Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, 29 September 2016

இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும்

இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும் படிகற்களாக 4 முக்கிய நிலைகளை கூறிப்பிடுகின்றனர் .அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகை படும்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றிய தெளிவுகளை மக்களுக்கு உணர்த்துவதே இப்பதிவின் நோக்கம்.
சரியை - கோயிலுக்கு சென்று விக்ரகத்தை வணங்குதல்.
கிரியை - கோயிலில் பார்த்த விக்ரகத்தை , பூஜை முறைகளை நம் வீட்டில் செய்தல்.
யோகம் - பிரணாயாமம் , வாசி போன்ற பயிற்சிகளில் இடுபடுதல். யோகம் என்பதற்குரிய சரியான அர்த்தம் ஒன்றுதல்.
ஞானம் - நான் யார் என்று தன்னை அறியும் முயற்சி. பரிபூரண அறிவே ஞானம்.
இந்த நான்கு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 16 நிலைகளாகிறது.
இந்த முதல் நிலை என்பது சரியை இந்த அர்த்தம் யாதெனின் அந்த அந்த நிலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கொண்டு அந்த நிலைகளை அறிவது. அதாவது ஒரு குருவினை கொண்டு தெரிந்து கொள்வது. குருவை நாடி சென்று அந்த படிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் இரண்டாவதாக எல்லா நிலைகளில் வரும் கிரியை என்பது நாம் செய்ய வேண்டியதை குறிக்கும். குரு மூலம் சரியையில் தெரிந்து கொண்டதை செய்வது. சீடன் செய்ய வேண்டிய கிரியைகள் குறிக்கும். இதே போல் மூன்றாவதாக எல்லா நிலைகளில் வரும் யோகம் குறிப்பது குருவின் மூலம் தான் கற்றதில் முழுதாக ஒன்றுவது. இவ்வாறு ஒருவன் அந்த படிநிலைகளில் குரு உபதேசத்தின் படி ஒன்றும் போது அந்த படி நிலைகளின் ஞானம் கிட்டுகிறது.
மேல் கூறியவற்றை கொண்டு கீழ் வரும் படி நிலைகளை பற்றி ஆழமாக பார்ப்போம்.
1. சரியையில் சரியை : கோவிலுக்கு சென்று வழிபாடும் முறைகளை பூசாரியின் (சரியையில் குரு) மூலம் அறிவது. உதரணத்திற்கு எந்த சந்தியில் முதலில் வழி பட வேண்டும், எத்தனை முறைகள் வலம் வர வேண்டும் போன்ற விதி முறைகளை அறிந்து கொள்வது. இதை தெரிவித்து பூஜை செய்யும் பூசாரியே சரியை நிலையில் குரு ஆவார்.
2. சரியையில் கிரியை : சரியையில் சரியை நிலையில் அறிந்து கொண்டதற்கு ஏற்ப கோவிலில் சென்று முறையாக வழிபாடு செய்தல். நம் செய்யும் செயலே கிரியை இங்கு.
3. சரியையில் யோகம் : கோயில் வழிபாட்டில் பரிபூரணமாக ஒன்றுவது.
4. சரியையில் ஞானம் : பரிபூரணமாக ஒன்றி கோயில் வழிபாடு செய்வதன் பலனாக நமக்கு கிட்டும் அறிவு. கோவில் வழிபாட்டின் நோக்கம் தெரிகிறது. இது முடிந்த பின் கிரியைக்கு செல்லும் புண்ணிய பலன் (தகுதி ) பெறுகிறான் சாதகன். இதில் ஒன்றி ஒருவன் பெரும் முக்தி - சரியையின் ஞானத்தின் பலன் - "சாலோக முக்தி".
---- அடுத்து கிரியையின் நிலைகளை பார்போம் ----
1. கிரியையில் சரியை : நம் வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளை , விக்ரகங்களை தகுந்த ஆசான் மூலம் அறிவது. இதை தெரிவிப்பவரே கிரியையில் குரு.
2. கிரியையில் கிரியை : விட்டில் ஸ்தாபித்த விக்ரகங்களை குருவின் மூலம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டதற்கு ஏற்ப நாம் செய்யும் பூஜை.
3. கிரியையில் யோகம் : நாம் செய்யும் பூஜையில் பரிபூரணமாக ஒன்றுவது.
