Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தர் ஆவது எப்படி ?பகுதி ஆறு ;;; மர்ம யோகி

சித்தர் ஆவது எப்படி ?பகுதி ஆறு :-- 
**********************************************
புத்தியின் கனல் தன்மை
மனிதன் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறான் .. மனம் கொண்ட மனிதன் தன் மனதில் கனலாகவும் வெளிச்சமாகவும் இரண்டாக பிளவு பட்டு இருப்பதையே இதை குறிக்கின்றது... வெளிச்சமான உருவ பூதங்களான மண் நீர் பூதங்களை காட்டவும், கனலாய் அருவ பூதங்களான புத்தி அறிவினை வலு ஊட்டவும்,ஆக இரு செயல்களை மனம் செய்கிறது... வெளிச்சத்தை மனம் காட்ட காட்ட மனிதன் விலங்கியல் நிலைக்கும், கனலாய் மாற மாற மனிதன், தெய்வநிலைக்கும் செல்லுவதை முன்பே பார்த்தோம்.. இயல் நிலையில் மனிதன் வெளிச்சமாய் உள்ள நிலையில் யோக பயிற்சியின் மூலம் கனலை பெருக்கி தெய்வீக நிலைக்கு போகிறான்.. கனலை பெருக்காத நிலையில் தெய்வ நிலையை அடைய முடியாமல், மனிதன் மனிதனாக ஜென்ம ஜென்மாக பிறவி எடுக்கிறான் என மகான்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்... பிரபஞ்ச ஆற்றலை புத்தியின் மூலம் சுத்த கனலாக பெற்றுக்கொண்ட மனம் அதை வெளிச்சமாக மாற்றி உலகியலில் தொடர்புக்கு தன்னுடைய பஞ்ச பொறி புலன்களுக்கு செலவழிக்கிறது.. அப்படி செலவு செய்து பழக்கப் பட்ட மனம், பெற்ற மொத்த ஆற்றலையும், பொறி புலன்களுக்கே செலவு செய்ய துடிக்கிறது.. ஆனால் புத்தி அதனை தடுத்து விட்டாலும், புத்தியின் செயலில் தோய்வு ஏற்பட்டாலும், புத்தியின் பலத்தைக் காட்டிலும் மனம் மிகுந்த பலத்தோடு செயல் படுகின்ற பொழுது, புத்தி செயல் இழந்து போகும் போது, மனம் தான் பெற்ற கனல் சக்தி முழுமையையும் பொறி புலன் வாயிலாக தான் பெற்ற அனைத்து கனலையும் வெளிச்சமாக மாற்றி விடுகிறது... அப்படி வெளிச்சமாக மாறும் போது, எண்ண அலைகளை உருவாக்குகின்றது.. அப்படி உருவான எண்ண அலைகள் சித்தத்தில் உள்ள அதற்கு ஒத்த பழைய எண்ண பதிவுகளையும் தூண்டி எண்ண குவியல்களை ஏற்படுத்துகிறது.. இந்த எண்ண குவியலின் ஆதிக்கமே புத்தியும் அறிவும் தாராளமாக செயல் பட முடியாமல் தடையாய் அமைகிறது.. இந்த நிலையில் தான் புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் ஏற்படுகின்றது...
மனம் புத்தியிடம் இருந்து பெற்ற ஆற்றலை அதாவது கனலை வெளிச்சமாக மாற்றுவதை குறைக்க, குறைக்க; புத்தியில் கனல் பெருகி புத்தியின் செயல் திறன் அதிகமாகிறது.... வலுவடைந்த புத்தி அறிவினை முழுமையாக பயன் படுத்திகொள்ளும்..ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்தமாக சிக்கி கொண்ட நாம், மனதின் செயல் பாட்டால் அதாவது கனலை வெளிச்சமாக பூரணமாக மாற்றிய விதத்தால், அனைவரும் ஒட்டு மொத்தமாக புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் உடையவர்களாக உள்ளோம்... முதலில் எண்ண குவியலில் இருந்து விடுபட்டு பின் தனி தனி எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால் ஒழிய வெளிச்சம் மூலமாக ஆற்றல் குறைந்த அவல நிலையிலிருந்து மீள முடியாது... இப்போது நம்மை யார் மீட்பது என்பது தான் மிக பெரிய கேள்வி...
தடு மாற்றம் அற்ற திடமாற்றம் காண என்ன வழி ?
புத்தி என்பது பூரண கனல்.. கனலான ஒன்றே ஆற்றலானது.. புத்தியில் கனல் நிறைந்து புத்தி வலு பெற வேண்டும் என்றால் புத்தியிடமிருந்து கனலை கிரகிக்கும் மனதின் செயல் பாட்டை நிறுத்த வேண்டும்.. புத்தியிலிருந்து ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் மனம் கனலை பெற முடியாது.. புத்தியானது தன் தேவைக்கு வேண்டிய அவசியமான கனலை தன் பால் வைத்துக்கொண்டு சதாகாலமும் செயல் பட்டுக் கொண்டு இருக்கும்.. மனம் ஆனது புத்தியின் தேவைக்கு மேல் உள்ள கனலை பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கனல் இல்லாமல் சோர்ந்து தூங்கி விடும்.. ஆனால் புத்தி மட்டும் சதா காலமும் விழித்துக் கொண்டே இருக்கும்.. தூக்கத்தில் ஏதாவது சத்தம், அதிக வெளிச்சம் அல்லது தட்டி எழுப்புதல் மூலம், தேக உணர்வு அதிகமானால் புத்தி மனதை விழிப்பு அடைய செய்து வெளிச்சத்திற்கு வரும்.. அதாவது பொறிகள் மூலம் புலன்கள் வேலை செய்ய தொடங்கும்...
தியானத்தின் ஒரு செயல், பெற்ற கனலை மனம் வெளிச்சம் ஆக்காமல் புத்தி தடுத்து தன்பால் புத்தியானது கனலை தக்க வைத்துக் கொள்வது தான்... புத்தியானது வேண்டிய அளவிற்கு மட்டுமே மனதிற்கு கனலை கொடுக்க தொடங்கி விட்டால் மனம் புத்தியின் பூரண கட்டுப் பாட்டில் வந்து விடும்... மனதிற்கு தொல்லை கொடுப்பது, சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமே.. இந்த எண்ண பதிவுகளை மனம் கையாள அல்லது கட்டு படுத்த எந்த வகையிலும் முடியாது... ஆனால் சித்தத்தை கட்டு படுத்த புத்தியால் மட்டுமே முடியும்.. பொறி புலன்களை ஆதிக்கம் செய்வதற்காகவே மனம் படைக்கப் பட்டு இருக்கிறது.. பொறி புலங்களின் மேல் புத்தி, மனம் இல்லாத போது மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.. இப்படியான கட்டமைப்பினை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்...
நமக்கு இப்பொழுது முக்கியமான தேவை, தனக்கு தேவையான கனலை தக்க வைத்து உள்ள , ஆனால் மனத்தின் ஆதிக்கத்தால் செயல் பாடு குறைந்துள்ள, புத்தியை தட்டி எழுப்புவதே... புத்திமதி யார் வழங்குவார்.. ஒரு குரு தானே வழங்குவார்.. குருவின் துணை யின்றி எதுவும் நடக்காது.. புத்திமதி என்பது புத்தியின் விழித்து எழுந்த நிலை.. ஆம் புத்தியின் நிலையிலே இருந்து கொண்டு குரு செய்யும் பணியை செய்வது இந்த புத்தி என்ற எழுந்த பூதம் தான், முதலில் எழ வேண்டும்.. எழுந்த புத்தியே குருவாக முடியும்.... எழுந்து பலப்படவேண்டும்.. பலப் பட்ட பின் தான் குருவினுடைய ஆதிக்கம் தொடங்கும்.. பின் ஒவ்வொன்றாக சீர் அடைய தொடங்கும்.. சதா காலமும் விழித்து கொண்டு இருக்கும் இந்த புத்தி என்ற பூதம் முதலில் தான் செய்ய வேண்டியது இன்னதென்று அறியாத, புத்தி கெட்ட நிலையில் உள்ளது.. அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய ஒரு இடத்தை காண்பித்து விட்டால், போதும் மற்றவை எல்லாவற்றையும் சித்தராகக் கூடிய நிலைவரை அதுவே குருவாக இருந்து வழி நடத்தி செல்லும்.. ஒரு தீக்குச்சி பெரும் காட்டு தீயிக்கு வழி வகுப்பது போல், அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய தகுந்த ஒரே ஒரு இடத்தையும் அங்கு புத்தி பலம்கெட்ட நிலையிலிருந்து புத்தி பலப்பட்ட நிலையை அடையும் நுணுக்கத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment