நண்பர் - ஐயா
எனக்கு உடலளவில்
சில பிரச்சனைகள்
இருக்கின்றது. இரயில்
பயணத்தில் அருகில்
பயணித்தவரிடம் இது
குறித்து பேசிக்
கொண்டிருந்த பொழுது,
அவர் நீங்கள்
பாஸ்டிங் சிகிச்சை
எடுத்துக் கொள்ளுங்கள்
எல்லாம் சரியாகி
விடும் என்றார்.
மேற்கொண்டு அவரிடம்
அது பற்றி
விசாரித்துத் தெரிந்து
கொள்வதற்குள் அவர்
இறங்கிப் போய்
விட்டார். பாஸ்டிங்
சிகிச்சை என்றால்
என்ன? யாரை
அணுகலாம்?
இராம் மனோகர்
- பாஸ்டிங் என்றால்
விரதம்தான். உபவாசம்
என்று சொல்வார்கள்.
உடலில் தேங்கிக்
கிடக்கும் கழிவுகளை
வெளியேற்றுவதற்கும், ஜீரணக்
கருவிகளுக்கு சற்று
ஓய்வு கொடுத்து
அவற்றைச் சீராக
இயங்கச் செய்யவும்
கடைபிடிக்கப்படும் முறையாகும்.
உலகெங்கிலுமுள்ள அனைத்து
மதத்தினரும் கடைபிடிக்கும்
வழிமுறைதான் பாஸ்டிங்
என்கிற உபவாசம்.
உடல், மனம்,
உயிர் இந்த
மூன்றுமே ஒன்றை
ஒன்று சார்ந்தே
இயங்குகின்றன. இதில்
நாம் உடலுக்கு
கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற
இரண்டிற்கும் தருவதில்லை.
அதிலும் உடலை
வளர்க்க நாம்
உட்கொள்ளும் உணவே
நமக்கு எமனாக
மாறி விடுகிறது.
உணவு விஷயத்தில்
நாம் காட்டும்
அலட்சியப் போக்கு
உடலை மட்டுமல்ல
மனதையும், உயிரையும்
சேர்த்தே கடுமையாக
பாதிக்கிறது. எனவே
நம் முன்னோர்கள்
ஆன்மீக வழிபாட்டின்
ஒரு பகுதியாக
உபவாசத்தை வடிவமைத்து
வைத்தார்கள்.
உடல் நோய்வாய்
பட்டு விட்டது
என்றால், அதற்குக்
காரணம், கழிவுகள்
தேங்கிக் கிடப்பதுதான்.
எனவே நோய்
வந்தவுடன் மருந்தைத்
தேடாமல், கழிவுகளை
அகற்றி விட்டால்
நோயிலிருந்து விடுபட்டு
ஆரோக்கயத்தைப் பெற
முடியும். பட்டினி
கிடப்பதால் கழிவுகள்
எப்படி வெளியேறும்
என்று கேட்கக்
கூடும். இது
ஒரே நாளில்
நிகழ்வது அல்ல.
வாரம் ஒரு
முறை உபவாசம்
இருந்து வரும்
பொழுது படிப்படியாக
இது நிகழும்.
விரதம் இருக்கும்
பொழுது மண்
தத்துவமாகிய உடலால்
ஆகாய சக்தி,
வெப்ப சக்தி,
காற்று சக்தி,
நீர் சக்தி
ஆகிய மற்ற
நான்கு பஞ்ச
பூத சக்திகளும்
அதிகமாக ஏற்றுக்
கொள்ளப்பட்டுவதால் கழிவுகள்
வெளியேறுவதோடு, மன
அமைதியும், உயிராற்றலும்
அதிகரிக்கின்றது. நம்
உடலுக்கு எந்த
பஞ்சபூதங்கள் உணவாக
அமைகின்றனவோ, அதே
பஞ்ச பூதங்களே
மருந்தாகவும் இருக்கின்றன.
உபவாசம் இருக்கும்
பொழுது இரைப்பையும்,
குடலும் காலியாகி
விடுகின்றது. அந்தக்
காலியிடமே ஆகாய
சக்தியாகும். அது
பிராணசக்திக்கு துணையாக
நின்று உடலைத்
தூய்மைப்படுத்தும் பணியைச்
செய்கிறது. இதன்
பயனாக உடல்
பருமன் குறைகிறது.
கை, கால்
மூட்டு வலிகள்,
வீக்கம் நிவர்த்தியாகிறது. செவித்
திறன் அதிகரிக்கிறது.
பார்வை பிரகாசிக்கிறது.
மூளைத் திறன்
அதிகரிக்கிறது. கபம்
சம்மந்தமான நோய்கள்
நீங்குகின்றன. இருத
நோய், இரத்தக்
குழாய் அடைப்புகள்
சரியாகின்றன. சர்க்கரை
நோய் ஓடிப்
போய் விடுகிறது.
கல்லீரல் நன்றாக
வேலை செய்கிறது.
முதுகுத் தண்டு
வலிமையடைகிறது. வயிறு
சம்மந்தமான அனைத்து
நோய்களும் விலகுகின்றன.
மலச்சிக்கல், தோல்
நோய், சிறுநீரகப்
பிரச்சனைகள் சரிசெய்யப்படுகின்றன.
தற்பொழுதைய சூழலில்
கழிவுகளை வெளியேற்ற
இயற்கை சிகிச்சை
நிலையங்கள் வந்து
விட்டன. அவர்கள்
உபவாசத்தோடு கூட
சில வகைக்
குளியல்கள் மற்றும்
காய்கறி, பழங்கள்,
பழச்சாறு, மூலிகை
போன்றவற்றை பயன்படுத்தி
விரைவில் பயனடைய
வழி செய்கிறார்கள்.
விலங்குகள், பறவைகள்
அவ்வளவு ஏன்
தாவரங்கள் கூட
உபவாச முறையை
கடைபிடிக்கின்றன என்று
கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment