À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
யோவான் 13 அதிகாரம்
1.
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான
தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில்
அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.2. சீமோனின் குமாரனாகிய
யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு,
அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;3. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும்,
தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;4.
போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,5.
பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த
சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.6. அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன்
அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.7. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக:
நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.8. பேதுரு
அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.9.
அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட
கழுவவேண்டும் என்றான்.10. இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும்,
மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும்
எல்லாரும் அல்ல என்றார்.11. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால்
நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு,
தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான்
உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும்
சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.14. ஆண்டவரும் போதகருமாகிய
நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.15.
நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.16.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல,
அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.17. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால்,
இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.18. உங்களெல்லாரையுங்குறித்து
நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக,
என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.19. அது நடக்கும்போது
நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை
உங்களுக்குச் சொல்லுகிறேன்.20. நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்,
என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.21. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே
கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத்
தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன்
குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு,
சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச்
செய் என்றார்.31. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார்,
தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.32. தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத்
தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.33. பிள்ளைகளே, இன்னும்
கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான்
போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும்
சொல்லுகிறேன்.34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல
நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.35.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று
எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.36. சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர்
எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது
நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.37. பேதுரு அவரை நோக்கி:
ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்
என்றான்.38. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல்
கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன் என்றார்
யோவான் 14 அதிகாரம்
1.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும்
விசுவாசமாயிருங்கள்.2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால்,
நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.3.
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும்
இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.4.
நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.5.
தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்
என்றான்.6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்
ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்;
இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.8. பிலிப்பு
அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.9.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும்
என்று நீ எப்படி சொல்லுகிறாய்?10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற
பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.11. நான் பிதாவிலும் பிதா என்னிலும்
இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.12.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப்
போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான்,
இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக்
கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.14. என் நாமத்தினாலே
நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால்
என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும்
உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்
தந்தருளுவார்.17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால்
அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்,
நீங்கள் அவரை அறிவீர்கள்.18. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில்
வருவேன்.19. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்;
நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.20. நான் என் பிதாவிலும், நீங்கள்
என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.21. என் கற்பனைகளைப்
பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில்
அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு
என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.22. ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே,
நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன
என்றான்.23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன்
என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில்
வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.24. என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்.
நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.25.
நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.26. என் நாமத்தினாலே
பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து,
நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.27. சமாதானத்தை
உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம்
கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும்
பயப்படாமலுமிருப்பதாக.28. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும்
நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப்
போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும்
பெரியவராயிருக்கிறார்.29. இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே
இதை உங்களுக்குச் சொன்னேன்.30. இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின்
அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.31. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும்,
பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும்.
எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
யோவான் 15 அதிகாரம்
1.
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.2. என்னில் கனிகொடாதிருக்கிற
கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக்
கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.3. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே
நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில்
நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல,
நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.5. நானே திராட்சச்செடி,
நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக்
கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால்,
வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச்
சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.7. நீங்கள் என்னிலும், என்
வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச்
செய்யப்படும்.8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்,
எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில்
அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.10. நான் என் பிதாவின் கற்பனைகளைக்
கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால்,
என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.11. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும்,
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.12. நான்
உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய
கற்பனையாயிருக்கிறது.13. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும்
அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள்
செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று
சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர்
என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு
அறிவித்தேன்.16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக
நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான்
உங்களை ஏற்படுத்தினேன்.17. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை
உங்களுக்குக் கற்பிக்கிறேன்.18. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே
என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.19. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச்
சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து
தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.20. ஊழியக்காரன் தன் எஜமானிலும்
பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள்
என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என்
வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.21. அவர்கள்
என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச்
செய்வார்கள்.22. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது;
இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.23. என்னைப்
பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.24. வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே
செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும்
கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.25. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று
அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.26.
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து
புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச்
சாட்சிகொடுப்பார்.27. நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
No comments:
Post a Comment