Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தர் ஆவது எப்படி ?பகுதி ஏழு ;;;மர்ம யோகி

சித்தர் ஆவது எப்படி ?பகுதி ஏழு :--- 
******************************************
சாமியே சரணம் குருவே சரணம்
சாமியே சரணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.. சாமியை பிரித்தால் ச்+ ஆம்+ ஆக பிரியும்.. ச் என்ற நிகழ் காலம் ஆம் என்று அப்படியாய் என்று இருப்பவனே என பொருளாய் அமையும்... சாமி என்றால் நிகழ் காலமாய் இருப்பவன் என பொருள்.. சாமியே என்று கடவுள் சிலைக்கு முன் வேண்டும் பக்தன், சிலையை சிலையாகத் தான் பார்கின்றானே தவிர அதை சாமியாக பார்ப்பதில்லை..வேண்டுதல் என்ற செயல் பாட்டிற்கு முன்னே நிகழ் காலம் காணாமல் போய் விடுகிறது.. எண்ண ஆதிக்கங்கள் விளைவாக வேண்டுதல் எதிர்காலமாக தொடர்ந்தால் அங்கே நிகழ் காலம் இருக்க முடியாது.. சிலை என்பது ச் + இலை அதாவது நிகழ் காலம் இல்லை என பொருள்.. அது மட்டுமா மனிதன் சிலை அல்லாத உயிரோட்டம் உள்ள ஜீவர்களையுமே சிலை வடிவாகத் தான் பார்க்கிறான்.. அப்படி அன்பு நிலை இல்லாது சிலை வடிவாக அனைத்தையும் காணும்
பண்பு எதனால் வந்தது?.. நீர் பூதமாகிய சித்தத்தில் நிறைந்துள்ள பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கமே காரணம்.. சிவம் என்ற சொல் நிகழ் கால குறிக்க வந்த சொல் என்பதை முன்பே அறிந்தோம்... அந்த நிகழ் காலமாய் மாறினால் மட்டுமே அன்பு என்பது உருவாகி சிவமே அன்பாகும் அல்லது அன்பே சிவமாகும்.. இந்த நிகழ் காலத்தில் அன்பு ஒன்று மட்டுமே உருவாகி இருப்பதால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இருக்கவே இருக்காது..
இப்படி சிலையை சாமி ஆக்க, அன்பு மலர, சிவம் தோன்ற,நிகழ் காலம் உதிக்க ஒரு சக்தி தேவை படிகிறது அல்லவா அது தான் குரு என்பது... அந்த குரு, இரு என்ற நிலையில் இருந்து உருவாகிறது.. இரு என்ற இருத்தல் நிலை உருவாகும் வரை குரு தோன்றவே மாட்டார்.. எல்லா எண்ணங்களும் கற்பனை செயல் வடிவாய் இருப்பதால் இருத்தல் என்பது அதற்கு தெரியவே தெரியாது... செயலாகிய இயக்கம் இருக்கும் இடத்தில் எப்படி இருத்தல்,நிலைத்தல், ஒய்வு, அமைதி இருக்க முடியும் ?... கற்பனை செயல் வடிவமாக, பிரகாசமாக இருந்து, கனல் என்ற பேரண்ட மூல ஆற்றலை, விரையமாக்கும்... சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இல்லாத ஒரு இடம் தான், தொட்டு காட்டக் கூடிய தகுதியான ஒரு இடம் ஆகும்.. அங்கே மட்டுமே, இருத்தல் என்ற கனலின் இருப்பு நிலையை அடையாளம் காண முடியும்.. கனலின் இருப்பு நிலை என்பது கனலின் நிலையாய் நின்ற நிலை அதாவது static energy.. அதாவது கனல் சேமித்த அல்லது சேமிக்கப் பட்ட நிலை... இந்த சேமித்த கனல் தான், புத்தி என்ற பூதமாய் பேரறிவின் துணையோடு சக்தி வாய்ந்த குருவாய் மலர, உருவாகத் தொடங்குகிறது.. குரு என்பது பிரிந்தால் க்+உரு ஆகும்.. க் என்றால் கடவுள் தன்மையிலிருந்து பெறும் கனல் சக்தி ஆகும்.. உரு என்பது உருவாகி பயன்பாட்டிற்கு வருவதாகும்...
சேமிக்கப் பட்ட கனலால் மட்டுமே, வலுவடைந்த புத்தி, குருவாய் எழுந்து செயலாற்ற தொடங்க முடியும்... அப்படி கனலை பெருக்கும் பயிற்சிதான் கனல் தீட்சை என்கின்றனர்.. திருவடி தீட்சையும் நாத தீட்சையும் நயன தீட்சையும் கனல் தீட்சையின் உட் பிரிவாக உள்ளன... ஆனால் வாசி யோகத்தில் இந்த கனல் தீட்சை மிக மிக எளிமையானது.. விரைவில் கனலை அதிகப் படுத்தக் கூடியது.. முறை தவறி போன வாசியோகத்தில் அங்கே கனல் பெருக்கத்திற்கு பதிலாக கனல் சுருக்கம் ஏற்பட்டு புத்தி வலு இழந்து போன அவல நிலைதான்.. ஆகவே முறையற்ற வாசியோகம், கனலை காட்ட தவறி விட்டது என்றே தோன்றுகிறது.. காரணம் தோன்றா நிலையாகிய பேரறிவு அதில் அனுபவப் படாததே...
வாசியோகத்தில் எவ்வாறு இந்த கனல் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை சற்று கவனிப்போம்.. குரு உருவாகாதவரை, சித்தத்தின் ஆதிக்கத்தை வேறு எந்த பூதத்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது... அதே சமயம் சித்தத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை குரு உருவாக மாட்டார்.. இந்த இக்கட்டான சூழ்நிலைதான் மனிதனை மேல் நிலைக்கு ஏற விடாமல் செய்கிறது.. இதிலிருந்து மீள தான் சித்தர்கள் வாசி யோகத்தை கண்டு அறிந்து பயின்றார்கள்.. சித்தத்திலிருந்து எண்ண ஆதிக்கங்கள் எழ அதற்கு சக்தி வேண்டும்.. சக்தி கிடைக்காவிட்டால் அது சித்தம் என்ற நீர் பூதத்தின் உள்ளே புதைந்தே கிடக்கும்.. கனல் சக்தி என்பது சதா காலமும் பேரண்ட பேராற்றலாய் சீராக கிடைக்கக் கூடிய ஓன்று.. எந்த ஏற்ற தாழ்வும் இன்றி சீராக கிடைக்கும் கனல் என்ற சக்தியை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் உறிஞ்சாத போது கனல் சற்று தேகத்திற்கு மனம் கொடுக்கிறது.. அப்படி பெற்ற ஆற்றலின் மூலம் தேகம், தான் தூக்கத்தில் பெற்ற ஆற்றலோடு இணைத்து ஈடு கட்டிக் கொள்கிறது.. சித்தத்தின் அதி மிக எண்ண ஆதிக்கம், அப்படி தேகம் ஈடு கட்டும் ஆற்றலையும், உறிஞ்சி வாங்கி கொள்ளும் போது, தேகம் விரைவாக ஈடு கட்டும் ஆற்றல் இன்றி சோர்வு அடைகிறது...
இதன் மூலம் அறியப் படும் இரகசியம் என்ன வென்றால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் வலு இழக்கச் செய்யும் முறையிலும், அப்படி வலு இழந்த கால அளவை நீடிக்க செய்வதின் மூலமும் புத்தி அதிக கனலை பெற முடியும்..
சித்தத்தை வலு இழக்க செய்ய வல்லது எது.. வாசி யோகத்தில் மூச்சின் சூரிய கலையாகிய வெளி மூச்சில் சித்தம் சிறுக சிறுக வலு இழந்து சூரிய கலையின் முடிவில் முழுமையாக வலு இழந்து விடுகிறது.. அந்த இடத்தை புத்தியும் அறிவும் பிடித்துக்கொள்ளும் பொழுது அங்கே அகப்படும் கனல் அனைத்தையும் புத்தியும் அறிவும் பெற்றுக் கொள்கிறது.. சூரிய கலையில் வலு இழந்த அந்த முடிவான இடத்தின் தளர்ந்த அமைதியான சூழ்நிலையை அனுபவமாக அறிவு பற்றிக்கொள்ளும்... அத்தகைய சூரிய கலையின் இரண்டரை விநாடி முழுமைக்கும் அளப்பறிய கனலை பெற்றுக்கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வினை எமது வாசி யோக பயிற்சியில் அனுபவப் பட்டீர்கள் என நம்புகிறேன்.. இதில் அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது.. இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது... நம் முறையான வாசியோகத்தில் இப்படியாக பெற்ற கனல் உருவாகி குரு பலமாகிறார்.. பலப் பட்ட குரு தான் நமக்கு எல்லா வகையிலும் புத்தியாக இருந்து சிறந்த வழி காட்டியாக இருக்கிறார்.. அனுபவ அறிவின் துணையை இனி வரும் பகுதியில் கண்டு குரு பீடத்தை வலு படுவதை காணலாம்...
இதுவும் இனி வரும் பகுதிகளும் சற்று கடினமானவை.. புரியாத முகநூல் அன்பர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கும் போது அதனுடைய பதில்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.. அப்படி முகநூலில் வெளிப்படையாக கேட்க தயக்கம் இருந்தால், message மூலம் தங்கள் தெரிவிக்கலாமே.. இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்..
சாமியே சரணம் குருவே சரணம் என்பது மேல் சொன்ன நிகழ் கால சிவநிலையையும், குரு நிலையையும் பணிந்து ஏற்கும் தன்மையை குறிப்பதால் அப்படி சரணம் பாடி பாடி, நம் வாழ்வு பொங்கவும் புதிய அன்பு வாழ்வினை ஆண்டு அனுபவம் பெறவும், இனி வரும் புத்தாண்டில் அந்த புனிதம் மலர முனைவோமாக... அனைவருக்கும் எனது இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment