ஸ்ரீகுருகீதைமுதல் அத்தியாயம்
(இது பார்வதி தேவியாருக்குச் சிவபெருமான் குருவின் மகிமையை எடுத்துக்கூறி அருள்வது)
* தன் தேசிகரது நாமத்தைச் சிந்தித்தல் அனந்தராகிய சிவனது கீர்த்தனமே யாகின்றது.
* குருவின் பாதோதகத்தைப் பருகலும், குருவின் உச்சிஷ்டத்தை புசித்தலும், குருவடிவை எப்போதும் தியானித்தலும், குருவின் நாமத்தை எப்போதும் ஜபித்தலும் செய்தல் வேண்டும்.
* தேவி இந்தக் 'குரு ' வென்னும் மந்திரராஜமான இரண்டெழுத்தும் ஸ்மிருதி வேதபுராணங்களின் சாரமேயாம்..ஸம்சயமில்லை.
ஸ்ரீகுருகீதை முன்றாம் அத்தியாயம்
* எழுகோடி மகாமந்திரங்களும் சித்த மயக்கத்திற்கு காரணமானவை.
குருவென்னும் இரண்டெழுத்துள்ள மந்திரமொன்றே சர்வத்திற்கும் மேலானதாம்..
* அத்தகைய பரமகுருவின் திருநாமத்தைத் தேகி பக்தியுடன் ஜபிப்பதனால் அழிகரு வழிவந்த அவனது பாவங்கள் யாவும் னசித்துப்போகின்றன - இதில் சற்றேனும் சந்தேகமில்லை.
* குருநாமத்திற்குச் சமமான தெய்வமுமில்லை- பந்துக்களுமில்லை - குருநாமத்திற்குச் சமமான சுவாமியுமில்லை - இத்தன்மைய பரமபதமுமில்லை.
No comments:
Post a Comment