Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 12 July 2016

நான் உன் உயிர் ! என்னை நினை ! உன் உயிர் உற்சாகம் அடையும் ! உயிரில்லா சிலையை உயிர் உள்ளவன் வணங்கி என்ன பலன் கண்டான் ?

நான் உன் உயிர் ! என்னை நினை ! உன் உயிர் உற்சாகம் அடையும் ! உயிரில்லா சிலையை உயிர் உள்ளவன் வணங்கி என்ன பலன் கண்டான் ?
சிலை ஏன் வந்தது ?
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் காற்று, நீர், ஆகாயம், பூமியை வணங்கி புனிதனாக வாழ்ந்தான் ! இயற்கையை நேசித்தவன் இன்பமோடு வாழ்ந்தான் ! வீட்டுக்கு கதவு இல்லாமல், பூட்டு இல்லாமல் வாழ்ந்தான் ! தான் பூமிக்கு வந்த நோக்கத்தை அறிந்து வாழ்ந்தான் ! லோகத்தில் நடப்பவற்றை பூமியில் இருந்தே அறிந்தான். தன் மரணத்தை கணித்து வாழ்ந்தான் !
ஐயாயிரம் ஆண்டுகளாக தான் அசுர சூழ்ச்சிகளால் நாம் அடிமைபடுத்தப்பட்டோம் ! சூது, வஞ்சனை, பொறாமை, காமம், மோகம் முதலிய அனைத்து கீழ்த்தரமான எண்ணங்களுடன் மனிதன் வாழ ஆரம்பித்தான் ! இயற்கையை வணங்கியவன் செயற்கையாக உருவம் வைத்து வணங்க யோசித்தான்.
அதற்கு அசுரன், அரக்கன், தடாயவன் முதலிய தீயவர்கள் சித்தர்களை நாடினார்கள். இயற்கையை நேசித்த மனிதன் செயற்கையை வணங்கினால் வரும் துன்பங்களைப் பற்றி சித்தர்களுக்கு தெரியும். மனிதன் கேட்டதனால் அதற்கு ஒரு உபாயம் தேட ஆரம்பித்தார்கள் சித்தர்கள் ! முதலில் மரத்தை ஆராய்ந்தார்கள் ! மரத்தை வெட்டியவுடன் அதில் உயிர்த்துவம் இல்லை என்பதை புரிந்தார்கள். பின் மலைகளில் உயிர்த்துவம் இருப்பதை அறிந்தார்கள். மலைகள் முழு வடிவமாக இருக்கும் போது உயிர் இருக்கும் என்பதையும், அதில் உள்ள பாறையை வெட்டி எடுத்தால் உயிர் இருக்காது என்பதையும் ஆராய்ச்சியில் உணர்ந்தனர்.
பின் ஞான திருஷ்டியால் ஆராயும் பொழுது அஞ்சனா என்னும் கல்லில் மட்டும் உயித்துவம் இருப்பதை அறிந்தனர் ! அதில் தாமிரமும், இரும்பும் இருப்பதை உணர்ந்தனர். தாமிரம் ஒரு மின் கடத்தி. ஆதியில் மண் சட்டியில் சமைத்தான். பின் தாமிரத்தில் வைத்து சாப்பிட்டான். தாமிரத்தில் நீர் அருந்தினான். எல்லா உயிர்களும் சூரியனை வைத்து தான். அந்த சூரியனுக்கும் தாமிரத்திர்கும் சம்மந்தம் இருப்பதை உணர்ந்தான் !
பின் அஞ்சனா என்ற கல்லில் சிலை வடித்தான். கோயில் சிலையில் சூரிய ஒளி படும்படி அமைத்தான். கோபுரத்தில் தாமிர கலசம் வைத்தான். எல்லா கோயிலையும் பூதங்களை வைத்து கட்டினான். மனிதன் அங்கே வசியமானான். சிலைக்கு முன்னும், அடியிலும் ஶ்ரீசக்கரம் என்று சொல்லி செப்பு தகடை பதித்தான். ஏன் என்று யோசி ! இது தான் சிலை வந்த காரணம் ! மனிதன் செயற்கையாக கோயில் கட்டி அதில் சிலை வைத்து துணி உடுத்தி பால், நெய்யை விரயமாக்கினான்.
என் அன்பு தந்தை யாகவா சொல்வார்கள்,
கல்லை பிழையாக்கி சிலை செய்தான் சிற்பி ! சிற்பனுக்கு உதவாத கற்சிலை உனக்கு எப்படி உதவியது ? அடே பாவி, உன் மெய்யை பிழையாக்கி சிலை ஆக்கிவிடாதே ! பாவத்தை செய்கின்ற பூஜாரிக்கு தண்டனை கொடுப்பது நான் என்றால் அவன் பூஜிக்கும் சிலை அவனுக்கு என்ன செய்யும்? வெற்றுச் சிலை எதைத் தான் செய்யும் ? உணர்ந்து பார் !
நீ செய்யும் கோயில் வழிபாட்டை கொஞ்சம் உற்று நோக்கு ! கோயில் அமைப்பையும் சிலையையும் வடக்கும் கிழக்குமாக அமைத்துவிட்டு நீ மேற்கையும், தெற்கையும் நோக்கி வணங்குவது எதற்கென்று யோசி !
நீ ஆகாத திசையை வணங்குகிறாய் ! உன் அறியாமையை என்னவென்று சொல்வது ? தெற்கு எமன் திசை என்கின்றாய். மேற்கு சூரியன் மறையும் திசை அல்லவா ? உன் வழிபாடுகளை சற்று யோசித்துப் பார் ! ஆகாத திசைகளை நோக்கி பார்த்து திசை தெரியாமல் அலைகின்றாய். கிழக்கு நோக்கி வணங்கு ! வட மூலை தகுந்த இடம். எதையும் சுற்றி வராதே. சுபமற்று போகாதே !
பயத்தால் வணங்குகிறாய் ! பக்தியால் வணங்குகிறாய் ! பாசத்தால் வணங்காமல் துன்புறும் பாவியடா நீ !
இல்லாதவன் எத்தனையோ பேர் உலகத்தில். அவர்களுக்கு கொடுக்காமல் பாசமில்லா, உயிரில்லா, முடி இல்லா அசைவற்ற சிலைக்கு செய்து அனைத்தையும் விரயமாக்குகிறாய் ! மனிதன் தான் செய்கின்ற தவறுக்கு கடவுளை குற்றம் சொல்லி திரிகின்றான் !
என் இறுதி பிறவியாக தாமிரம் நிறைந்து இருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் பிறந்தேன் ! அந்த மண்ணில் உயிர்த்துவம் உள்ளது !
அஞ்சனா கல்லில் உயிர்த்துவம் இருப்பதால் தான் அதில் சிலை வடித்து வணங்க ஆரம்பித்தான் ! அசுர குலத்தின் கட்டளைக்கு பயந்து பின் காலம் செல்ல செல்ல வெறும் கல்லில் சிலை வைத்து வணங்கினான்.
உருவ வழிபாடு மூவாயிரத்து ஐநூறு வருடமாகத்தான் யுகத்தில் உள்ளது. அதற்கு முன் இல்லை என்பதை புரிந்து கொள்.
இயற்கையை மறந்த மனிதன் இப்போது இன்னல் படுகின்றான். செயற்கையாக இவன் கட்டி வைத்ததில் நிம்மதி இருக்காது. பாவம் போகாது ! அதில் நீ நிம்மதி தேடுவது இயலாத காரியம் ! இயற்கையை நேசி ! காற்றாய் நீராய் நான் இருக்கிறேன் !
என்னை நேசி, காலம் உனை வணங்கும் !
ஐஸ்வர்யம், புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம் முதலிய ஐந்துக்கும் கல்யாண குணங்கள் என்று பெயர் ! ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்து சேரும் பொழுது தான் முழுமை அடைகின்றான். இன்பம், துன்பம் எல்லாவற்றையும் புரிகின்றான். கடமை என்னவென்று தெரிந்து கொள்கின்றான். இந்த ஐந்து குணங்களையும் தேடுகின்றான். பின் அவைகளை அடைகின்றான் ! இதற்காகத் தான் இல்லறம் இல்லாத வாழ்வு கல்லறையில் இருக்கின்ற வாழ்வு என்பதைச் சொன்னேன்.
குழந்தை இல்லை என்று வருத்தபடாதே ! குழந்தை இல்லாதவர்கள் பயப்பட வெண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு பூமியில் மீண்டும் பிறப்பிருக்காது ! லோகத்தில் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டு அங்கேயே பாவத்தை கழிக்கின்றார்கள்.
இயற்கையை வணங்கு ! இன்னல் கலைந்து சுகம் பெறுவாய் ! செப்பு (தாமிரம்) இல்லாமல் தங்கம் முழுமை பெறுவதில்லை. செப்பு தான் தங்கத்திற்கு முழு வடிவம் கொடுக்கின்றது. செப்பு தங்கத்தோடு உறவாடி தத்துவம் பேசுவது போல நீயும் இருக்க பழகு !
சிவன் எப்படி இருப்பார் என்பது உனக்கு தெரியாது. ஆனால் துதிபாடி துயரத்தில் திரிகின்றாய். புலித்தோலையும், பாம்பையும் சிவன் மேல் வைத்து புரியாமல் ஏதோ உளரக் கண்டேன் ! புலித் தோல் உணர்த்துவது மாயத்திரையை ! கழுத்தில் இருக்கும் பாம்பு குண்டலினி சக்தியை உணர்த்துவது ! இது தெரியாமல் நிஜமான புலித் தோலையும், அசிங்கமான பாம்பையும் உடுத்தி அழகு பார்த்தான் மனிதன். கடவுள் எதற்கடா புலித் தோலை உடுத்துவார் ? அசிங்கமான பாம்பை எதற்கு கழுத்தில் மாட்டுவார் ? எதுவும் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாய் !
கடவுளுக்கு எதற்கெடா அஞ்ச வேண்டும் ? எதற்கு அடி பணிய வேண்டும் ? பாசமாக உணர் !
காலம் காலமாக யாரோ எழுதி வைத்த நாமத்தை சொல்லி என்ன பலன் கண்டுவிட்டாய் ? உன் குடும்ப பிரச்சனையை தீர்க்க முடியாதவன் சிவனின் அவதாரம் என்று புலம்புகிறாய் ! சிவன் என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் என்று தெரியுமா உனக்கு ? தெரிந்தால் உன் ஞான திருஷ்டியில் பார்த்து எனக்கும் சொல் !
இனி இடி மின்னகளால் பல கோயில்கள் அழியும் ! கோபுரங்கள் சரியும் ! போக போக தெரியும் இந்த புனிதன் சொல்வது ! கோயில்களுக்குள் ஆமையும், நாகமும் புக கண்டேன். பராமரிக்க முடியாமல் சிதிலமடைய கண்டேன்.
விரைவில் மனிதன் இயற்கையை வணங்க ஆரம்பிப்பான் !
இந்த ஆத்மத்தின் தலைவன் சொல் சத்யமாக நடக்கும் ! உருவ வழிபாடு ஏன் வந்தது என்பதை உணர் ! கற்சிலையை வணங்கி நீயும் கல்லாகி போகாதே !
உனக்கு உயிர் தரும் காற்றையும் நீரையும், ஆகாயத்தையும், பூமியையும் வணங்கு ! இந்த காலத்தின் நாயகன் ஆகமலத்தின் கனியைப் போல உன் சிரவில் அமர்ந்து ஆட்சி செய்வேன்.
நான் உனக்குள் இருப்பவன் ! நான் இநன்யா !

No comments:

Post a Comment