மௌனத்தை விட வலிமையான ஆயுதம் எதுவும் இல்லை! மொளனத்துக்குப் பல படித்தரங்கள் உண்டு. ஒயாது மிகைபடப் பொருளற்ற பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருப்பவனுக்குப் பொருள் உள்ள பேச்சுக்களை மட்டும் பேசுவது மௌனமாகும்.பொருள் உள்ள பேச்சுக்களை மிகைபடப் பேசுபவனுக்கு அவைகளை அளவுபடப் பேசுதல் மௌனமாகும். பேச வேண்டிய நல்ல விஷயத்தையும் பிறர் கேட்டாலொழியப் பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த மௌனமாகும். பிறர் பேசும்படி தூண்டினாலும் அப்பேச்சு பிறருக்கோ தனக்கோ அதிகம் பயன்படாது என்று தெரிந்தால் பேசாது அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த மளனமாகும்.இப்படி மௌனத்திலேயே போகப் போக மனம் அடங்கியிருப்பதற்கு அந்த மௌன நிலையே புறக்குறியாகிறது. ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் மனதுக்குள்ளே விதவிதமான எண்ணங்கள் உதித்துக் கொண்டிருக்கலாம். அது கிட்டத்தட்ட பேசுதற்குக் சமானமாகிறது. அத்தகைய எண்ணங்களும் உதிக்கலாகாது.கடவுள் சிந்தனை வலுத்த வந்தால் வேறு எண்ணங்கள் அடிபட்டுப்போகும். கடவுளுடைய ஒரே ஓர் எண்ணம் நிலைத்து நின்றுவிட்டால் அது பண்பட்ட நிலை. அந்தப்
பண்பட்ட நிலையில் மனது நசித்துவிட்டால் மௌனம் அங்குப் பூர்த்தியாகிறது. எஞ்சியிருப்பது பிரம்ம சொரூபம்.நான் யார் தெரியுமா ? சிலர் பேச்சுவாக்கில் நான் யார் தெரியுமா?என்பாரகள்.ஆனால் அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாது.அந்த" நான்" என்பது யார?அதுதான் ஒ்வொருவருக்குள்ளும் அவகர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியம்.
.அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளத்தான்
நமக்குள் நாமே சுய பரிசோதனை செய்து
கொள்ள வேண்டியதாகிறது. அதற்கு நமது
மனதிற்கு பயிற்சியளிக்க வேணடும்.அதை
தியானம் அல்லது ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை யென்றும் சொல்லலாம்.ஒரு அமைதியான சூழலில் நமதுஐம்புலன்களுக்கும் .முழுமையான
ஓய்வளித்து நமது மனதிற்குமட்டும் பரிபூரண மாக அனுமதியளித்து நமக்குள் அந்த
இரகசியத்தைத் தேடவேண்டும்.
ஆழ்ந்த சிந்தனைக்குள் நமது மனம் நுழைந்து
தேடும் போது எல்லாமே சூன்யமாகத்
தோன்றும். .அப்போது இந்த உலகமே
தொலைந்துவிட்டது போல் தோன்றும்.நம்மை
நாமே இழநுவிட்டது போன்றும் தோன்றும்
.காற்றில் மிதக்கும் மிக இலகுவான ஏதோ
ஒன்றிற்குள் நாம் இருந்தும் இல்லாத
நிலையில் மனதுமட்டும் அந்த இரகசியத்தைக்
கண்டறிந்து கேட்கும். நீ என்பது யார்?
அப்போது நமக்கு விடை சொல்லத்தெரியாது.
ஏனென்றால் நானென்ற ஒன்று அப்போது
இல்லை.இதுதான் இரகசியம்.இது தான்
உண்மை நான் என்பது ஒரு சூன்யம் அல்லது
அகங்காரம்.அக அங்காரம் என்றாலே
உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை என்பதுதான்
சரியான பொருள்.இந்த நிலை எப்போது ஏற்படுகிறதென்றால்எப்போது ஆழ்ந்த சிந்தனையில நம்மை நாமே தொலைத்து விடுகிறோமோ அப்போதுதான்நமக்குள் ஏதொ ஒன்று பிரகாசிக்கிறது.அதுதான் தெய்வீக ஞானொளி.அந்த ஞானம்தான் கடவுள். அனைத்து சுயபோகங்களையும் கடந்து உள்ளிருக்கும் அந்த ஒன்றே ஒன்றுதான் தெய்வீகம்.அதாவது எப்போது நீயே இறைவன் என்ற உண்மையை உணர்கிறாயோ அப்போதே நாம் பெற்றிருக்கும் இந்த உடலானது பொய்யா னதுதான் என்பது புரிந்துவிடுகிறது.நமக்கு ள்ளிருக்கும் தெய்வீகம் எனும் ஆன்மாவிற்கு பெயர் என்பது கிடையாது.உயிரெனும் ஆன்மா நமது உடலில் இருக்கும் வரைதான் நமது உடலுக்குத்தான இந்த உலகம் பெயர் சொல்லி
அழைக்கிறது.உயிரெனும் ஆன்மா உடலை
விட்டு ஓடி விட்டால் பெயரழிந்து பிணம் என்ற
பொதுவான பெயர்தான் குப்பையாகிப்போன
உடலுக்கு வழங்கப்படுகிறது..அப்பெயரும்
அப்பிணம் எரியூட்டப்படும்வரைதான்.அதற்குப
ின் அது சாம்பல்தான்.இந்த உண்மை
எல்லோருக்கும் தெரியத்தான் செய்கிறது.
.ஆனாலும் இந்த உலகத்தின் சாபக்கேடு
யாரையும் விட்டு வைப்பதில்லையே.பாவம் !
உலகின் மாயைநிலையிலிருந்து தப்புவ தென்பது கடினமாகிறது. அதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பொறுமை
இழந்துவிடுகிறோம் .பசியெனும் கொடுமையும் பகட்டு எனும்ஆசையும் இவ்வுலக மக்களை மெய்மையை உணரவிடாது கட்டிப்போட்டி ருக்கிறது.ஒரு பெரிய அறிஞர். அவருக்கு அட்டாங்க யோகத்தில் பல சந்தேகங்களை
தீர்த்துக்கொள்வதில் ஆசை. ஒரு குருவைத் தேடி வந்தார்.வணக்கம் போட்டார். விஷயத்தைச் சொன்னார்.அவர் பேசுகிறவிதத்தை ஊன்றிக் கவனித்த குருநாதர் சொன்னார்.’இதோ பாரப்பா, உன் மனசு ஒரு நிலையில் இல்லை.
நீ ரொம்பக் குழம்பியிருக்கிறாய்.இப்போது நான் உனக்கு அட்டாங்க யோகம் சொல்லிக் கொடுத்தால் பிரயோஜனம் இருக்காது.
அநாவசியமாக நம் இருவரின் நேரமும் வீணாகும்.'இதைக் கேட்ட அறிஞரின் முகம் சுருங்கிவிட்டது.’குருவே, நீங்களே இப்படிச் சொன்னால் நான் எங்கே போவேன்...???’ என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.
‘எப்படியாவது நீங்கதான் எனக்கு உதவி செய்யணும். என் மனசில இருக்கற சந்தேகங்களைத் தீர்த்துவைக்கணும்.’
‘சரி. உன்னை நான் சிஷ்யனா ஏத்துக்கறேன். ஆனா ஒரு நிபந்தனை.’‘சொல்லுங்க குருவே....!!!’
‘இங்கே நீ ஆறு மாசம் மௌன விரதம் இருக்கணும்.’’மௌன விரதமா....???’ வந்தவர் அதிர்ந்தார்.’அப்புறம் எப்படி நான் என்னோட சந்தேகங்களைக் கேக்கறது....???’
’அதையெல்லாம் மனசுல குறிச்சுவெச்சுக
்கோ. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்வேன். ஆனா இப்போ இல்லை. 6 மாசம் கழிச்சுதான்.’
அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
ஆசிரமத்தில் சேர்ந்தார். மௌன விரதத்தைத் தொடங்கினார்.அடுத்த பல மாதங்கள் அவருடைய நேரம்முழுவதும் தியானம், பிரார்த்தனை, வாசிப்பு, குருவின் சொற்பொழிவுகளைக் கேட்பது என ஓடியது.
மெல்ல அவரது மனம் தெளிந்தது. முன்பு குழப்பியடித்த விஷயங்கள் இப்போது நிதானமாக யோசித்தபோது புரிந்தன.
ஆறு மாதங்கள் முடிந்தன. குரு அவரை அழைத்தார்.’நீ மௌன விரதம் இருந்தது போதும். இப்போது உன் கேள்விகளைக் கேட்கலாம்.’அறிஞர் அமைதியான குரலில் சொன்னார்.......’கேட்பதற்கு ஒன்றும் இல்லை குருவே'.....!!!. இம்மயக்கத்திலிருந்து இவ்வுலகமக்களைக்காக்கப் பகவானே நீதான் வந்தாக வேண்டும்.

No comments:
Post a Comment