தயவு செய்து மனம் குரங்கு இன்னு சொல்லாதீங்கோ ;;;;ஆன்மாவின் பிரதிநிதி தான் மனம் ;;மனம் குரங்கு இன்னு சொன்னா ஆன்மாவும் குரங்கு ஆகி விடும் ;;;ஆன்மா குரங்கு ன்னு நினைத்தால் ;;;; பரமாத்மா ஆன்மாவும் குரங்காகி விடும் ;;;கடைசியில் படைத்தவனை குரங்கு என்று கூறி நாம் பழிக்கு ஆளாவோம் ;;; '''''நான்'''' என்ற ஆதிக்கத்தால் நாம் மனம் தான் காரணம் என்று நினைக்கிறோம் ;;;''''நான்''' விட்டு விடுங்கள் ;;மீதி எல்லாம் சரி ஆகி விடும். தன்னால் படைக்கப்பட்ட மனதானது, தன்னை படைத்த பிரமத்தை அறியாதவரை, அது உறங்கவும் செய்யாது, உறங்கவிடவும் செய்யாது. தன் பிரமத்தையே ஆட்டி படைக்க வல்ல, தன்னால் படைக்கப்பட்ட மனமானது, பிரம்மத்தின் வாயில்தனில் தன்னை அறியும் வரை உறங்கவும் செய்யாது, ஓயவும் செய்யாது, அது தன் மடத்தை விட்டு ஓடவும் செய்யாது.நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை .
No comments:
Post a Comment