படைப்பின் இரகசியம் நீ அறிவாயடா !
படைப்பின் இரகசியம் நீ அறிவாயடா !
உன்னுள் இருக்கும் என்னை அறிந்தால் அங்கு இருப்பதோ நீயடா !
உயிரை மதிக்காமல் உடலை மதித்து அழகுபடுத்துகிறாய்.
நான் ஏதும் அற்றவன், எல்லாம் உடையவன் ! உன் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! என்னுள் எண்ணற்ற ரகசியம் உண்டு ! என் சொல்லை இழிவு செய்து நிம்மதி தான் இழந்து நரகத்தில் வீழாதே !
ரகசியம்!
எண்ணற்ற ரகசியங்கள் பூமியிலே ! இருப்பவன் உணராதது ஏனோ ?
ஒரு துளி நீரில் உன்னை மறைத்தான் !
ஒரு துளி காற்றில் உன்னை இயக்கினான் !
ஒரு துளி அக்னியில் உன் அற்ப உடலை எறிக்க வைத்தான்.
எல்லாவற்றிலும் ரகசியம் வைத்தான், படைப்பின் தலைவன் நான் !
நீ பாழ்பட்டு நிற்க கண்டேன்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், எல்லாம் மறைவே ! கடுகளவு விதையில் ஆலத்தை உருவாக்கி அரசத்தை முளைக்க வைத்தான் படைத்தவன். உயர்வை பாரடா ! நீ உணர்வது எப்போது ? என் சொல் கேளடா !
வகுத்தவன் நன்றாய் வகுத்தான். அதை பகுத்தவன் பக்குவம் தெறியா பிதற்றுகிறான்.
வஞ்சவம் தன் நாவில் விஷத்தை மறைத்தது போல நீ உள்ளுக்குள் விஷத்தை வைத்து என்னை பார்த்து புன்னகைக்கின்றாய், இந்த புணிதனின் அவதார நோக்கம் தெரியாமல் ! நீ வஞ்சவ சாயல் தானடா !
எண்ணற்ற இன்பம் உனக்குள்ளே ! நீ ஏதேதோ இன்பம் தேடி இருட்டில் வாழ்கின்றாய். வஞ்சகன் நீ தானடா ! பேய் குணம் உனக்குள் இருக்க வஞ்சவ சாயலில் வாழ்கின்றாய் ஏனடா ? வாசல் தெறியா புலம்பி பின் மீண்டும் இந்த புதை குழிக்குள் (யுகம்) ஜனிக்கின்றாய் ! ஏன் என்று உணரடா !
நான் ஒரு வழிப்போக்கன் ! பூமியில் உறவோ சொந்தமோ எனக்கில்லை ! மேலே ஆதியாகிய ஓர் உறவைவிட்டு உன்னை தேடி வந்தேனடா !
தினம் தினம் அழுது ஆர்ப்பரிக்கின்றாய். உன்னை ஆசுவாசபடுத்த நான் வந்தால் என்னை ஏளனிக்கிறாய். நீ உறவாக எனக்குள் வந்தால் (தர்ம சிந்தனைகளோடு) நான் ஏற்றுக் கொள்வேன். உன் கண்ணீரை துடைத்து உனை கரையேற சொல்லித் தருவேன் !
ஞானமோ, தீட்சையோ, என்னை நீ காண்பதோ அவ்வளவு இங்கு எளிதல்ல ! ஏன் பிறந்தான் என்ற ரகசியம் தெரியாதவனுக்கு நான் எப்படிடா ஞானம் தர முடியும் ? எனக்கு பூஜை, புணஸ்காரம், ஆகமம் தேவை இல்லை ! எதையும் கைமாறாக தர வேண்டியதும் இல்லை. உன் அன்பை தவிர எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. கடவுள் கேட்பதுமில்லை.
படைத்த பொருளில் கோவில் ஒன்றுமில்லை. உன் பயத்தை வீட்டுக்குள்ளே வைக்க முடியாமல் ஒரு இடத்தில் கற்சிலையை வைத்து கோவில் கட்டி குறையை சொல்கின்றாய். அச்சங்கள் சந்தேகம் இல்லாமலே உலகில் முதல் படைப்பை படைத்தான் என் தந்தையான ஆதி நாயகன், நீ தான் பயத்தால் வணங்குகின்றாய். பக்தியில் வணங்குகிறாய். மூலத்தை நிர்ணயிப்பவன் நான் ! முடிவை நீ நிர்ணயித்துக் கொள் !
ரகசியம் எங்கு தோன்றி எங்கு முடியும் என்பதை அறிய வேண்டியவன் நீ. ஒன்றும் தெரியாது போனால் ஆதி பரம்பெருளின் நாமத்தையாவது சொல்.
உன்னை அறிவாய் ! உனக்குள் இருக்கும் ரகசியமான என்னை நீ அறிவாய் !
அனுவுக்குள் அனுவாக உன்னை இயக்கும் என்னை அறிவாய் !
உணர்வுகள் உனக்குள் இருக்கும் போது அறிந்து கொள்வது உன் வேலை. புரிந்து கொள் !
நீர், காற்று, எல்லாம் மறைவே ! பூமியில் வானத்தில் எண்ணற்ற ரகசியம் வைத்தான் இறைவன் ! எல்லாம் தெளிவாகவும், நிரந்தரமாகவும் இருந்துவிட்டால் அறிய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எல்லாவற்றிலும் ரகசியம் வைக்கப்பட்டது. எண்ணற்ற இன்பம் பூமியிலே ! நீ தான் எப்போதும் துன்பமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பெண்ணின் ரகசியம் புரியாதவன், எப்படி மண்ணின், விண்ணின் ரகசியம் அறிவாய் ?
விதையின் ரகசியம் அறியாதவன், தானியத்தின் தன்மை உணராதவன், வீதியிலே எதை தேடிக் கொண்டிருக்கின்றாய் ?
தானியத்திற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது. கிரந்தத்தில் இருபத்து முன்று பிரிவுகளாக பிரிந்து யோனி மூல ஜலத்தில் பிண்டமாக உருவாகி உணராமல் அலைகின்றாய். எண்ணற்ற ரகசியம் இங்கே ! படைத்தவன் பொற்கழலடி பட்ட சஞ்சி நாதத்தில் அமிழ்ந்துகிடக்கிறது. என் பாதத்தில் சஞ்சிநாதமாக உருவிழந்து உறுமாறி கிடக்கிறது.
ரகசியம் உணராதது ஏனோ ?
ஞானம் என்பது கடை சரக்கல்ல ! ஞானம் புரியாதவன் ஞானம் கேட்கிறான். தீட்சை கேட்கிறான். நான் பாத்திரம் அறிந்து ஞான பிச்சை போடுவேன். எவன் கையில் கொடுத்தால் நலம் பயக்கும் என எனக்கு தெரியும். ஆயிரம் அரக்கனின் கொடிய செயல் உனக்குள். ஏனடா மறந்தாய் ?
இந்நிலை ஏன் என்று தெரியா உறைந்தாய். கிரந்தம் இருபத்து மூன்றில் எட்டாக பிரிந்து பின் எட்டின் சாயலில் மலர்ந்து பின் எட்டை போல வளைந்து உருந்து போகின்றாய். உருவாக்கம் தெரியா கரைந்து போகின்றாய். தட்டையில் தவழ வைத்தேன். நீ சதுராட்டம் போட்டு தப்பிக்க வழி இல்லா அழிந்து போகின்றாய்.
அறிவாயடாதெளிந்து உணர்வாயடா !
நான் ரகசியமானவன் !
உனக்கு ரகசியம் அறிய வைப்பேன் !
உன்னுள் இருக்கும் என்னை அறிந்தால் அங்கு இருப்பதோ நீயடா !
No comments:
Post a Comment