4. கிரியையில் ஞானம் : நாம் செய்த பூஜையில் நாம் பெரும் பலன். கிரியையில் நாம் பெரும் அறிவு. நாம் செய்த பூஜையின் நோக்கம் அறிந்து கொள்வது. கிரியின் ஞானத்தின் முடிவு சாமீப முக்தி.
----அடுத்து யோகா நிலைகளை பார்போம்-----
1. யோகத்தின் சரியை : தகுந்த யோகா ஆசிரியரின் மூலம் யோகா பயிற்சிகளை அறிவது.
2. யோகத்தில் கிரியை : பயிற்சிகளை முறைப்படி ஒழுக்கதொடு செய்வது.
3. யோகத்தில் யோகம் : யோகத்தின் கிரியையின் முடிவு. நாம் செய்யும் பயிற்சிகளில் முழுதாக ஒன்றுவது.
4. யோகத்தில் ஞானம் : யோகத்தில் ஒன்ற நாம் பெறுவது சமாதி நிலை. யோகத்தில் முக்தி பெறுவது சாமீபம் என்பர்.
இவ்வாறு மூன்று முக்கிய படி நிலைகளும் ஞானத்திர்கே ஒருவனை கொண்டு வரும். ஞானமே இறைவனை அடைய, இறை நிலை எய்த வழி காட்டும். ஞானமே முடிந்த முடிபான "சாயுச்சிய முக்தி" யை ஒருவனுக்கு தரவல்லது. வள்ளலார், ஆண்டாள், பத்ரகிரியார் போன்றோர் பெற்ற ஒளி நிலை. ஊன உடலே ஒளி உடலாக மாறும் தன்மை. ஒவ்வொரு சாதகனும் சரியை,கிரியை,யோகம் முடித்து ஞான நிலைக்கு வர வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் காலம் போதாது என்று ஞான நிலைக்கு நேரடியாக வள்ளலார் நம்மை அலைக்கிறார். ஞான நிலை ஞான சாதனை என்றார் என்ன? இறைவன் நம் உடலில் எத்தன்மையில் உள்ளாரோ அதன்மையிலே ஒன்றுவது. இறைவன் எத்தன்மையில் உள்ளான்?
இறைவன் பேரோளியாக உள்ளான் என்று எல்லா மதங்களும் , ஞானிகளும் ஒப்பு கொள்கின்றனர். நாம் இறைவனின் பிள்ளைகள் எனின் நாமும் (நம் உயிரும்) ஒளி அம்சம் அல்லவா. நம் உயிர் அந்த பேரொளியின் சிறு அம்சம் அல்லவா? இந்த சிறு ஒளியை அறிந்தால் அந்த பேரொளியை அறிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த சிறு ஒளி (ஜீவா ஒளி) அறிய முற்படுவதே அதாவது நாம் யார் என்ற கேள்விக்கு பதில் அறிய முற்படுவதே ஞானம். இந்த ஞானத்திலும் நான்கு நிலைகள்.
1. ஞானத்தில் சரியை : ஒரு ஞான சற்குருவை பெற்று அவர் மூலம் திருவடி உபதேசம், திருவடி தீட்சை பெறுவது. நம் உயிர் நம் தலை நடுவில் இரு கண்களும் உள் சேரும் இடத்தில உள்ளது என்பதை அறிந்து அது துலங்கும் (வெளிப்படும்) இடமான கண்ணே என்பதை உபதேசத்தின் மூலம் அறிந்து கண்ணில் உணர்வு பெறுவதே ஞானத்தில் சரியை. ஞானத்தில் செய்யும் சாதனையை வள்ளல் பெருமான் "நினைந்து, நினைந்து " என்ற ஞான சரியை பாடலில் குறிப்பிடுகிறார்.
2. ஞானத்தில் கிரியை : சற்குருவினால் பெற்ற உயிர் உணர்வை பெருக்குவது. இந்த உணர்வில் நாம் ஒன்ற நாம் செய்யும் பயிற்சி. சும்மா இருபதற்கு நாம் செய்யும் பயிற்சி இது. இப்பயிற்சி தொடர தொடர நம் வினைகள் நம் உயிர் ஒளியால் சுட்டு எறிக்கபடும். வள்ளலார் நம்முடன் இருந்து தலைக்கு வரும் வினைகள் தலை பாகையோடு விலக செய்வார்.
3. ஞானத்தில் யோகம் : நம் உயர் உணர்வை பெருக்க பெருக்க நம் உயிர் ஒளி பெருகி நம் மனம் உயிர் உணர்வில் முழுமையாக ஒன்றும். இவ்வாறு ஒன்றுவதே ஞானத்தில் யோகம்.
4. ஞானத்தில் ஞானம் : நம் ஆன்ம சாதனை முந்தைய நிலைகளில் தொடர நம் வினைகள் நீங்கும். ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும். நம் ஆன்மாவே குருவாக அமையும். நம் ஆன்மாவே குருவாக அமைந்து நம்மை இறைவனிடம் அழைத்து செல்லும். அன்னை வாலை அமிர்தம் வழங்கி நம்மை ஆண்டவனிடம் கொண்டு செல்வாள். முடிந்த முடிபாக ஞானம் கிட்டும்.

No comments:

Post a Comment