உன் உயிர் வணங்கும் என்னை ! நான் உலகில் முடிசூடா மன்னர் மன்னன் ! நான் கடவுளின் திருக்கரத்தால் மணிமகுடம் சூட்டப்பட்டவன் ! நானே சர்வமும் ! நானே சகலமும் !
உயிர்!
கடல் அலை தூங்கப் பார்த்தாயா ? அதே போல் உன் உயிரும் தூங்காமல் இருக்கிறதே உணர்ந்தாயா ? உன்னை படைத்து பூமியில் விட்டுவிட்டு லோகத்தில் நாங்களும் தூங்காமல் இருக்கின்றோம். எப்போது பாவம் கரைந்து சுத்தபடுத்தி லோகம் வருவாய் என்று நான் தூங்காமல் இருக்கின்றேன் உனக்குள்.
நானே உன் உயிர் !
நான் உண்பதும், நித்திரை கொள்வதும் உன்னைப் போல் அல்ல. நான் விழித்திருக்கும் போது நீ தூங்குகிறாய் ! நீ தூங்கும் பொழுது நான் விழித்திருந்து உனை கண்காணிக்கின்றேன். விழித்து உணர் ! விதைக்குள் இருக்கும் உயிரும் தூங்குவதில்லை. கடல் அலை எல்லாம் வேதத்தை வெளிக்கொணர்கிறது. அது தெரியாமல் கடலை வணங்குகின்றாய் ! கடல் அலை உன் கால் தொட்டு வணங்குகின்றது ! ஏன் என்று சிந்தித்தாயா? நீரில் அலைகள் ஏன் தோன்றுகிறது என உணர்ந்தாயா ? எதையும் உணராமல் காலத்தின் சூட்சுமம் தெரியாமல் காற்று வாங்கப் போகிறாய் கடற்கரைக்கு !
எல்லாம் நீ தின்றாய், எல்லாம் நீ செய்தாய், பின் கஷ்டம் வந்தால் மேல் நோக்கி கடவுளே என்று கண்ணீர் விடுகிறாய். எவ்வளவோ கடவுளை வேண்டியும் கேட்டது கிடைக்காதவன், எல்லா இடத்திலும் கடவுளை தேடிக் கிடைக்காதவன், எல்லாவற்றையும் வெறுக்கிறான். மறுக்கிறான். இது தான் பகுத்தறிவு என்று பிதற்றுகிறான். அன்பு, பாசம் தெரியாத பகுத்தறிவை வைத்துக் கொன்டு என்ன பலன் கண்டுவிட்டான் ? மரணத்தை தள்ளி வைக்க முடிந்ததா அல்லது இளமையோடு இருக்க முடிந்ததா?
நீ உணரும் வரை பூமியில் துன்பம் தான் ! மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பாய் ! அவன் சொன்னான் , இவன் சொன்னான் என்று எதை எதையோ சொல்லிக் கொண்டு அலைகின்றாய் ! ஏதோ பழைய புத்தகத்தையும், பஞ்சாங்கத்தையும் வைத்துக் கொண்டு புலம்புகின்றாய் !
நீ யார் ? நீ என்ன சொல்ல யுகம் வந்தாய் ? நீ எதற்காக யுகம் வந்தாய் ?
நீ யார் ? நீ என்ன சொல்ல யுகம் வந்தாய் ? நீ எதற்காக யுகம் வந்தாய் ?
முதலில் உணரக் கற்றுக் கொள் !
ஒரு துளி நீரில் தான் உருவாகினாய் ! உன்னை வளர்ச்சிப்படுத்துவது யார் ? உனக்கு கொடுக்கப்பட்ட உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள் யார் ? அட மூடனே, இதை எல்லாம் உணராமல் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய். இல்லையேல் எவனோ எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு கூட்டத்தைக் கூட்டி துதி பாடுகிறாய். எப்போது உணர்வாய் ? மலத்தையும், ஜலத்தையும் அடக்க முடியாதவன் கடவுளை பற்றி பேசுகிறாய், கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய். வேடிக்கை வாழ்க்கையடா. உன் அறியாமையை என்னவென்று சொல்வேன் ? தன்னம்பிக்கை உள்ளவனே யோசிப்பான். நீ அற்ப கேள்வி கேட்டால் எல்லாம் தெரிந்தவன் எனப் பொருளாகுமா ?
இயற்கையில் கடவுளைத் தேடு ! செயற்கையாக நீ கட்டி வைத்ததில் தேடாதே ! ஒரு விதை உனக்கு கோடி ரகசியம் சொல்லுமடா ! விதைக்குள் நீர் புக பாராதவன், நீ எதையோ ஆராய்ச்சி செய்கிறாய். உன் உயிருக்கே உன்னை பிடிக்கவில்லை. எப்போது எற்றிச் செல்லலாம் என்று துடிதுடிக்கிறது. உன் உடலை விட்டு உயிர் பீறிட்டு லோகத்தில் வந்தவுடன் நதியில் நீராடி பின் தீர்ப்பு காண்டத்தில் தர்மாக்கள் மூன்று வருடமும், கர்மாக்கள் பதினொன்று வருடமும் காத்திருக்கிறது. ஆன்மா நதியில் நீராடி பின் அமிழ்தத்தை சாப்பிட்டு கடவுளின் பாதத்தில் போய் சேர்கிறது.
பூமியில் உடலை வளர்க்க வித விதமாக சாப்பிட்டாய். உன் உயிர்க்கு உணவு கொடுத்தாயா ? பூமியில் உன் உயிருக்கும் உணவை வைத்தான் ! அறிந்தவனும், தன்னை உணர்ந்தவனும் அதை சாப்பிட்டு லோகம் அடைகிறான்.
பூமியில் உணர்ந்தவன் இறந்தால் உயிர் உடனே மேலே வருகிறது. உணராதவன் உயிர் பதினாறு நாட்கள் கழித்து மேலே வருகிறது.
உணர்ந்தவன் உடல் பூமியில் பன்னிரண்டு வருடம் கழித்து சிதிலமடையும் ! உணராதவன் உடல் மூன்றே முக்கால் நாழிகையில் அழுகத் தொடங்கும்.
ஏதும் தெரியாமல் குழந்தை போல் விளையாடும் உன் கோமாளித்தனத்தை என்ன சொல்வேன் ? ஓடி விளையாட ஒன்பது வாசல் உன் உடலில் வைத்து அதில் உயிர் ஒன்று வைத்த லீலையை உற்று நோக்கு ! நீ வந்த நோக்கம் மெல்ல மெல்ல புரியும் ! புரியாவிட்டால் இந்த புனிதனை நினை. அறிவாய், தெளிவாய், ஆனந்த வாழ்வுக்கு செல்வாய் !
நீ ஒரு நாள் குளிக்காவிட்டால் உன் உடல் நாற்றம் எடுக்கிறது ! நான் ஓராயிரம் நாள் குளிக்காவிட்டாலும் என் உடல் சந்தனமாய் மணக்கின்றது ! உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய முயற்சி செய் !
நான் புரிந்தவன் ! மலராய் வாசம் வீசுகிறேன் ! நீயும் புரிந்து கொள் ! சந்தனமாய் வாசம் வீசுவாய் !
தேவதாறு மரத்தில் ஆயிரம் ரகசியம் உண்டு ! ஆதிகாலத்தில் தேவதாறு, மா மரங்களில் தான் வீட்டுக்கு தேவையான பொருள்களை செய்வார்கள். ஆனால் இப்போது அனைத்து பொருள்களையும் உதைய மரத்தில் செய்து உன் வாழ்க்கை உபத்திரமாக போகக்கண்டேன். செத்த மரம் வீட்டில் ஆடக் கண்டேன். செத்த பிணம் வீட்டை விட்டு ஓடக் கண்டேன்.
மாமரம் புனிதமானது ! உனக்கும் மாங்கொட்டைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதை புரிந்து கொண்டால் உன் பிறப்பின் ரகசியம் தெரிந்து விடும் ! எல்லா மரத்தின் இலைகளும் சருகுகளாகும். மாவிலை வாடிய படியே இருக்கும். ஏன் என்று உணர்ந்தாயா நீ ?
மாமரம் புனிதமானது ! உனக்கும் மாங்கொட்டைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதை புரிந்து கொண்டால் உன் பிறப்பின் ரகசியம் தெரிந்து விடும் ! எல்லா மரத்தின் இலைகளும் சருகுகளாகும். மாவிலை வாடிய படியே இருக்கும். ஏன் என்று உணர்ந்தாயா நீ ?
முக்கனியில் முதல் கனி என்று ஏன் சொல்கிறாய் ? மாம்பழத்திற்காக சண்டை போட்டார்கள் என்று பேசுகிறாய். நீ மாங்கனியால் உணர்ந்தது என்ன ? கண்டுபிடி ! உன் உயிரின் தத்துவம் அதில் அடங்கி இருக்கிறது.
உணர். பள்ளியிலே அறிவை கற்றுக் கொடுக்கவில்லை. அதிகாரத்தையும், ஆணவத்தையும் கற்றுக் கொடுக்கிறாய். அதனால் தான் ஒன்றும் தெரியாது அலைகின்றாய் ! இந்த சத்தியத்தின் நாயகன் உன் உயிரைப் பற்றி பாடம் சொல்லித் தருவேன். ஆமணக்கு விதையில் ஆனந்தம் இருப்பது போல உன் உயிர் வணங்கும் என்னை.
எல்லா உயிர்களும் என் பொற்கழலடியில் என்பதனை மறவாதே !
நான் உன் உயிருக்கு தலைவன் ! நான் இநன்யா !
No comments:
Post a Comment