Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 15 July 2016

உன்னை சுமந்த தாய் மேலானவள் ! உன்னை சுமக்கின்ற தாய் பூமி மேலானது ! உன்னை நான் சுமப்பதால் நான் மகா மேரு மலையிலும் மேலானவன் ! உணர் !

உன்னை சுமந்த தாய் மேலானவள் ! உன்னை சுமக்கின்ற தாய் பூமி மேலானது ! உன்னை நான் சுமப்பதால் நான் மகா மேரு மலையிலும் மேலானவன் ! உணர் !
சுமை
எல்லா மனிதனும் சுமக்கின்றான் பாவம் என்ற மூட்டையை !
உன் தாயின் சுமை உன்னை இனிதாக பூமியில் பிறக்க வைக்கின்றது ! தாய் பூமியின் சுமை உனக்கு தானியங்களை மூட்டை கட்டி தருகின்றது ! ஆனால் நீ பாவம் செய்து பாவத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு சுமக்கின்றாய் ! அதை உன் சந்ததியையும் சுமக்க வைக்கின்றாய். நீ பாவம் செய்தால் உனக்கு தான் தண்டனை கிடைக்கும். மற்றவரின் விதி உனக்கு நல்லதும் செய்யாது கெட்டதும் செய்யாது என்பதை புரிந்து கொள். யுகத்தில் அவரவர் பாவம் அவரவர் தான் அனுபவிக்க வேண்டும் !
எப்போது உன் சுமையை கீழ் இறக்க நினைப்பாயடா ? உன் சுமையை எப்போது கீழ் இறக்க நினைக்கின்றாயோ அப்போது நான் உன்னை சுமக்க தயாராக உன் முன்னே நிற்பேன் ! பாவ மூட்டைகளை பல பிறவிகளில் சுமக்கின்றாய். பூமியில் மனம் அழுந்தி, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் துடிக்கிறாய். உன் துடிப்பு மேல் உலகம் வரை கேட்குமடா ! நீ திருந்தும் வரை உன்னை எல்லாம் பின் தொடரும் !
மரங்கள் கிளைகளையும், இலைகளையும் சுமந்து உனக்கு நிழல் தருகிறது. காய், கனிகளை சுமந்து உனக்கு நல்லது செய்கின்றது. பசு பால் சுமந்து உனக்கு பருக தருகின்றது. நீ மட்டும் எதற்கும் உதவாமல் பாவத்தை தூக்கி சுமக்கின்றாய். மரத்திற்கு உண்டான வீரியம் கூட உன்னிடம் இல்லை. நீ தலை முடியை சுமக்கின்றாய். ருத்ராட்சத்தை போட்டுக் கொண்டு தாடியும், குடுமியையும் சுமக்கின்றாய் ! வேடிக்கை வாழ்க்கையடா !
மிருகங்கள் குட்டி போட்டவுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தன் வாயால் கவ்விக் கொண்டு செல்லும். அதன் கூறிய பற்கள் ஒன்றும் செய்யாது. ஆனால் உன் வாய் எதற்கும் உதவாது. உன் கூரிய பற்களும், வாயும் அடுத்தவரை வசைபாடவும், கேலி, கிண்டல் செய்து உபயோகமில்லாமல் இருக்க கண்டேன்.
என் தர்ம குலமே, எப்போது உணரப் போகிறாய் ?
பூமியில் உன் வரலாறு என்ன ? இங்கு எதற்கு வந்தாய் ? இந்த பொம்மலாட்ட வாழ்க்கை ஏன் எதற்கு என்று நினைத்துப் பார்த்தாயா ? எப்போது உணரப் போகின்றாய் என் செல்லக் குழந்தையே ?
நதிக்கரையில் உட்கார்ந்து யோசி ! யுகத்தில் மரத்தை வெட்டி அழிக்கின்றாய். காகிதத்தால் வந்தது தானடா உலகிற்கு பேரழிவு ! காற்றை மாசுபடுத்தி கயவனாக திரிகிறாய். நீரை மாசுபடுத்தி நீசனாக அலைகின்றாய். உன் ஆட்டத்தை நாங்கள் பார்த்து கொண்டு இருப்போம் என்று நினைத்துவிடாதே ! அதனால் தான் பூகம்பம், இடி, மின்னல், சூறாவளி, புயலாய், சுனாமியாக தாண்டவமாடுகின்றோம். நீ ஆடினாய் ! இப்போது நாங்கள் ஆடுவதை பொறுத்திருந்து பார் ! இனி இயற்கை சீற்றங்கள் மிகுதியாக இருக்கும். உன் விஞ்ஞானத்தை வைத்து ஏதோ கண்டுபிடித்தேன் என்று உளர்கின்றாயே ? ஓடி பிடிக்கும் உயிர் ஒன்று உனக்குள் வைத்தேன். கண்டுபிடித்தாயோ நீ ?
தேனியின் சுமை உனக்கு தித்திப்பை தருகிறது ! உலகில் கெட்டுப் போகாத பொருளை உனக்கு தந்தேன். நீ விஞ்ஞானத்தில் செய்த பொருள் எல்லாம் கெட்டு போகும். மின்சாரம் கண்டுபிடித்து எல்லா ஜடப் பொருளையும் இயக்குகிறாய். நான் உனை எந்த மின்சாரமும் இல்லாமல் இயக்குகிறேன். என்றாவது உணர்ந்தாயா ?
தேனி எடுத்து வரும் மகரந்தத்தில் அணுகுண்டையும் செய்யலாம். தங்கம், வைரம், வைடூரியத்தையும் செய்யலாம். முடிந்தால் இதை கண்டுபிடி ! நீ தேனை மட்டும் சாப்பிட்டு திசை தெரியாமல் அலைகின்றாய். ஒரு சொட்டு தேன் உருவாக 333 தடவை பூவில் வாய் வைக்கின்றன தேனீக்கள் ! ஆராய்ந்து பார்த்தாயா ? தேனுக்கும் உன் 333 நாடி நரம்பிற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த மாய உலகத்தை அறிய முயற்சி செய் ! நீ கடவுளையும், கடவுளின் கருணையும் உணரலாம் !
நான் காற்றாய், நீராய் இருக்கின்றேன் ! என்னை உணர்ந்து பார் ! எல்லாம் புரிவாய் ! உன்னை அறிவாய் ! சுமையை சுமக்க கழுதையிடம் கற்றுக் கொள் ! எவ்வளவு சுமையை ஏற்றினாலும் தன் எஜமானர்க்கு நன்றியோடு இருக்கும். அது வருத்தப்படுவது கிடையாது. கழுதை தேவர்களின் வாகனம். ஏன் என்று கண்டுபிடி ! கழுதை படுத்து புரண்ட இடத்தில் மண்ணை ஆராய்ந்து பார். அதில் உட்கார்ந்து பார். அந்த மன்ணை உடலில் பூசிப்பார். நீ அறிவாய். தெளிவாய் !
கிராமத்தில் கழுதையின் காய்ந்த சானத்தை சிறு குழந்தைக்கு தனலில் போட்டு புகைபிடிப்பார்கள். ஏன் என்று கண்டுபிடி ! குழந்தை சாப்பிட ஆரம்பித்தவுடன் சலவை தொழிலாளியிடம் சாதம் கொஞ்சம் வாங்கி ஊட்டிப் பார். உன் குழந்தை ஞான குழந்தையாக மாறும். உழவன், மீனவன், சலவை தொழிலாளி, முடி திருத்துபவர், இடுகாட்டை காப்பவர், ஹரி ஜணங்கள் எல்லோரும் ஞானவான்கள். நீ ஜாதியின் பெயரால் கீழானவர்கள் என்று ஒதுக்கி வைக்கின்றாய் அவர்களை ! இனி இவர்களே உலகை நல்வழிப்படுத்துவார்கள். இவர்களை இனி உலகம் போற்றும். சாதி ஒழிந்து மனித நேயம் மலரும் ! இவர்கள் இல்லை என்றால் மனிதன் நிலை என்ன ?
உன் மாய மயக்கத்தை நான் தெளிவாக்குவேன் ! ஞானத்தை சொல்லி கொடுக்க பூமிக்கு அனுப்பிய ஞானவான்கள் எல்லாம் செயல் மறந்து நாட்டை ஆள ஆசைப் பட கண்டேன். அதனால் உலகம் சுமையானது பாவத்தால் ! உன் தாய் உன்னை சுகமான சுமையாக சுமந்தாள். உன்னை பாரமாக நினைக்கவில்லை ! உன் தாய் பூமி நீ எவ்வளவு பாவம் செய்தாலும் உன்னை சுமக்கின்றது ! ஆனால் நீ தான் உன் தாயையும், தந்தையையும், மனைவியையும் சுமையாக நினைக்கின்றாய். இந்த சுமையை சுமக்கத் தான் பூமிக்கு அனுப்பினேன் உன்னை ! ஆனால் இதை நீ இறக்கி வைத்து விட்டு பாவங்களை தேடிச் சென்று அதை செய்து சுமையாக சுமக்கின்றாய் ! உனக்கு நான் சுமையை அளவுக்கு மீறி தருவதில்லை. உன்னால் சுமக்க முடிந்த அளவு மட்டும் தான் சுமையை தருகிறேன். மீதி சுமையை நானே சுமக்கின்றேன் ! எல்லா சுமையும் பூமியில் சுமந்தால் பிறந்தவுடன் பூமியில் புதைந்து விடுவாய் !
சுமையை சுகமாக சுமக்க கற்றுக் கொள். உன்னால் முடியவில்லை என்றால் உன் பாரத்தை என் தோளின் மேல் இறக்கி வை. நான் சுமக்கின்றேன். மீண்டும் தவறு செய்யாதே ! உணரடா ! நான் உனக்குள் இருப்பதால் எதுவும் சுமை இல்லை ! என் வலிமையான கரங்கள் உனை அரவணைக்க காத்திருக்கின்றது. உன் பாரத்தை என் தோள் சுமக்க காத்திருக்கின்றது. உணர் ஞானமிருந்தால் !
சுமையை சுகமாக்கி தருபவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment