தன்னை சுற்றியுள்ளவர்கள் எங்காவது ஒரு ஆன்மீகவாதியிடம் போய் சேர்ந்தால் எல்லோரும் அங்கு போய் விழுகிறார்கள் ,ஆனால் அந்த ஆன்மீகவாதியோ வேறு எங்காவது விழுந்து கிடக்கிறார்,”புலன் ஐந்தும் வெல்வதே உண்மை வீரமே.
நம்ம ஆத்திசூடி பாட்டி சொன்னது.பெண்மை உட்பட எங்கேயும் மண்டியிடாதவனே சுத்த வீரன் ,மெய்ஞானி . இதை எப்போதும் நாம் மறக்ககூடாது .இப்போது உண்மையான மெய்ஞானிக்கான அடையாளங்கள் :
மரணத்துக்கு பின்:
ஆணாக இருந்தால் சுக்கிலமும் ,பெண்ணாக இருந்தால் சுரோணிதமும் இறுதி நேரத்தில் வெளியேறாது உள்ளுக்குளேயே அடங்கும் .
தேகம் பசு மஞ்சள் நிறத்தில் மாறும் ,அதாவது பொன்னிறத்திற்கு.
உடம்பில் நெட்டி முறியும் ,அதாவது சொடக்கு எடுக்க முடியும் .
தேகம் விறைத்து போகாது, துவளும் .
இறைவணக்க பாடல்களை பாடினால் தேகத்தில் வியர்வை வழியும் .
எத்துனை நாட்கள் ஆனாலும் தேகத்தை மண் தீண்டாது .
அடக்கம் செய்யாமல் நாற்ப்பது நாட்கள் தேகத்தை வெளியே போட்டு வைத்தாலும் ,எந்த நாற்றமும் வராது
குருவானவர் நீர் தந்தால் அது நம் தொண்டையில் இறங்கும் ஆச்சிரியமும் நிகழும் .
மேற்கண்ட அடையாளங்களை யாரால் உங்களுக்கு ,உங்களின் இறுதி நேரத்தில் தர முடிகிறதோ அவரே உண்மையான மெய்ஞானி ,அவரை சரணடையுங்கள் .
No comments:
Post a Comment