Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 15 July 2016

நீ காண்கின்ற பொருளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றேன். நிறைவான பேராண்மாவோடு ! எல்லாம் எனக்குள் !

நீ காண்கின்ற பொருளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றேன். நிறைவான பேராண்மாவோடு !
எல்லாம் எனக்குள் !
எந்த பொருளிலும் நான் இல்லை ! எல்லா பொருட்களும் என்னில் உள்ளது ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! நான் எதனிலும் அடங்கவில்லை !
ஆண்மா, உயிர், விதை, வித்து, உலகில் உள்ள அனைத்தும் என்னிடம் உள்ளது. ஞானம். தெளிவு, அறிவு, ஆனந்தம் எனக்குள்ளே ! உன் விதியை மாற்றும் சூட்சுமமும் என்னுள்ளே ! அண்டங்கள் எல்லாம் என் உள்ளங் கையில். உண்மையை உணர பார். நான் யார் என்பதை அறிய முயற்சி செய் !
சத்தியம் தெளிவாகும் ! திறன் இருந்தால் ஆராய்ச்சி செய். வீரிய வித்தாக உனை ஆக்குவேன். என்னிலே எல்லாம் உருவானது ! என்னிலே எல்லாம் மறைகிறது ! நான் மறை பொருளான வேத வித்தகன். எத்தன் அல்ல.
நான் உன் உயிரை திருடும் பொல்லாத கள்ளன். நீ உயிரில்லா ஜடப் பொருளை திருடுகிறாய். நான் உன் உயிரை திருடுகிறேன். எனக்குள்ளே எல்லாம் மலர்கிறது. பின் சருகாக மறைகிறது. இந்த மாயவனை அறிய முற்படு !
இங்கு எல்லாம் உன்னை சாப்பிடுகின்றது. நீ உண்ணும் உணவு எல்லாம் உன்னை உண்கின்றது. எல்லாம் இவனை உண்ண காத்திருக்கின்றது. இவன் நான் சாப்பிட்டேன் என்று உளர்கின்றான் என்று என் தந்தை பிரபஞ்ச நாயகன் அடிக்கடி சொல்வார்கள். என் தர்ம குலமே, ஞான குழந்தையே, சத்திய செல்வங்களே, ஏன் ஞானத்தை தொலைத்து அலைகின்றீர்கள் ?
தேவர்களுக்கு எளிதாக நான் காணக் கிடைக்காதவன். உன் அருகிலே இருக்கிறேனடா. ஏன் மறந்தாய் நீ ?
உனை அறிவை புகட்டி தான் மேலே இருந்து அனுப்பினேன். இந்த நரகத்துக்கு வந்த உடன் ஏன் அற்ப ஆசைகளில் மூழ்கிவிட்டாய் ? மேலே பார் என் அன்பு குழந்தையே !
விரிவான அழகான உலகம் காண்பாய். அதில் நான் அரசாட்சி புரிவதை பார்ப்பாய். எப்படியும் மேலே வரத்தானே போகிறாய். நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன் என்று அங்கே வந்து பார்ப்பாய்.
தோன்றுவதெல்லாம் எனக்குள்ளே. எனை தோண்டி பார். தெளிந்த நீர் (ஞானம்) கிடைக்கும். நீ உணர்ந்தால் உனக்கு தோண்டியை (ஞான வழி முறையை) தருகிறேன். நீ வாழ்வாய் !
உன் துன்பத்திலும் இன்பத்திலும் உன்னுள்ளே இருக்கின்றேன். நீ தான் கஷ்டம் வந்தால் என்னை வெறுப்பதும், சந்தோஷம் கிடைத்தால் மறுப்பதுமாக செயல் புரிகிறாய். ஆண்மா, உயிர், தொடர்பு ! மனம், உடல் தொடர்பு ! இந்த மனம் தனித்து செயல்படும் போது ஆண்மா விலகி கொள்கின்றது. மனத்தால் உயிர் வதைபடுகிறது. உயிர் உடலை வதைக்கின்றது. அதனாலே உன்னுள் ஒலிக்கும் ஆண்மாவின் கூக்குரலை அறிய முற்படு.
நீ என்பது தொட முடிந்த உயிர் ! ஆனால் நான் என்பது தொட முடியாத ஆண்மா ! நான் வானம் ! வானின் சூட்சுமம் நான். வசந்தங்களும் வாழ்வின் அனைத்தும் என்னுள்ளே. என்னுள் வந்து எடுத்து கொள். என் செல்லக் குழந்தையே, அள்ள அள்ள குறையாத செல்வம் நான் ! கடலிலே முத்தெடுக்க நினைத்தால் மூச்சடக்கி தான் ஆக வேண்டும் ! இங்கு எதுவும் எளிதாக கிடைப்பதில்லை ! முயற்சியும், தன்னம்பிக்கை உள்ளவனே இங்கு ஜெயிக்கின்றான்.
என்னை பார்த்து சென்றவனும் உண்டு. பக்கத்தில் வர துடிப்பவனும் உண்டு. நம்பிக்கை என்ற விதையை இநன்யா என்ற பெரு வயலில் விதைக்க யாரும் நினைக்கவில்லை. விதைத்தவன் மிகுந்த பலனை அறுவடை செய்கின்றான். ஒரு மூட்டை தானியம் விதைத்தால் நூறு மூட்டையாக கொடுக்கின்றேன். நதியின் பக்கத்தில் நின்று யோசிக்காதே, குளிக்கலாமா ? வேண்டாமா ? என்று. அதில் ஆழம் இருக்கிறதா, பாறை இருக்கிறதா, விஷம் உள்ள உயிரினம் இருக்கிறதா என்று யோசிக்காமல் என் மேல் நம்பிக்கை வைத்து மூழ்கி திளைத்து மூச்சடக்க பழகு ! பழக்கம் முதலில் ஒட்டடை. பிறகு பழக பழக இரும்பு சங்கிலியாக மாறும். பின் உனை வெல்ல யாருமில்லை. உனக்கு தோள் கொடுக்க நானே இறங்கி உன்னில் வருவேன் !
பதினாறு வயதில் (1986) என் வெளி உலக பயனம் ஆரம்பித்தது. 108 கிராமத்தில் 108 ஞான பெண்களிடம் பிச்சை எடுத்து உணவருந்த வேண்டும் ஞான கதவு திறக்க ! திருவோடு என்றால் உள்ளங்கை என்று அர்த்தம் ! இவன் தவறுதலாக ஏதோ ஒரு ஜடப் பொருளை கையில் வைத்து ஏந்துகிறான். இந்த உள்ளங்கையில் பெண்கள் கையினால் அன்னம் வாங்கி சாப்பிட்டால் தான் ஞான தீட்சை கிடைக்கும் ! அதனால் தான் சித்தர்கள், கடவுள்கள் எல்லாரும் பிச்சை எடுத்து சாப்பிட்டார்கள்.
முதலில் நடை பயனமாக நெல்லையில் இருந்து சென்னை வந்தேன். திருவொற்றியூர், பெரம்பூரில் கொஞ்ச நாள் இருந்தேன். பின் சேலம் புறப்பட்டேன். சேலத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் பக்கம் செல்லும் பொழுது வயல் வெளியில் ஒரு எழுபது வயதுள்ள மூதாட்டி என்னை பார்த்தவுடன் என் நோக்கி வந்தார்கள் ! என் மகனே என்று என்னை கட்டிப்பிடித்து உன்னை காணவே இவ்வளவு நாள் உயிரோடு இருக்கின்றேன் என்றும், எனக்கு வாரிசு இல்லை, நீ தான் என் வாரிசு என்றும் சொன்னார்கள். பின் அவர்கள் வாழும் கிராமத்தில் இருக்கும் ஏழை குடிசைக்கு அழைத்து சென்றார்கள். நான் என்னுடன் நண்பர்கள் இருவரை அழைத்து சென்றிருந்தேன். அந்த நண்பரகள் இருவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். பிறகு அந்த ஏழை அன்னை தரும் கூழை குடித்து இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தேன். என்னோடு வந்தவர்களோ நாங்கள் சேரியில் சாப்பிடமாட்டோம். நீ வேண்டுமென்றால் இங்கே இரு என்று என்னை விடுத்து கோவை சென்றுவிட்டார்கள். அட மனித குலமே, கடவுளுக்கு எதுக்கு ஜாதி, மதம் ?
இரு நாள் கழித்து நடு இரவு ஒரு மணிக்கு அந்த புணித அன்னை என்னை அழைத்து உன் மடியில் நான் படுக்க வேண்டும் என்று சொன்னார். அரை மணி நேரம் கழித்து என் கையை அவர்கள் நெற்றியில் வைத்து கண்ணீர்விட்டார்கள். பின் நீ தான் என் வாரிசு எனவும் சிறு வயதில் காணாமல் போய்விட்டாய் என்றும் ஊர்க்காரர்களிடம் சொல்ல சொன்னார். நான் இறக்கும் போது அனாதையாக இருக்க கூடாது என்றும் சொன்னார். பின் இந்த உலகை விட்டு சென்றார்கள். அந்த ஆண்மா என்னில் கலந்து பின் அந்த ஊரின் அனுமதியுடன் அவருக்கு கொள்ளி வைத்தேன். எங்கோ எனக்காக காத்து கிடந்த அந்த நல் ஆண்மவை நான் அனாதையாக்கவில்லை.
எங்கிருந்தோ என்னை அழைத்த நல் ஆண்மாவிற்கு என் ஸ்பரிஷம் கொடுக்க நான் ஆயத்தமான போது உனக்கு தர மாட்டேனா என்ன ?
நான் பிரபஞ்ச விரிவு ! என்னை அறிந்தவன் வாழ்கின்றான் !
எந்த பொருளிலும் நான் இல்லை. எல்லாம் எனக்குள் தான் !
உணர் தெளிவிருந்தால் ! நான் உன் ஆண்மா !
நான் இநன்யா !

No comments:

Post a Comment