Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தர் ஆவது எப்படி ?பகுதி பணிரெண்டு ;;; மர்ம யோகி

சித்தர் ஆவது எப்படி ?பகுதி பணிரெண்டு :-- 
*******************************************************
பழைய சித்தர் பாடல்களில் அதி கவனம்
உண்மையை சொன்னால் பூகம்பம்.. அதனால் உண்மையை மறைக்கப் பட்டது.. உண்மையை வெளிபடுத்த பொய்யையே பயன் படுத்த வேண்டி, மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உண்மையை பலப்படுத்தாது பொய்யையே பலப்படுத்தியது.. முடிவில் பொய்யே நிலைத்தது.. உலக புகழ் பெற்ற குருக்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பொய்யை பயன் படுத்தி உண்மையை வெளிப்படுத்த முயற்சித்தது.. முடிவில் தோல்வியே கண்டனர்.. கவர்ச்சிகரமான பொய்களை பலவற்றை தேர்ந்தெடுத்து அதில் உண்மையை மறைமுகமாக உபதேசம் செய்ய துணிந்தனர்... நேரடியான உண்மையை சொன்னால், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற வள்ளலார் நிலைக்கு செல்ல வேண்டி வருமே என்ற தயக்கமே.. இதற்கு நல்ல உதாரணம் ஓசோ.. பல கவர்ச்சி பேச்சுகள் நகைசுவை பல சம்பவங்கள் நடுவே உண்மையை சொல்ல முயன்றார்.. ஆனால் அவரின் நகைசுவையிலும், கதைகளில் ஈர்க்கப் பட்டார்களே தவிர அவர் சொன்ன உண்மையில், எவரும் கவனம் செலுத்தவே இல்லை.. ஓசோ சொன்னவை அற்புதம் அற்புதம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் அவர் சொன்ன கதைகளையும் நகைசுவைகளையும் மட்டுமே.. அவர் சொன்ன இருப்பு தன்மை, Beingness, existential, Emptiness சூன்யம், அன்பு போன்றவைகள், அவரின் கவர்ச்சி பேச்சில், தொலைந்து போய் விட்டது... உண்மைகளை பற்றி குறிப்பாக பேசும் ஓஸோ அன்பர்கள் ஒருவரையேனும் இன்று காணோம்.. அன்றும் ஒஸோ காலத்திலும் இல்லை....
அதே போலத்தான் சித்தர்கள் சொன்ன கவர்ச்சியற்ற சத்திய உண்மைகள் துளி அளவும் எடு பட வில்லை... அதை போக்க சின்ன தவறு செய்தார்கள்.. சற்று கவர்ச்சி கூட்ட இரசவாதம், இரசமணி, முப்பு என்று உலகியலையும் அகயியலையும் குறிக்கும் இரண்டு பொருள் பட கொண்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தினார்கள்.. உண்மை புரியாமல் மறைப்பு பொருள் என நம்பி உலகத்தார் உலகியல் பொருள் அர்த்தமாக கொண்டு அதை தேடி தேடி பல நூற்றாண்டுகளாக தங்கள் வாழ்வினை வீணாக்கினர்.. அந்த மறைப்பு பொருளில், தான் உண்மையை கண்டு கொண்டதாக சொன்னவர்கள் தனது பிழைப்புக்காகவும்,பின் தான் தப்பித்து கொள்வதற்காகவும், சித்தர் பாடல்களை திருத்தி திருத்தி மக்களை திசை திருப்பினர்.. பழைய சித்தர் பாடல்களை அடையாளம் தெரியாமல் எரித்து விட்டனர்.. பழைய சித்தர்கள் பாடல்கள் அனைத்தும் பிழைப்புக் காரர்களால் சித்தர் நடையிலே பாரப்பா, வாருமப்பா,சேரப்பா என்ற தோரணையில் திருத்தி எழுதப்பட்டவையே.. அந்த பிழைப்புக் காரர்கள் கவர்ச்சியற்ற உண்மையை சொல்ல முயன்ற திருமுலர், சிவ வாக்கியர் போன்றோர் நூல்களில் கைவைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டனர்.. காரணம் இலக்கணம் என்ற முத்திரை பலமாக பதிக்கப் பட்டதால் அவைகளில் கைவைக்க முடியவில்லை.. காட்டில் வாழ்ந்த சித்தர்கள் இலக்கணம் இலக்கியம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் யதார்த்த நடையிலே சொன்னதால் பிழைப்புக் காரர்கள் அவர்களின் பாடல்களை நன்றாகவே தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, எங்கும் கிடைக்காத சித்தர் பாடல்களை தனக்கு மட்டுமே கிடைத்தது என அப்பாவி மக்களுக்கு ஏமாற்றி, திருத்திய பாடல்களை விற்றார்கள்.. இதற்கு சாட்சி பல நூற்றாண்டுகள் முன்பு எழுதிய பாடல்களில் குறுகிய காலத்தில் பயன் பட்ட வார்த்தைகளை சேர்ந்து இருப்பதே.. இதனை பல தமிழ் அறிஞர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.. நம்பகதன்மை அற்ற நிலையை நிரூபித்து இருக்கிறார்கள்..
அப்படி திருத்திய பாடல்களில் சிக்கிய மனித குலம் அன்று முதல் இன்று வரை மீளவே முடியாமல் இருக்கிறது.. இரசவாதம் ரசமணி முப்பு போன்றவற்றிலும், சில யோக நூல்களும், உண்மைக்கு புறம்பாக திருத்தி எழுதப் பட்ட நிலையில் சிலர் அதனை வேத வாக்காக கொண்டு பித்தர்கள் போல் அலைந்து தன் வாழ்நாளை வீணாக்கி பரிதாப நிலைக்கு செல்லுகிறார்கள்.. இதுவரை ஒருவரும் முப்பை கண்டதும் இல்லை; இரசவாதத்தில் தங்கம் பண்ணவும் இல்லை.. மனம் என்ற பூதம் மட்டுமே நெருப்பு தன்மையால் இராசயன மாற்றம் ஏற்படுத்தக் கூடியது.. மற்ற பூதங்கள் பௌதிக மாற்றம் மட்டுமே செய்யும்..
இராசயன மாற்றம் செய்யும் நெருப்பு என்ற பூதம் தன் இருப்பு தன்மையில் இரசம் என்ற சத்துப் பொருளான பிரபஞ்ச ஆற்றலை கனலாக தக்க வைக்கவும், வெளிச்சமாக மாற்றி, பொறி புலன்களில் வெளியேற்றவும் செய்யவல்லது.. பல பல ஜென்மங்களின் பதிவுகளின் அம்சமான சித்தத்தின் வெளிச்சத்தை, அளவற்ற கனலாக மாற்றி மிக பெரிய சக்தியை, தன் இரசாயன மாற்றத்தால் கனலாக மாற்றி வாதம் என்ற காற்று பூதமான புத்தியில் கலக்க செய்யும் யுக்தியே இரசவாதம்.. பிழைப்புக் காரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியதால் பல பேர் தங்கம் மாற்றும் வித்தையில் சித்தம் கலங்கி போய் இருக்கிறார்கள்.. நாம் நன்றாக புரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவெண்றால் இப்படி திருத்தி அமைக்கப் பட்ட சித்தர் பாடல்களிலே சிக்குண்டவர்கள் பேச்சுக்கள் நடைமுறைகள் அனைத்தும் சித்தம் கலங்கியது போலவே இருக்கும்.. தாங்கள் கற்றதை, விடமுடியாமல் ஏற்கெனவே சொன்ன பொய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, வகை அறியாமல் சொன்னதையே சொல்லி சொல்லி தன்னை காத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.. உண்மையை அறிந்தாலும் தன்னை காத்துக் கொள்ள பொய்யை விடமாட்டார்கள்.. இத்தகையவர்களிடமிருந்து உண்மையை துளியும் பெற முடியாது என்பது இயற்கையே... அவர்களை பாவம் என்று விட்டு விட வேண்டியதுதான்.. கவர்ச்சி இல்லாத சித்தர் பாடல்களில் கவனம் செலுத்த, வெளிச்சமான மனம் ஒரு போதும் உதவாது.. புத்தி ஒன்றே உதவும்.. ஆகவே தான் கனல் மயமான புத்தியை அதாவது சத்திய வழி காட்டலான அககுருவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது.. இனி வரும் பகுதிகளில் சத்தியத்தை, உண்மையை, நோக்கி சிறுக சிறுக ஆனால் உறுதியான பிடிப்போடு முன்னேறுவோம்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment