Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தர் ஆவது எப்படி ?பகுதி பதினைந்து ;;; மர்ம யோகி

சித்தர் ஆவது எப்படி ?பகுதி பதினைந்து :-- 
***************************************************
மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை
ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன் இறைவன், அடிமுடி காணமுடியாத இறைவன், உலகளந்த உத்தமன் என்றெல்லாம் வர்ணிக்காத, போற்றி புகழாத மத நூல்களே இல்லை.. ஆனால் அப்படியான தோற்றத்திற்கு புலப்படாத, புலப்படமுடியாத இறைவனை, ஒரு தோற்றத்திற்கு கொண்டு வந்து, தொழுவதும் பிரார்த்தனை செய்வதும், ஒரு முறையற்ற செயல் என்பதும் அதுவே ஒரு மிகப் பெரிய ஒழுங்கற்ற செயல் என்பதும் இன்றைய கால கட்டத்தில் மனிதன் உணரவே முடிவதில்லை.. எல்லா மதங்களும், கடவுளை மறுக்கும் புத்த மதம் உள்பட ஏதோ ஒரு தோற்றத்தை மையப் படுத்திதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.. அப்படி இயங்காத ஒரு கோட்பாட்டை உடைய ஒரு மதத்தை உலகில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இந்த சூழ்நிலையில் அறியாதவர்களுக்கு முதலில் இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் கடவுளை பற்றிய மிக பெரிய ஒழுங்கின்மையை மையப் படுத்தி உருவநிலைகளில் ஆரம்ப நிலையிலே வேர் ஊன்றியவர்கள் மிக பெரிய பிரமாண்டமான கோவில்களையும் சர்ச்களையும் மசூதிகளையும் கட்டி அதை நிர்வாகிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டனர்.. அதனால் பிழைத்து கொண்டு இருப்பவர்கள், தங்கள் பிழைப்பு எங்கே கெட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் ஒழுங்கின்மையை, எந்த வகையிலாவது நியாயப் படுத்தவே முயற்சி செய்வார்கள்.. இந்த சூழ்நிலையில் இறைவனின் உண்மை நிலையாகிய தோன்றா நிலை பற்றிய கருத்து முற்றிலுமாக மறந்து விட்ட ஒன்று மட்டும் அல்ல, முற்றிலுமாக மறுக்கப் பட்ட ஒன்றாய் போய் விட்டது..
இன்றைய கால கட்டத்தில் தோன்றா நிலையின் முக்கியம், சற்று பண்பட்டவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவோ, அறிந்ததை ஏற்றுக்கொள்ளவோ, குறைந்த பட்சம் அப்படி அறிந்ததற்கு எதிராக பேசாமல் இருக்க, முடியாத சூழ் நிலையே இன்று எங்கும் உள்ளது.. அப்படியே வாசியோகத்திலும்
தோன்றா நிலையை உணர வைக்க முற்பட்ட சித்தர்களின் முயற்சிகளை எல்லாம் நாசப் படுத்தி, அங்கும், ஆறு அல்லது ஐந்து சக்கரங்கள் என்ற தோன்றும் ஒரு மாயை ஒன்றை உருவாக்கி, தோன்றா நிலையை உணர்விலே தோற்று விக்காமலே செய்து விட்டனர்... சித்தர்களை ஒரு வகையில் பித்தர்களாக்கி விட்டனர்..
அந்த தோன்றா நிலையிலே உணரப் படும் இறை ஆற்றலுக்கு இணையான ஒன்று இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை.. ஆற்றல் இன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதை உணர்ந்த பின் அதுவும் அந்த தோன்றா நிலையில் மட்டுமே கிடைக்கும் என்பது ஒரு நிலையான சத்தியம்.. தோன்றா நிலையில் மட்டுமே எல்லை கடந்த நிலையில் இருக்கும் அந்த இறைவனை அதே எல்லை கடந்த நிலையில் நாம் இருக்கும் போது உணர முடிந்து, அவனிடமிருந்து பேராற்றலை நாம் பெற முடியும்.. அவன் என்றால் தோற்றத்திற்கு வராத பிரபஞ்ச பேரண்டமே.. வேறு எந்த வகையிலும் அந்த ஆற்றலை பெற வேண்டிய அளவிற்கு பெற முடியாது.. அந்த தோன்றா நிலை ஒரு புரியாத நிலை தான்.. அது சதா உருவங்களிலே பழகி விட்ட மனதிற்கு மட்டுமே என்றும் புரியாத நிலை.. ஆனால் உணர்வாகிய புத்திக்கு அது உணர்வின் வழியாக புரியக் கூடிய ஒன்று.. ஆகவே புத்தி சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்ளும் போது மனம் அந்த தோன்றா நிலையை, புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்கிறது.. மனம், புரியாததை புரியாததாகவே ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை கடந்து செல்ல அனுமதிக்கின்றது.. அப்படி புத்தியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளாத மனம் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளாமல், மனிதனை மனம் தாண்டிய புத்தி நிலைக்கு அனுமதிக்காது..
ஆகவே தான் தோன்றா நிலையில் பிரபஞ்ச ஆற்றலை உணர்வாக அதாவது கனலாக பெற வேண்டிய அவசியம் ஆகிறது..அந்த அனுபவத்திற்கு பிறகே மனம், ஒருவனை தன்னை கடந்து, புத்தி என்ற பூத நிலைக்கு செல்ல அனுமதிக்கும்.. மனம் தன் தோற்றப் பிடிப்பினை தளர்த்தி, புத்திக்கு வழி விடும்.. தோன்றா நிலையில் மட்டுமே புத்தியும் அறிவும் திறம் பட இயங்கத் தொடங்கும்... ஆகவே நினைப்பு என்ற தோற்ற நிலையிலிருந்து, உணர்வு என்ற தோன்றாநிலைக்கு வரவேண்டியது மிக பெரிய இரகசியமாக கொள்ளவேண்டும்... சித்தர்கள் உருவ வழிபாடுகளை கடந்து சென்றவர்கள்.. கடந்தவர்கள் என்றால் உருவ வழிபாட்டில் இருந்து அனுபவப் பட்டு பின் மேற் கொண்டு மேல் அனுபவ பெற தோன்றா நிலைக்கு செல்ல உருவ வழிபாட்டை விட்டவர்கள்.. வள்ளலார் போன்றவர்களே நம் சித்தர்கள்.. உருவ வழிபாட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு போதும் தோன்றா நிலைக்கு செல்ல முடியாது என்பது மற்றொரு இரகசியம்... தோன்றா நிலை சூரிய கலை என்றால் தோன்றும் நிலையாகிய உருவ வழிபாடு சந்திர கலை.. ஒரு கலை இல்லையென்றால் மற்றொரு கலையும் இல்லாமல் போய் விடும் என்பதை மறக்கக் கூடாது...
தோன்றும் நிலையில் சிக்குண்டு இருப்பது மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை.....
08-02- 15 அன்று சாமியார் மடம் கோடம்பாக்கத்தில் பெரும்பான்மையான அன்பர்கள் அந்த சத்திய நிலையாகிய தோன்றா நிலையில் ஆற்றலை பெற்று அனுபவப் பட்டதை இங்கே எடுத்துரைத்தால் மற்ற அனைவருக்கும் தோன்றா நிலையின் மேன்மை புரியும்.. அப்படி அனுபவப் பட்டதை இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment