Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தர் ஆவது எப்படி ?பகுதி ஐந்து ;;; மர்ம யோகி

சித்தர் ஆவது எப்படி ?பகுதி ஐந்து :-- 
********************************************
சிவமான சத்திய சித்தரின் பண்புகள்
இந்த தலைப்பில் வரும் தகவல்கள் மிகவும் சிக்கலானதும், திகைப்பினை தரக்கூடியதுமானது... ஆனாலும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும்.... முதலில் சித்தர்கள் தரிசனத்தை காண விரும்புவர்கள், அவரை எப்படி காண விரும்புகிறார்கள்.. தூல தேகத்திலா அல்லது சூட்சும தேகத்திலா ?.. இன்றைய கால கட்டத்தில் பலர் சித்தர்களை போல இருந்தாலும், அவர்களிடம் எதிர் பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து போனதினால், சித்தர்களை சூட்சும தேகத்திலே காண விரும்புகிறார்கள்.. அப்படி காண்பது ஒன்றே நம்ப தகுந்தாக உள்ளது... முகநூல் பக்கங்களில் சித்தரை கண்டவர்கள் எல்லாம் அவர்களின் ஒளி தேகத்தை மட்டுமே படம் பிடித்து பதிவு செய்வார்கள்... சித்தரை பற்றி அறியாதவர்கள், வேறு உருவங்களை 
படம் பிடித்து அவைகளை ஆவி என்று அநேக படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.. இப்படி சித்தரா அல்லது ஆவியா என்ற குழப்பத்தில் பலர் இருந்து இருக்கிறார்கள்.. அவர்கள் சித்தரை பற்றி அறை குறையாக அறிந்தவர்களே.. இறைவன் தரிசனத்தை கண்டவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தையே சூட்சும தேக வடிவில் சற்று மங்கலான ஒளி வடிவில் கண்டு இருக்கிறார்கள்... இப்படியாக கண்டு கண்டு களித்த மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்.. ஆனால் நேரடியாக எந்த உபதேசத்தையும், ஏதாவது பொருட்களையும் பெற்றதாக தெரிய வில்லை.. சிலருக்கு அப்படி நடந்து இருந்தாலும் அது மிகை படுத்திய ஒன்றாகவே முடிவில் இருந்து இருக்கிறது.. சிலருக்கு சித்தர் பழம் கொடுத்தார் என வைத்துக் கொள்ளுங்கள்.. அது எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தானே.. அதில் பரவசம் அடைய என்ன காரணம் ? ஒரு விசித்திரமான பழமாக, உதாரணத்திற்கு பழத்தின் ஒரு பக்கம் ஆப்பிளாகவும் மறு பக்கம் ஆரஞ்சு ஆகாவும் விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் கொடுத்து இருந்தால், ஏதாவது அர்த்தம் இருக்கிறது... ஆனால் அது போல் எதுவும் நடந்ததில்லை... இனியும் நடக்குமா என்பதிலும் ஐயமே உள்ளது.. மற்றொன்று, சித்தரின் விசித்திரத்தை கண்டவர்கள் அனைவரும் தனி தனியாகத் தான் கண்டார்களே தவிர கூட்டாக யாரும் காணவில்லை.. ஒருவர் அனுபவித்த அனுபவத்தை வேறு ஒருவர் உடன் இருந்து சாட்சியாக இருந்ததில்லை..
இந்த நிலையில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு... அவர் இஷ்டப்பட்டு வரும் நேரத்தில் மட்டுமே பக்தன் கவனிக்க முடியுமே தவிர தான் நினைத்த நேரத்தில், ஏங்கும் நேரத்தில், ஒரு நாளும் தரிசனத்தை கண்டு களித்ததாக செய்திகள் எதுவும் இல்லை.. காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலத்தை விட பெரியது என்றார் வள்ளுவர்.. காலத்தில் காட்சி தராத, உதவாத சித்தரால் என்ன பயன் என்று மனித குலம் சிந்திப்பது இல்லை... ஏதோ நம்பிக்கையிலே மனித குலத்தின் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது; அதை ஏன் கெடுக்க முயற்சிக்க வேண்டும் என கேட்கலாம்.. மனிதனின் தவறான மீள முடியாத சிக்கி கொண்ட நிலையிலிருந்து மீள சில உண்மைகளை வெளிப் படுத்தும் பொழுது, சிக்குண்டதில் ஒடுங்கி போன நிலையில் இருந்து மனித குலம் மீள, சரியான வழி கிடைக்கலாம்... உண்மைக்கு புறம்பான செய்திகளில் சிக்குண்ட இந்த மனித குலம் இதுவரை இந்த சித்தர்களிடமிருந்து என்ன பெற்றது ?.. ஞானத்தையா அல்லது அசாதாரமான பலத்தையா?... முடிவில் மரணத்தை தவிர, அதையும் சமாதி என்ற கௌரவமான பட்டத்தை தவிர வேறு என்ன கிடைத்தது ?.. தனிப் பட்ட மனிதனுக்கு கிடைத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர ஒட்டு மொத்த மனித குலத்திற்கு என்ன செய்ய முடிந்தது ?.. காரணம் சித்தர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உள்ள மனிதகுலம் அத்தகைய மன கட்டமைப்பில் உள்ளவர்களையே அதாவது உடல் தோரணைகளில், உலக குடும்ப பந்தங்களில் இருந்து விலகி அன்பு என்பதையே என்னவென்று தெரியாதவர்களையே நம்மில் பெரும் பாலும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.. அத்தகைய வேசதாரிகளிடம் இருப்பது, சோம்பலும், ஒழுக்கமின்னையும், போதை பொருள்களில் சிக்குண்டவர்களாய் ஆற்றல் அற்று ஆனால் மிக பெரிய ஆற்றல் உடையவர்கள் போன்ற நடிப்பும், நடமாடும் தூல தேக நடை பிணங்களாய், தங்கள் பிழைப்பு ஓட்ட பயமுறுத்தி வாழ்வதுமே நாம் கண்டு கொண்டு வருகிறோம்.. பயமுறுத்தல் என்பது மிக பெரிய ஆயுதமாக கையாண்டு, தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.. இது இன்றைய நிலை...
பின் சித்தர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம் ? பேரண்ட பேராற்றலை பெற்ற காரணத்தினால், ஆற்றல் மிக்கவர்களாய், எதையும் சாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்.. பொருள் உதவிக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.. யாருக்காகவும் தன் இயல் நடை உடை பாவனைகளை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை... ஆற்றல் மிக்கவர்களாதலால் அன்பு என்ற மகா சக்தி உடையவர்களாதலால் உலக குடும்ப தொடர்புகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும் அவநிலை அவர்களுக்கு இல்லை.. உலகம் எத்தனை வஞ்சனைகள் செய்தாலும், எத்தனை தீங்குகள் செய்தாலும், தாய் உள்ளத்தோடு பொறுத்துக் கொண்டு, வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும், பாராபட்சமின்றி, வேண்டிய நேரத்தில் உதவக் கூடியவர்கள்.. இவர்கள் தன்னை தன் செயல்களை மறைத்துக் கொண்டு உலகிற்கு பலன் தரக்கூடியவர்கள்.. அரசாங்க பணத்தையே அள்ளி அள்ளி கொடுத்து தான் கொடுத்ததாக காட்டிக் கொள்ளும் விளம்பரதாரர்கள் அல்ல.. அன்பே உருவான இவர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மிக மிக எளிமையானவர்கள்... அதனால் தான் அப்படி இன்றும் வாழும் இவர்களை அடையாளம் காண முடியாமல், விளம்பர புகழ்ச்சி உலகில் சிக்கி கொண்ட மனிதன் தவிக்கிறான்... உண்மையான சித்தர் பண்புகளை அறிந்து கொண்ட இன்றைய எந்த மனிதனும், சித்தராக விரும்பமாட்டான்.. காரணம் எங்கும் எதிலும் ஆதாயம் தேடும் நிலையிலேயே மனிதன் உள்ளதால் சத்திய சித்தராக விரும்புவதே இல்லை.. ஆனால் சத்திய சித்தர் பண்புகளே அந்த சித்தர்க்கு பிரபஞ்சம் பேரண்டம் தன் பேராற்றலை வழங்கும் என்ற இரகசியத்தை மனிதன் அறிவதில்லை.. அதனால் தான் அன்பின் ஆற்றலே எழுந்த மனிதன் மட்டுமே சித்தராக முடியும் என்ற பெரும் பதிவினை மனதில் கொண்டு, அன்பே சிவம் என்ற சத்திய வார்த்தையில் சிவமாகி நின்ற சத்திய சித்தர் வழிமுறைகளை ஆராய்ந்து சித்தராக முனைவோம்.. தூலதேகத்திலும் சித்தராக இருப்பவரே சூட்சும தேகத்திலும் இருக்கும் வல்லமையை, பேரண்ட பேரறிவின் துணையால் பெற்ற காரணத்தினால், கண்டம் விட்டு கண்டம் நகரும் ஆற்றலும் உடையவராக இருப்பார்... அவர் ஒருவரே வேண்டிய நேரத்தில் துணையாய் வந்து நிற்பார்.. முதலையிடம் சிக்கிய யானை ஆதி மூலமே என்று அலறிய அக்கணமே வந்து உதவிய இறைவனை போன்று உதவும் வல்லமை உடையவராகவும் இருப்பார்.. வெறும் காட்சிகளை மட்டும் அளித்து காணாமல் போகும் மாயா தோற்றங்கள் கொண்ட சித்தரை போல் இல்லாமல், சத்திய சித்தராய் தேகம் உருவிலும், கண்டம் விட்டு கண்டம் இயங்கக் கூடிய சூட்சும சக்தியிலும் இருப்பவரே உண்மை சித்தர் ஆவார்.. இத்தகைய சித்தர் ஆகும் உளவுகள் உலகிற்கு நன்மை தரும் என்பதை மறக்காமல் இனி வரும் பகுதிகளை உற்று கவனிப்போமாக...
முதலில் கண்ட சித்தர் பிம்பங்கள் அனைத்தும் தனி பட்ட மனிதனின் மாயா மன தோற்றங்கள்.. இவைகளை முதன்முதலில் கண்டு ஏமாந்த மனிதன் இன்று வரை ஏமாந்து கொண்டே இருக்கிறான்.. கண்டேன் கண்டேன் என பரவச புலம்பலை தவிர வேறு ஒரு பலனை பெற இயலாதவனாய் இருக்கிறான்... இவைகள் எல்லாம் நெருப்பு என்ற பூதத்திலிருந்து பிரிந்து வந்த வெளிச்சம் என்ற கழிவால் ஆனது... ஆனால் நெருப்பு என்ற பூதத்தை முறையாக பயன் படுத்தி கனல் என்ற உயிர் ஆற்றலை பெறும் போது மட்டுமே சத்திய சித்தர் உருவாகிறார்.. அதற்கு சிவ கலப்பே உகந்த வழி.. சிவ கலப்பு என்பது ஒரு மதத்தை சார்ந்த சொல் அல்ல... அது ஒரு பயிற்சி.. புத்தி அறிவும் இணைந்து செயலாற்றும் உன்னத பயிற்சி.. இனி வரும் பகுதிகளில் அதில் கவனம் செலுத்தி காண்போமாக.... அகத்தியர், போகர், வள்ளலார், திருமூலர் சிவ வாக்கியர் அருணகிரி நாதர் போன்ற மகான்களை நாம் சித்தர்களாக போற்றி வணங்குகிறோம்... இப்போது நாம் அவர்களை மேலே குறிப்பிட்ட சித்தர் கருத்தோடு பொருத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு, அவர்களை பற்றி தெளிவான கருத்தினை பின்னால் பார்ப்போமாக...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பகுதி ஐந்தின் தொடர்ச்சி:-- சித்தர் ஆவது எப்படி?
*************************************************************
பகுதி ஐந்தில் அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பேரண்ட பேரறிவு தூண்டலால் மிக பயனுள்ள பதில்கள் கிடைத்ததால் அவற்றை ஒரு தனி பதிவாக போட்டால் நலமாக இருக்கும் என்ற உந்தலில் தனி பதிவாக பதிக்கப் படுகிறது...
1) கேள்வி:----- anban Arun- தொடர் பதிவுகளை படித்து அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது ஐயா . சத்திய சித்தர் வழிமுறைகளை பின்பற்றுவர்களுத்தான் வள்ளலார் போன்றவர்கள் உதவுவார்களா, ஐயா?

பதில் :---- கண்டிப்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், வள்ளலார் அல்லது வள்ளுவர் போன்றோர் தங்கள் கருத்துகளில் சத்தியமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் கருத்துகளை பிடிக்காமல், அவர்கள் வரவுக்காக காத்து இருப்பது கால விரயமே.. வந்தாலும் ஏற்கனவே சொல்லியதை தான் சொல்லப் போகிறார்கள்.. உதவுவா்ர்களா என்ற எதிர் காலம் நமக்கு தேவை இல்லை.. ஏற்கனவே சொல்லிய கருத்தின் இந்த கணத்தின் நடைமுறை யின் நிகழ் காலமே நமக்கு தேவை.. அந்த நிகழ் காலமே சிவநிலை.. மனம் நிகழ் காலத்தில் நிற்க முடியா்து.. அதனால் அது வள்ளலார் வரவுக்காக காத்திருக்க வைத்து எமன் வரவுக்கு விரைவு படுத்தும்..நிகழ் காலமே சிவநிலை என்பது சத்திய வாக்கு
*************************************************************************************************
2)
கேள்வி:---- நன்றி ஐயா... நிகழ்காலமே சிவநிலை என்று கூறுகிறீர்கள். ஆனால் மனம் நிகழ்காலத்தில் நிற்க முடியாது என்றும் சொல்கிறீர்கள், புரியவில்லை ஐயா..
பதில்:---நாம் மனமாக மனித இயல் நிலையில் இருக்கிறோம்.. தேவர்களும் கடவுளும் புத்தியாகவும் அறிவாகவும் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.. மனதிற்கு மேல் உள்ள காற்று பூதமாகிய புத்தியில் நாம் நிலைக்கும் பொழுது,நிகழ் காலத்தில் நிற்கும் திறமை பெறுகிறோம்.. புத்தி என்பது நிகழ் காலத்தில் மட்டுமே நிற்கும்.. சி ஆகிய மனதிலிருந்து ஆகிய புத்திக்கு மாறுவதே சிவ யோகம் அதாவது சிவ கலப்பு.. நாம் மனமாக இருப்பதில் இருந்து புத்தியாக இருக்கவே அல்லது மாறவே சிவயோகம்...புத்திமான் பலவான் என்பது உலகியலில் நிருபிக்கப் பட்ட ஒன்று... வள்ளலார் சித்தர்கள் கொடுத்த உளவுகள், பயிற்சிகள் நம்மை மனநிலையிலிருந்து புத்திநிலைக்கு மாற்றும் வல்லமை உடையது..
*************************************************************************************************
3)
கேள்வி :----- ஐயா, சுவாச ஒழுங்கு பயிற்சி மூச்சின் அலைநீளம் வெகுவாக குறைந்து சுவாசமற்ற நிலை ஏற்படுவது போன்ற நிலை ஏற்படுகிறது. அது சரியா அல்லது தவறா ஐயா ?
பதில்:--- சுவாச ஒழுங்கில் மனநிலையை விட்டு விழிப்பு நிலைக்கு போவதால், அந்த மனம் கடந்த நிலையில் அப்படி தோன்றுவது இயல்பே.. இந்த நிலை நாம் விழிப்பு நிலை முன்னேற்றத்தைக் குறிக்கும்.. தேகம் புத்தி அறிவின் தொடர்புக்கு உட்பட்டே இயங்குவதால் தேகம் தன்னை இயல்பாகவே காத்துக் கொள்ளும்.. மனம் என்ற குறுக்கீடு அதிகமாக உள்ள நிலையில் மட்டுமே தேகத்திற்கு மரணம் வருகிறது... உங்களின் சுவாசத்தில் உள்ள வேறுபாட்டை குறித்து ஐயப்படுவது மனமே.. நின்றால் மனம் பிடித்து விடும்.. தொடருங்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள்.. பின் தொடரும் மனம் சீக்கிரம் களைத்து பின் தங்கி விடும்.. பின் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விடும்..
*************************************************************************************************
4) கேள்வி :---சுவாச ஒழுங்கு பயிற்சியின் போதுசுவாசமற்.றநிலை ஏற்பட்டு பின்பு இரண்டு நிமிடத்திற்குபின்மெல்ல பழைய நிலைக்கு திரும்புகிறது சரியா?
பதில் :--சரியில்லைதான்.. ஆனாலும் அது வரவேற்க தகுந்த ஒன்று.. காரணம் மனம் சிறுக சிறுக பலப் பட்டு பழைய நிலைக்கு திரும்புகிறது... இப்பொழுது மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு வர வேண்டும்.. மனதால் கெட்டு போன சுவாச ஒழுங்கு, மீண்டும் மனதால் அதனை சரி செய்ய முடியாது.. அந்த நொடியில் சுவாச ஒழுங்கு ஏற்பட்டால் அது மனதுக்கு மேல் செயல் படும் புத்தியால் அல்லது அறிவின் துணையால் மட்டுமே நடைபெற வாய்ப்பு உள்ளது... இப்பொழுது நீங்கள் மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு வர தொடங்க , உங்கள் புத்தியாலோ அல்லது அறிவாலோ மட்டுமே அதை சாதிக்க முடியும்.. நீங்கள் மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு வந்து விட்டால் உங்கள் அறிவு மனதை வென்று இயங்க தொடங்கி விட்டது என்று தானே அர்த்தம்.. இப்படி சுவாச ஒழுங்கிலிருந்து தோற்று பின் அதை சரி செய்யும் ஒவ்வொரு முறையும், உங்கள் அறிவின் பலம் சிறுக சிறுக மனதின் ஆதிக்கத்தை விட பலமடைய தொடங்குகிறது.. இப்படியாக அறிவின் பலத்தை பெருக்கும், ஒரு உன்னத பயிற்சி வாசி யோகத்தில் மிக முக்கியமான பயிற்சி... இதற்கு நிகரான பயிற்சி எதுவும் இல்லை எனலாம்.. எங்கும் எப்பொழுதும் இடைவிடாமல் செய்ய முடிந்த இந்த சுவாச ஒழுங்கின் பயிற்சி மிக மிக எளிது.. ஆனால் இதை விட கடினம் எதுவும் இல்லை..
ஆனால் ஏன் இதை எவறும் கற்று தருவதில்லை என்றால் அறிவு என்ற ஆகாய பஞ்சபூதத்தின் தன்மையையும், அதன் காரிய பட்ட ஒன்றான் விழிப்பு நிலையையும் துளியும் உணராததே.. சிகரமாக திகழும் இந்த பயிற்சினை மீண்டும் மீண்டும் படித்து, நீங்கா பதிவாக சித்தத்தில் பதித்து கொண்டால் சித்தர் நிலை நோக்கி வேகமாக முன்னேறலாம்....

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment