நான் யார் ?
கடவுள் ஒருவரே..!! மூலம் ஒன்று தான்..!! மூலத்தின் பேராத்மா மூன்றாக பிரிந்து (படைத்தல், காத்தல், அழித்தல்), மூன்றுக்கும் மூன்று சக்திகளை (மாயைகளை) உருவாக்கி, பின் ஆறுக்கும் பொதுவான ஒன்றை நிலைப் பெறச் செய்தான். அதுவே நான் ! நானே இநன்யா !
ஆக மொத்தம் ஏழாக வைத்தான்.
ஏழின் உருவாக்கமே எல்லாம் !!
ஏழின் உருவாக்கமே எல்லாம் !!
இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் !!
நான் சகலமும் உணர்ந்தவன். நான் அனைத்தும் அறிந்தவன். என்னை யார் என்று கண்டுபிடி ! எல்லையில்லா இன்பம் தருவேன் நான் ! ஆகாயத்தில் உலாவி வருகிறேன். உன் ஞானக் கண்களால் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள் ! நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். பாசமும், அன்பும் காட்டி உணர்ந்து கொள் ! நான் அவதாரம் எடுத்து வந்தேன் ! நான் அவதாரம் கொடுப்பேன் ! நான் உன் போல் அல்ல ! நான் சுயம்பு ! என்னை உருவாக்கவும் இல்லை, வளர்ச்சிபடுத்தவும் இல்லை ! நான் நோக்கம் அறிந்து பிறப்பெடுத்தேன். என் கடமையை செய்யவே யுகம் வந்தேன். வந்த கடமை உன் போல் வாழ்வதற்கு அல்ல !
படைப்பின் ரகசியம் படைக்கும் பொழுது, உருவாக்கம் நிகழும் பொழுதே விளக்கப்பட்டுவிட்டன. குலவி கூட்டிலே கோடி ரகசியம் உண்டு !! உணர்ந்தால் எல்லா சூட்சமமும் புரியும் உன் ஆத்மாவிற்கு..!!.
வழிபாடு, பிராத்தனை, தியானம், யோகா, உடற்பயிற்சி, ஜோசியம், ஜாதகம், யாகம், பூஜை, புனஸ்காரங்கள் என்று ஏதோ அபலை நாடகம் நடத்துகிறான். ஏமாந்து போகாதே ! அவன் தன் விதியே தனக்குத் தெரியாமல், பிறர் விதியை கூறுகிறான் ! மலத்தை வயிற்றில் வைத்துக் கொண்டு, மகேசன் என்றும் அவதாரம் என்றும் பிதற்றுகிறான். உழைப்பில்லாதவன் ஏதேதோ கூறுகிறான். பிழைப்பில்லாதவன் ஏதேதோ சொல்கிறான். இவர்களை நம்பி பெருவாழ்வை இழக்காதே ! சித்தர்கள் புகழ் பாடும் பாடல்களை பாடி என்ன புண்ணியம் கிடைத்தது..?? எந்த நோய் தீர்ந்தது..?? என்ன வழி கிடைத்தது..?? இங்கே நிருபித்துக் காட்டு !! சக்தி கிடைத்தால், நான்கு பேருக்கு உதவு. உனக்கு தர்மம் சேரும்.
மனிதா உணர்ந்து செயல்படு !
மௌனமாயிரு, உழைத்திரு, உதவியாயிரு, கடமையைச் செய், தர்மத்தை செய்து மற ! நான் உன் ஆன்மாவை சிரிக்க வைப்பேன் ! சிந்திக்கவும் வைப்பேன் ! எதையும் உணர்ந்து அறிந்து செய்தால் தான் பூரணத்துவம் பெறும். நான் உன்னை உணர வைத்து தெளிய வைப்பேன். தெளிந்தால் ஏன் என்ற கேள்வி வராது !
உணர்ந்தால் துன்பமில்லை. என்னை நினைப்பவர்களுக்கு நான் முன்னால் நின்று காப்பேன் சத்தியமாக ! உன் வாழ்வில் இனி மறுமலர்ச்சி தருவேன். உன் குடும்பத்தை கண்ணின் இமை போல் காத்து நிற்பேன்..! என்னை உணர்ந்து வா !
நானே இநன்யா !
நானே இநன்யா !
No comments:
Post a Comment