மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான்.
மெய் !
நான் மெய் ! கடவுள் மெய் ! என் சத்திய வார்த்தைகள் மெய் ! மெய் ஞானம் தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது ! அழைத்து செல்வேன் சத்திய பாதையில். என் வழி சத்திய வழி ! சத்தியம் எப்போதும் தோற்காது. ஏனென்றால் நானே சத்யம் !
சத்தியம் என்றால் என்னவென்று தெரியாது உனக்கு ! எனை நோக்கு ! சத்தியம் தெளிவாக தெரியும் ! உன் மாய மயக்கம் தெளிவாகும் ! மெய்யான படைப்பின் சிதறல் உன் நெஞ்சுக்குள் தெரியும். மெய் என்ற உடல் மேன்மையாகும். உன்னுள் ஒளி வந்து உலகை உற்று நோக்க வைக்கும். நீ ஞான குழந்தையடா ! உன்னை வெல்ல யாருமில்லை. நான் உன்னை விட்டு பிரியமாட்டேன். என் அன்பு உன் யுக துன்பத்தை தூள் தூளாக்கும். ஆயிரம் தாமரை இதழில் ஸ்வேதமாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றேன். உணர்ந்தவன் என் நெஞ்சில் இருக்கின்றான்.
படைப்பில் ஆணந்தம் உண்டு. எனை அறிந்தவன் சுக துக்கமில்லாது ஆணந்த நிலையில் வாழ்கிறான். படைத்ததில் மனித ஜாதியே கடவுளுக்கு பிடித்த பொருள். அவன் உன்னை மட்டுமே ஆட்டுவித்து ஆணந்தம் பார்க்கின்றான். நீ அவனுக்கு விளையாட்டு பொம்மை. நன்மை செய்து தர்மம் செய்தால் நெஞ்சில் வைத்து உன்னை கொஞ்சுகிறான். பாவம் செய்தால் துன்பம் கொடுத்து உனை திருத்துகிறான்.
உனக்கு வரும் துன்பங்கள் உனை மாற்றுவதற்காகவே ! மீண்டும் பிறவி இல்லா நிலை தருவதற்காக. இங்கே உணர்ந்தவன் ஞானியாகிறான் !
உனக்கு நல்லது செய்யும், நன்மையை செய்யும் மனிதன் இறந்தால் குல தெய்வம் என்று கும்பிடுகிறாய் !
கற்புள்ள பெண் இறந்தால் தேவதைகள் என்று வணங்கி மகிழ்கிறாய் !
பேராணந்தம் தான் ! ஆனால் உன் வழிபாடு உன் பிறவியை தடுக்காது. உன் வினை பயன் அழியாது. உன் துன்பம், கர்மா போகாது. வணங்குவதில் அர்த்தம் உறித்தெடு ! தேவதைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது. நீ வணங்கினால் அந்த உலகத்திலே உன் உயிர் சென்று அல்லாடும். இங்கு மீண்டும் பிறப்பாய். ஆதலால் கடவுளை அடைய நினை ! கடவுளின் பாதம் தேடு !
உன் முன்னேர்களை நினைப்பது தவறில்லை ! வணங்குவது தேவையில்லாது. அந்த உயிர் இன்னொரு கூட்டுக்குள் போய் துன்பம் அனுபவிக்கின்றது. கடவுள் பலி கேட்பதில்லை. அன்பை மட்டுமே எதிர்பாக்கின்றான். என்னை வணங்கு என்றோ, எனக்கு கொடி பிடிக்கவோ சொல்லவில்லை. நீ உணரும் வேலை உனக்கு ஞான தெளிவு கொடுக்கவே காத்திருக்கிறேன். வணங்குவதால் பெரிய மாற்றம் உண்டாக போவதில்லை.
உணர்ந்தால் தான் உனக்குள் மாற்றம் காண்பாய். ஆணந்தம் என்னவென்று அறிவாய். முன்னோர்கள் பண்டிகை என்ற பெயரால் வணங்க வைத்ததும், உணவு முறையை தரம் பிரித்து உண்ண வைத்ததும் சரியே. நீ உணர்ந்து செய்யமாட்டாய் என்பதாலே பண்டிகை என்ற பெயரால் கொண்டாட வைத்தனர். நீ அதை வழிபாடு என்று மதத்திற்குள் வைத்தாய். அறியாமையை உன் நெஞ்சில் வைத்தாய். ஏன், எதற்கு என்று கேள்வி வராமல் உன்னை மறந்தாய். பண்டிகை என்ற பெயரால் காசை விரயப்படுத்தி கடனாளி ஆகாதே !
மனிதனை நேசி, தொண்டு செய், கடவுள் உன்னை அரவணைப்பான். பூமியில் கடவுளின் தூதுவன் குழந்தைகளே ! குழந்தையிடம் கடவுளை காணலாம்.
கடவுள் உன்னிடம் எப்போது வருவார் ? நீ பிறருக்கு சேவை செய்யும் எண்ணம் வளர்த்தால், அடுத்தவர்க்கு பாதை சொல்லி கொடுக்கும் போதும் தன்னலம் கருதாது பிறர் நலம் எண்ணும் போதும் கடவுள் உன் பக்கத்தில் வருகிறார்.
நீ என்ன தான் வழிபாடு, பூஜை, விரதம் செய்தாலும் கடவுள் உன்னிடம் வரமாட்டார். நீ பிறருக்காக வாழ நினைக்கும் போது உன் நெஞ்சில் வந்து அமர்ந்து உனக்கு வழிகாட்டுகிறார் !
என் தந்தை யாகவா முதன் முதலில் சொன்னார்கள், உழைப்பு தான் ஆன்மீகம் என்று. உழைத்து ஊருக்கு நல்லது செய்ய எண்ணம் கொள். என்னை மாதிரி ஆத்மத்தின் தலைவனை கடவுள் உன்னிடம் அனுப்புவான். தாயும், தந்தையும் தவிர இறந்த கர்மாக்களை வணங்க வேண்டியதில்லை. கடவுளை தவிர இங்கு ஏதும் அழகல்ல. அறிவானவன் அறிவான்.
என் சிறுவயதில் என் ஊரில் உள்ள தேவதைகள், எல்லை தெய்வங்களே எனக்கு விளையாட்டு தோழர்கள். இந்த இநன்யாவை யாவரும் அறிவர் !
என் தந்தையின் கரங்களால் செங்கோல் தந்து கிரீடம் சூட்டிய பிரபஞ்ச இளவரசன் நான் ! யுகத்தில் தரையில் படுத்து உலகை ஆராய்ச்சி செய்கின்றேன். எல்லாம் எனக்கு அடிமை.
நான் மெய். கடவுள் மெய். என் சத்திய வார்த்தைகள் மெய் !
நான் பெரும்படையோடு இருக்கின்றேன். நீ இலம்படையோடு வாழ்கிறாய். ஆத்துக் கால், நாத்துக்கால் வைத்தேன். போத்துகாலில் புணிதம் நிறைந்து வைத்தேன். நீ நான்கு கால்களில் நாதி இல்லா போகத் துடிக்கின்றாய் !
பயிர் வாடினால் உழவன் வாடுவான். என் அன்பு குழந்தையே நீ வாடினால் உன்னை வாட விடுவேனோ ? அடுத்து வர இருக்கும் யுக மாற்றத்தின் துன்பத்தால் உன்னை எப்படி கரை சேர்ப்பது என்ற சிந்தனை எனக்கு ! நான் வாடமாட்டேன் ! உன்னையும் வாட விடமாட்டேன். தர்மாக்களை என் சத்தியத்தின் வலக்கரத்தினால் நிச்சயமாக காப்பேன் !
நான் மெய்யானவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment