தியானத்தில் இருக்கும்
போது ஏன் மனம் சலிக்கின்றது ?
ஈயானது மிட்டாய் கடையில் வைக்கபட்டிருக்கும் பட்சணங்கள் மீது சில வேளைகளில் உட்காருகிறது ,ஆனால் அவ்வழியே ,மலத்தை கூடையில் எடுத்து கொண்டு ஒரு தோட்டி போனானாகில் அந்த ஈ உடனே பட்சணத்தை விட்டு விட்டு அமமல்த்தின் மேல் போய் உட்காருகிறது ,.,

தேனியோ தேனை கிரகிக்கும்
பொருட்டு மலர்ந்த புஷ்பங்களில் உட்காருமே தவிர அசுத்தமான பதார்த்தங்களை அணுகு வதில்லை
,உலக பற்றுள்ளவர்கள் முன்னே சொன்ன ஈக்கு சமானம் .,ஏதோ சில வேளைகளில் ஈஸ்வர பிரேமையாகிய இன்பத்தை சிறிது அனுபவித்தாலும் .,
பழைய வாசனையால் -அவர்கள்
சிற்றின்ப சுகமா்கிய மலக்குழியை தேடி போய் விழுகின்றனர் ,பரம அம்சர்களான மஹான் சதா
சர்வ காலமும் ஈஸ்வர பிரேமை யிலேயே ஆழ்ந்திருக்கின்றனர் .,ஈரமான நெருப்பு குச்சியை
எவ்வளவு பலமாக தேய்த்தாலும் தீ பற்றுவதில்லை ,புகைகிறது ,.,உலர்ந்த நெருப்பு குச்சியோ ,மெதுவாக தேய்த்த போதிலும் உடனே தீ பற்றி கொள்கிறது ,உண்மை பக்தனுடைய மனம் உலர்ந்த நெருப்பு குச்சிக்கு சமானம் .,
பகவத் நாமத்தை கேட்டவுடன்
அவன் மனத்திலுள்ள தீ மூண்டேளுகிறது ,காமத்தாலும் காசாசையாலும் நனைந்து கிடக்கும் லௌகிக
னுடைய மனமோ ,ஈர நெருப்பு குச்சியை போல ஒரு போதும் பற்றுவதில்லை .,அநேகந்தரம் அவனுக்கு ஈஸ்வர உபதேசம் செய்த போதும் ,ஈஸ்வர பிரேமை எனப்படும் நெருப்பு
அவனிடம் மூண்டளுவதில்லை .,ஆதலால் மனம் சலிக்கின்றது .
No comments:
Post a Comment