Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 30 September 2016

வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா...

வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா... பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. 'டேய்... நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே... சண்டை வரும்'னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்... அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்!
1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.
2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.
3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.
4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.
5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.
6. 'வீட்டுத் தோட்டத்தில் ஆமணக்கு வளர்த்தால், அதன் காய்கள் வெடித்து விதைகள் சிதறுவதுபோல் குடும்பம் சிதறிடும்.'
ஆமணக்கு காய் முற்றியவுடன், அதன் விதைகள் கீழே சிதறிக்கிடக்கும். தெரியாமல் சிறுபிள்ளைகள் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிக் கொண்டு விபரீதமாகிவிடும். அதனால்தான் அதை வீட்டுக்கு அருகில் வளர்க்கக் கூடாது.
7. 'பஞ்சு பறந்தா... பணம் பறக்கும்.'
வீட்டில் தலையணைக்காக இலவம் பஞ்சு வாங்கி வந்து அடைப்போம். அப்போது, அதைக் கண்டபடி பறக்கவிட்டு விளையாடுவார்கள் குழந்தைகள். அப்படி பறந்தால்... விலை உயர்ந்த பொருளான இலவம் பஞ்சு வீணாகி பணத்துக்குதான் வேட்டு. அதேபோல, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் போய் வைத்திய செலவை வேறு இழுத்து வைக்கும்.
8. 'வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
9. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.
10. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
11. 'முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்.
12. 'தோட்டத்தில் முதல் வெள்ளாமையாக தென்னை வைக்கக் கூடாது.'அது காய்ப்புக்கு வந்து பலன் கொடுக்க ஆண்டுக் கணக்கில் ஆகும். அதற்குள் 'அடச்சே' என்று வெறுத்துவிடும். எனவே, சீக்கிரமாக பலன் கொடுக்கும் பயிர்களை ஆரம்பத்தில் பயிர் செய்வது நல்லது.
புரியும் புதிர்கள்!
கிராமப்புறங்களில் எல்லாவற்றுக்குமே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிடுவார்கள். பல சமயங்களில் அது நம்ப முடியாததாகக்கூட தோன்றும். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால்... அத்தனையும் சொக்கத் தங்கம் என்பீர்கள்!
13. 'தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!
14. 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
15. 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.
16. 'அதிகாலையில் முங்கிக் குளி.'
சூரியன் உதிக்காத, பனி விலகாத சமயத்தில்தான் நீர் நிலைகளின் மேற்பரப்பில் ஓசோன் படலம் இருக்கும். அதனால் முங்கிக் குளிக்க வேண்டும். அப்போது, அந்த ஓசோன் படலத்தை சுவாசிக்கும்போது, அது நம்முடைய மூச்சுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
17. 'ஏகாதசி விரதம் இருப்ப வர்கள், அதை முடிக்கும்போது அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.'அகத்திக்கீரைச் சாப்பிட்டால், விரதத்தின் காரணமாக வயிற்றில் ஏற்படும் புண்கள் ஆறுவதோடு, வயிற்றிலுள்ள புழுக்களும் இறந்துபோகும்.
18. 'விசேஷங்களின்போது வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.'
மரம், செடிகளெல்லாம் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவைக் கொடுக்கும். விசேஷம் நடக்கிற இடங்களில் பலர் கூடும்போது வெளிப்படும் வியர்வை, மூச்சுக் காற்று போன்றவற்றை மாவிலை தோரணமும் வாழை மரங்களும் கிரகித்துவிடும்!
19. 'வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி போட வேண்டும்.'
வாரம் இரு தடவை இப்படிச் செய்வதன் மூலம்... சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவி... விஷ ஜந்துக்கள், கொசுக்கள் உள்ளிட்டவற்றை விரட்டி அடிக்கும்.
20. 'வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ மறக்கக் கூடாது.'
வெளியில் சென்று திரும்புபவர்களின் கால்களில் தப்பித் தவறி ஏதாவது விஷக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைப்படியில் காலை வைத்தால்... அதிலிருக்கும் மஞ்சள் கிருமிநாசினியாகச் செயல்படும்.
21. 'அருகில் எங்காவது இடி இறங்கினால்... 'அர்ஜுனா, அர்ஜுனா' என்று சத்தமாகச் சொல்ல வேண்டும்.'
இடிச் சத்தத்தின் காரணமாக சிலருக்குக் காது அடைத்துக் கொள்ளும். அதைச் சரிசெய்ய, தாடையை சுருக்கி விரிக்க வேண்டும். 'அர்ஜுனா' என்று சொல்லும்போது அது எளிதாக நடந்தேறிவிடும். சொல்லித்தான் பாருங்களேன் - அர்ஜுனா!
22. 'ஊசி கொண்டு இரவில் துணி தைத்தால் தரித்திரம்.'
அந்தக் காலத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் இல்லை. அதனால், ஊசியானது கை மற்றும் நகக்கண்களில் ஏறிவிடும் வாய்ப்பு உண்டு. அத்தகைய வீணான விபத்தைத் தவிர்க்க, இதுதான் வழி!

இறைவன் யார்? குரு யார்?

இறைவன் யார்? குரு யார்? !=======
மனிதர்களில் பெரும்பாலோர் இறைவனை உரிய முறையில் அறியாத காரணத்தாலும் அவனைப்பற்றி அறிந்து கொள்ள முற்படாத காரணத்தால்! சமூகத்தில் இடைத் தரகர்களும் முன்னோர்களும் எதைக் கற்பித்தார்களோ அவற்றையே கடவுள் என்று நம்பி மோசம் போகிறார்கள்!. உண்மையில் உலகத்தில் பாவமும் அதர்மமும் பெருகுவதற்கும் கடவுளின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கும் செல்வம் கொள்ளை போவதற்கும் தவறான கடவுள் கொள்கை காரணமாகிறது.
ஏகனாகிய படைத்தவனை வணங்குவதற்கு பதிலாக பல்வேறு படைப்பினங்களை கடவுளாக பாவித்து மக்கள் வணங்கும்போது அதனடிப்படையில் மனிதகுலமும் குழுக்களாகப் பல்வேறு பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறு கடவுளின் பெயரால் நடக்கும் குழப்பங்களைக் காணும் பலரும் கடவுளே இல்லை என்று நாத்திகத்திற்குத் தாவும் நிலையும் உண்டாகிறது.
இறைவனை அறியும் பொருட்டு இயற்கையையும் அன்றாட நிகழ்வுகளையும் ஆராயத் தூண்டுகிறது---- இறைமறை:
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)
தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - (திருக்குறள்)
கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு – எரேமியா 10:10)
ஏகம் ஏவாதித்யம் ( (அவன் ஒருவனே, அவனுக்குப் பிறகு எவருமில்லை) - சாந்தோக்ய உபநிஷத்
“நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை” (ஏசாயா 43:10-11)
நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) – நாதஸ்ய ப்ரதிம அஸ்தி ( அவனைப்போல் எதுவுமில்லை) - ஸ்வேதஸ்வதாரா உபநிஷத் மற்றும் யஜூர் வேதம்-
யா ஏக இத்தமுஸ்துஹி (நிகரில்லாதவனும் தனித்தவனும் ஆகிய அவனைத் துதிப்பீராக) – ரிக் வேதம்
“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)
“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)
“அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10)
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
“தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (Iதீமோத்தேயு 2:5)
மேலும், 'ஏகம் ஸத்வம் பஹூதா கல்பயந்தி' (இறைவன் ஒருவன்தான், அவனை ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். - ரிக் வேதம் (1:164:46)
'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது இஸ்லாத்தின் மூலம்-
வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை' என்பது இதன் பொருள்.
ஏகம் பிரஹம் தவித்யே நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஐன்.
(பொருள்):
இறைவன் ஒருவனே வேறு இல்லை. இல்லவே இல்லை - 'பிரம்ம சூத்திரம்'
…..................................................
குரு என்பது உணர்த்துபவர் என்பதாகும்!
புது வழிகாட்டி எனலாம். குரு என்பது மரியாதைக்குரிய உயர்ந்த சொல்லாகும்.
அதனாலேயே சாகாக்கல்வி கற்றுத்தருபவர்களுக்கு மரியாதை நிமித்தமாக குரு என்கிறார்கள். கலை வல்லுனர்கள் பிறர்க்கு கலையை கற்று தரும் போது குருவாகிறார்கள். வேதங்களில் இருக்கும் வேதத்தை கற்ப்பிப்பவர்கள் ஆச்சாரியர்கள். ஆச்சாரிக்கப்படும் சொற்களை புனைந்து ராகத்துடன் இறை துதி செய்து கற்பிக்கப்படுவது ஆகும். இறைவனுக்கானது மட்டுமே வேதாச்சரமார்கள் இதை கற்ப்பிப்பவர் ஆச்சாரியன் ஆவான்.
மெய் என்னும் பிரம்ம நிலையை உணர்ந்து, மெய்யான பிரம்ம நிலையிலேயே இருந்து விடுவது ஆகும்
உறவு-துறந்து
உடலை- துறந்து
மனதை- துறந்து பிரம்ம ஐக்கியமானவர்களே மெய் குரு ஆகும்.
மெய் பொருளை மட்டுமே உணர்ந்து, உணர்த்தும் விளக்குகள்!
குரு எனப்படுபவர்! இறைவனை காட்டுபவர்!
அஞ்ஞையில் யோக கலையை உடையவர், இவர் விழிப்புடைய ஆசான் ஆகும். இவர்கள் உலக விஷயம் நன்கு அறிவர்.
அறிவியல் பூர்வமாக விளக்கும் ஆசான்.!
அறிவுபூர்வமாக விளக்கும் ஆசான்!
குரு எனப்படுபவர் மரணத்திலிருந்து காப்பவர்!
64 கலை கல்வி நுனுக்கத்தை புகட்டுபவர்கள்.,
ஆய கலை-64 கலைக்கும் மேம்பட்ட கலையாகிய “அச்சமுறுத்தும் பிரணவ கலை” –ன் இரகசியத்தை அருள்பவர்!
பிரணவ மந்திரத்தின் பொருள் விளக்குபவர்!
பிரம்ம வித்தை –ன் தாட்பரியத்தை! நம் கை பொருளாக தருபவர்,
குரு இறைவனுக்கு சமம் என்பர். ஏனெனில் வரபிரம்மம் அருவ ரூபம், அருவம் இயற்கையின் நீதியின் படி உருவத்தில் இருந்தே இயங்கும். அதாவது உயிர் விதிப்படியே (சிவநெறிப்படி) அருவத்திற்கு உருவம் வேண்டும். அருவமாகிய பரம்பொருள் உருவத்தில் இருந்தே இயங்கும். பரம்பொருளாகிய சிவம், குருவாய் நின்று அருள்வேன் என்ற வாக்கின்படி என்னென்றும் அருள்பாலிக்கிறார்.
*மெய்குருவை தேடு! அவரிடம் தான் உன்னுள் இருக்கும் இறைவனை காட்ட முடியும்*
1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே! அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது
2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.
3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.
4,குரு விளக்கம் ?
கு-இருள் ரு-பிரகாசம்
5, குரு மந்திரத்திற்கான விளக்கம்?
ஞானவடிவத்தை உடையதோ, ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,.எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ, பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ,].அழிவற்றதோ,. எத்துடனும் சேர்க்கையற்றதோ, எங்கும் நிறைந்து உள்ளதோ, இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே
6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.
7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி
8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் தன்னை அறியும் எண்ணம் உடைய மக்களுக்காக வந்தர்
9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.
10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்
11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.
12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.
13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.
14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.
15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை ருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.
16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.
17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.
18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.
19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது
20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்
21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்
22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு
23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.
24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.
25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.
26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.
27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்
28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்
29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.
30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .
31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.
32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது
33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.
34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்
34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.
35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.
தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)
36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.
37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.
38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரே குருவாவர்.
39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.
40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.
41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா
42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.
43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.
44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.
45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.
46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்
47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.
48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.
49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.
50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.
51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.
52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி
53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்
54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.
55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.
56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்
57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.
58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.
59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.
60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்
61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.
62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்
63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மட்டுமே,ஞானம் தேவையில்லை.
64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.
65. குரு நேசம்?
சிவ நேசம்.
66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.
67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.
68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.
69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.
70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா
71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்
72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.
73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.
74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.
75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.
76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.
77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்
78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.
79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.
81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.
82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.
83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.
84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.
85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்
86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.
87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா
88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்
89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.
90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.
91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.
92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை
93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்
94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.
95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.
96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.
97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.
98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.
99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.
100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.
101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்
102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.
103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்
104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்
106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.
108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.
109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாக இருப்பார்.
110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே
111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.
112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.
113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.
114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.
115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.
116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.
118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்
119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)
120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.
121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.
122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;
123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.
124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.
125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.
126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.
127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.
128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.
129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.
131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.
132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.
133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.
134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.
135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.
137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.
138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ
139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.
140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.
141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.
142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே
146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.
147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்........
149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.
151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.
152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.
153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.
154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.
155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.
156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .
157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.
158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.
159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்
யோகி - சொல்பவர்
160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு பரப்ரம்மம்.
161. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.
162 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.
மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே, மன சலனத்தின் வழிகாட்டியே - மௌனம் பேரானந்த பேறு நிலையை வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம் ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது - மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

