À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
மாற்கு 1 அதிகாரம்
1.தேவனுடைய
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.2. இதோ, நான் என் தூதனை உமக்கு
முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;3.
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று
வனாந்தரத்திலே கூப்பிடுகிறவ னுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில்
எழுதியிருக்கிற பிரகாரமாய்;4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று
மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.5.
அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத் திற்குப்
போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7. அவன்: என்னிலும்
வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும்
நான் பாத்திரன் அல்ல.8. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த
ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.9. அந்த நாட்களில்,
இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத் தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம்
பெற்றார்.10. அவர் ஜலத்திலிருந்து கரையேறி னவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர்
புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.11. அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன்,
உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயி ற்று.12. உடனே
ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள்
இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.
தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு
கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:15. காலம் நிறைவேறிற்று,
தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். 40. அப்பொழுது
குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால்
என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.41. இயேசு மனதுருகி, கையை
நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
மாற்கு 2 அதிகாரம்
5.
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
8.
அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில்
அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?9.
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு
நடவென்று சொல்வதோ, எது எளிது?10. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம்
உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி:11. நீ எழுந்து,
உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.12.
உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை
மகிமைப்படுத்தினார்கள். 16.
அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய
சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.17.
இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு
வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.18.
யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில்
வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று
கேட்டார்கள்.19. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா?
மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.20. மணவாளன் அவர்களை விட்டு
எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.21. ஒருவனும் கோடித்துண்டைப்
பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க்
கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;28. ஆகையால் மனுஷகுமாரன்
ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
மாற்கு 3 அதிகாரம்
11.
அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று
சத்தமிட்டன. 14.
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்,
பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத்
துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.16. அவர்கள்
யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.17. செபதேயுவின் குமாரனாகிய
யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும்
பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்.18. அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு,
தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,19. அவரைக் காட்டிக்கொடுத்த
யூதாஸ்காரியோத்து என்பவர்களே.22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான்.
பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.23. அவர்களை அவர் அழைத்து,
உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?24. ஒரு
ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.25.
ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.26.
சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல்,
அழிந்துபோவானே.27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள்
புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.28.
மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும்,
அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;29. ஒருவன் பரிசுத்த
ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய
ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.30. அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறானென்று அவர்கள்
சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும்
வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.32. அவரைச்
சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய
சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக:
என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச்
சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!35. தேவனுடைய சித்தத்தின்படி
செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய்
இருக்கிறான் என்றார்.
மாற்கு 4 அதிகாரம்
3.
கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.4. அவன் விதைக்கையில், சில
விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.5. சில
விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே
சீக்கிரத்தில் முளைத்தது.6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து
போயிற்று.7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி
அதை நெருக்கிப்போட்டது.8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி,
ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.9. கேட்கிறதற்குக் காதுள்ளவன்
கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.10. அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட
அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.11. அதற்கு
அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே
இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.12. அவர்கள் குணப்படாதபடிக்கும்,
பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,
கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.13. பின்பு
அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம்
எப்படி அறிவீர்கள்?14. விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.15. வசனத்தைக் கேட்டவுடனே,
சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்.
இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.16. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே
அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம்
நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்;
இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.18. வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும்,
ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை
நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.20.
வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப்
பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.21. பின்னும்
அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும்,
கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?22. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை,
வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன்
என்றார்.24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள், எந்த
அளவினால்அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு
அதிகம் கொடுக்கப்படும்.25. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில்
உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய
ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க,
அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.28. எப்படியென்றால்,
நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத்
தானாய்க் கொடுக்கும்.29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை
அனுப்புகிறான் என்றார்.30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு
ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?31. அது ஒரு கடுகு
விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும்
சிறிதாயிருக்கிறது;32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி,
ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
No comments:
Post a Comment