À¡¢Íò¾ §Å¾¡¸Áõ ¨ÀÀ¢Ç¢Ä¢ÕóÐ, Ò¾¢Â²üÀ¡ðÊø,¬ñ¼Å÷(þ§ÂÍ),¾£÷츾¡¢Í¸ÙìÌõ,
ÁÉ¢¾÷¸ÙìÌõ !§À¡¾¨É¸Ç¡¸ ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ¾£÷츾¡¢Í¸û, ÁÉ¢¾÷¸ÙìÌ! ÀÃÁ
À¢¾¡ [¦Â§¸¡Å¡]¨ÅÔõ, ¬ñ¼Å¨ÃÔõ (þ§ÂÍ), «Å÷¸û ÜÕŨ¾ô ÀüÈ¢Ôõ, ´ù¦Å¡Õ
«¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐõ ±ÎòÐ ±Ø¾¢Ôû§Ç¡õ. þ¨¾ ÁÉ¢¾÷¸û ¸¨¼À¢Êò¾¡ø º¡£Ãõ,
¬Å¢, Å¡ú쨸 àö¨Á¨¼Ôõ ±ýÀÐ ¯Õ¾¢. ÀÃÁÀ¢¾¡×õ, þ§ÂÍ×õ
Áì¸û «¨ÉŨÃÔõ ¬º¢÷ž¢ôÀ¡Ã¡¸ !¬§Áý.
மத்தேயு 9 அதிகாரம்
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களு டைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.3. அப்பொழுது, வேத பாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.4. இயேசு அவர்கள் நினைவு களை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது?6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென் பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப்போ என்றார்.7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.9. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகை யில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.10. பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோ டும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.11. பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.12. இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டிய தேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்பு கிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.14. அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்மு டைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.15. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனு டைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.16. ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ் திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.17. புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.18. அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையைவையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.19. இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுங்கூட அவன் பின்னே போனார்.20. அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:21. நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.23. இயேசு வானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:24. விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.25. ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.26. இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமார னே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.28. அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.29. அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.30. உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

மத்தேயு10 அதிகாரம்
1.
அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த
ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதி களையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம்
கொடுத்தார்.2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களா வன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட
சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,3.
பிலிப்பு, பர்த்தொ லொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு,
ததேயு என்னும் மறு நாமமுள்ள லெபேயு,4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த
யூதாஸ்காரியோத்து என்பவைகளே.5. இந்தப் பன்னிரு வரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக்
கட்டளையிட்டுச் சொன்னது என்னவென் றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும்,
சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப்
போங்கள்.7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக் கிறது என்று பிரசங்கியுங்கள்.8. வியாதியுள்ளவர்களைச்
சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகி களைச்சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத்
துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.9. உங்கள் கச்சைகளில் பொன்னையாவது,
வெள்ளியையாவது, செம்பையாவது,10. வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது,
தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக் கிறான்.11.
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன்
யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.12. ஒரு வீட்டுக்குள்
பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின
சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களி
டத்திற்குத் திரும்பக்கடவது;14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக்
கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள்
கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு
நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.16. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல,
இதோ, நான் உங்களை அனுப்புகி றேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக்
கபடற்றவர்களுமாய் இருங்கள்.17. மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை
ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.18.
அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும்,
ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.19. அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது:
எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள்
பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.20. பேசுகிற வர்கள் நீங்கள் அல்ல,
உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.21. சகோதரன் தன் சகோதரனையும்,
தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப்
பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய்வார்கள்.22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும்
பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்ப டுவான்.23. ஒரு
பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன்
வருவ தற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன்.24. சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.25.
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே
பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?26.
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும்
இல்லை.27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்;
காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.28. ஆத்துமாவைக் கொல்ல
வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்க ளுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்;
ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.29. ஒரு காசுக்கு
இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல்,
அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.31.
ஆதலால், பயப்படாதி ருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்
களாயிருக்கிறீர்கள்.32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.33. மனுஷர் முன்பாக என்னை
மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.34.
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே
அனுப்பவந்தேன்.35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும்,
மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள்
அவன் வீட்டாரே.37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப்
பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
அல்ல.38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.39.
தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன்
அதைக் காப்பான்.40. உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளு கிறான்; என்னை
ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகி றான்.41. தீர்க்கதரிசி என்னும்
நாமத்தி னிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்;
நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற
பலனை அடைவான்.42. சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம்
தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு11 அதிகாரம்
2.
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு,
தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:3. வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா?
என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;5. குருடர் பார்வையடைகிறார்கள்,
சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள்,
மரித்தோர் எழுந்திருக் கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.6.
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.7. அவர்கள் போனபின்பு,
இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்த
ரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?8. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்?
மெல்லிய வஸ்திரந் தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில்
இருக்கிறார்கள்.9. அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம்,
தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லு கிறேன்.10.
அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே
போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.11.
ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும்
எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று
உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.12. யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக
ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.13.
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.14.
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவ னாகிய எலியா இவன்தான்.15. கேட்கிறதற்கு
காதுள்ளவன் கேட்கக்கடவன்.16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தை வெளிகளில்
உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து:17. உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை;
உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு
ஒப்பாயிருக்கிறது.18. எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்:
அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.19. மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்;
அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும்
பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று
ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.20. அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச்
செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார்.25.
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை
ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை
ஸ்தோத்திரி க்கிறேன்.26. ஆம் பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப்
பிரியமாயிருந்தது.27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச்
சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.28. வருத்தப்பட்டுப்
பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன்.29. நான் சாந்தமும் மனத்தாழ்மை யுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு,
என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்து மாக்களுக்கு இளைப்பாறுதல்
கிடைக்கும்.30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment