Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி மூன்று ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி முப்பத்தி மூன்று :--- 
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் ஏழு
கால ஆளுமையில் அளவற்ற காலம்
மிக விசித்திரமான பதில் மனிதர்களிடம் இருப்பது என்னவென்றால் காலம் இன்மை என்பது தான்.. சோம்பலுக்கும் வீண் விவகாரங்களுக்கும் கால விரையம் பண்ணும் மனித குலம் தன்னை தாங்கும் உயிரை வளர்க்க துளியும் காலம் இல்லை என்று சொல்லுவது வியப்பிலும் வியப்பானது... உலகம் ஏற்று கொண்டாலும் ஏற்றுக் கொள்ள வில்லை யென்றாலும் உலகத்திலேயே மிக வியப்பான விசயம் இது தான்.. வாழ்வில் வெற்றி கொண்டவர்கள் எவரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை... அதிலும் சுவாச ஒழுங்கு பண்ணக்கூடியவர்கள் சொல்லுகின்ற பதில் மிக மிக வியப்பானது.. 
எனக்கு நேரம் கிடைக்கவில்லை.. விடியற்காலையில் நான் பண்ணும் போது பல சமயம் தவறி விடுகிறது.. இரவில் என்னால் பண்ண முடியவில்லை.. நான் வாகனத்தில் செல்லும் போது பண்ண முடிவதில்லை.. வேலை செய்யும் போது பண்ண முடிவதில்லை... அந்த சமயங்களில் தான் பண்ண வேண்டும் என்பது மனதின் சுத்தமான விளையாட்டு.. ஏகப்பட்ட ஓய்வு நேரங்களை மனம் தனக்காக ஒதுக்கி விட்டு வேலை நேரத்தை மட்டும் சுவாச ஒழுங்கிற்கு மனம் ஒதுக்குவதின் இரகசியம் வேலை நேரங்களில் புத்தியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அந்த நேரங்களில் தன் ஜம்பம் பலிக்காது என்பதாலும், அந்த நேரத்தில் சுவாச ஒழுங்கிற்கு மனம் மிகவும் அக்கரை எடுத்துக் கொள்ளும்.. தான் அனுபவிக்கும் நேரத்தை முற்றிலும் மறைத்து விடும்.. புத்தி பலப்பட்டால் எங்கே தன் ஆதிக்கம் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மனம் தன்னை காத்துக் கொள்ள என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய தொடங்கும்... ஆகையால் தான் மனம் அது கொண்டாடும் நேரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.. அது தனக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு அதை நம் விழிப்பு நிலைக்கு தெரியாமல் மறைத்தும் வைத்துக் கொள்கிறது.. அப்படி அது மறைத்து வைத்துக் கொள்ளும் நேரம் யோகியர் அல்லாத சாதாரண மனிதர்களுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் காட்டிலும் அதிகம் ஆகும்.. இது சத்தியமாக மிகை படுத்தப் பட்ட ஒன்று அல்ல... முற்றிலும் உண்மை.. இதை சற்று உணர்ந்து பயிலுகிறவர்கள், உண்மையை தெளிவாக அறியக் கூடும்... சுவாச ஒழுங்கினை தினமும் 2 மணி நேரம் பயின்றாலே இந்த மண் உலகில் வல்லவர்கள் ஆகலாம்.. அப்படி 20 மணி நேரம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகலாம் என்பதை கற்பனைக்கும் எட்டாத ஒன்று.. அதனால் தான் காலம் இன்மை என்பது மிக விசித்திரமான பதில் ஆகும்..
சுவாச ஒழுங்கில் சந்திர கலை எடுத்துக் கொள்ளும் கால அளவிலேயே நெருப்பின் மீதும் நடக்கலாம்.. சந்திர கலை உலக விவகாரங்களில் தலையிடும் மனதிற்கு சொந்த மானது.. அது சந்திர கலையில் இல்லாமல் வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் கால அளவிலே ஆக்கிரமிப்பு செய்கிறது.. அதனால் தான் சூரிய கலை சந்திர கலை என பிரியாமல் விழிப்பு நிலை காணாமல் போய் விடுகிறது.. நன்றாக புரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால், வெளிவிடும் மூச்சில் விழிப்பு நிலையை தொலைத்து விட்டால், அதனை சூரியகலை என சொல்லவே கூடாது.. அது வெளியே போகும் மூச்சு.. அவ்வளவே.. வெளி விடும் மூச்சில் எப்பொழுது விழிப்பு நிலை ஆகிய தோன்றா நிலை உருவாகிறதோ, அப்பொழுது தான் அது சூரிய கலை என பெயர் பெறுகிறது... சூரிய கலை உருவானால் மட்டுமே சந்திர கலை தோன்றும்.. அப்படி இல்லையென்றால் அது வெறும் உள்வாங்கும் மூச்சே.. சூரிய கலை தோன்றா நிலை அடைந்தால் மட்டுமே சந்திரன் தோன்றும்.. உலகியலிலும் அப்படியே.. சூரியன் மறைந்தால் தான் சந்திரன் கலைகளின் வடிவமாக தோன்றும்.. இதனை நினைவில் கொள்ளவே உள் வாங்கும் மூச்சுக்கு சந்திர கலை என்றும் வெளிவிடும் மூச்சுக்கு சூரிய கலை என்றும் பெயர் வைத்தனர்.. மற்றபடி விண் கோள்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் மூச்சோடு எந்த சம்பந்தமும் இல்லை...
நாம் நினைக்கின்ற சுவாச ஒழுங்கு அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.. அன்பர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு மிக உபயோகமான பதில்கள் யாம் கொடுத்துள்ள நிலையில் அவற்றில் மிக நுட்பமான இரகசியங்கள் உள்ளதை படிக்க தவறி விடாதீர்கள்... அந்த நுணுக்கங்களை படிப்பதின் மூலம் சுவாச ஒழுங்கின் மூலம் கிடைக்கும் ஆற்றலால் விரைவில் சித்தராகும் சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன.. வரும் ஏப்ரல் மாதம் 26 ந்தேதி நடைபெறும் வகுப்பில் அந்த மனம் மறைத்துக் கொண்ட 20 மணி நேரத்தை எப்படி பறிப்பது என்ற உளவுகளை சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்... மிகவும் பயனுள்ள வகுப்பு ஆதலால், அன்பர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.. முழு அறிவிப்பு இந்த வார இறுதியில் வரும்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment