ஆன்மா
ஒலியே ஆன்மா ! அது கடவுளுடைய பாகம் !
அவன் விரும்பினால் உன் கூட்டுக்குள்ளே ! (உடல்).
அவன் விரும்பாவிடில் வெளியே ! (யாக பிரஸ்தம்).
இது தான் பிரபஞ்ச சூட்சுமம்..! என் தந்தை யாகவா சொல்வார்கள் நெருப்பை ஊதி மண்பாண்டத்தை உருவாக்கும் வித்தை போன்றே, நீ உயிர் ஊதி உருவாக்கப்பட்டவன். ஒரு துளி நீரில் உருவாகினாய். அதை ஒரு துளி காற்று இயக்கியது. பின் அதற்கு விதி முடிந்தவுடன் இந்த பொய்யுடலை தூக்கி எறிந்து விட்டு பிரபஞ்ச கூட்டுக்குள் பயணமாகிறது. நல் கர்மா தான் கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் தெளிவு படுத்துகின்ற ஊடகம் !
உன் மூச்சை உற்று நோக்கு ! உயிர் தரும் காற்றை வணங்காமல், கடவுளை தேடுகிறாய் ! மரணத்தோட தத்துவம் மாறுதல் தான் ! ஆன்மாவை சுத்தப்படுத்துவது தான் மரணம் !
சுட்டும் உருவாகும் விதை ஒன்று படைத்தான் ! உருவாக்கம் எதற்கென்று உணரப் பார். ஒரு பிறப்பென்றால் இறப்பை நோக்கித்தான். மீண்டும் பிறவி கொள்ள நினைக்காதே !
சுட்டும் உருவாகும் விதை ஒன்று படைத்தான் ! உருவாக்கம் எதற்கென்று உணரப் பார். ஒரு பிறப்பென்றால் இறப்பை நோக்கித்தான். மீண்டும் பிறவி கொள்ள நினைக்காதே !
நீ வெளியில் தேடுகிறாய் ! நான் என் உள்ளே கடந்து தேடினேன். நான் யார் என்று உணர்ந்தேன். நான் ஆத்மத்தின் தலைவன் என்பதை புரிந்து கொள். அடிச்சுவடாய் ஆழப்பதித்து தெரிந்து கொள். நான் எங்கும் வியாபித்திருக்கிறேன். உன் நல் நோக்கத்திற்காக என்னை கூப்பிடு. உன்னுள் வந்து உன் மூச்சில் முழுவதுமாய் ஆட்சி செய்வேன். பாவத்தை மட்டும் செய்யாதே. உனக்கு எதிரி உன் ஆன்மா என்பதை மறவாதே. மதம் மாறி மனம் மாறி போகின்றாய். மனிதனே உன் ஆன்மா இன்பம் அடைவது எப்போது ?
ஆன்மாவுக்கு மதம், ஜாதி, இன்பம், துன்பம், நோய் இல்லை. மதம் உன் கருத்துக்குள் தான் சிறை கொண்டிருக்கிறது ! ஆன்மாவின் நிறம் என்ன ? வடிவம் என்ன ? அதன் வேலை என்ன ? நீ யார் ? உணர்ந்தாயா நீ ?
உணர். நான் ஒரு நிலைக் கண்ணாடி (ஆன்மா). என்னை பார்த்து உன்னை சரி செய்து கொள் ! ஒலியே ஆன்மா !
நான் இநன்யா !
No comments:
Post a Comment