிடுகிறது. இந்திரிய அடக்கமானது எந்தளவு இருக்கிறதோ அந்தளவு ஒரு மனிதனின் சக்தி அமைகிறது.
மனம் ஒரு நிலைபடவில்லை என்றால் மந்திரத்தின் நிஜ அதிர்வை மனிதனால் கொண்டு வர இயலாது. அப்படி இயலாத போது மந்திரங்களும் சக்தி இழக்கிறது. மனிதனும் தடுமாறி உணர்வு என்ற பாதாளத்திற்குள் விழுந்து விடுகிறான். எனவே தான் மந்திர பிரயோகத்திற்கு பிரம்மசரியம் மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment