Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 15 July 2016

நான் உன் உயிரின் சூட்சுமம் ! உலகின் சூட்சுமம் ! திறன் இருந்தால் என்னை அறிய முற்படு ! அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் !

நான் உன் உயிரின் சூட்சுமம் ! உலகின் சூட்சுமம் ! திறன் இருந்தால் என்னை அறிய முற்படு !
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் !
லோகத்தின் சூட்சுமம் பிரபஞ்சம் 333 உண்டு ! அதற்கும் மேலாக மூன்று பிரபஞ்சங்கள் உண்டு. அதுவே உன்னையும், உலகையும், அண்ட சராசரங்களையும் இயக்கும் சூட்சுமம் ! அங்கே தான் ஆக்கம், ஊக்கம், தர்க்கம் நடக்கின்றன. வளர்ச்சி, தெளிவு, சக்தி பிறக்கின்றன. ஆறு பேராத்மாவுக்கும் பொதுவான ஏழின் சூட்சுமம் உன்னை ஏந்தி பிடிக்கிறது ! லோகத்தில் என் தாய், தந்தைக்கு பிடித்ததை நான் செய்வதால் தேவர்களுக்கு என்னை பிடிக்கும் ! எந்த சிக்கல் இருந்தாலும் உடனே தீர்வு கிடைக்கும் என்பதால் என்னை சுற்றி எப்போதும் தேவர்கள் கூட்டம் இருக்கும்.
எனக்கு இளக்க குணம் மிகுதி என்பதால் என்னருகே இருக்கும் தேவர்கள் கூட்டம் மிகுதியானது. என் சத்திய கரங்கள் எப்போதும் காக்கும், யாரையும் கைவிடாது, யாருக்கும் சோதனை தராது என்பதால் என்னில் நியாய தீர்ப்புக்காக தேவர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். படைப்பும், வளர்ச்சியும் எனக்குள்ளே இருப்பதால் தேவர்களோடு மகிழ்ச்சியாக வலம் வருகின்றேன். நான் யாரையும் சோதிப்பதில்லை.
பிரபஞ்சம் என்பது எல்லாவற்றையும் இயக்கும் வலிமைமிக்கது !
அதற்கு கீழ் 108 காண்டங்கள் உண்டு ! ஒரு காண்டத்திற்கு 111 கோடி மண்டலங்கள் உண்டு !
உன் உடலின் சூட்சுமம் போல் தான் பிரபஞ்சமும் ! 333 நாடி நரம்புகள் உன் உடலில் இருக்கின்றது. உன் உடலின் சூட்சுமமே உலகின் சூட்சுமம் !
உன் நாட்டை பிரித்து வைத்திருக்கும் சூட்சுமம் போல் தான் அண்டங்களும். இந்தியா பிரபஞ்சம் என்று வைத்துக் கொண்டால் மாநிலங்கள் காண்டங்கள் என்று அர்த்தம். மாவட்டங்கள் மண்டலங்கள் என்று அர்த்தம். அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் !
உன் ஆட்சி முறை, சட்டம் போல் தான் மேலேயும் என்பதை புரிந்து கொள். ஆனால் அங்கே எப்போதும் பகல் போலிருக்கும். இந்த யுகம் மட்டும் தான் இரவு, பகல் என்று படைக்கப்பட்டிருக்கின்றது. உன் சட்டம் பொய்யானது. ஆனால் லோகத்தில் சட்டம் சட்டம் தான். நீ 108 காண்டங்களிலே குடியமர்த்தபடுகின்றாய். பிரபஞ்சத்தில் முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் வாழ்வார்கள். ஆனால் 108 காண்டங்களில் மூன்று காண்டங்களில் யுகத்தில் உள்ள உயிர் போவதற்கும், வருவதற்கும் வாசல் இருக்கின்றது !
இந்த மூன்று காண்டங்களையும் அதாவது மூன்று லோகத்தையே அசுர. ராட்ஷச அரக்க குலங்கள் ஆட்சி செய்தார்கள். தடாயன் என்பவனே இந்த அசுர குலங்களின் தலைவன். இவன் மனைவியர்கள் 21 பேர். இவர்களினாலேயே அசுர குலங்கள் ஜனனமாகியது. அந்த மூன்று காண்டங்களுக்காகவும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளையும் மீட்பதற்காவே 5000 வருடமாக யுத்தம் நடந்தது.
இது 1986 ல் முடிவு பெற்றது. இவர்களை மீட்பதற்காக எண்ணற்ற சித்தர்கள், தேவர்கள், யுகத்தில் தோன்றினார்கள். மேலே இருந்து யுத்தம் செய்தால் யுகத்தின் படைப்புக்கு சேதம் வரும் என்பதால் யுகத்தில் பிறப்பெடுத்து அழிக்க ஆயத்தமானார்கள். யுகத்தில் இருப்பது அசுர எண்ணம் கொண்டவர்களும், அவர்களால் படைக்கப்பட்டவர்களும் தான் !
பூமியில் உள்ள மனிதனுக்கு அசுர எண்ணம் தோன்றினால் எவ்வளவு வலிமையாக மாறுவான் என்று பார்த்திருக்கின்றாய் அல்லவா ? அவர்களை படைத்த அசுர தலைவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை புரிந்து கொள். ராமனும், கிருஷ்ணனும் வந்து பாதி வேலை தான் முடித்தார்கள். இதை முழுவதும் படைத்தவனால் 1986 ல் அழிக்கப்பட்டுவிட்டது. மூன்று காண்டங்களையும், மூன்று ஏடுகளும், தேவர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்கள்.
இந்த யுகத்தில் இனி கர்ம குலம் அழிந்து தர்ம குலம் வாழும் !
லோகத்திலும் உன்னை போன்ற மனிதர்கள் உண்டு ! உன் உண்மை உடல் அங்கே உண்டு ! தாய், தந்தை உண்டு ! மரங்கள், பறவைகள் உண்டு ! அங்கே காற்றும் நீரும் தான் உணவு ! அங்கே சிறு தவறு செய்தாலும் தண்டனை உண்டு. சிறு தவறு செய்தாலும் நீ பூமிக்கு இறக்கிவிடப்படுகின்றாய். ஆனால் நீ பூமிக்கு வந்தவுடன் உன் மெய் உடலை அடைய மனம் இல்லாமல் இங்கு அல்லல்படுகிறாய். இங்கு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கின்றாய் என்பதை மறவாதே.
இன்னும் சொல்லித் தருவேன். நான் சத்தியத்தின் பாதையில் நடப்பவன் என்பதை மறவாதே ! .
இந்த இநன்யா எதற்கும் அடங்காதவன் ! உன் அன்பை தவிர நான் எதற்கும் கட்டுப்படாதவன் ! உன் மெய்யான அன்பு உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை எப்போதும் நினைத்துக் கொண்டே இரு !
இங்கு என் உடலை பார்த்து ஏமாந்து போகும் மனிதர்களின் கூட்டமும் உண்டு ! என்னை மனிதன் என்று நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் அசுரர்களின் கூட்டமும் உண்டு ! நான் காற்றாய், நீராய், உன் ஆண்மாவாய் இருக்கின்றேன் என்று புரியாமல் வாழும் அறியாத கூட்டம் என்ன செய்வேன் இந்த அறியாமையில் வாழும் ஆட்டுக் கூட்டங்களை !
பூமியில் என்னை புரிந்தவன் அனைத்து சுகங்களோடும் வாழ்கின்றான் ! மீண்டும் பிறக்காத வரம் வாங்கி கொண்டு நீயும் இந்த சூட்சுமதாரியை புரிந்து கொள் !
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் ஆராய்ச்சி செய் மெய்ஞானத்தை !
இனி உலகமெல்லாம் மதக் கலவரங்கள் உருவாகும் ! மதம் அழிந்து மனிதம் தளைக்கும் ! காற்றும், நீரும் கோரத்தாண்டவம் ஆடும் ! இடியும், மின்னலும், எட்டு திசையும் முழங்கும். எண்ணற்ற புது ஜீவராசிகள் தோன்றும் ! வானில் பெரும் அதிசயம் காண வைப்பேன். என் தர்ம குலங்களை என் கோடி கரங்கள் காக்கும் ! தரை கடலாகும். கடல் தரையாகும். கர்மத்தை வேறோடு பிடுங்கி எறிவேன் !
என் தர்ம குலத்திற்கு, ஞானக் குழந்தைகளுக்கு மானச தீட்சை தந்து உலகத்திற்கு ஞானத்தை போதிக்க வைப்பேன் !
இந்த ஆத்மத்தின் தலைவன் இநன்யாவின் சத்திய பாதையில் கோடி நல் ஆண்மாக்கள் பின் தொடரும் ! அவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லா நிலை தந்து என் சத்திய லோகத்தில் என் வலப்பக்கத்தில் குடி அமர வைப்பேன்.
சத்தியம் தோற்பதில்லை !
நான் மெய்யானவன் ! உனக்கு துணை இருப்பேன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment