ஆத்ம பலம் என்பது என்ன? ........ தன்னை உணர்தல். `நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’ என்ற நிலையை எய்துதல். கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது கற்றுக் கொண்ட வித் தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றை விடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’ எவனொருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன் பத்தைக் கடப்பான்’ விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது.விஞ்ஞான ம் என்பது அனுபவ விஞ்ஞானம். ஆத்ம பலம் படைத்த யோகி நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும்.ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்கமாட்டான்; எழுவான்; நடப் பான் ; சேவை செய்வான்.’ பலன் கருதாத கருமமே `கடமை’ என்பது. இதைக் கருமம் என்பதைவிடத் `தர்மம்’ என்பது பொருந்தும் இந்த `நான்’ தன்மையை வென்றவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகி றார் கள். அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், `பொன்னைக் கொ டு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; `என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பா ர்கள். இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகி றான்., ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான். துயரங்கள் தோன்றா மல், சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். ஆன்மாவை உணர்ந்து கொண்ட வன் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?
No comments:
Post a Comment