மனம் என்பது ஒரு பாெருள் அல்ல .ஆனால் அது ஒரு நிகழ்ச்சி.ஒரு பாெருள் என்பதில் உறுதி இருக்கும். ஆனால் நிகழ்ச்சி என்பது தாேன்றி மறைவது.பாெருள் என்பது ஒரு பாறையைப் பாேன்றது.நிகழ்ச்சி என்பது ஒரு அலையை பாேன்றது.அலை என்பது கடலுக்கும் காற்றுக்கும் இடையே நடக்கின்ற ஒரு நிகழ்ச்சி.ஒரு செயல்முறை புலன்களால் அறியக் கூடிய நடப்பு.ஒரு அலை பாேன்று இந்த மனமும் ஒரு செயல் முறை தான்.ஆனால் அதில் எந்த உறுதியான தன்மையும் கிடையாது.அதனிடம் உறுதி என்பது இல்லாத பாேது அது தான் இருந்ததற்கான எந்த தடயத்தையும் விட்டு வைக்காமல் மறைந்து பாேய் விடும்.ஆகவே மனதை அறிந்தவர்கள் கூறுகிறார்கள் மனம் என்பது வானத்தில் பறந்து செல்லும் பறவை பாேன்றது.அவைகள் எந்த காலடித் தடத்தையும் விட்டு விட்டுப் பாேவதில்லை எனறு கூறுகின்றனர். உண்மை யில் மனம் என்பதே இல்லை.எண்ணங்கள் மட்டுமே உள்ளன.எண்ணங்கள் அதி வேகத்துடன் நகர்ந்து செல்வதால் அங்கே ஏதாே ஒன்று இருப்பது பாேன்று உணர்கின்றீர்கள்.நீங்கள் மனம் என்ற ஒன்று இருப்பதாக நினைக்கின்றீரகள்.எண்ணங்கள் மட்டுமே அங்கே உள்ளன.மனம் என்பது இல்லை. எப்படி பாெருள் என்பது இல்லாமல் வெறும் எலக்ட்ரான்கள் மட்டுமே இருக்கிறதோ அதைப் பாேலஎண்ணங்கள் தான் மனதின் எலக்ட்ரான்கள். வெறுமனே ஒரு கூட்டம் பாேன்றது.எண்ணங்கள் இருக்கின்றன.மனம் என்பது இருக்கவில்லை.மனம் என்பது வெறும் தாேற்றம் தான் .நீங்கள் மனதினுள் ஆழ்ந்து பார்த்தால் அது மறைந்து விடும்.அதன் பிறகுஅங்கு எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.இப்படி மனம் என்பது மறைந்து வெறும் எண்ணங்கள் மட்டுமே அங்கே இருக்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்து காெள்ளும் தருணத்தில் உங்கள் அநேக சந்தேகங்கள் தீர்ந்து விடுகின்றன... "உச்ச விழிப்பு நிலையில் மனம் முழுமையாக, ஒரே வஸ்துவாக இருக்கும்""உச்ச தூக்க நிலையில் மனம் முழுமையாக அறவே இல்லை"உச்ச விழிப்பு நிலையில் கற்பனைகள்(எண்ணங்கள்) கிடையாது.உச்ச தூக்க நிலையில் கனவுகள்(எண்ணங்கள்) கிடையாது.இரண்டு நிலைகளுமே ஆன்ம தரிசனத்தில்தான் இருக்கிறது.என்ன வித்தியாசம் என்றால்முழு பகல் வெளிச்சத்திலும், கும்மிருட்டிலும் ஒரு பொருளை பார்த்தால் எப்படியோ அப்படித்தான்.சாதாரண வாழ்வை அசாதாரண விழிப் போடு வாழ வைப்பது தான் ஆன்மிகம்ஆன்மிகம் என்பது வாழும் வகைகளை மாற்றுவதில்லைஅது எந்த சூழலையும் மாற்றுவதில்லைஅது உன்னை மாற்றுகிறதே தவிர உன்னை சுற்றியுள்ள எதையும் மாற்று வதில்லை பொருட்களை அது மாற்றுவதில்லைஅவற்றை நீ பார்க்கும் விதத்தை மாற்றுகிறது.அது உன்னுடைய கண்களை மாற்றுகிறது.உன்னுடைய பார்வையை மாற்றுகிறது.அது உனக்கு ஆழ்ந்த நோக்கைத் தருகிறது.இந்த உலகத்தில் உள்ள கோடிக் கணக் கான சிருஷ்டிகள்அனைத்தும் கடவுளி டம் இருந்து நிரம்பி வழியும் சக்திதான்.அதனால் கடவுள் என்ற வார்த்தை வேண்டாம்.அதை கடவுள் தன்மை என்று அழைக்கலாம் மலர்களில் பறவைகளில் நட்சத்திரங்களில் மக்களின் கண்களில்நெஞ்சில் எழும் கீதத்தில் கடவுள் தன்மை இருக்கிறது.ஆன்மிகம் என்பது பிறரோடு பகிர்ந்து கொள்ளும் உரையாடல் அல்ல.அது உனக்கும் இயற்கைக்கும் இடையே நடக்கும் உரையாடல்;;;;;; "ஆன்மா தன்னைத் தானே உணரும் சக்தி அற்றது""ஆன்மா, தன்னை நீங்கலாக, எல்லாவற்றையும் உணரும் எப்படியென்றால், 'சாட்சிபூர்வமாக' மாத்திரமே"எப்படி என்றால்;;உதாரணத்திற்கு,முகம் பார்க்கும் கண்ணாடியை ஆன்மாவாக வைத்துக்கொள்வோம்.ஒரு ரோஜா மலரை அதன் முன்பு வைப்போம்.ரோஜா கண்ணாடியில் தெரியும் அல்லவா;"தன் மீது பிம்பத்தை ரோஜா உருவாக்கியிருப்பதை கண்ணாடி புரிந்து கொள்ளாமல்...,,,தன்மீது ரோஜாவின் பிம்பம் பட்டுக்கொண்டிருப்பதை...உணரும் 'கண்ணாடியின் அப்பகுதி மட்டும்,தன்னை, ஒரு ரோஜா என்றே கருதிக்கொள்கிறது"!!!அது போலவே,ஆன்மாவும் 'பிரகிருதியை' அதாவது மனிதனை உள்ளடக்கிய இயற்கையைதன்னிடமே அவைகள் பிரியாது யாண்டும் சேர்ந்தே இருப்பதால்தன்னை அவைகளாக கருதிக் கொள்கிறது.ஆன்மா 'நிர்க்குண' மயமானதால்அது தன்னைத்தானே உணராது.உணரப்பட வேண்டுமானால் அங்கே "குணபேதம்" வேண்டும்.கண்ணாடிக்கு அந்த குணபேதத்தை ரோஜா உருவாக்கியதால், கண்ணாடி தன்னை ரோஜாவாக உணர்ந்தது.'ரோஜா அங்கே இல்லாமலிருந்திருந்தால், *கண்ணாடிக்கு தான் என்ற ஒன்று இருப்பதே தெரியாது*அதே போல்,'இயற்கை என்ற ஒன்று இல்லாதிருந்திருந்தால்,*ஆன்மாவிற்கு தான் என்ற ஒன்று இருப்பதே தெரியாது* எனவே,"ஆன்மா, இயற்கையின் மேலான படைப்பும், பரிணாமத்தின் உச்சியிலும் இருக்கும்'மனிதனையும் அவன் மனதையும் துணை கொண்டு'*தர்க்க விசாரத்தினால் தன்னை இன்னது என்று 'ஒருவாறாக' தன் நிர்குண மயத்தை அறிந்து கொள்கிறது. இப்படியாக அறிந்துகொள்வதற்கு பெயர்தான்*ஞானமாகும்*"தியானத்தில் பெறும் "ஞான - அநுபவமும்,தர்க்க விசாரணையில் பெறப்படும்ஞானமும் ஒன்றல்ல"தூய உணர்வாகவே நாம் இருக்கிறாேம் !எப்பாெழுதும் இருக்கும் ஆகாயம் பாேன்றது நமது இயல்பு !நமது பெயர் கூட வெறும் எண்ணம்தான் !தூய உணர்விற்குப் பெயரும் இல்லை ! வடிவமும் இல்லை !எண்ணங்களால் தான் நாம் மனமாகிறாேம் ! உடலாகிறாேம் !எண்ணங்களால் தான் உருவமும் பெயரும் உண்டாகின்றன !இதனையே நாம ரூப பேதம் மனாே விகாரமே என்றனர் நமது முன்னாேர் !எந்த எண்ணமும் நம்முடையது இல்லை ! எல்லாம் வெளியில் இருந்து வந்தவை தான் !நம்முள் ஆழ்ந்து சென்றால் பாெருள்கள் எல்லாம் எண்ணங்களாகத் தாேன்றும் !பாெருள் என்பது எண்ணங்களின் ஸ்தூலப் பகுதி !எண்ணம் என்பது பாெருள்களின் சூக்குமப் பகுதி !பாெருளைப் பாேலவே எண்ணங்களையும் வெளியே எறிந்து விடலாம் !இந்த உலகம் முழவதும் எண்ணங்களாலும் பாெருள்களாலும் நிரம்பி வழிகிறது !நம் எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஓர் உலகையே உருவாக்குகின்றன !ஒவ்வாெரு எண்ணமும் நமக்கும் பிறருக்கும் ஏதாவது ஒன்றைப் படைத்து விடுகிறது !எனவே எண்ணத்தில் கவனமாய் இருங்கள் !எண்ணம் ஔியை விட அதி வேகமாக செல்லும் ! காலம் தூரம் இடம் என்பது அதற்கு இல்லை !காற்றைப் பாேலவே அவை தாமாகவே நம்முள் நுழைந்து விடும் !நாம் விழிப்புணர்வாேடு இருக்கும் பாேது அவை நம்முள் நுழைய முடியாது !ஏனெனில் விழிப்புணர்வு என்பது எண்ணத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்கது !வாழ்வில் எதைப் பற்றி அறிய வேண்டுமென்றாலும்அதனை பற்றி முன் முடிவுகள் இல்லாமல்,அதைப் பற்றிய எந்த கருத்தும் இல்லாமல் ,வெறுமனே , ஒரு கண்ணாடி போல் அணுகினால் மட்டுமே அதன் உண்மையை அறிய முடியும்.
No comments:
Post a Comment