Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 14 August 2016

சித்தர் ஆவது எப்படி ?பகுதி பதினாறு ;;; மர்ம யோகி

சித்தர் ஆவது எப்படி ?பகுதி பதினாறு :-- 
பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்
**********************************************
அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது.. அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்... அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்... அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்.. முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றாநிலையின் தொடர்பு.. அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை.. பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்.. பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்.. அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்.. அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்
முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்.. அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது.. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்.. பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...
தோன்றாநிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன.. சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது.. இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்.. பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்.. இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்.. இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.. எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..
ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை.. அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது.. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்.. அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது.. சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை.. உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்.. முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்.. தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது.. அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..
மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்.. பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை.. பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன.. அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை.. மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்.. அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...
இந்த தோன்றாநிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது.. மூலக்கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே.. தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றாநிலையை உணர்த்த வேண்டும்.. அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை... தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்.. தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்யமுடியும்.. மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது.. ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை.. தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்... தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்.. அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது.. எண்ண ஆதிக்கங்களால் ஆளப் படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்.... தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்.. மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது.. எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்... தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்.. காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்... ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது.. தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை... ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றாநிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது.. ம்ம்.. எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment