À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
யோவான் 4 அதிகாரம்
6.
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே
உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.8. அப்பொழுது சமாரியா
நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா
என்றார்.9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களான படியால், சமாரிய ஸ்திரீ அவரை
நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று
எப்படிக் கேட்கலாம் என்றாள்.10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று
உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில்
கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.11. அதற்கு அந்த
ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே,
பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.12. இந்தக் கிணற்றை எங்களுக்குத்
தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும்
அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக:
இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.14. நான் கொடுக்கும் தண்ணீரைக்
குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே
நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.15. அந்த ஸ்திரீ அவரை நோக்கி:
ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத்
தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.16. இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை
இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.17. அதற்கு அந்த ஸ்திரீ எனக்குப்புருஷன் இல்லை என்றாள்.
இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.18. எப்படியெனில்,
ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல,
இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர்
தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்;
நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.21.
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்
மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.22. நீங்கள் அறியாததைத்
தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால்
இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை
ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது;
தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.24.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத்
தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா
வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.26.
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள்
வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது,
ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன்
குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:29. நான் செய்த எல்லாவற்றையும்
ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.30.
அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.31. இப்படி நடக்கையில்
சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.32. அதற்கு அவர்:
நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.33. அப்பொழுது சீஷர்கள்
ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.34.
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை
முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம்
செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு
விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்.36. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக,
அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.37.
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.38.
நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள்,
அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.42. அந்த ஸ்திரீயை நோக்கி:
உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய
உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.44. ஒரு தீர்க்கதரிசிக்குத்
தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.45. அவர் கலிலேயாவில்
வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர்
அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.46. பின்பு, இயேசு
தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்;
அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.47.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்
போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும் படிக்கு வரவேண்டுமென்று
அவரை வேண்டிக்கொண்டான்.48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும்
காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே,
என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம்,
உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்
போனான்.51. அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய
குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.52. அப்பொழுது: எந்த மணிநேரத்தில்
அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில்
ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.53. உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே
சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
யோவான்
5 அதிகாரம்
2.
எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது,
அதற்கு ஐந்து மண்டபங்க ளுண்டு.3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள்
முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.4.
ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்;
தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும்
சொஸ்தமாவான்.5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.6.
படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி:
சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.7. அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே,
தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவரு மில்லை,
நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.8. இயேசு அவனை
நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.9. உடனே அந்த மனுஷன்
சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.11.
அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு
நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.14. அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு:
இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.15.
அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.17.
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்
என்றார்.19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும்
தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே
செய்கிறார்.20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம்
அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான
கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல,
குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல
எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச்
செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.23.
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.24. என்
வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன்
ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்
என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.25. மரித்தோர் தேவகுமாரனுடைய
சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள்
பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.26. ஏனெனில், பிதாவானவர்
தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி
அருள் செய்திருக்கிறார்.27. அவர் மனுஷகுமாரனாயி ருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு
அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்;
ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;29.
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள்
ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.30. நான் என் சுயமாய்
ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை
நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு
நீதியாயிருக்கிறது.31. என்னைக் குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.32.
என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக்
கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.33. நீங்கள் யோவானிடத்தில்
ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.34. நான் ஏற்றுக் கொள்ளுகிற
சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகி றேன்.35.
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே
களிகூர மனதாயிருந்தீர்கள்.36. யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு
உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும்
நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச்
சாட்சி கொடுக்கிறது.37. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்;
நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.38.
அவர் அனுப்பின வரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.39.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று
எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40. அப்படியிருந்தும்
உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.41. நான் மனுஷரால்
மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.42. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.43.
நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன்
தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.44. தேவனாலேமாத்திரம் வருகிற
மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?45.
பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள்
நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.46. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால்,
என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.47. அவன் எழுதின
வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள்
என்றார்.
யோவான்
6 அதிகாரம்
14.
இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி
என்றார்கள்.19. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது,
இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.20. அவர்களை
அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே
என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.27. அழிந்துபோகிற
போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலை நிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;
அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்
என்றார்.28. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி
நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர்
அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.30. அதற்கு
அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன
அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 31. வானத்திலிருந்து அவர்களுக்கு
அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில்
மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.32. இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த
அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான
அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்33.
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.34.
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்
என்றார்கள்.35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும்
பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.36. நீங்கள்
என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.37.
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத் தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை
நான் புறம்பே தள்ளுவதில்லை.38. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி
செய்யவே நான் வானத்திலிருந் திறங்கிவந்தேன்.39. அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும்
நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.40.
குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும்,
நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.41.
நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து
முறுமுறுத்து:43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.44.
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;
கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45. எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்
என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவி னிடத்தில் கேட்டுக்
கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர
வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.47. என்னிடத்தில் விசுவாசமாயிரு க்கிறவனுக்கு
நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.48. ஜீவ அப்பம்
நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50.
இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே
வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்;
நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.53.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய
இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன்.54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு
நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.55. என் மாம்சம் மெய்யான
போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.56. என் மாம்சத்தைப் புசித்து,
என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத் திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.57.
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும்,
என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.58. வானத்தி லிருந்திறங்கின அப்பம் இதுவே;
இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப்
புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.62. மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த
இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?63. ஆவியே உயிர்ப்பிக்கிறது,
மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும்
இருக்கிறது.64. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள்
இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்த படியால்,
அவர் பின்னும்:65. ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்
என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர்
அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.67. அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி:
நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.68. சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக:
ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.69. நீர் ஜீவனுள்ள
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்
என்றான்.70. இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா?
உங்களுக் குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.71. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து
பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக்
குறித்து இப்படிச் சொன்னார்.
No comments:
Post a Comment