À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
மத்தேயு 12 அதிகாரம்
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
மத்தேயு 12 அதிகாரம்
1.
அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து,
கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.2. பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ
ஓய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.3. அதற்கு
அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்க வில்லையா?4.
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து
அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.5. அன்றியும், ஓய்வு நாட்களில்
ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள்
என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?6. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார்
என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.7. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின்
கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.8.
மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.9. அவர் அவ்விடம் விட்டுப்போய்,
அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.10. அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன்
இருந்தான். அப்பொழுது அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது
நியாயமா? என்று கேட்டார்கள்.11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக் காகிலும் ஒரு
ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டா
னோ?12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே
நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார்.13. பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை
நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று.14. அப்பொழுது, பரிசேயர்
வெளியே போய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள். 15.
இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்;
அவர்களெல் லாரையும் அவர் சொஸ்தமாக்கி,16. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக்
கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.17. ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:18. இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என்
ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்,
அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.19. வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்;
அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.20. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும்,
நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.21. அவருடைய
நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.22. அப்பொழுது, பிசாசு
பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன்
பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.25. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து,
அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்;
தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.26.
சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே;
அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?27. நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத்
துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை
நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.28. நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்,
தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.29. அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப்
பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்?
கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.30. என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்;
என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியான வருக்கு விரோதமான
தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை
சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால்
அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.33. மரம் நல்லதென்றால்,
அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று
சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.34. விரியன் பாம்புக் குட்டிகளே,
நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால்
வாய் பேசும்.35. நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்,
பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.36.
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்
என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.37. ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று
தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.38.
அப்பொழுது, வேதபாரக ரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக்
காண விரும்புகிறோம் என்றார்கள்.39. அவர்களுக்குப் அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத
விபசாரச் சந்ததியார் அடையாளத் தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின்
அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.40. யோனா இரவும் பகலும்
மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும்
மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.41. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே
பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால்
நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோ டெழுந்து நின்று இவர்கள்மேல்
குற்றஞ்சுமத்துவார்கள்.42. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய
ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே
அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.43.
அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல்
தேடியும் கண்டடையாமல்:44. நான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லி;
அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,45.
திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து,
உட்புகுந்து அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலை மையிலும் அவன்
பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும்
என்றார்.46. இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில்
பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.47. அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும்
உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.48. தம்மிடத்தில்
இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று
சொல்லி,49. தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும்
இவர்களே!50. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே
எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மத்தேயு 13 அதிகாரம்
3.
அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன்
விதைக்கப்புறப்பட்டான்.4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள்
வந்து அதைப் பட்சித்துப்போட்டது.5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது;
மண் ஆழமாயிராததி னாலே அது சீக்கிரமாய் முளைத்தது.6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய்,
வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள்
வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும்,
சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.9. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்
என்றார்.10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்
என்று கேட்டார்கள்.11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை
அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப் படவில்லை.12. உள்ளவன்
எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து
உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்13. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும்,
உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.14.
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்;
கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.15. இந்த ஜனங்கள் கண்களி னால் காணாமலும், காதுகளினால்
கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும்
இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள்
கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.16. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள்
கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.17. அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான் களும்
நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும்
கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.18. ஆகையால் விதைக்கிறவனைப்
பற்றிய உவமையைக் கேளுங்கள்.19. ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது,
பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே
வழியருகே விதைக்கப்பட்டவன்.20. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு,
உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;21. ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய்,
கொஞ்சக்கால மாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே
இடறலடைவான்.22. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும்,
உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.23.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும்
அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.24. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்:
பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.25.
மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்
போனான்.26. பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.27. வீட்டெஜமானுடைய
வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர்
அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.28. அதற்கு அவன்: சத்துரு
அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட
உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.29. அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது
நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.30.
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச்
சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள்
என்பேன் என்று சொன்னான் என்றார். 31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம்
கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.32.
அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள்
அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.33. வேறொரு உவமையை அவர்களுக்குச்
சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து,
முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.34. இவைகளையெல்லாம்
இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலே யன்றி, அவர்களோடே பேசவில்லை.35.
என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன்
என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.36. அப்பொழுது
இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து,
நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.37.
அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்.38. நிலம் உலகம்; நல்ல
விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;39. அவைகளை விதைக்கிற
சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.40. ஆதலால்,
களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.41.
மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற
சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,42. அவர்களை அக்கினிச் சூளையிலே
போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.43. அப்பொழுது, நீதிமான்கள்
தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன்
கேட்கக்கடவன்.44. அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு
ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய்,
தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.45. மேலும், பரலோகராஜ்யம்
நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.46. அவன் விலையுயர்ந்த ஒரு
முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.47.
அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும்
வலைக்கு ஒப்பாயிருக்கிறது.48. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து,
நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்து போடுவார்கள்.49. இப்படியே உலகத்தின்
முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப்
பிரித்து,50. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும்
உண்டாயிருக்கும் என்றார்.51. பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளை யெல்லாம் அறிந்துகொண்டீர்களா
என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.52. அப்பொழுது
அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிற படியால்,பரலோகராஜ்யத்துக்கடுத் தவைகளில் உபதேசிக்கப்பட்டுத்
தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற
வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி
முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே
உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும்
எப்படி வந்தது?55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா?
யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?57. அவரைக் குறித்து
இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி
வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
மத்தேயு 14 அதிகாரம்
25.
இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.26. அவர்
கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால்
அலறினார்கள்.27. உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்
என்றார்.28. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில்
வரக்கட்டளையிடும் என்றான்.29. அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி,
இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.30. காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து
அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.31. உடனே இயேசு கையை
நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.32. அவர்கள் படவில்
ஏறினவுடனே காற்று அமர்ந்தது.33. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர்
தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment