Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி முப்பது ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி முப்பது :--- 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் நான்கு
சுவாச ஒழுங்கின் மூலம் பெறப்படும் அதிகப்பட்ட ஆற்றலை தேகத்தில் முறையற்ற முறையில் அங்கும் இங்கும் ஓடி விரையம் ஆகாமல் மூளையின் முக்கிய ஆதாரங்களில் அந்த ஆற்றலை பயன்படுத்தவதின் மூலம் அந்த ஆதாரங்களினால் ஏற்படும் அளவற்ற பயன்களை பெறலாம்.. அளவற்ற ஆற்றலை உணர்வின் மூலம் மட்டுமே அந்த ஆதாரங்களை பயன் படுத்த முடியும்.. வெறும் மன கற்பனையில் அந்த ஆதாரங்களை நினைத்துக் கொண்டு பயிலுவதால் எந்த பலனும் இல்லை.. வாழ்நாள் விரையமே ஆகும்.. அப்படி தான் எந்த பலனும் இன்றி பல பயிற்சிகளை மன கற்பனையில் செய்து செய்து பல வருடங்கள் ஆகியும் முடிவில் எந்த பலனும் இல்லாமல் போகின்றது பல பேர்களின் அனுபவம்... மிஞ்சியது வருடங்களின் எண்ணிக்கை மட்டுமே..
நாம் முறையான சுவாச ஒழுங்கில் பெறப்படும் அதிக ஆற்றலால் மட்டுமே எதுவும் செயல் கூடும்.. ஆற்றலை திருடும் மனதின் கற்பனை திறனால் எதுவும் நடப்பதில்லை.. இது மிக வெட்ட வெளிச்சமான உண்மை... ஆற்றல் ஒன்றே வேறு ஒன்றை செயல் பட வைக்கும்... அப்படியான ஆற்றலால் தான் நாம் இப்போது பிடரி என்னும் நினைவக ஆதாரமான தலையின் பின்பக்கம் கொண்டு செல்லுகிறோம்.. அது தண்டுவடத்தின் முடிவிலே முகுளமாக இருக்கிறது..
இந்த முகுளத்தின் சிறப்பு எல்லோரும் அறிந்ததே.. முகுளத்திற்கு பின் தலையில் விழும் அடியால் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் நினைவு தப்பி விடும் என்பது அறிந்ததே.. பிடறி அம்மன் குடி இருக்கும் இடம் என்பர் யோகியர்.. குண்டலினி சக்தி அந்த இடத்தை அடையாத நிலை வரை அது பிடறி அம்மன்.. அடைந்த பின் அது பிடாறி அம்மன் ஆக மாறி விடும்.. பிடாறி அம்மனாக மாறிய பின்பே குண்டலினி சக்தி தலையின் நடு பகுதியில் ஊர்ந்து நெற்றியில் இறங்கி புருவ மத்தி என்று சொல்லப் படும் சுழுமுனையில் மையம் கொண்டு பல அளவற்ற அனுபவங்களை தரும்...
பிடறி என்றால் ப்+ இடறி என பிரிந்து பகர மெய் ஆன ஜீவனை இடறி அதாவது தடுமாற செய்வது என பொருள் கொள்ளும்... பிடாறி என்பது ஜீவனை தடுமாறாமல் வைத்துக்கொள்ளுவது என பொருள் கொள்ளும்.. இடாறி என்பது இடறி விழாத நிலை ஆகும்.. அதாவது பிறவி குணங்களான காமம் கோபம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் வெகுளி ஏக்கம் போன்ற பிறவி குணங்களின் எண்ண ஆதிக்கங்களால் இடறி இடறி விழும் போக்கு மாறி, அந்த எண்ண ஆதிக்கங்கள் முற்றிலும் நீங்கி, இடறி விழாத திட நிலை என்பதாகும்...
பிடறி ஆதாரத்தை குண்டலினி சக்தி அடைந்து அதை பக்குவப்படுத்தாத வரை, பிடறி அம்மன் பிடாறி அம்மன் ஆகாத வரை, எந்த நீதி சாஸ்திர சமய மத நூல்கள் துளியும் பலன் அளிக்காது... அம்மன் என்றவுடன் பெண் தெய்வம் நினைவுக்கு வரலாம்.. ஆனால் யோகநிலை விளக்கம் என்னவென்றால், அம் என்பது பிரபஞ்சம் எனவும் மன் என்பது மனம் எனவும் பொருள் கொள்ளும்...அம்மன் என்பது குறுகிய நிலையில் முடங்கி கிடக்காமல் பிரபஞ்ச முற்றும் விரிந்த விசாலமான மனம் என்பதாகும்...மனம் அந்த நிலைக்கு வர பிரபஞ்ச ஆற்றல் வடிவமான் குண்டலினி சக்தியால் மட்டுமே முடியும்.. அதாவது விசாலமான மனம் ஆக்குவதற்கு மனதை தவிர்த்து வேறு ஒரு பலம் வாய்ந்த சக்தியான, ஆற்றலான, குண்டலினி சக்தியால் மட்டுமே முடியும்... மனதை திருத்த மன கற்பனைகளால் வடிவமைக்கப் பட்ட யோகப் பயிற்சிகள் உதவவே உதவாது... இதனை நம் விஞ்ஞான அறிவால் உணர்ந்து கொள்வோமாக..
அப்படி பிடறி ஆதாரத்தில் பிடாறி அம்மன் ஆன மனமே மேலும் விரிந்து தலையின் நடுபகுதியில் ஞான பீடமாகிய உச்சந்தலையை தொட்டுக் கொண்டு ஞான அடைய முடியாத நிலையில் மேலும் நகர்ந்து மேலும் பக்குவம் அடைய புருவ மத்திக்கு வந்து அடைகிறது.. அப்படி ஞான பீடத்தை கடந்தும் ஞான முடியாத நிலையை பின்பு பார்க்கலாம்... பிடறி ஆதாரத்திலிருந்து புருவமத்திக்கு வரும் குண்டலினி பயணம் இரண்டாவது பயணம்.. இந்த குண்டலினி புருவமத்தியில் என்ன என்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது என்ற சுவரசியமான தகவல்களை இனி வரும் பகுதியில் பார்க்கலாம்...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment