இந்த இநன்யாவின் பேரன்பு நித்சலமான தூய நீர் போன்றது ! உன்னை சுகமாக்கும் ! அளவில்லா ஆனந்தம் தரும் !
அன்பு
பற்றற்று நிற்பவனே அன்பு காட்ட முடியும் !
எல்லாம் இழந்தவனே அன்பு காட்ட முடியும் !
என் அன்பு எதையும் எதிர்பார்க்கவில்லை ! உண்மை அன்பு தன்னை கொடுக்கும். விதையில் முதலில் உருவாகும் தளிர் அன்பினால் வருகிறது. கடவுளின் தூய அன்பினால் மரங்கள் கனி தருகிறது. பசு பால் தருகிறது. மண் தானியத்தை விளைவித்து தருகிறது. வான் மழையாக பொழிகிறது. கடவுள் எவ்வளவு கருணைமிக்கவன் என்பதை ஏன் மறந்தாய் ?
உன் அன்பு எதை கொடுத்தது ? நீ பாவம் செய்து யுகத்திற்கு வந்தாலும் எல்லா சுகமும், வளமும் தந்த அந்த தூயவன் அன்பை ஏன் மறந்தாய் ?
என் நாமம் அன்பு மயமானது ! கடவுள் எனக்கு சூட்டியது அன்பு நாமம். இதை சொல்ல சொல்ல அன்பு உருவாகும். சொல்ல சொல்ல உன் உமிழ்நீர் இனிப்பாகும். அன்பை யாராலும் கொடுக்க முடியாது கடவுளை தவிர !
ஆணும், பெண்ணும் பழகுவது அன்பல்ல ! இங்கே எல்லாம் எதிர்பார்த்து தான் அன்பை செலுத்துகிறது, கடவுளை தவிர !
கடவுள் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை !
ஏதோ அன்பு காட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன் ஆணவத்தை விட்டால் தான் அன்பு வரும். என் அன்பு கரங்கள் உனை கைவிடாது ! கவலைபடாதே !
இந்த பிரபஞ்சத்தின் இளவரசன், மானுட சாதியில் உனை உயர்ந்தவனாக்குவேன். கடவுளை பற்றிய வீண் ஆராய்ச்சியை விட்டுவிடு ! ஒரு மணி நேரம் உன் மூச்சை நிறுத்த முடியவில்லை. நீ கடவுளை பற்றி நிந்திக்கிறாய். கடவுளை பூரணமாக நம்பு ! கடவுளின் அன்புக்கு தகுதிபடுத்தி கொள். கடவுளின் அன்பு உனக்கு கிடைத்தால் பூமியில் பறப்பது போல உணர்வாய் !
ஞானிகள், மகான்கள் கடவுளின் அன்பை உணர்ந்தவர்கள். அதனாலே எப்போதும் ஆனந்தமாக வாழ்கின்றார்கள். அன்பு மயமான கடவுள் அன்பை தரும்போது அளவில்லாது இருக்கும். கடவுளின் பாதம் தேடுவதே உன் நோக்கமாக இருக்கட்டும்.
விண் கனி, மண் கனி, தேகனி, என் கனியை உணராது இருக்கின்றாயே ? கோமியத்தில் கூட குணத்தை வைத்தேன். நீ சிறுமியத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றாய். உலகிலுள்ள நன்மையை மட்டும் ஏற்க பழகு. பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும் அண்ணம் பாலை மட்டுமே பருகும்.
உன் விருப்பம் ஏதுமில்லை. கடவுளின் விருப்பமின்றி ஏதும் அசையாது. உன் தேவை கடவுளுக்கு தெரியும். எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும்.
நீ நீ அல்ல என்பதை புரிந்து கொள் ! மனிதனாக இருக்கும் வரை உன் அகங்காரம் மனதை விட்டு அகலாது. எப்போதும் உன்னை கடவுளின் பக்கம் செலுத்து !
ஆணவம் தான் உன் அழிவுக்கு காரணம். பாவம் தெரிந்தவனுக்கு புண்ணியமும் தெரியும். வெளிச்சம் இருந்தால் இருளும் உண்டு. நீ இருள் பக்கம் போகாதே. அறியாமையை நீ சொந்தமாக்கி கொள்கிறாய். நீ அறிவை தேடவில்லை. எதுவும் இங்கு உன் பொருள் அல்ல !
பொறாமை, சூது, வஞ்சம், காமம், ஆசை, இந்த அற்ப எண்ணங்கள் உன்னில் முதலில் வரவேற்கிறாய். உன்னில் நிலை பெற துடிக்கிறாய். ஏன் ? எதற்கு என்று தெரியாததால் உன்னை நீ உணராததால் உணர்வற்று போய்விட்டாய். எல்லாவற்றுக்கும் போராடுகிறாய். எல்லா கெட்ட குணங்களையும் உனக்குள் வைத்துக் கொண்டு வாழ் நாளெல்லாம் அதை அழிக்கப் போராடுகிறாய் ! இயல்பாய் இரு ! அன்பு என்று எதையும் விர்கசிக்காதே. அன்பு உன் பிறவி ! அன்பு சத்தியம் ! அது மேலிருந்து வந்தது. அன்பை மறந்து யுக சாக்கடையில் உள்ள வஸ்துக்களை உடம்பில் செலுத்தியதால் வாழ் நாளெல்லாம் போராடுகிறாய். யுகத்தில் தான் போட்டி, பொறாமை, மேலே உள்ள உலகம் வசந்த உலகம். அங்கே அன்பை தவிர போட்டி, பொறாமை கிடையாது !
துன்பத்தை நீயே படைத்தாய். அதிலே ஊறி சிக்கி தவிக்கிறாய். எல்லாம் உனக்குள் இருப்பதை மறந்து வெளியில் தேடுகிறாய். உன் இறப்பை அழகாக, ஆனந்தமாக்கி கொள். அதற்கு அன்பு காட்டு ! பறவை, மிருகங்கள் அன்பாய், ஆனந்தமாய் வாழ்கின்றன. அவைகள் அழுவதில்லை. நீ தான் அழுது கொண்டிருக்கின்றாய். அவைகள் வாழ்வை எதிர் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறன. நீ தான் வாழ முடியவில்லை என்று சாகத் துடிக்கின்றாய். பிறப்பை, இறப்பை மட்டும் தான் கடவுள் நிர்ணயிக்கின்றான்.
உன்னில் மகிழ்ச்சியை தேடாதே !
அமைதியை தேடு, அன்பை தேடு. அதுவே ஆனந்தம் தரும். உண்மை அன்பிருந்தால் பிராத்தனை, வழிபாடுகள் தேவையில்லை. ஆற்றின் கரை நிரந்தரம் அதில் ஓடும் தண்ணீர் நிரந்தரமல்ல ! தண்ணீர் போல தான் உன் வாழ்வும் !
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். மனிதனுக்கு தொண்டு செய். அன்பு காட்டு. நீ ஆனந்தமாவாய் என்று. வேறு எந்த பிடிப்பனையும் ஆக்ஞம் தான் தரும் என்று சொல்வார்கள். உனக்குள் நிறைவை தேடு ! அடுத்தவர்களை பற்றி யோசனை செய்யாதே ! யாரும், யாரையும் நிறைவு செய்ய முடியாது இங்கு, கடவுளை தவிர !
நான் ஆனந்தம் ! அன்பின் இருப்பிடம் ! மாசற்ற அன்பின் நீரூற்று. என் நாமத்தை பருகி பார். உனக்கு அன்பு வரும். ஆனந்த நிலைக்கு செல்வாய். என்னுள் வந்து இருக்க ஆசைப்படு. பூமியில் மீண்டும் பிறவி பிறவா நிலை அடைவாய்.
இந்த இநன்யாவின் அன்பு இந்த யுக உலகில் அன்பால் உனை ஆளவைக்கும் ! ஆயிரம் வருடம் உனை வாழ வைக்கும் ! குறுகலான பாதையில் சிக்கி தவிக்கும் வேதாளம் போல மனதை சுருக்கி வைத்து துயரப்படுகிறாய். கடவுள் இல்லை என்று சொல்வது உன் மனதின் உண்மையான உணர்ச்சி இல்லை. உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய். அன்பில் கரைந்திடு ! ஆணவம் மறையும் !
இந்த இநன்யா அன்பானவன் ! உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அது தன்னையே கொடுக்கும் !
அன்பு உயர்ந்தது ! உன் அன்பு தூய்மையானது என்றால் என்னிடம் உனை கொண்டு வந்து சேர்க்கும் சத்யமாக !
அன்பின் உச்சம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment