Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி பத்தொன்பது ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி பத்தொன்பது :--- 
********************************************* 
அந்த மாவீரன் ஒரு மகா கோழையே !!!
இந்த பிறவியில் இருக்கும் துயரங்களை போக்குவதற்கு துயரங்களின் துன்பங்களின் தொடர்புகளை வகுத்து வகுத்து வைத்து இன்னும் அடைய கூடிய எதிர் கால துன்பங்களையும் பட்டியல் இட்டு ஒரு மனிதனை பயமுறுத்தி, குழப்பத்தினை உருவாக்கும் உலகத்தின் போக்கால் மனித குலம் அடையும் துயரங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.. எல்லாம் கடந்து போகும் என்ற நிலையான சத்தியத்தை முன் வைத்து தகுந்த விளக்கம் கொடுக்கும் மேதாவிகள் யாரும் இல்லை.. நோயை உருவாக்கி பிழைப்பை நடத்தும் பொய்யான மருத்துவனை போல் இன்று துயரம் என்ற பொய்யான மாயையான நோயை உருவாக்கி அதை தீர்ப்பது போல் பாவனை செய்பவர்களே பலர் இருக்கிறார்கள்..
ஒழுங்கின்மையே நோய் என்றும் அதை தீர்க்க ஒழுங்கு என்ற மாமருந்து ஒன்றே ஒன்று தான் உண்டு என்பதை அறிந்து இருந்தும் மறைத்து விட்டார்கள்.. அல்லது மறந்து விட்டார்கள்... நோய்களை உருவாக்கும் சுவாச ஒழுங்கின்மையை சுவாச ஒழுங்கு என்ற மாமருந்து சீர் படுத்தும், என்ற அடிப்படையான மிக எளிமையான உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக்கொண்டபின் அதை நடைமுறை படுத்துபவர்கள் எவரேனும் உண்டா என்றால் கேள்வி குறியாக உள்ளது...
ஒழுங்கின்மையிலே பழகி பழகி போய் விட்ட நிலையில் கிணற்று நீரின் அடியில் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி பயிலும் ஒரு யோகி என்று சொல்லக் கூடியவரை தனது இயல்பாக ஓடும் சுவாசத்தில் சுவாச ஒழுங்கோடு இருக்கச் சொன்னால் அவரால் 2 நிமிடம் கூட இருக்க முடியாமல் இருப்பது மிகவும் வியப்பான விசயமாகும்.. இந்த கோணத்தில் பார்க்கையில் எல்லா சாதனைகளும் ஒழுகின்மையின் அடிபடையில் அமைக்கப் பட்டதால் அவற்றில் எந்த விசேசமும் இல்லை.. பிரபலமான நடிகர்கள் தங்களின் இயல்பான நிலையை விட்டு ஏதோ கற்பனை பாத்திரத்தின் ஒழுங்கின்மை என்ற நடிப்பில் பேரும் புகழும் அடைவது என்பது சமுதாயத்தின் ஒழுங்கின்மைக்கு ஏற்றால் போல் இருப்பதாலே இது சாத்தியமாகிறது..
அப்படியே உலக சாதனைகளை படைத்த அனைத்து பிரபலங்களும் ஒழுங்கின்மையின் உச்சத்திற்கு சென்றவர்கள்.. உதாரணமாக மாவீரன் என்று போன்றப்படும் அலெக்சாண்டர் பல ஆயிரம் உயிர்களை கொன்ற ஒரு உச்சக் கட்ட ஒழுங்கின்மையின் பூரண அடையாளம்.. அவன் பல நாடுகளை வென்றாலும், அவனால் இரண்டு நிமிடம் கூட சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாது.. காரணம் தன்னை வெல்ல முடியாத மகா கோழை அவன்... தன்னை வெல்ல முடியாத மகா கோழைகளுக்கே பேரும் புகழும் வந்து சேருகின்றன.. இதுதான் விசித்திரமான மாயையின் தோற்றம்.. தன்னை வெல்ல முடியாதவன் உலகை வெல்வதால் எந்த சிறப்பும் இல்லை.. தன்னை வெல்ல முடியாத பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகளிடம் இருக்கும் தனிப் பட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் அவர்களின் கோழைதனத்தின் மறைமுக எடுத்துக் காட்டு... தன்னை அறிந்து தன் இயல்பு நிலை அறிந்து, தன் பிரபஞ்ச தொடர்பு நிலை அறிந்து, அதோடு பொருந்தி, பொருந்தி, சிறப்பான சத்திய, ஒழுங்கு,தயவு வாழ்வு, வாழ முடியாதவர்கள் உண்மையில் கோழைகளே....
ஏன் இந்த சுவாச ஒழுங்கோடு இருப்பது அவ்வளவு சிரமம் ?.. மரணத்திற்கு பின் ஒருவரின் சூட்சம தேகம் பிரபஞ்ச பேராற்றலால் பேரறிவால் பக்குவப் படுத்தப் பட்டு பண்படுத்தப் படுகிறது.. தோன்றா நிலையில் இருக்கும் அந்த பிரபஞ்ச பேராற்றல் ஒழுங்கின் வடிவம்.. அதை அடைந்த எதுவும் தன் ஒழுங்கின்மையை கை விட்டு விட்டு அந்த பேரற்றலின் ஒழுங்கோடு இணைந்து ஒழுங்கின் வடிவமாக மாறியே ஆக வேண்டும்.. அதுவாகவே ஆக வேண்டும்.. அப்படி ஆன அந்த சூட்சம தேகம் பிறவி எடுத்த உடன் முதலில் பிரபஞ்ச ஓழுங்கோடு தான் இருகிறது.. தூல தேகத்தில் மட்டுமே அந்த தூய பிரபஞ்சத்தின் தன்மையை அனுபவப் படமுடியுமே தவிர சூட்சம தேகத்தால் முடியாது.. அப்படி உடல் எடுத்த சூட்சம தேகம் உலக சார்புகளை சார்ந்து ஒழுங்கின்மை ஆகி விடுகிறது... பிரபஞ்சத்தின் தூய்மையை மறந்து போய் விடுகிறது.. ஒழுங்கின்மை காரணமாக அழிந்து போன தேகத்திற்கு மீண்டும் அதே கதைதான்.. அந்த கதை மீண்டும் மீண்டும் தொடராமல் இருக்கவே சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்சத்தின் தூய்மையை மீண்டும் பெற வேண்டி இருக்கிறது.. ஒழுங்கின்மையின் அழுத்தம் அதிகமாக இருக்க இருக்க சுவாச ஒழுங்கு என்ற இயல்பான நிலை மிகவும் கடினமாகிறது..
ஆக சுவாச ஒழுங்கு என்பது, பிரபஞ்ச ஆற்றலால் இயக்கப்படும் சுவாசத்தில், நிலை நிறுத்தப் படும் ஒழுங்கு என்பது பிரபஞ்ச ஆற்றலோடு, இணைந்து இருப்பதற்கு சமம்.. மரணத்திற்கு பின் ஆன்மா ஆகிய உயிர் நிலை, பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து, பக்குவப் படுதலுக்கு ஒத்த நிலை.. அந்த சுவாச ஒழுங்கில் மனம் தன் தன்மையான ஒழுங்கின்மையை இழக்க நேரிடுவதால், மனம் தன்னையே இழந்தது போல ஆவதால், மனம் தான் கொண்டுள்ள எண்ண ஆதிக்கங்களால், சுவாச ஒழுங்கை எப்படியாவது கெடுக்கவே செய்யும்.. அதனால் தான் சுவாச ஒழுங்கு அவ்வளவு சிரமமாக உள்ளது.. இந்த சுவாச ஒழுங்கின்மையை புத்தி கண்டு அறிந்து ஒவ்வொரு தடவையும் சுவாச ஒழுங்கின்மையை சரி செய்யும் பொழுது, புத்தியானது தனது ஆதிக்கத்தை மனதின் மேல் செலுத்துகிறது.. இப்படியாக சுவாச ஒழுங்கிற்கு ஏற்படும் ஒவ்வொரு தவறிலும், அதை ஒழுங்கிற்கு கொண்டு வர முயலும் புத்தி சிறுக சிறுக மனதின் மேல் ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு முடிவில், பூரணமாக புத்தி ஆனது மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்கிறது.. அந்த நிலையில் மனமானது புனித சக்தியாகிய புத்தியின் கனலால் நிரப்பப் பட்டு சுத்த மனம் ஆகிறது.. அந்த நிலையில் மட்டுமே மனதின் ஆதிக்கத்தில் உள்ள சித்தமும் தேகமும் முழுமையாக பிரபஞ்ச ஆற்றலை பெறும் தகுதி பெற்று, பேரண்ட பேர் ஆற்றலையும் பெறுகிறது.. இவை அத்தனையும் சுவாச ஒழுங்கில் சாத்தியமாகிறது... இந்த சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்ச பேராற்றலையும் பேரறிவையும் பெறலாம் என்பதும், சித்தராகலாம் என்பதும், வலுவான சத்தியமான உண்மை..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment