Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தர் ஆவதுஎப்படி ? பகுதி நாற்பத்தி மூன்று ;;; மர்ம யோகி

சித்தர் ஆவதுஎப்படி ? பகுதி நாற்பத்தி மூன்று :-- 
******************************************************************
மூடமும்,போகமும் நீங்க,நீக்க,வேண்டிய அவசர நிலை..
அதிகமாக உணவு உள் கொள்பவரை போகி என்பர்.. காரணம் உண்ட உணவு கொழுப்பு பொருளாக உடம்பில் சேகரித்து வைக்கப் படுவதால், தேகத்தின் திறன் பாதிக்கப் படுகிறது... சராசரி எடை கொண்ட ஒரு மனிதன் செய்யும் வேலையை மிக பருமனான ஒருவர் செய்ய முடிவதில்லை... இதனை திறன் என்பர்.. அப்படியானால் தேகம் திறன் உடையதாக இருக்க வேண்டுமானால், தேகம் ஒரு அளவிற்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.. தேகத்தை ஒரு வரையறை அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்... தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்ட தேகம் மீதியை கொழுப்பாக சேமிக்கவே செய்யும்..
தியானமும் அவ்வாறே என்பது ஒரு ஆச்சரியமான விசயம்.. தியானத்தில் அதிகமாக ஈடுபாடு கொள்பவர்கள் மனதின் எழும் எண்ண ஆதிக்கத்தின் விளைவான ஆசையின் நிமித்தம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் போது ஒரு மிதமிஞ்சிய ஓய்வின் விளைவாக பெறப்படும் மிகைப் பட்ட ஆற்றல் தேகத்திற்கு நல்லதல்ல.. ஒரு குறிப்பிட்ட அளவே ஆற்றலை தாங்கும் தேகம், அதிகமான ஆற்றலை பெறும் போது தேக திசுக்கள் செயல் இழந்து ஒரு மூடம் தேகத்தை கவ்விக் கொள்ளும்.. இதனால் தேகம் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் குறைந்து விடுவதை கண்கூடாக பார்க்கலாம்.. இந்த மூடத்தால் வாழ்வே சிதைந்து போகும் ஆன்மீகவாதிகள் ஆயிரம் ஆயிரம்... இந்த மூடம் கவ்விய நோய்க்கு சரியான மருந்து இல்லை எனலாம்.. வெளி உணவால் எப்படி அதிக கொழுப்பு சேர்ந்து தேகம் தன் திறனை இழந்து விடுகிறதோ அதே போலவே அதிக ஆற்றலை பெற்ற தேகம் பெற்ற ஆற்றலை மூடமாக தேகம் தன்னை மாற்றி விடும்.. கொழுப்பை கரைப்பது போன்று மூடத்தை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது.. இப்படி மூடம் கவ்விய ஆன்மீக வாதிகள் தான் தோன்றித்தனமாக வீதிகளில் பைத்தியகாரர்களாக திரிந்து உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல், அரைகுறை அல்லது நிர்வான ஆடைகளிலோ இருப்பதை தவறாக நாம் எடுத்துகொள்கிறோம்.. அவர்கள் உலகப் பற்று நீங்கிய ஞானிகள் என்றும், அமுதப் பால் உண்டவர்கள் என்றும், ஞானம் அடைந்தவர்கள் என்றும் தவறாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.. உண்மையில் அவர்கள் மூடம் கவ்விய நிலையில் உலகியல் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மன நோயாளிகளே..
இப்படி பட்ட மனநோயாளிகள் மிக அதிகம் இருக்கும் இடமும் அதிக நோயாளிகளை உருவாக்கும் இடமும் எதுவென்றால் நமது பாரத நாடு தான்.. அதனால் தான் இந்த நாட்டை பழங்கால முதல் வெளி நாட்டவர்கள் மிக எளிதாக இந்த நாட்டை கைப்பற்றி இங்கே உள்ள வளங்களை சூறையாட முடிந்தது.. இன்றைக்கும் இந்த மூடம் கவ்விய சூழ்நிலை நீங்காமல் இருப்பதால் மக்களிடையே விழிப்பு உணர்ச்சி மிக குறைவாக இருப்பதின் காரணமாக அடிதள மக்களின் வாழ்க்கை தரம் துளியும் முன்னேற வில்லை.. இந்த மூடம் தரும் அற்ப சுகத்தையே வியாபாரமாக்கி மிக தந்திரமாக கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆன்மீக வாதிகள் இங்கே தான் இருக்கிறார்கள்..
இப்படி பெற்ற ஆற்றலால் மூடம் கவ்வாமல், மயக்க நிலையை தவிர்க்கவே, நமது சுவாசத்தில் சந்திர கலையாகிய உள் வாங்கும் மூச்சையும் இறைவன் அமைத்துள்ளான்.. இந்த சந்திரகலையை மதியாக்கும் நுணுக்கம் அறியாத காரணத்தில் தான் இந்த நாடே பல நூற்றாண்டுகளாக சீரழிவினை சந்திந்து வருகிறது.. மதியான அந்த அககுரு எழவிடாமல் என்ன என்ன வழிமுறைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் இம்மியும் பிசகாமல் சதி திட்டமாக நடை பெற்று வருகிறது.. இந்து மதத்தின் சிவகலப்பு என்ற வாழ்வியல் நெறி முறைகள் அடியோடு வேரறுக்கப் பட்டு, இன்று மூடம் தரும் கருத்துக்களாக இந்து மதமும் மற்ற வெளி மதங்களும் மாறி விட்டன.. புத்த மதம் இங்கே மூடம் தரும் மதமாக பெரும்பாலும் உள்ளது.. அதே புத்தமதம் ஜப்பானில் ஆக்கம் தரும் மதமாக மாறி விட்டது.. இங்கே மூடம் பரப்பும் சதியை முறியடித்தால் ஒழிய நம் பாரத நாட்டிற்கு என்றைக்கும் விமோச்சனமே இல்லை போல் தோன்றுகிறது.. விரைவில் நம்மில் அககுருவை எழுப்பி வல்லதொரு சித்தனாக மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து இனியேனும் செயல் பட தொடங்குவோமாக...
Top of Form

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment