Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 20 September 2016

*ஆத்ம விலாசம்*

*ஆத்ம விலாசம்*
ஆத்மாவானது பரமாத்மா நிலையை அடைவதற்கு எந்த விதமான முயற்சியும் செய்யாமலிருந்தாலே போதுமானது . ஆனால் மனமானது ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனே இருப்பதால் முயற்சி செய்து அதை அடைய முயற்சி எடுக்கிறது. எப்போது மனம் ஏதும் செய்யாமல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ. அப்போதே நமக்கு ஆத்ம ஞானம் நிச்சயிக்கபட்டு விட்டது என்று அர்த்தம். ஆத்மாவுக்கு விலாசம் இல்லை ஏனெனில் அதற்கு வீடென்பது இல்லை . எப்போதும் ஆத்மா நாம் செயகின்ற காரியங்களை வேடிக்கை பார்க்குமே ஒழிய அதன் விருப்பு வெறுப்புகளுக்கு என்றுமே அது பொறுப்பு ஏற்காது .
ஆத்மா அரூபமாக இருந்து கொண்டு உருவமாக நம்மை வழி நடத்துகிறது.
ஆத்ம தரிசனம் அடையவே நமது பிறப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆத்ம தரிசனமென்பது. நம்மையே நாம் தரிசிப்பதல்லாமல் வேறொன்றுமில்லை.....

;;;;;;;;;;;;;;;;;
மூன்று வகை தவம்
நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் ஒரு தவமாகச் செய்ய முடியும். ஏனெனில், சித்தம் சிவமானால் செய்யும் செயலனைத்தும் தவமாகவே இருக்கும்.
ஆன்மாவில் வாழும் வாழ்க்கை, இறைவனுடன் வாழும் வாழ்க்கை, மனமும் அறிவும் பக்குவப்பட்ட நிலை, இடைவிடாத ஆன்மிக முயற்சி என்று இப்படி, ‘தவம்’ என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் உண்டு.
இறைவனிடம் பூரணமாகச் சரண் புகுவதே பெருந்தவம்.
மனத்தின் அழுக்குகளைப் போக்கி, ஞானத்தை ஒளிரச் செய்யும் செயல்கள் அனைத்தும் தவமாகும்.
மனம் தூய்மை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி எதுவாக இருந்தாலும் - அது தவமாகும்.
"தவத்தினால் விரும்பிய பயன்களை விரும்பியபடியே அடைய முடியும். எனவே தவத்தைச் செய்வதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ளுங்கள்" என்பதை திருவள்ளுவர்,
"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்." (குறள் - 265)
என்று கூறுகிறார்."
தவம் மூன்று வகைப்படும். 1. வாக்கினால் செய்யும் தவம், 2. மனத்தால் செய்யும் தவம், 3. செயலால் செய்யும் தவம்" என்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுகிறார்.
இவற்றில், ‘வாக்கினால் செய்யும் தவம்’ என்று, எவற்றை பகவத்கீதை கூறுகிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
"1. கடுமை இல்லாத பேச்சு பேச வேண்டும் (அதாவது, நாம் பிறர் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது), 2. நாம் பேசும் பேச்சில் உண்மை இருக்க வேண்டும், 3. நாம் பேசும் பேச்சு இனிமையும் நன்மையும் அளிக்கக்கூடிய பேச்சாக இருக்க வேண்டும், 4. வேத சாஸ்திரங்கள் எனப்படும் அருள் நூல்களைப் படிக்கவும் படிக்கச் செய்யவும் வேண்டும், (இதில் இறைவன் நாம சங்கீர்த்தனம் - இறைவன் நாமஜபம் செய்தல் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்)" இவற்றை ‘வாக்கினால் செய்யும் தவம்’ என்று பகவத்கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பகவத்கீதையில் மனத்தால் செய்யும் தவங்கள் பற்றியும் இவ்விதம் கூறுகிறார்:
"1. அமைதியில் இருக்கும் தெளிந்த மனம், 2. அனைவருக்கும் அருள் புரியும் அன்புள்ளம், 3.பகவானை இடைவிடாமல் சிந்திப்பதால் ஏற்படும் மௌனம், 4. அடங்கிய மனம், 5. நல்ல தூய்மையான நோக்கம் ஆகியவை எல்லாம் மனத்தால் செய்யக்கூடிய தவம் என்று சொல்லப்படுகிறது."
ஸ்ரீ கிருஷ்ணன் ‘செயலால் செய்யும் தவம்’ பற்றிச் சொல்லும் போது,
"1. தெய்வங்களைப் பூஜித்தல், 2. சான்றோரைப் பூஜித்தல், 3. குரு நிலையில் இருப்பவர்களைப் பூஜித்தல், 4. ஞானிகளைப் பூஜித்தல், 5. தூய்மை, 6. நேர்மை 7. பிரம்மசரியம் எனப்படும் புலனடக்கம், 8. அகிம்சை ஆகியவை,
உடலால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகிறது" என்று கூறுகிறார்.
இருட்டை விரட்டுவதற்கு வெளிச்சம் உதவுகிறது. அதுபோல், இனிய பேச்சு ஒருவனிடம் இருக்கும் பாவத்தை விலக்கி, அறம் பெருகச் செய்கிறது.
நெறி கடந்து தீயவர் பேசும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்வதும், ஒரு பெருந் தவத்துடன் ஒப்பிடக்கூடிய செயலாகும்.
நன்றாக வேயப்பட்ட கூரைக்குள் மழைநீர் புகாது. அதுபோல், தவத்தாலும் புலனடக்கத்தாலும், பண்பட்டுவிட்ட உள்ளத்தில் தீமைகள் நுழையாது.
‘தொண்டு புரிவதால் மனிதவாழ்வு நிறைவு பெறுகிறது’ என்று ஒரு கருத்து உண்டு. மற்றொரு விதத்தில் பார்த்தால், தொண்டு புரிவதுகூட வாழ்க்கையின் முதல் அத்தியாயமே தவிர, முடிவான இலட்சியமல்ல. ஏனென்றால், இந்திய ஆன்மிகத்தின் முடிவான லட்சியம் ஜீவன்முக்தி நிலையைப் பெறுவதே ஆகும்.
எனவே ஞானமும் மோனமும் பூண்டு, தனித்திருந்து தவம் செய்பவர்களே மிகப் பெரும் பாக்கியசாலிகள்.
நமது சொல், செயல், சிந்தனைகளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி, பெம்மான் அவனுக்கே பித்தனாகும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்க வேண்டும்.
பணத்தையோ, அதிகாரத்தையோ இறைவன் உயர்வாக மதிக்கவில்லை.
வசிஷ்ட மகரிஷி இவ்விதம் கூறியிருக்கிறார்:
"இந்த உலகில் பொருளைச் சேர்ப்பதைவிட, தவத்தைச் சேர்ப்பதுதான் சிறந்தது, உயர்ந்தது மிகமிக மேலானது, உத்தமமானது, தலையாயது."
தவம் செய்வதற்கு முதலில் தேவைப்படுவது, தவம் செய்வதற்கேற்ற நல்ல மனம்தான். அத்தகைய ‘மனம்’ இருந்தால் மார்க்கமும் உண்டு.
மண்வளம் பயிரின் வளர்ச்சிக்குக் காரணமாவது போல், மனவளம் ஆன்மிக வளர்ச்சிக்குக் காரணமாகிறது.
பலர் விஷயத்தில் (முன்வினை காரணமாக) தவ முயற்சி போதிய அளவுக்கு இருப்பதில்லை.
தவ வாழ்க்கை, இறையனுபூதி பெறுவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தவ வாழ்க்கை என்பது இல்லாவிட்டால், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பும்கூட நமக்கு இல்லாமல் போய்விடும்.
"தவத்தின் மூலம் ஆன்மிகவலிமை பெற்றவர்களுக்கு, யமனை வெற்றி கொள்வதும் கைகூடும்" என்பதை திருவள்ளுவர்,
"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" (குறள் - 269)
என்று குறிப்பிடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, பண்ணிய தவம் பலிக்கவும் பரமனருள் வேண்டும்.


No comments:

Post a Comment