பலன் தரும் பத்து முத்திரைகள்

பலன் தரும் பத்து முத்திரைகள்
"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1. அறிவு முத்திரை:
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.
2. பூமி முத்திரை:
மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

3. நீர் முத்திரை:
சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.
4. வாயு முத்திரை:
ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.
5. சூன்ய முத்திரை:
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.
6. சூரிய முத்திரை:
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.
7. வாழ்வு முத்திரை:
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.
8. ஜீரண முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.
9. இதய முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.
10. லிங்க சக்தி முத்திரை:
இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!


Thursday, 29 September 2016

மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் ......

மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் ......
மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.
நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.
பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.
இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை
1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.
அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.
ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.
என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.
கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.
இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.
இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.
சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.
இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.
பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.
அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.
கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம். குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.
ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம். இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.
தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.
கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும். கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.
கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.
கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.
பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

வாசியோகம்

வாசியோகம்
வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.

கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.
வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும்

இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும் படிகற்களாக 4 முக்கிய நிலைகளை கூறிப்பிடுகின்றனர் .அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகை படும்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றிய தெளிவுகளை மக்களுக்கு உணர்த்துவதே இப்பதிவின் நோக்கம்.
சரியை - கோயிலுக்கு சென்று விக்ரகத்தை வணங்குதல்.
கிரியை - கோயிலில் பார்த்த விக்ரகத்தை , பூஜை முறைகளை நம் வீட்டில் செய்தல்.
யோகம் - பிரணாயாமம் , வாசி போன்ற பயிற்சிகளில் இடுபடுதல். யோகம் என்பதற்குரிய சரியான அர்த்தம் ஒன்றுதல்.
ஞானம் - நான் யார் என்று தன்னை அறியும் முயற்சி. பரிபூரண அறிவே ஞானம்.
இந்த நான்கு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 16 நிலைகளாகிறது.
இந்த முதல் நிலை என்பது சரியை இந்த அர்த்தம் யாதெனின் அந்த அந்த நிலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கொண்டு அந்த நிலைகளை அறிவது. அதாவது ஒரு குருவினை கொண்டு தெரிந்து கொள்வது. குருவை நாடி சென்று அந்த படிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் இரண்டாவதாக எல்லா நிலைகளில் வரும் கிரியை என்பது நாம் செய்ய வேண்டியதை குறிக்கும். குரு மூலம் சரியையில் தெரிந்து கொண்டதை செய்வது. சீடன் செய்ய வேண்டிய கிரியைகள் குறிக்கும். இதே போல் மூன்றாவதாக எல்லா நிலைகளில் வரும் யோகம் குறிப்பது குருவின் மூலம் தான் கற்றதில் முழுதாக ஒன்றுவது. இவ்வாறு ஒருவன் அந்த படிநிலைகளில் குரு உபதேசத்தின் படி ஒன்றும் போது அந்த படி நிலைகளின் ஞானம் கிட்டுகிறது.
மேல் கூறியவற்றை கொண்டு கீழ் வரும் படி நிலைகளை பற்றி ஆழமாக பார்ப்போம்.
1. சரியையில் சரியை : கோவிலுக்கு சென்று வழிபாடும் முறைகளை பூசாரியின் (சரியையில் குரு) மூலம் அறிவது. உதரணத்திற்கு எந்த சந்தியில் முதலில் வழி பட வேண்டும், எத்தனை முறைகள் வலம் வர வேண்டும் போன்ற விதி முறைகளை அறிந்து கொள்வது. இதை தெரிவித்து பூஜை செய்யும் பூசாரியே சரியை நிலையில் குரு ஆவார்.
2. சரியையில் கிரியை : சரியையில் சரியை நிலையில் அறிந்து கொண்டதற்கு ஏற்ப கோவிலில் சென்று முறையாக வழிபாடு செய்தல். நம் செய்யும் செயலே கிரியை இங்கு.
3. சரியையில் யோகம் : கோயில் வழிபாட்டில் பரிபூரணமாக ஒன்றுவது.
4. சரியையில் ஞானம் : பரிபூரணமாக ஒன்றி கோயில் வழிபாடு செய்வதன் பலனாக நமக்கு கிட்டும் அறிவு. கோவில் வழிபாட்டின் நோக்கம் தெரிகிறது. இது முடிந்த பின் கிரியைக்கு செல்லும் புண்ணிய பலன் (தகுதி ) பெறுகிறான் சாதகன். இதில் ஒன்றி ஒருவன் பெரும் முக்தி - சரியையின் ஞானத்தின் பலன் - "சாலோக முக்தி".
---- அடுத்து கிரியையின் நிலைகளை பார்போம் ----
1. கிரியையில் சரியை : நம் வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளை , விக்ரகங்களை தகுந்த ஆசான் மூலம் அறிவது. இதை தெரிவிப்பவரே கிரியையில் குரு.
2. கிரியையில் கிரியை : விட்டில் ஸ்தாபித்த விக்ரகங்களை குருவின் மூலம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டதற்கு ஏற்ப நாம் செய்யும் பூஜை.
3. கிரியையில் யோகம் : நாம் செய்யும் பூஜையில் பரிபூரணமாக ஒன்றுவது.
4. கிரியையில் ஞானம் : நாம் செய்த பூஜையில் நாம் பெரும் பலன். கிரியையில் நாம் பெரும் அறிவு. நாம் செய்த பூஜையின் நோக்கம் அறிந்து கொள்வது. கிரியின் ஞானத்தின் முடிவு சாமீப முக்தி.
----அடுத்து யோகா நிலைகளை பார்போம்-----
1. யோகத்தின் சரியை : தகுந்த யோகா ஆசிரியரின் மூலம் யோகா பயிற்சிகளை அறிவது.
2. யோகத்தில் கிரியை : பயிற்சிகளை முறைப்படி ஒழுக்கதொடு செய்வது.
3. யோகத்தில் யோகம் : யோகத்தின் கிரியையின் முடிவு. நாம் செய்யும் பயிற்சிகளில் முழுதாக ஒன்றுவது.
4. யோகத்தில் ஞானம் : யோகத்தில் ஒன்ற நாம் பெறுவது சமாதி நிலை. யோகத்தில் முக்தி பெறுவது சாமீபம் என்பர்.
இவ்வாறு மூன்று முக்கிய படி நிலைகளும் ஞானத்திர்கே ஒருவனை கொண்டு வரும். ஞானமே இறைவனை அடைய, இறை நிலை எய்த வழி காட்டும். ஞானமே முடிந்த முடிபான "சாயுச்சிய முக்தி" யை ஒருவனுக்கு தரவல்லது. வள்ளலார், ஆண்டாள், பத்ரகிரியார் போன்றோர் பெற்ற ஒளி நிலை. ஊன உடலே ஒளி உடலாக மாறும் தன்மை. ஒவ்வொரு சாதகனும் சரியை,கிரியை,யோகம் முடித்து ஞான நிலைக்கு வர வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் காலம் போதாது என்று ஞான நிலைக்கு நேரடியாக வள்ளலார் நம்மை அலைக்கிறார். ஞான நிலை ஞான சாதனை என்றார் என்ன? இறைவன் நம் உடலில் எத்தன்மையில் உள்ளாரோ அதன்மையிலே ஒன்றுவது. இறைவன் எத்தன்மையில் உள்ளான்?
இறைவன் பேரோளியாக உள்ளான் என்று எல்லா மதங்களும் , ஞானிகளும் ஒப்பு கொள்கின்றனர். நாம் இறைவனின் பிள்ளைகள் எனின் நாமும் (நம் உயிரும்) ஒளி அம்சம் அல்லவா. நம் உயிர் அந்த பேரொளியின் சிறு அம்சம் அல்லவா? இந்த சிறு ஒளியை அறிந்தால் அந்த பேரொளியை அறிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த சிறு ஒளி (ஜீவா ஒளி) அறிய முற்படுவதே அதாவது நாம் யார் என்ற கேள்விக்கு பதில் அறிய முற்படுவதே ஞானம். இந்த ஞானத்திலும் நான்கு நிலைகள்.
1. ஞானத்தில் சரியை : ஒரு ஞான சற்குருவை பெற்று அவர் மூலம் திருவடி உபதேசம், திருவடி தீட்சை பெறுவது. நம் உயிர் நம் தலை நடுவில் இரு கண்களும் உள் சேரும் இடத்தில உள்ளது என்பதை அறிந்து அது துலங்கும் (வெளிப்படும்) இடமான கண்ணே என்பதை உபதேசத்தின் மூலம் அறிந்து கண்ணில் உணர்வு பெறுவதே ஞானத்தில் சரியை. ஞானத்தில் செய்யும் சாதனையை வள்ளல் பெருமான் "நினைந்து, நினைந்து " என்ற ஞான சரியை பாடலில் குறிப்பிடுகிறார்.
2. ஞானத்தில் கிரியை : சற்குருவினால் பெற்ற உயிர் உணர்வை பெருக்குவது. இந்த உணர்வில் நாம் ஒன்ற நாம் செய்யும் பயிற்சி. சும்மா இருபதற்கு நாம் செய்யும் பயிற்சி இது. இப்பயிற்சி தொடர தொடர நம் வினைகள் நம் உயிர் ஒளியால் சுட்டு எறிக்கபடும். வள்ளலார் நம்முடன் இருந்து தலைக்கு வரும் வினைகள் தலை பாகையோடு விலக செய்வார்.
3. ஞானத்தில் யோகம் : நம் உயர் உணர்வை பெருக்க பெருக்க நம் உயிர் ஒளி பெருகி நம் மனம் உயிர் உணர்வில் முழுமையாக ஒன்றும். இவ்வாறு ஒன்றுவதே ஞானத்தில் யோகம்.
4. ஞானத்தில் ஞானம் : நம் ஆன்ம சாதனை முந்தைய நிலைகளில் தொடர நம் வினைகள் நீங்கும். ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும். நம் ஆன்மாவே குருவாக அமையும். நம் ஆன்மாவே குருவாக அமைந்து நம்மை இறைவனிடம் அழைத்து செல்லும். அன்னை வாலை அமிர்தம் வழங்கி நம்மை ஆண்டவனிடம் கொண்டு செல்வாள். முடிந்த முடிபாக ஞானம் கிட்டும்.

ஆற்றலின் அதிர்வு

🌹 ஆற்றலின் அதிர்வு 🌹
🌴நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.
🌴இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
...
🌴நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.
🌴கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது. காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.
🌴மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது. வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.
🌴மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.
🌴அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு வகையான அதிர்வுகள்தான்.
🌴நாம் எல்லோரும் Frequency generatorதான். சுபக்கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும்போது உணர்வுகள் சுகமாகவும்.
🌴அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.
🌴இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்றுவிக்கிறது.
🌴வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.
🌴பின் ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.
🌴ஆக நம் உணர்வுகள்தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி,
🌴எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.
🌴நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்றபிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.
🌴அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.
🌴ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்துவிட்டோம் என்று நம்பி அடைந்தபிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.
🌴அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள். மனத்திரையில் காட்சிகள் வண்ணமாவது திண்ணம் ✋🏼

என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !

என் வேலத்தில் பசுமை உண்டு ! நல் விதை உண்டு ! விருட்சம் உண்டு ! நல் கனிகளும் உண்டு ! உணரடா !
மரங்கள் உயர்ந்தது !
என் நயனத்தில் கோடி நியர் பார்வை உண்டு ! இந்த பொன்னாட்சியின் புணிதன் பார்வை உனக்கும் உண்டு !
யுக வாழ்வில் விருட்சத்தின் சாயல் உணராமல் ஊமை கூட்டமாய் வாழ்கின்றாய் ! அரசத்தில் ஆண்மையை வைத்து ஆலில் ஆளுமையை வைத்தேன் ! விசித்தியின் சாயலில் விதை படைத்து வீதியை ஆக்கிரமித்து விடங்கனாய் நிற்கும் வின்வித்தை மறந்தாய். அத்தியில் உருக்கும் வைத்தேன். நீ ஆணந்தம் தொலைத்து அலைகின்றாய்.
பூக்காமல் காய் காய்க்கும் புணித மரங்கள் ஐந்தில் ஞானத் தெளிவை வைத்தான் என் நாயகன், என் தலைவன் , என் தந்தை, பிரபஞ்ச நாயகன் ! ஏன் மறந்தாய் நீ ?
வளர் கொம்பில் வான் மகன் நானிருக்க வையத்தில் உனை மறந்து அலைகின்றாய். யுகத்தில் பறவைகள், மரங்கள் உயர்ந்தது ! பூமியில் நிறைவை தருவது !
மரங்கள் இல்லையென்றால் ஒரு துளி காற்று உன்னை இயக்க யோசிக்கும். புணித வேதங்கள் பிரபஞ்சத்திலிருந்து கீழே மரங்கள் மீது பட்டே காற்றின் துணை கொண்டு யுகத்தில் பரவுகின்றது.
கடலில் அலை வருவதும் வேதங்களால் தான். ஆனால் அது கர்மத்தை அழிப்பதால் கடற்கரை செல்லாதே என்று கூறினேன். அதற்காக மீனவன் மட்டும் வாழ்கின்றான் என்று யோசிக்காதே ! உழவனும், மீனவனும் கடவுளின் அருட்பார்வையில் வாழ்பவர்கள்.
கும்பி மரத்தில் குறை இல்லா வாழ்வும், சோசத்தில் சுகமும் இருப்பதை மறந்தாய். மரத்தடியில் அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். இந்த அற்ப மனிதன் மலை ஏறி ஆணந்தம் தொலைக்கின்றான். ஆகமலத்தில் ஸ்வேதத்தை வைத்து அமலாக்கியில் புணிதமும், கோரங்கத்தில் குறை இல்லா வாழ்வும் வைத்தான் என் தந்தை பிரபஞ்ச நாயகன் ! உணரா அலைகின்றாய் ?
என் தந்தையின் உமிழ் நீரில் உதித்ததே ஆகமலம் என்பதை மறவாதே ! இதை அறிந்து உணர உன் ஆயுள் போதாது ! ஆகமலத்தின் அடியில் அமர்ந்து யோசி ! ஆளுமையும், ஞானத் தெளிவும் வரும் !
மனிதனுக்கும், மிருகத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். மனிதன் தன்னை உணர இரை தேடுவதோடு இறையையும் தேடுகின்றான். ஆதலால் மனிதன் உயர்ந்தவன் ! மிருகங்கள் இரையை மட்டும் தேடுகின்றன. ஆனால் இப்பொழுது, இந்த அற்ப மனிதன் எதை எதையோ தேடுகின்றான்.
நகழி மரத்தில் உன் குண்டலினி சக்தி உயிர்பிக்கும் சூட்சுமம் உண்டு ! பன்னீர் மரத்தின் பூக்களில் பாச மிகு உணர்ச்சி உண்டு ! கண்டு பிடி !
கடவுளிடம் வேண்டாதவன் தான் இங்கே பெரியவன் ! அவனைத் தான் சித்தன், ஞானி, மகான், நாயன்மார், ஆழ்வார் என்று வணங்குகின்றாய். அவர்கள் யாவரும் கடவுளிடம் வேண்டியதில்லை. தன்னை பற்றி நினைத்ததில்லை. அதனால் தான் அவர்களை நீ போற்றுகின்றாய். நீயும் கடவுளிடம் வேண்டாதே ! நீயும், ஞானியாய், மகானாய், சித்தனாய் ஆவாய்.
தலவிருட்சம் இல்லா கோயில் இல்லை. ஏன் விருட்சத்திற்கு முக்கியத்துவம் தந்தான் என்று உணர்ந்தாயோ நீ ?
கோயிலில் விருட்சமே உயர்ந்தது. விருட்சத்தை வணங்காமல் ஊமைச் சிலையை வணங்கி உண்மை புரியாமல் அலைகின்றாய். மகத்துவம் நிறைந்தது விருட்சம் !மாயா லோகத்தில் உன் மதி மயக்கத்தை போக்கும் வலிமை மரத்திற்கே உண்டு !
மா விருட்சத்தின் விதையில் உதயமானாய் நீ ! இலை அழுகா விருட்சத்தை ஏன் மறந்தாய் ?
புளியம் பிஞ்சுக்கும் உன் ஆண்மாவுக்கும் தொடர்பு இருப்பதை ஏன் மறந்தாய் ?
பத்ரியும், சுத்தியும், சுவியும் ஞானம் தரும் என்பதை ஏன் உணரவில்லை நீ ? மகிழத்தில் மகிழ்ச்சியும் மருதத்தில் உணர்ச்சியும் வைத்தேன் ! நீ உணராமல் இருப்பது ஏனோ ?
ஊமை சிலையை வணங்கி உண்மையை மறந்து போனாய். வைகறை பொழுதெல்லாம் மகிழத்தின் அடியில் அமர்ந்து மடிப் பிச்சை ஏந்து ! சுகமான குழந்தை ஜனிக்கும் ! சுரக்கு மரத்தின் அடியில் அமர்ந்து சுகமான குழந்தை ஜணிக்கும் சூட்சுமத்தையும் உணராமல் அலைகின்றாய். வாத மடக்கியும், வாம்பியும் உன் வாதம் போக்கும் சூட்சுமம் மறந்தாய் !
நீ மனிதனிடம் யாசிக்கின்றாய். மரத்திடம் யாசி ! உனக்கு ஞானமும் , நிம்மதியும் கிடைக்கும். நல்ல குழந்தை பிறக்கும்.
ஒன்பது நாள் பலா இலையில் உணவருந்து ! வன்னி மலர்களை பனை வெல்லம் கலந்து சாப்பிடு ! உன் கர்ப்பத் தடை விலகும். காலம் கணிந்து கண்மணி குழந்தை ஜணிக்கும் ! இந்த சூட்சுமம் எவனும் சொல்லிப் போனானோ ? துதி பாடியே போனான். நீயும் துதி பாடுகின்றாய்.
புன்னையில் உன் சரீரத் தோல் சுகமாக்கும் சூட்சுமம் உண்டு ! பூவரசு மரத்தின் பெண் காயில் பெருமை மிகு சுகம் ஒன்றும் இருக்க நீ உணராதது ஏனோ ? கர்மத்தால் வரும் தொழு நோயும், வெண் நோயும் குணமாகும் சூட்சுமம் நீ உணராதது ஏனோ ?
வன்னி மரத்தடியில் கொஞ்சம் பச்சரிசி கொண்டு போடு ! அதை எறும்புகள் சாப்பிட்டு உன் கர்மாவை சிதிலமடைய வைக்கும் !
வாழை வான் அமிர்தம் ! உயர்ந்த விருட்சம் ! கற்பகதரு ! கடவுளின் படைப்பில் உச்சமடா !
எத்தனையோ சூட்சுமம் விருட்சத்திலே ! விருட்சம் இல்லா வீடும், விருட்சம் இல்லா வீதியும் வீணாய் போகும். நோயும் துன்பமும் ஆளும்.
உணர் உண்மையை !
என் நாமம் சொல் ! எல்லாம் கற்பாய் ! அறிவாய் !
உன்னை யாசிக்கும் நிலையில் நான் வைக்கமாட்டேன். உயர்த்துவேன் !
ஆகமலத்தின் அரசாட்சி நான் !
நான் இநன்யா !