உன் உறுவிதி உற்று நோக்கி நீ நலம் வாழ நல் அறுவிதி தருவேன். மன்னன் ஆண்டான், மாமன்னன் ஆண்டான். மகேசன் ஆண்டான் என்று சொல்கின்றாய் ! பூமியை ஆண்டவனெல்லாம் மாண்டுவிட்டான். நான் உன்னை ஆள்பவன் வந்தேனடா !
ஆளுமை
ஆளும் வல்லமை எனக்குள் !
உன்னை ஆள வந்தேன், ஆண்மத்தின் சூட்சுமமாய் ! பூமியை ஆண்டவன் எல்லாம் மாண்டுவிட்டான். உன்னை எப்போதும் ஆள்பவன் வந்தேனடா !
உன்னை எப்போதும் ஆள்பவன் நான் ! நீ புரிந்து கொள் !
நான் பிறப்பு, இறப்பற்றவன். எனக்கு என்றும் மரணமில்லை. யார் பூமியை ஆண்டாலும் உனக்கு மேல் ஒருவன் இருப்பதை மறந்துவிடாதே ! உன்னை ரணப்படுத்தும் உயிர் வைத்தான். மறந்து அலைகின்றாயே ?
உன்னை நீ ஆளப்பார் ! உலகம் உன்னை ஆள்வதற்கு ஆசைப்படும். பிடி சாம்பலாக போவதை மறந்து மண்னையும், பெண்ணை ஆள நினைக்காதே !
எண்ணற்ற உயிர்களை படைத்தான் என் தந்தை ! படைப்பில் நீ அபூர்வமானவன் ! உன்னை பிடிக்கும் என்பதால் எல்லாம் பூமியில் உனக்காக படைத்தான். நீ உணர்வதற்காக படைத்தேன் ! ஆனால் எல்லாவற்றையும் ஆண்டு அழித்து ஆணவம் கொள்கின்றாய். மண்ணை ஆள வேண்டும், இல்லை பெண்ணை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். ஆனால் மண் உன்னை திண்பதற்கு ஆசைப்படுக்கின்றது. ஆனால் நான் உன்னை உணர வைத்து நீ துன்பமில்லாமல் நிம்மதியாக இருக்க ஆசைப்படுகிறேன் !
மிருகங்கங்கள் அனைத்தும் பசித்தால் உணவு தேடுகிறது. நீ தான் பசித்தவனுக்கு கொடுக்காமல் பதுக்கி வைக்க ஆசைப்படுகிறாய். உழவன் உனக்கு நல் தானியம் தர உழைக்கின்றான். அவன் விஷத்தை விதைக்கவில்லை. பூமியை ஆள நினைக்கவில்லை. நீ ஏன் அடுத்தவர்களை ஆள நினைத்து மனதில் விஷத்தை விதைக்கின்றாய் ? உழவனே பூமியை ஆள்பவன் ! பூமிக்கு ராஜா ! பூமி தாயும் பூரிப்பாய் அவனை நேசிக்கின்றாள் ! உனக்கும் பறவைகளுக்கு தானியம் விளைவித்து அவன் பட்டினியாய் இருக்கிறான். அவனை நேசி ! நீ பூமியை ஆள்வாய் ! உனக்கு பசியே இல்லை. பசி எடுப்பதற்காக மாத்திரை போடுகிறாய். அவன் பசியோடு வேலை செய்கிறான்.
கடலை ஆள்பவன் மீனவன் ! ஆனால் தன் கடல் என்று சொந்தம் கொண்டாடியதில்லை. தானியம் தரும் உழவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. ஆனால் யார் பாவம் செய்தாலும் தண்டனை உண்டு !
பெண் வெற்றிலையில் காம்பு நீக்கி , ஒன்பது மிளகு, ஒரு ஏலக்காய், கெருடகுடி வேர் தூள் செய்து , மழை நீரை வெண்மையான துணியில் சேகரித்து சாப்பிடு. உன் வயிற்றில் உள்ள விஷம் போகும்.
ஆற்று நீர் பக்கத்தில் ஊற்று வரும். அந்த ஊற்று நீரில் கடுக்காயை இரண்டு நாள் ஊற வைத்து பின் வெயிலில் காய வைத்து பொடி செய்து கொம்பு தேன் கலந்து சாப்பிடு ! இதை இரவில் உறங்க செல்லும் முன் சாப்பிடு ! உடல் உபாதைகள் குறையும்.
பதநீரில் கற்றாழையை ஊற வைத்து அதில் ஆமணக்கு விதையை தூள் செய்து அதில் போட்டு வெறும் வயிற்றில் சாப்பிடு. உன் சரீரம் ஆணந்த கூச்சலிடும் ! சோசத்தின் புணித நீர் உன்னை ஆளுமடா !
ஆள்கிறேன் என்று சொல்கின்றாய். உன்னை நோய் தான் ஆள்கிறது. உணரடா !
நான் தர்மாக்களுக்கு ஒளியாக , உதவியாக இருப்பேன். கர்மாக்களுக்கு இருளாக இருப்பேன். என் பிரபஞ்ச நாயகன் என் தந்தை சொல்வார்கள். பாம்பு, தேள், எறும்பு கடித்தால் விடுவாயோ ? அதே போல் நீயும் பிறரை துன்பப்படுத்தினால் விடுவேனோ ? என்று சொல்வார்கள்.
நானும் உனை நீ உண்ணும் வரை விடப்போவதில்லை ! என் தந்தையின் சொல் மேற்கொள்வேன். இனியது எது என்று உணர்ந்தும் தவறு செய்கின்றாய்.
மேலே உன் உயிர் வதைபடுவதை நான் பார்த்தவன். ஐயகோ, அந்த தண்டனையை சொல்லி மாளாது ! உணரடா ! இப்போது பூமியில் இருக்கும் போதே உனக்கு தண்டனை கிடைக்கின்றது.
மடியில் தர்மத்தை சுமப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நீ பாவத்தையும், நோயையும், மாத்திரைகளையும் தூக்கி சுமக்கின்றாய் ! பிறக்கும் குழந்தைக்கும் நோய் வருகிறது ! உணர் !
நீ மரங்களையும் அழிக்கின்றாய் ! மனிதனையும் அழிக்கின்றாய். யாரையும் புண்படுத்தாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள். பூமியில் மனிதன் நினைத்தால் வளமையாக வாழலாம். படைத்தவன் எல்லா வளங்களையும் பூமியில் உனக்காக படைத்தான். வறுமை, நோய், நீர் தட்டுப்பாடு எல்லாம் மனிதன் செய்வது தான் ! நீ கடவுளை குற்றம் சொல்லாதே !
உன்னை ஆள்வதற்கு அதிகாரம் கொடுத்தேன். நீ எல்லோரையும் அடிமைபடுத்தி ஆளப்பார்க்கின்றாய் ! உன் அடிமைத்தனத்தை கைவிட்டு அன்பை தூவு. அதை முதலில் உன் வீட்டில் தொடங்கு ! வீதி சரியாகிவிடும் !
கடல் நீரின் ஆழம் தெரியவில்லை. பெண்ணின் ஆழம் தெரியவில்லை. மண்ணின் ஆழம் தெரியவில்லை. நீ விண்ணின் ஆழம் பார்க்க நினைக்கின்றாய். வேடிக்கை வாழ்க்கையடா !
தூக்கனாங் குருவியின் விநோதம் உனக்கு தெரியவில்லை. மயிலிறகின் மகத்துவம் புரியவில்லை. இந்த இரண்டையும் வைத்து எல்லா ஆழத்தையும் கண்டுபிடிக்கலாம். எல்லாவற்றையும் ஆளலாம். அட ஆளத்தெரியாதவனே, நீ பெரும் பணத்தையும், பெரும் நிலத்தையும் ஆள நினைக்கின்றாய், நிலையில்லா வாழ்வை வைத்து கொண்டு !
உன் திகைப்பு துன்பம் தான் ! உணர் !
அன்பினால் எல்லாரையும் ஆளப்பார் ! உன்னை ஆள்பவன் எப்போதும் உனை ஆசிர்வதிப்பேன், உள்ளன்போடு !
அன்பின் உச்சம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment